Monday, September 14, 2009

கறுப்பு தினம்



நம்பர் ஃபிளைட்ல அடுத்த மாசம் பதினோராம் தேதி உனக்கு டிக்கெட் கன்ஃபார்ம் ஆயிருக்கு.நீ வெர்ஜினியால பத்தாம் தேதி இருக்கணும்.இந்த நம்பர MS Word-ல காப்பி பேஸ்ட் பண்ணி, Wingdings Font ஸ்டைல்ல‌ மாத்திப்பாரு..நாம முடிக்க வேண்டிய ஆபரேஷனோட சீக்ரெட் கோட் இந்த நம்பர்ல ஒளிஞ்சிருக்கு.

ஹட்டா
(வஸ்ஸ...)


என்னுடைய ப்ளாக்பெர்ரியில் ஹட்டாவின் குறுந்தகவல் அதிர்ந்தது.ஹட்டா இஸ் ரியலி எ ஜீனியஸ் !


****************************

தடிமனான‌ திரைச்சீலைகளுக்குள் எங்களுடைய இரவு கிடத்தப்பட்டு,அறை முழுதும் நிசப்தம் பரவியிருந்தது.நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை.ஹட்டா மட்டும் வழக்கம் போல தன்னுடைய மடிக்கணினியில் மைக்ரோசாஃப்ட் ஃப்ளைட் சிமுலேட்டர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

ஹட்டாவை நான் ஆப்கனில் பயிற்சியின் போது தான் முதன் முதலாக‌ சந்தித்தேன்.ஹம்பர்கில் எம்.எஸ் படித்தவன்.எகிப்திய‌ர்க‌ளுக்கே உரித்தான‌ ர‌த்த‌ச் சிவ‌ப்பு நிறம். அமைதியான முகம். இன்னும் ஒருமாதத்தில் நாங்கள் நிறைவேற்றப்போகும் இந்த மிஷனுக்காக குழுத்தலைவர் காலித்,என்னையும் அட்டாவையும் தேர்ந்தெடுத்து,போலி ஆவணங்கள் தயார் செய்து பி1/பி2 டூரிஸ்ட் விசா மூலம் அமெரிக்கா அனுப்பி வைத்தார். நான்கைந்து மாதங்கள் அலைந்து திரிந்து, கடைசியாக தெற்கு ஃப்ளோரிடாவில் இருக்கும் ஹஃப்மேன் ஏவியேஷனில் "பைலட் ப்ரோகிராம்" சேர்ந்தோம்.மூன்று மாதங்களில் விமானத்தின் நுணுக்கங்களையும் செயல்திறனையும் திறம்பட கற்றுத் தேர்ந்தோம்.நவம்பரில் "இண்ஸ்ட்ருமன்ட் ரேட்டிங்" பாஸ் செய்து விட்டோம்.

************

ஹட்டா வார்த்தைகளை அதிகம் செலவழிக்க மாட்டான்.எப்போதாவது மனம் உடைந்து அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.

ஒருமுறை ஆப்கன் பயிற்சியின் போது,ஒரு மாலைநேரம் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தோம்.வாழ்வைப் பற்றி எந்த விமர்சனமும் இல்லாத அந்த சிறுவர்களைப் பார்க்க ஏக்கமாக இருந்தது.

அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்களில் அஜ்மல் என்ற சிறுவனும் இருந்தான்.அஜ்மலுக்கு அப்போது 12 வயது தான் இருக்கும்.பயிற்சியின் போது எங்களுக்கு சாப்பாடு வாங்கி வருவது, கடைக்கு போவது போன்ற உதவிகள் செய்வான். சிறுவர்களாக இருந்தால் முதல் மூன்று வருடங்களுக்கு எடுபிடி வேலைகள் தான் கொடுக்கப்படும். அதன் பிறகு தான் மற்ற எல்லாம்.7 வருடங்கள் தீவிர பயிற்சிக்கு பிறகு ஸ்லீப்பர்களாக இந்திய நகரங்களுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள். அஜ்மல் இந்தியாவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவன்.

அன்று அஜ்மல் மட்டும் சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து ம‌றைந்த‌து.ஹட்டா, இமை கொட்டாமல் சிறுவனையும் மரத்தில் மோதும் நீர்க்குமிழிகளையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்து,ச‌ரியாக‌ மூன்று மாத‌த்தில் எங்க‌ளுடைய‌ மிஷ‌னுக்கான‌ 'பிளாட்' அட்டாவால் தீர்மானிக்க‌ப்பட்ட‌து.

********************************

டேம்பா பகுதி அபார்ட்மென்ட் ஒன்றில் எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன. இந்த‌ தீராத‌ ப‌ய‌மும் ந‌டுக்க‌மும் எங்க‌ளுக்கு அற‌வே பிடிக்க‌வில்லை.

ந‌ள்ளிர‌வுக‌ளில் ஹட்டா போர்வைக்குள் க‌தறி அழுவது ம‌ட்டும் மெலிதாக‌ கேட்கும். இந்த ஆப‌ரேஷ‌னிலிருந்து பின் வாங்கி விட‌லாமா என்று கூட‌த் தோன்றும். ஆறேழு வ‌ருட‌ உழைப்பு,திட்ட‌ம் எல்லாம் பாழாகினாலும் ப‌ரவாயில்லை.எல்லாவ‌ற்றையும் துர‌ எறிந்து விட்டு,ஊருக்கே திரும்பி ப‌ழைய‌ வாழ்க்கையை ஆர‌ம்பிக்க‌லாம். என‌க்காக‌ அவ‌ள் காத்து கொண்டிருப்பாள் என்றெல்லாம் ம‌ன‌துக்குள் பேசி ச‌ண்டை போட்டு மீண்டும் ஃப்ளைட் சிமுலேட்ட‌ர்க‌ளை இய‌க்க‌ ஆர‌ம்பித்து விடுவோம்.லாஸ் வேகாஸ் சென்று லாப் டான்ஸ் பார்த்தோம். ஸ்காட்ச்சிலும் ஷாம்பைனில் மூழ்கித் திளைத்தோம்.

*************************

நான் வெர்ஜினீயாவிலிருந்தும், ஹ‌ட்டா பாஸ்ட‌னிலிருந்தும் கிள‌ம்பி விட்டோம்.எதிர் எதிர் திசையில் நியூயார்க்கில் வானில் ச‌ந்திப்ப‌தாய் திட்ட‌ம். முத‌ல் க‌ட்டிட‌ம் ஹ‌ட்டாவின் இல‌க்கு. இர‌ண்டாவ‌து க‌ட்டிட‌ம் என்னுடைய‌து.

ச‌ரியாக ஏழு வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அஜ்மல் (எ) அமீர் க‌ச‌வ், சோப்பு நீரில் முட்டை விட்ட‌ அதே சிறுவன் த‌ன் ச‌க‌ கிரிக்கெட் கூட்டாளிக‌ளுட‌ன் உல‌ர்ந்த‌ பேரித்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை பையில் வைத்து கொண்டு,கராச்சி துறைமுக‌த்திலிருந்து மும்பையை நோக்கி கிள‌ம்புவான்.

***********************

45 comments:

அ.மு.செய்யது said...

இது ஒரு நிஜ‌ ச‌ம்ப‌வ‌த்தை அடிப்படையாக‌ வைத்து எழுத‌ப்ப‌ட்ட‌ புனைவு.

க‌தையை முழுமையாக‌ ப‌டித்த‌வ‌ர்கள்,முத‌ல் ப‌த்தியில் "ஹ‌ட்டா" குறிப்பிட்ட எண்க‌ளை முய‌ற்சி செய்து பார்க்க‌லாம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

!!!

அட, அஜ்மல் என்ற பெயர் வரும்போதே முடிவு தெரிந்து விடுகிறது.

கதை நகர்ந்த விதம் நன்றாக இருந்தது

சுஜாதா டச்... :))

(புனைவுன்னு லேபிள் சொல்லுது, அப்ப நீங்க ?)
ரொம்ப டெர்ரராஆ இருக்கு பாஸ்

anbudan vaalu said...

ரொம்ப அருமை sayed...this is one of the best actually....வாழ்த்துக்கள்...


//அன்று அஜ்மல் மட்டும் சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து ம‌றைந்த‌து.ஹட்டா, இமை கொட்டாமல் சிறுவனையும் மரத்தில் மோதும் நீர்க்குமிழிகளையும் பார்த்து கொண்டிருந்தான்.//

அருமை...

தேவன் மாயம் said...

செய்யது! ரொம்ப நாளாக் காணோமே!

தேவன் மாயம் said...

நான் வெர்ஜினீயாவிலிருந்தும், ஹ‌ட்டா பாஸ்ட‌னிலிருந்தும் கிள‌ம்பி விட்டோம்.எதிர் எதிர் திசையில் நியூயார்க்கில் வானில் ச‌ந்திப்ப‌தாய் திட்ட‌ம். முத‌ல் க‌ட்டிட‌ம் ஹ‌ட்டாவின் இல‌க்கு. இர‌ண்டாவ‌து க‌ட்டிட‌ம் என்னுடைய‌து///


அருமை! ஓட்டும் போட்டாச்சு!!

தேவன் மாயம் said...

100 பின் தொடர்வோருக்கு வாழ்த்துக்கள்!

SUFFIX said...

சிறுவன் அஜமல் பற்றிய வரிகள் மனதை தொடுகிறது செய்யது, பாவம் அந்த சிறுவன். மற்ற பாத்திரங்களின் மன ஓட்டங்களை சித்தரித்த விதம் அருமை.

சி தயாளன் said...

Hats off....சுஜாதா பாணியில் கலக்கியுள்ளீர்கள்...

S.A. நவாஸுதீன் said...

கதையை முழுசா படிக்கும் முன்னாடி (முந்திரிக்கொட்டையாச்சே) ஃபோன்ட் ஸ்டைல் மாற்றி பார்த்துட்டேன். அப்புறம்தான் கதையை படிச்சேன்.

அ.மு.செய்யது இஸ் ரியலி எ ஜீனியஸ். நோ டௌட் அட் ஆல்

S.A. நவாஸுதீன் said...

கதை அட்டகாசமா இருக்கு செய்யது.

100 ஃபாலோயர்ஸுக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ் அமுதன் said...

///எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன///

கதை சொன்ன விதம் !!
சிறப்பான முயற்சி!! முழுமையான வெற்றி!!!

S.A. நவாஸுதீன் said...

ஜீவன் said...

///எங்கள் வாழ்வின் கடைசி இருபது நாட்க‌ள் ஒரு ச‌வ‌ ஊர்வ‌ல‌ம் போல‌ ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌ன///

கதை சொன்ன விதம் !!
சிறப்பான முயற்சி!! முழுமையான வெற்றி!!!

கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்

ஹேமா said...

செய்யது அருமை.த்ரிலா வாசிச்சேன்.நம்ம ஊர்லயும் இப்பிடி நடக்குது தெரிஞ்சும் தெரியாமலும்.

நட்புடன் ஜமால் said...

கலக்கல்ஸ் செய்யது

என்ன சொல்வதென்றே தெரியவில்லை

வெற்றி-[க்]-கதிரவன் said...

nalla eluthiruka

நட்புடன் ஜமால் said...

மீண்டும் ஒரு முறை படித்து பார்த்தேன்

விளங்காமல் அல்ல

அதன் ஓட்டத்தை இரசிப்பதற்காக ...

அ.மு.செய்யது said...

நன்றி அமித்தும்மா !!! ( அது நா இல்லீங்க..)
---------------------------------
நன்றி டாக்டர் வால்ஸ் !!!!
---------------------------------
நன்றி தேவா...வாழ்த்துகளுக்கும் சேர்த்து !!

ரமலான் மாதம் என்பதால் அடிக்கடி வர இயலவில்லை.
---------------------------------
நன்றி ஷஃபிக்ஸ் அண்ணே !!!
தொடர் ஆதரவுக்கு !!!

----------------------------------

அ.மு.செய்யது said...

நன்றி டொன்லீ !!! ரொம்ப நாளாச்சி !! நார்வே டூர் முடிஞ்சிடுச்சா ??
-----------------------------------
நன்றி நவாஸூதீன் ....ரொம்ப திட்டாதீங்க என்ன...

( வாழ்த்துகளுக்கும் நன்றி !!! )
-----------------------------------

நன்றி ஜீவன்..உங்கள் புதிய வலைதளமும் சிறக்க வாழ்த்துகள் !!!

-----------------------------------

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் !!! ரசித்து வாசித்தமைக்கு....( அவ்வளவு சாஃப்டாவா இருக்கு கதை ?? )
-----------------------------------

நன்றி பித்தன் பாஸ் !!!

பாலா said...

மாப்பி என்னத்த சொல்ல
ஒன்னும் சொல்றாப்பல இல்ல
(எபூடி சொல்றதுன்னு தெரியல எதோ பொலம்பிகிட்டு இருக்கேன் )

முடித்தவுடன் ஒரு வலி , பயம் தோன்றுவது தவிர்க்க இயலாததாகிறது
அதுதான் இந்த கதையின் வெற்றி
வேற என்ன சொல்லனும்னு நினைக்குறீங்க செய்யது

வால்பையன் said...

அதெல்லாம் ரைட்டு!

அவுங்க அப்படி செய்ய என்ன காரணம்னு சொல்லுங்க!

நட்புடன் ஜமால் said...

( அவ்வளவு சாஃப்டாவா இருக்கு கதை ?? )]]


சாஃப்ட்டா இருந்தா தான் படிக்கனுமா, இரசிக்கனுமா

எழுத்தின் ஓட்டத்தை இரசிச்சேன்ப்பா

பீர் | Peer said...

செய்யது, இப்பத்தான் மாயவலை வாசிக்கிறேன். ஹட்டா பேர படிச்சதுமே சட்டுன்னு புரிஞ்சிடுச்சு. MS Word, Wingdings Font ஏற்கனவே பார்த்திருந்த மெயில் ஒரு காரணமா இருக்கலாம்.

பீர் | Peer said...

//வால்பையன் said...

அதெல்லாம் ரைட்டு!

அவுங்க அப்படி செய்ய என்ன காரணம்னு சொல்லுங்க!//

அதான் அடிக்கடி சொல்றாங்களே... 'அவன நிறுத்தச் சொல் நான் நிறுத்துறேன்.'

அப்துல்மாலிக் said...

பிரிலியண்ட் கதையோட்டம்
ஒவ்வொரு வரிலேயும் சீட் நுனிக்கு கொண்டுசெல்லும் எழுத்தோட்டம்

//எப்போதாவது மனம் உடைந்து அவன் உதிர்க்கும் வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.
//

அடைப்பட்ட வார்த்தைகள் விளக்கம் தானாகவே விளங்குகிறது

//சோப்பு நீரை ஒரு குடுவைக்குள் நிரப்பி, காற்றில் முட்டை விட்டு கொண்டிருந்தான்.பெரிதாக ஊதப்பட்ட் ஒரு நீர்க்குமிழி, பறந்து சென்று ஒரு மரத்தில் மோதி பொத்தென்று உடைந்து //

அருமையான கரு... அப்பட்டமான விளக்கம், இந்த கரு நீங்களே நினைத்ததா இல்லை படித்ததா என்பது தெரியவில்லை, இருந்தாலும் ர‌சித்தேன்

அப்துல்மாலிக் said...

முடிவு அனைவருக்கும் தெரிந்த விடயமே, இருந்தாலும் இதையெல்லாம் முடித்தவிதம் அருமை

மாஸ்டர் டச் செய்யது

தொடர்ந்து கலக்குங்க, வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

பிரிலியண்ட் ஸ்டோரி செய்யத்

எம்.எம்.அப்துல்லா said...

அடப்போய்யா... எத்தனைவாட்டிதான் உன்னையப் பாராட்டித் தொலைக்கிறது??
ஆளவிடு..

Anonymous said...

ஆஹா செய்யது இன்று முதல் ஓஹோ செய்யது....

விறு விறுப்பான கதை...கல்லிலும் ஈரம் காட்டுகிறது அவன் கண்ணீரில்...
வேதையான சம்பவம் .....இன்னும் எத்தனை எத்தனை அஜ்மல்கள்...

ஒரே மூச்சில் படிச்சி முடிச்சேன்...
கதை கருவை அழகாய் முடிச்சவிழ்த்தாய்.....வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

தமிழரசி said...

ஒரே மூச்சில் படிச்சி முடிச்சேன்...//

இந்த ஒரு பக்கக் கதையைப் படிக்கக்கூட நாலு டீ பிரேக் வேணுமா தமிழ்? :-)

*

//ச‌ரியாக ஏழு வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து, அஜ்மல் (எ) அமீர் க‌ச‌வ், சோப்பு நீரில் முட்டை விட்ட‌ அதே சிறுவன் த‌ன் ச‌க‌ கிரிக்கெட் கூட்டாளிக‌ளுட‌ன் உல‌ர்ந்த‌ பேரித்த‌ம் ப‌ழ‌ங்க‌ளை பையில் வைத்து கொண்டு,கராச்சி துறைமுக‌த்திலிருந்து மும்பையை நோக்கி கிள‌ம்புவான்//

அவர்களின் சரியான திட்டமிடலும், அதை நிறைவேற்றுவதற்கான விடாமுயற்சியும் பாராட்டத்தக்கதே.

Admin said...

நல்ல பதிவு

அ.மு.செய்யது said...

நன்றி வால்பையன்

நன்றி பாலா..!!!

நன்றி ஜமால் காக்கா...( ரைட்டு !!)

நன்றி ரஹ்மான் ..பதிவை படித்து விட்டேன்..தொழுகையை மிஸ் பண்ணாமலிருக்க‌
மிக்க உபயோகமாக இருக்கும்.

நன்றி பீர்..( இந்த எண் ஏற்கெனவே பிரபலமான ஒன்று தான்.எனவே தான் அதை
மூலமாக கொண்டு எழுதினேன் )

அ.மு.செய்யது said...

நன்றி அபுஅஃப்ஸர் !!

//அருமையான கரு... அப்பட்டமான விளக்கம், இந்த கரு நீங்களே நினைத்ததா இல்லை படித்ததா என்பது தெரியவில்லை, //

பெயர்கள்,இரண்டாம் பத்தி ஆகியவை உண்மை.மீதியெல்லாம் புனைவு.
முட்டை விட்ட கரு எல்லாம் என்னுடைய யுனிகோடிலிருந்து புறப்பட்டவை தான்.

ந‌ன்றி ப்ரியமுடன் வ‌ச‌ந்த்...

அ.மு.செய்யது said...

ந‌ன்றி அப்துல்லா அண்ணே !!! ( உங்க‌ ந‌ம்ப‌ர‌ மாத்திட்டீங்க‌ளா ?? )

ந‌ன்றி த‌மிழ‌ர‌சியாரே !!

ந‌ன்றி உழ‌வ‌ன் !!! ( அவர்களுடைய திட்டம் பாராட்டுதலுக்குரியதா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ் )

அ.மு.செய்யது said...

நன்றி சந்ரு அண்ணே !!

நிஜாம் கான் said...

செய்யது! தற்போது படிக்க நேரமில்லை. புக்மார்க் பண்ணிட்டேன். பிறகு படிச்சிக்கிறேன். ஈத் முபாரக்.

Anonymous said...

செய்யது ..ரொம்ப ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க..வாழ்த்துக்கள்ங்க.


அன்புடன்,

அம்மு.

Thamira said...

ஏற்கனவே படித்துவிட்டேன். பின்னூட்டம் போட மறந்துவிட்டேன் போல தெரிகிறது. மேலும் என்ன சொல்வது எனவும் தெரியவில்லை.

சிறப்பான ஒன்றுதான்.

இன்னும் பெட்டரா உங்ககிட்டயிருந்து எதிர்பார்க்கிறேன்னு நினைக்கிறேன்.

அ.மு.செய்யது said...

@ஆதிமூலகிருஷ்ணன்,

வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும் மிக்க‌ ந‌ன்றிங்க‌..!!!

கண்டிப்பா முய‌ற்சி செய்றேங்க‌..!

பா.ராஜாராம் said...

ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள் செய்யது!

இப்னு அப்துல் ரஜாக் said...

Hats off

- இரவீ - said...

EID Mubarak!!!

அ.மு.செய்யது said...

நன்றி பீஸ் டிரெயின்..


நன்றி ராஜாராம்....!!மற்றும் இரவீ...ரமலான் வாழ்த்துகளுக்கு !!!

குடந்தை அன்புமணி said...

நண்பரே... ரமலான் வாழ்த்துகள்!

அ.மு.செய்யது said...

நன்றி குடந்தை அன்புமணி !!!