Wednesday, September 23, 2009

சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்

சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

இங்கே சொடுக்குக‌ !

அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)

அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

1) செவ்வாழை அண்ணாதுரை
2) ந‌க‌ர‌ம் சுஜாதா
3) தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌ சுஜாதா
4) பாட்டையா மேலாண்மை பொன்னுச்சாமி
5) பாய‌ம்மா பிர‌ப‌ஞ்ச‌ன்
6) புய‌ல் அகில‌ன்
7) பொம்மை ஜெய‌காந்தன்
8) க‌த‌வு கி.ரா
9) இன்னும் கிளிக‌ள் மாத‌வ‌ராஜ்
10) ஐந்தில் நான்கு நாஞ்சில் நாட‌ன்
11) குற‌ட்டை ஒலி டாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்
12) கால்க‌ள் சுஜாதா
13) இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
14) ந‌ட‌ந்து செல்லும் நீருற்று எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
15) சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ ஆத‌வ‌ன்
16) ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள் ஆத‌வ‌ன்
17) பீங்கான் நாரைக‌ள் எஸ்.ராமகிருஷ்ண‌ன்
18) ம‌ண்குட‌ம் மாத‌வ‌ராஜ்
19) த‌வ‌ம் அய்க்க‌ண்
20) ப‌ல்லி மெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்
21) ஸார் நாம‌ போயாக‌ணும் ச‌த்ய‌ராஜ்குமார்

இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.

கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.

***********

61 comments:

பா.ராஜாராம் said...

அருமை,செய்யது!நல்ல முயற்ச்சி.மாதவராஜின் இன்னும் கிளிகள் மாதிரியான சிறுகதைகளுக்கு இங்கு இணைப்பு கொடுத்திருக்கலாம்.அதாவது,இணைக்க இயலும் சிறுகதைகளுக்கு..முயற்ச்சி செய்யுங்கள் செய்யது.உபயோகமாய் இருக்கும்.அன்பு மக்கா.

அன்புடன் அருணா said...

அருமையான முயற்சி....வாழ்த்துக்கள்...

RAMYA said...

அருமையான முயற்சி!! சூப்பர் செய்யது!!

இணைப்பைத் தேடினேன் கிடைக்க வில்லை :(

வாழ்த்துக்கள்!! வித்தியாசமான முயற்சிக்கு!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ராஜாராம்..ஞாப‌கப்ப‌டுத்திய‌மைக்கு...மாத‌வ‌ராஜின் இர‌ண்டு க‌தைக‌ளுக்கும் சுட்டி த‌ந்திருக்கிறேன்.

இன்னும் சில‌ க‌தைக‌ளுக்கு கூடிய‌ விரைவில் சுட்டி த‌ந்து விடுகிறேன்.
--------------------------

ந‌ன்றி அருணா !!!

அ.மு.செய்யது said...

நன்றி ரம்யா !!!இணையத்தில் படித்த‌ நான்கு கதைகளுக்கு சுட்டி தந்திருக்கிறேன்.மற்ற கதைகள் அனைத்தும் நான் புத்தகத்தின் படித்தவை என்பதால் இணைப்பு தர இயலவில்லை.

சென்ஷி said...

சிறப்பான முயற்சி செய்யது.. பா.ராஜாராம் கூறியது போல இணைப்பு கிடைக்கப்பெறும் கதைகளுக்கு இணைப்பையும் தந்து விடுவது எல்லோருக்கும் பயனாக அமையும்!

கதைகளைப் பற்றிய உங்கள் பார்வையையும் எதிர்பார்க்கிறோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிக நல்ல முயற்சி.. தொடரட்டும் பலரின் பதிவுகளிலும்..

VISA said...

nalla muyarchi adutha pathivukku kaathirukiroam

மாதவராஜ் said...

நன்றி செய்யது....!
பா.ராஜாராம் உங்களுக்கும்!

ஜீவன் said...

நல்ல முயற்சி!
நல்ல செயல் !
வாழ்த்துக்கள் !
நன்றி !

ஆதிமூலகிருஷ்ணன் said...

பட்டியலாக நின்றிடாமல் ஒவ்வொரு கதையாக (தனித்தனி பதிவுகளாக) பேசத்துவங்கினால் பலரும் கலந்துகொள்ளக்கூடும். பயனுள்ளதாக இருக்கும். தொடருங்கள்.

ஹேமா said...

செய்யது,நல்ல விசயம் செய்திருக்கீங்க.புத்தகப் பூச்சிகளுக்கு சந்தோஷமாயிருக்கும்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

வெங்கிராஜா | Venkiraja said...

http://www.sathyarajkumar.com/sirnaama

லிங்க் தேடிப்பிடித்தேன். சேர்த்துடுங்க சார்! கதைகளை புக்மார்க் செய்து படித்துவிட்டு சொல்கிறேன்.

வால்பையன் said...

நீங்கள் அளித்துள்ள எல்லா சிறுகதைகளையும் இனிமேல் தான் படிக்க வேண்டும் நண்பரே!

பார்சா குமார‌ன் said...

http://chennaionline.com/tamil/literature/shortstories/newsitem.aspx?NEWSID=eb8a34ba-12f4-4eed-a076-9028f8f0c5a2&CATEGORYNAME=story

செவ்வாழை

அ.மு.செய்யது said...

நன்றி சென்ஷி.அண்ணே .கண்டிப்பாக செய்வோம்...!!!
---------------------------------
நன்றி முத்துலெட்சுமி...அவர்களே !! முதல் வருகைக்கு !!
---------------------------------

நன்றி விசா....!!!

அ.மு.செய்யது said...

நன்றி மாதவராஜ்..அவர்களே !!!!! ஜெயகாந்தன்,சுஜாதா தொடங்கி கோணங்கி வரை பாராட்டிய உங்கள் சிறுகதைகளை குறிப்பிடுவதில் நான் பெருமைப்படுகிறேன்.
------------------------------
நனறி ஜீவன் சார்.....
--------------------------------
நன்றி ஆதியண்ணே...பிளான் இருக்கு..உங்கள் உதவியும் தேவை.
-----------------------------
நன்றி ஹேமா....கதைகளை வாசித்து பார்த்து விட்டு சொல்லுங்கள்.
===============================

அ.மு.செய்யது said...

நன்றி வால்..இந்த சிறுகதைகளை மிஸ் பண்ணிடாதீங்க..படிச்சு முடிக்கும் போது இன்னொரு
பட்டறை அனுபவம் உறுதி.
---------------------------------
வெங்கிராஜா..பார்சா குமாரன் !!!!!

உங்கள் இருவருக்கும் சிறப்பு நன்றிகள்.சுட்டி கொடுக்க மெனக்கெட்டதற்கு !!!!

பயன்படுத்தி கொண்டேன் நண்பர்களே !!!

அ.மு.செய்யது said...

சிறுகதைகளைப் படித்தவர்கள் உங்கள் அனுபவங்களையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

நாடோடி இலக்கியன் said...

இந்த லிஸ்டில் கதவு மற்றும் நகரம் ஆகிய இரண்டைத் தவிர மற்றவற்றை இனிமேல் தான் வாசிக்க வேண்டும் நண்பரே.
நல்ல கதைகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிங்க.

இராகவன் நைஜிரியா said...

மிக மிக நல்ல முயற்சி தம்பி.

எதிர்ப்பார்க்கின்றேன்.

பாலா said...

நல்லா செய்யுங்க செய்யது வாழ்த்துகளும் அன்பும்

பாலா

பார்சா குமார‌ன் said...

http://www.tamilnation.org/literature/modernwriters/jeyakantan/05.htm

பொம்மை ஜெய‌காந்தன்

பார்சா குமார‌ன் said...
This comment has been removed by the author.
Bee'morgan said...

வாவ்.. நல்லதொரு முயற்சி செய்யது.. தொடர்ந்து வாருங்கள்.. காத்திருக்கிறோம். :)

இதனைப் படித்தவுடன் என் நினைவுக்கு வரும் இரு சிறுகதைகள்..

ஒன்று சுஜாதாவின் ஃப்லிமோத்சவ்.

இரண்டாவது ஜெயகாந்தனின் கதை ஒன்று.. பெயர் நினைவில் இல்லை. அக்ரஹாரத்தில் அட்டகாசம் செய்யும் பூனை பற்றியது.

இரண்டையுமே படித்து முடித்த நீண்ட நேரத்திற்கு வேறெதுவுமே என்னை செய்யவிடாமல் கட்டிப்போட்ட கதைகள்.. நிதானமா யோசிக்கும் போது இன்னும் நிறைய நினைவுக்க வரலாம்..

நினைத்துப் பார்க்க வைத்த பதிவுக்கும் நன்றி :)

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான முயற்சி.... வாழ்த்துகள்...:-)))

அ.மு.செய்யது said...

நன்றி நாடோடி இலக்கியன்...கண்டிப்பாக வாசித்து பாருங்கள் !!

நன்றி ராகவன் அண்ணே !! அடுத்த பதிவு ரெடி !!
-----------------
நன்றி பாலா....
---------------------
நன்றி பார்சா குமாரன்.....பொம்மைக்கும் சுட்டி கொடுத்து விட்டேன்..என்ன ஆச்சரியம்
அதில் ஜெ.கா வின் எல்லா குறிப்பிடத் தக்க கதைகளும் இருக்கின்றன.

அ.மு.செய்யது said...

நன்றி பீமோர்கன்...ஃபில்மோத்ஸவ் குறிப்பிடலாம் என்று நினைத்தேன்.

ஏற்கெனவே சுஜாதா இந்த பட்டியலில் நிறைய ஆக்ரமித்து விட்டார்.

மேலும் ஃபில்மோத்ஸவ், பார்வை, ரேணுகா பற்றி அடுத்த பதிவில் அலசுவோம்.

அக்ரஹாரத்து பூனை , பொம்மை லிங்கிலியே இருக்கும் பாருங்கள் !!!!

அபுஅஃப்ஸர் said...

இந்த பதிவை சிறுகதைகளின் தொகுப்பு என்று சொல்லுவேன்

நேரமிருந்தால் வாசிக்கிறேன்

நல்லதொரு முயற்சி

தேவன் மாயம் said...

நல்ல முயற்சி செய்யது!! வாழ்த்துக்கள்!!!

பார்சா குமார‌ன் said...

http://www.scribd.com/doc/17133692/-இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌. எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்

பா.ராஜாராம் said...

நகரம் இப்பதான் வாசிக்கிறேன் செய்யது.சுஜாதாவின் சிறுகதை விரும்பி நானும்.அவரின் observation எப்பவும் மிக பிரமிப்பு.இதிலும் அப்படியே.ஒரு கிராமத்து தாயின் மன உணர்வுகளை நகரத்து ஆஸ்பத்திரி இயந்திரங்களுடன்,(மனித இயந்திரகள்) பின்னி இருக்கும் செய் நேர்த்தி வியப்பு.ஒரு நல்ல கதை வாசித்திருக்கிறேன்.மறு கதை வாசிக்க இதை மறக்கும் தருணம் தேவையாகும்.மற்றபடி,மாதவராஜின் சிறுகதைகள் முன்பே வாசித்து,அவரின் தளத்திலேயே உணர்வுகளை பதிவு செய்து வந்திருக்கிறேன்.கிடைத்தவரையில்,சிறுகதைகள் வாசிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்த உங்களுக்கு என் அன்பு செய்யது.அடுத்த கதை வாசித்து பதிகிறேன்.நன்றியும் செய்யது.

Anonymous said...

நல்ல முயற்சிப்பா வாழ்த்துக்கள்....

rose said...

நல்ல முயற்சி செய்யது வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நல்ல தொகுப்பு

S.A. நவாஸுதீன் said...

8 நாள் தூங்கிட்டு (பெருநாள் லீவுதான்) இப்பதான் வந்தேன். 21 கதைகள் படிக்கனும். படிச்சிட்டு மெதுவா வாரேன் செய்யது. (9-க்குத்தான் லின்க் இருக்குது)

அ.மு.செய்யது said...

ந‌ன்றி அபுஅஃப்ஸ‌ர்...க‌தைக‌ளை மிஸ் ப‌ண்ணாம‌ ப‌டிங்க‌..

ந‌ன்றி டாக்ட‌ர் தேவா !!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி த‌மிழ‌ர‌சியாரே !!

ந‌ன்றி ரோஸ்..

ந‌ன்றி ந‌ச‌ரேய‌ன் அங்கிள் !!

வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும் !!

அ.மு.செய்யது said...

ஆயிரம் நன்றிகள் பார்சா குமாரன் !!!

ந‌ல்ல‌ சிறுக‌தைக‌ளுக்கான‌ உரல்களை ஒரு குருவியைப் போல் தேடித்தேடி கொண்டு வ‌ந்து சேர்த்த‌மைக்கு..!

செவ்வாழையும்,பொம்மை சிறுக‌தையும் நான் எட்டாம் வ‌குப்பு ப‌யிலும் போது ப‌டித்த‌ நினைவு.
உங்க‌ள் முய‌ற்சியால் மீண்டும் ப‌டிக்கிறேன்.

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

ந‌ன்றி ராஜாராம்.

ந‌கர‌ம் பிர‌மிக்க‌ வைத்த‌ சிறுக‌தை.உரையாட‌லை வெகு நேர்த்தியாக‌ கையாண்டிருக்கும் சுஜாதா,அதை
அற்புத‌மாக காட்சிப் படுத்தியிருப்பார்.

இந்த‌ தொகுதியில் இருக்கும் ம‌ற்ற‌ க‌தைக‌ளையும் ப‌டித்து பாருங்க‌ள் !

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ந‌வாஸுதீன்..

க‌ண்டிப்பா ப‌டிங்க‌ !

பா.ராஜாராம் said...

இன்று எஸ்.ரா.வின் "இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன"வாசித்தேன் செய்யது."உறைய வைத்தது" மட்டுமே இங்கு பதிய முடிகிறது.எல்லாவற்றையுமா எழுதிவிட முடிகிறது செய்யது?இந்த சந்தர்பங்களுக்கு உங்களை என்ன செய்யலாம் செய்யது?
இப்போதைக்கு கையை பிடிச்சுக்கிட்டு ஒரு நன்றி சொல்லிட்டு போகலாம்.நன்றி மக்கா.நன்றி,பார்சா குமாரன்!

சந்ரு said...

நல்ல முயற்சி நன்றிகள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி செய்யத்

பா.ராஜாராம் said...

ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டு இருக்கிறேன் செய்யது.நேரம் வாய்க்கிற போது தளம் வாங்களேன்..

Kannan said...

திரு. செய்யது, அருமையான முயற்சி. அசோகமித்திரனின் "பிரயாணம்" சிறுகதை படித்து இருக்கிறீர்களா? என்னை உலுக்கி எறிந்த சிறுகதை. திரும்ப வாசிக்க தேடிக்கொண்டு இருகின்றேன். கிடைத்தால், பகிர்ந்து கொள்ளவும்.
மிக்க நன்றி.

அமுதா said...

நல்ல பகிர்வு. நன்றி செய்யது

ராமலக்ஷ்மி said...

நல்ல முயற்சியும் நல்ல பகிர்வும். நேரம் கிடைக்கையில் சுட்டியில் சென்று வாசிக்கிறேன். மற்றது தேடிப் படிக்க முய்ற்சிக்கிறேன். நன்றி செய்யது.

அ.மு.செய்யது said...

நன்றி ராஜாராம்..பார்த்து விட்டேன்.விரைவில் எழுதுகிறேன்.

நன்றி திரு.கண்ணன்.அசோகமித்திரனை நான் அதிகம்
வாசித்ததில்லை.வாய்ப்பு கிடைத்தால் தேடிப் பிடித்து
பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி அமுதா !!

நன்றி ராமலஷ்மி !!! ( முதல் வருகை ?? )

இப்படிக்கு நிஜாம்.., said...

அருமை செய்யத். உங்கள் முயற்சி பிரம்மாண்ட வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நிலாரசிகன் said...

நல்ல முயற்சி நண்பரே. என்னைக் கவர்ந்த கதைகள் சிலவற்றை கொடுத்திருக்கிறேன்.

சாட்டை - கண்மணி குணசேகரன்
கச்சை - மனோஜ்
மதனிமார் கதை - கோணங்கி
கன்னிமை - கி.ரா
தனுமை - வண்ணதாசன்
எஸ்தர் - வண்ணநிலவன்
புலிக்கலைஞன் - அசோகமித்ரன்
அக்னி பிரவேசம் - ஜெயகாந்தன்
மாடுகள் - இமையம்
கடல் - பாவண்ணன்
அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி
சைக்கிள்,அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
நடன விநாயகர் - சூடாமணி
வெயிலோடு போய் - தமிழ்செல்வன்
அழுவாச்சி வருதுங் சாமி(சிறுகதை தொகுப்பு) - வாமு.கோமு
ஆண்கள் படித்துறை - ஜே.பி.சாணக்யா
பூனைகள் இல்லாத வீடு(சிறுகதை தொகுப்பு) - சந்திரா
கடிதம் - திலீப்குமார்

கும்க்கி said...

மிக்க நன்றி நண்பரே.,
நிலா ரசிகன் பட்டியல் நெருக்கமாக இருக்கின்றது....

அ.மு.செய்யது said...

நன்றி நிலாரசிகன் உங்கள் தொகுப்பிற்கும் !!! ந‌ச் க‌தைக‌ள் !!
த‌னுமை ப‌ற்றி லேகா ப‌திவில் பார்த்த‌தாக‌ ஞாப‌க‌ம் !!

இதில் வெயிலோடு போய் மட்டும் படித்திருக்கிறேன்.பார்த்தும் இருக்கிறேன்.
----------------------------
‍நன்றி கும்க்கி அண்ணே !!!

நிலாரசிகன் said...

http://www.nilaraseeganonline.com/2009/10/blog-post_09.html

Krishna Prabhu said...

நிலாரசிகனின் பதிவிலிருந்து உங்களுடைய "சிறுகதை" பதிவினை பார்க்க நேர்ந்தது. மிக்க மகிழ்ச்சி.

அசோகமித்ரனின் கதைகள் படித்து இருக்கிறீர்களா? கிடைத்தால் படித்துப் பாருங்கள். அருமையாக இருக்கும். "காளி நாடகம் (உண்ணி.ஆர்-மலையாளம்)" என்ற சுகுமாரனின் மொழிபெயர்ப்பு அருமையாக இருந்தது. உயிர்மையில் கிடைக்கிறது.

பஷீரின் கதைகளும் (உலகப் புகழ் பெற்ற மூக்கு) மனதிற்கு நெருக்கமாக இருக்கும். காலச்சுவடு பதிப்பகம்.

நன்றி

அ.மு.செய்யது said...

நன்றி கிருஷ்ணபிரபு ப‌கிர்வுக்கு,

உங்க‌ளை ப‌ற்றி அமித்து அம்மா சொல்ல‌ நிறைய‌
கேள்வி ப‌ட்டிருக்கிறேன்.த‌ங்கள் வ‌ருகை ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.

அசோக‌மித்ர‌னின் புத்த‌க‌ம் வாங்குவ‌து தான் அடுத்த‌ இல‌க்கு.
வைக்க‌ம் ப‌ஷீரின் சிறுக‌தைக‌ளை ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லும் இருக்கிற‌து.( பாத்திமாவின் ஆடு உட்ப‌ட‌ )

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

இரசிகை said...

time kidaikkum pothu vanthu vaasikkiren:)

நட்புடன் ஜமால் said...

நல்ல தொகுப்பு ராஸா

தலைப்பை மட்டும் பார்த்துட்டு உள்ளேயே போகலை

இப்பதான் பார்க்கிறேன்

மீ தி வெரி லேட்டு ...

அ.மு.செய்யது said...

நன்றி இரசிகை...

நன்றி ஜமால் அண்ணே !!! உங்கள் அன்பு ஒன்றே போதும்