Sunday, August 30, 2009

நத்தை (பாகம்-2)

"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.."

*******************

கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது.இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா? அதெல்லாம் பேசிக்கிர‌லாம் ம‌ச்சான்.ஒத்துக்கிருவாஹ..ப‌டிக்கிற புள்ள‌ய‌ நாம ஏன் த‌டுக்க‌..! ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.அந்த‌ க‌ம்பியூட்ட‌ர் என்ஜினிய‌ர் வீட்டையும் சேர்த்து.

அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது.சினிமால வர மாதிரி இழுத்துக்கிட்டா ஓடமுடியும்.ஓடுறது ஒருபக்கம் இருக்கட்டும்.அதுக்கு இந்த அழுக்கு குத்து என்ன மனசுல நெனச்சிருக்கோன்னு யாருக்கு தெரியும்.சரி இன்னும் ரெண்டு வருசம் இருக்குல்ல..நீ அழுவாத‌! ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!

கமுதி,முதுகுளத்தூர்,சிக்கலூர் சனம் முழுவதும் அவ‌ள் வீட்டில் நிரம்பி வழிய,அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.எம்.எஸ் வீட்டு நிகழ்ச்சின்னா சும்மாவா..பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.இந்த சின்ன நிகழ்ச்சிக்கே, சுந்தரபுரத்து தெரு முழுதையும்,கீழக்கரை டாட்டா சுமோக்கள் நிறைத்திருந்தன.ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.நண்டு,சுண்டு முதல் அந்த கீழக்கரை குடும்பத்து பெரியவர்கள் மீது வரை வீசிய‌ அத்தர் வாடை அவளுக்கு குமட்டத் தொடங்கியது.காட்டுமல்லி மணமும் பட்டுப்புடவைகளும்,தரைதொடுமளவு தங்க நகைகளும் ஒப்பவில்லை.வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.

வந்த சனம் முழுதும் வெற்றிலைகளையும் தேங்காய்களையும் சேலையில் முடிந்து கொண்டு,அவள் நெற்றியைத் தடவி "கொடுத்து வச்ச மவராசி"க்களை வாரி வழங்கி விட்டு நகரத் துவங்கியிருந்தது.வாப்பாவும் அம்மாவும் பூரிப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சஹ்ரானி மாமா சமையல்,பந்தல்,சேர்க்காரனுக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருந்தார்.கனமான சீமைச் சில்க்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு,மீண்டும் பழைய பூப்போட்ட கத்தரிப்பூ தாவணிக்கே மாறினாள்.என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.

மதியந்தே இந்த கொள்ள கூக்கறையில சரியா சோறுண்டுருக்க மாட்ட.இப்பவாவது ஒலுங்கா தின்னுளா! அம்மா கத்தியது காதில் விழவேயில்லை.மனம் என்னவோ சொரட்டுபுள் திண்ணையையும்,கேபிள்காரனையுமே சில்லுவண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.

ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.கொலுசுகளை கழற்றி வைத்தாள்.கொள்ளைப்புற கதவை சத்தமில்லாமல் திறந்தாள்.பாவாடையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.கிணற்றுத் திண்டில் கால்வைத்து ஏறி,சுவர்களை பற்றிக் கொண்டு பின் தெருவில் குதித்தாள்.சுண்ணாம்பு வீடுக‌ளைத் தாங்கிய‌ சொர‌ட்டுபுள் தெரு வெறிச் சோடிப் போயிருந்தது.விறுவிறுன்று அவன் வழக்கமாக தூங்கும் ப‌ழ‌ந்திண்ணையை நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினாள்.

கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.உத‌டுக‌ள் துடிதுடிக்க‌ அவன் முகத்தைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் அவளுக்கு அழுகை வெடிக்க ஆரம்பித்தது.என்ன‌ எங்கியாவ‌து க‌ண் காணாத‌ எட‌த்துக்கு கூட்டிட்டு போயேண்டா!!! ஓவென்று க‌த‌ற‌த் துவ‌ங்கினாள்.இடி இடித்தாற் போல் அலறிக் கொண்டு எழுந்தான் ஊனாமூனா.க‌ண்களாலேயே விழுங்குப‌வ‌ள் போல‌ அவ‌ன் முக‌த்தையே அவ‌ள் வெறித்துக் கொண்டிருக்க,திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

***************முற்றும்***************

59 comments:

நட்புடன் ஜமால் said...

தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது]]


காட்சி விவரிப்பில் கலந்து கட்டி அடிக்கிறீங்க ...

நட்புடன் ஜமால் said...

பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.]]

இரசனை ராஸா ....

நட்புடன் ஜமால் said...

வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.]]

அவரின் மனோநிலையை அழகாக படம் பிடித்து காட்டுகின்றது.

அத்திரி said...

தொடரட்டும்

நட்புடன் ஜமால் said...

.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.
]]

மிக மிக மிக அருமைப்பா...

லவ்டேல் மேடி said...

வட்டார பாஷை அருமை....!! கதையும் அருமை...!!

கதை முழுவதுமே வெத்தலை பாக்கு போட்டுக்கிட்டு பேசுரமாதிரிதான் இருக்கு நா எனக்குள்ள படிக்கும்போது...!! படிக்க பாஷை புதுசா இருக்கு எனக்கு...!!


அருமை....!! வாழ்த்துக்கள்...!!

பாலா said...

மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து

நல்லா இருக்கு

பாலா said...

விழுந்து,இருவ‌ரும் ஒருவ‌ரையொருவ‌ர் அணைத்துக் கொண்டு இருளில் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.


நல்லா சிறுகதைக்கு அடையாளமே இப்படி முடிவை வாசகனோட எண்ணத்திற்கு விட்டு விடுவது
கதைய தூக்கி நிறுத்துறதே இதன் முடிவுதான் செய்யது
ஒரு தேர்ந்த படைப்பாளியின் எழுத்துக்கள் போலவே ( இந்த" போலவே "தேவை இல்லைதான்)
அருமையா இருக்குன்னு சொல்றத நிப்பாட்டனும்
அதுக்கு பதிலா அதையும் மிஞ்சுற மாதிரியான ஒருவார்த்தையை கண்டு பிடிக்கனும் செய்யது

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் !! சிங்கை பின்னூட்ட எக்ஸ்பிரஸ்..!!!
--------------------------------
நன்றி அத்திரி !! தொடர்வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

--------------------------------
நன்றி லவ்டேல் மேடி !!! எங்க ஊர் ( இராமநாதபுரம் கமுதி சுந்தரபுரம் ) முஸ்லிம் குடும்பங்களில் இந்த வட்டாரமொழியை காணலாம்.
---------------------------------

நன்றி பாலா..உங்கள் பாராட்டு சிலிர்க்க வைக்கிறது.வருகைக்கு மிக்க நன்றி !!

உங்களின் இந்த‌ வார்த்தைக‌ளுக்காக‌ எத்தனை நாட்க‌ள் வேண்டுமானாலும் செலவழித்து உழைக்க‌லாம் என்று தோன்றுகிற‌து.

sakthi said...

"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.

அது சரி

sakthi said...

கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.

அதானே நல்ல இடம் தான் போலும்

sakthi said...

இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா?

ஆஹா என்ன ஒரு நல்ல மனசோட கேட்கிறாங்க

sakthi said...

ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.

அவ்வள்வு பெரிய தில்லால்ங்கடியா

sakthi said...

அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது

கஷ்டமா இருக்கு

sakthi said...

ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!


வட்டார பாஷை யா

கலக்கல்

sakthi said...

ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.

நல்ல விருந்து தான் பா

sakthi said...

,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.


பாவம் அவள்

sakthi said...

என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.


நல்ல நம்பிக்கை

sakthi said...

மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.

செய்யது ஸ்டைல்

sakthi said...

கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.

பாவம்பா அந்த பெண்

sakthi said...

ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.

கவிதையில் எழுத வேண்டிய வரிகள்

அருமை சகோ

sakthi said...

அருமையான நடை

அசத்தல்

வாழ்த்துக்கள் சகோ

அ.மு.செய்யது said...

@சக்தி அக்கா.வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி !!!

பிரிச்சி மேய்ஞ்ச்சிட்டீங்க..இந்த எல்லா பின்னூட்டங்களையும் சேர்த்து ஒரே பத்தியில் எழுதியிருக்கலாமே !!

பீர் | Peer said...

செய்யது, மிக அருமை.

//கொலுசுகளை கழற்றி வைத்தாள்.//

அடிமைத்தனத்தையும்...


//அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.//

அது டிசம்பர் மாத தொடக்கமாயிருக்கும்?

நீங்க கீழக்கரயா?

கார்த்திகைப் பாண்டியன் said...

நெஞ்சை நெகிழச் செய்யும் முடிவு.. அருமையான வட்டார வழக்கு.. அசத்தல் நண்பா

அதிரை அபூபக்கர் said...

பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.//

ரசிக்க வைத்தது...அருமை

அனுஜன்யா said...

நல்லா இருக்கு. கதையை இங்கே, இப்படி முடித்தது பிடிச்சிருக்கு செய்யது. நல்லா எழுதுறீங்க. நிறைய வாசியுங்கள். நிறையவும் எழுதுங்கள்.

முதன் பாகத்தின் பின்னூட்டத்தில் 'கடல்புறா' என்று தவறாகச் சொன்னதை 'கடல் புரத்தில்' என்று சரியாகப் புரிந்து கொண்டதில் ...அங்க நிக்கறீங்க பாஸ்.

அனுஜன்யா

gayathri said...

kathai mothamum supara riuku pa

anupavichi ezuthuna mathriye iruku

அமிர்தவர்ஷினி அம்மா said...

அசத்திட்டீங்க.

எப்படி முடிப்பீங்களோ ந்னு நினைச்சிக்கிட்டுருந்தேன்.

திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து //
அருமை

மீண்டும் மீண்டும் படித்தாலும் சலிக்காத எழுத்து நடை.

அதுவும் அந்த பூ வைத்தல் வைபவம் விவரித்த காட்சி கண் முன்னே விரிகிறது.

வாழ்த்துக்கள் அடுத்த கட்டத்துக்கு நகர:)))))))

S.A. நவாஸுதீன் said...

வட்டார மொழியில் ஒரு அற்புதமான படைப்பு. ச‌ஹ்ரானி மாமா பற்றியாகட்டும், பூ வைத்தலாகட்டும், விருந்தினை விளக்கிய விதமாகட்டும் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை செய்யது. ஆறு நாளா பாதிய படிச்சிட்டு ரொம்ப ஆவலோட எதிர்பார்த்துகிட்டு இருந்தேன் மீதியை படிக்க. என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட ரொம்ப சிறப்பா வந்திருக்கு. வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.
**************************
செய்யது!! மனுஷனை கட்டி போட்டுட்டீங்க போங்க. இதுபோன்று தொடர்ந்து நல்ல படைப்புகள் வரவேண்டும். மென்மேலும் உயர என் துஆ எப்போதும் உண்டு.

அ.மு.செய்யது said...

நன்றி பீர் !!! நான் இராமநாதபுரம் கமுதி.

---------------------------------
நன்றி கார்த்திகை பாண்டியன் !!! .வருகைக்கும் கருத்துகளுக்கும் !!!!

---------------------------------

நன்றி அதிரை அபூபக்கர் !!! தொடர் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

---------------------------------

நன்றி அனுஜன்யா அவர்களே !!!

"கடல்புரத்தில்" நான் வெகு நாட்களாக வாசிக்க வேண்டும் என்று நினைத்து
கொண்டேயிருக்கிறேன்.இந்த முறை சென்னை சென்றதும் போய் வாங்க வேண்டும்.

---------------------------------

நன்றி காயத்ரி...ஜிடாக் விமர்சனத்திற்கும் சேர்த்து....!!!

---------------------------------

நன்றி அமித்து அம்மா...நீங்கள் முடிவை எதிர்பார்த்தது போலவே நானும்
உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து கொண்டிருந்தேன்.என்ன சொல்ல போறீங்களோன்னு....!!!!

---------------------------------

நன்றி நவாஸூதின்......உங்கள் கருத்துகளும் வாழ்த்துகளும் தான் சளைக்காமல் இயங்கச் செய்கிறது.

அ.மு.செய்யது said...

மீண்டும் நன்றி நவாஸ்..தூஆக்களுக்கும்...அல்ஹம்து லில்லாஹ்..

ஜீவன் said...

என்ன ஒரு வட்டார மொழி ....!!! அசத்திபுட்டீங்கப்பு!!!
தொடரட்டும் ...........!!!

dhana said...

வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.]]

Arumaiyana varigal...

Umathu Karpanai payanathirkku kavithai rasigayin valzthukkal.

வால்பையன் said...

நல்ல மொழிநடை!

மாதவராஜ் said...

இவ்வளவு நாளாய் எப்படி உங்களைத் தவறவிட்டேன் என்று தெரியவில்லை.எழுத்துநடையில் சொக்கிப் போயிருக்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே!

[பி]-[த்]-[த]-[ன்] said...

டேய் தம்பி நாளைக்கு வந்து கும்முறேன்.. இன்னைக்கு ஆத்துக்கு லேட்டாதான் வந்தேன்... அதான் ஜோதில ஐக்கியமாக முடியல.

அபுஅஃப்ஸர் said...

செய்யது என்னா இது

2 ம் பாகத்தை படித்து ஒரு நிமிடம் திகைத்துவிட்டேன் எழுத்துநடையையும் வட்டார பழக்கவழக்கத்தை சொன்னவிதமும்

அருமையான முடிவுரை....

அபுஅஃப்ஸர் said...

//மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.//

நான் இல்லை


//ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.//

இது மாதிரி வீட்டுக்கு ஒன்னு இருக்க்கும்போல‌

//பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.//

ஹா ஹா அருமையா சொல்லிருக்கீர்

//ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின//

செய்ய‌து இப்போவே ஊருக்கு போகனும்போல‌ இருக்கு, இது ந‌ம்ம‌ ஸ்பெஷ‌லாசே


//அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.
//

அழ‌கா க‌ண்முன்னே விரிந்த‌து அந்த‌ ச‌ம்பவ‌ம்

ரொம்ப‌ ர‌சித்தேன், முத‌ல் பாக‌த்தில் விட்ட‌ குறைக‌ளை இதில் க‌லைந்துவிட்டிடீர்

தொட‌ருங்க‌ள்.....

ஆதிமூலகிருஷ்ணன் said...

சொல்ல என்ன இருக்கிறது? நடை வழக்கம் போல பிரமாதம்.

முடிவுதாம் கொஞ்சூண்டு சினிமாடிக்காக இருப்பது போல ஃபீல் பண்றேன்.

அ.மு.செய்யது said...

நன்றி ஜீவன் !!! நலம் தானே ?!?!?!?
----------------------------------
நன்றி தனலட்சுமி...( தனிப்பட்ட விமர்சனத்திற்கும் !!! )

----------------------------------

நன்றி வால்பையன் தல !!
----------------------------------

ந‌ன்றி மாத‌வ‌ராஜ் அவர்களே !!! உங்க‌ளைப் போன்ற‌ தேர்ந்த‌ எழுத்தாள‌ர்க‌ளின் க‌ருத்துகள் தாம் மென்மேலும் எழுத‌ வேண்டும் என்ற‌ உத்வேக‌த்தையும் உற்சாக‌த்தையும் அளிக்கிறது.

----------------------------------

அ.மு.செய்யது said...

ந‌ன்றி பித்த‌ன் ..பொறுமையா வாங்க‌ !!! அவ‌ரச‌ம் இல்லை.
--------------------------------

ந‌ன்றி அபுஅஃப்ஸ‌ர். ர‌சித்து வாசித்திருக்கிறீர்க‌ள். இன்னும் நிறைய‌ கைவ‌ச‌ம் இருக்கு..அவ்வ‌ப்போது த‌ருகிறேன்.
--------------------------------

ந‌ன்றி ஆதிய‌ண்ணே !!! க‌ருத்துக‌ளுக்கு..முடிவு என்ப‌து எப்போதுமே அதிர‌ச‌ம் மாதிரி தான்.எவ்வ‌ள‌வு க‌வ‌ன‌மாக சுட்டாலும் சில‌ இட‌ங்க‌ளில் க‌ருக‌த்தான் செய்கிற‌து.
---------------------------------

anbumani said...

வட்டார வழக்கிலும், காட்சியை விவரிப்பதிலும் பின்னி பெடலெடுத்துப்புட்டீங்க. ம்... தூள்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ந‌ன்றி ஆதிய‌ண்ணே !!! க‌ருத்துக‌ளுக்கு..முடிவு என்ப‌து எப்போதுமே அதிர‌ச‌ம் மாதிரி தான்.எவ்வ‌ள‌வு க‌வ‌ன‌மாக சுட்டாலும் சில‌ இட‌ங்க‌ளில் க‌ருக‌த்தான் செய்கிற‌து.//

பின்னூட்டத்துல கூட பொளந்து கட்டறீங்க.

ஹேமா said...

செய்யது,வித்தியாசமான தமிழ் அழகாயிருக்கு.சிலசொற்கள் விளங்கவில்லை.என்றாலும் கதையோட்டத்தில் புரிந்துகொண்டேன்.
முழுக் கதையும் வாசித்தேன்.
வாழ்த்துக்கள்.

mohamed said...

anbudan wapa amma,

Un padaippu kandu viyanthom. Naangal kathai paddikkum neram sundarapurathil yirunthathupol unarnthom. Melum unkathaiku comments kodutha anaivarukkum yenagal saarbaga nandri.
maasha allah.
1-9-2009

ஷ‌ஃபிக்ஸ் said...

ரசித்துப் படித்தேன் செய்யது, மிகவும் ரசித்த வரிகளை நம் நண்பர்களே கோடிட்டு காட்டிட்டாங்க. வாழ்த்துக்கள்!!

samsu said...

Migavum arumai kadher, menmaelum valara vaazhthukkal, anbudan akka......

அ.மு.செய்யது said...

நன்றி அன்புமணி !!

@ அமித்து அம்மா .....:

நன்றி ஹேமா...!!! ( பொறுமையோடு வாசித்ததற்கு )

நன்றி ஷஃபிக்ஸ்.

நன்றி வாப்பா அம்மா !!! மற்றும் அக்கா..( முழுமையான வாசிப்பிற்கும் கருத்துகளுக்கும் )

" உழவன் " " Uzhavan " said...

முடிவு அருமை செய்யது.

பா.ராஜாராம் said...

ஆஹா...என்ன பெத்த அப்பு என் செய்யது..,எங்கேலே இருந்த இவ்வளவு நாளா?என்னமா பொறிபறக்குது வட்டார மொழி!சமீபமாய் மாதவனின்(மாதவராஜ்)"இன்னும் கிளிகள்"க்கு பிறகு மிக பிரமாண்ட பாதிப்பு ஏற்படுத்திய சிறுகதை இது.நீங்கள் உங்கபாட்டுக்குதான் போய்கொண்டிருக்கிறீர்கள்.நான்தான்,உங்களை,மாதவனை சேர தாமதமாகிவிட்டது.சேர்ந்தனே,அது போதும்!செய்யது, எனக்கு தெரியும் என்று சொல்வதில் இனி எனக்கு பெருமை இருக்கும் செய்யது.அவ்வளவு அருமையாய் வந்திருக்கு.கட்டி இருக்கிகிறனும் போல் இருக்கு.சந்தோஷமும் நிறைவும் மக்கா!தொடர்ந்து எழதுங்கள்.

anbudan vaalu said...

sayed....கலக்கிட்டீங்க பாஸ்....

யதார்த்தமான வட்டார வழக்கு கதை ரொம்ப அருமை....

எம்.எம்.அப்துல்லா said...

சையதண்ணே எல்லாரும் பின்னூட்டம் போட்டு முடியட்டும்னு காத்துக்கிட்டு இருந்தேன்.

நீங்க வந்த புதிதில் சையதுன்னு ஒருத்தர் அருமையா எழுதுறாருன்னு என் பதிவில் எழுதி லிங்கும் குடுத்து இருந்தேன்...ஞாபகம் இருக்கா??

இன்று அண்ணன் மாதவராஜ் உள்ளிட்டவர்களே உங்களைப் பாராட்டும்போது எனக்கு பெருமை தாங்கல :)

இறைவன் இன்னும் இன்னும் அதிக புகழை உங்களுக்கு வழங்கட்டும்.

அ.மு.செய்யது said...

நன்றி உழவன் அண்ணே !!! வ‌ருகைக்கும் க‌ருத்துக‌ளுக்கும் !!!
---------------------------------
நன்றி பா.ராஜாராம் ..உங்கள் அன்பும் பின்னூட்டமும் திக்கு முக்காட வைத்து விட்டது.
உங்க‌ளை போன்ற எழுத்தார்வ‌ல‌ர்க‌ளின் பாராட்டுக‌ளும் க‌ருத்துக‌ளும் தான் தொட‌ர்ந்து என்னைப் போன்ற சிறுவர்கள் எழுத‌ உற்சாக‌மும் உத்வேக‌மும் அளித்து வ‌ருகின்ற‌ன‌.

மாதவராஜின் சிறுகதைகளோடு என் கதைகளை ஒப்பீடு செய்வதற்கு மனம் ஒப்பவில்லை.
நான் இப்போது தான் எழுதவே ஆரம்பித்திருக்கிறேன்.மேலும் அவருடைய "மண்குடம்",
"கிடா நாற்றம்" சிறுகதைகளை நேரம் கிடைக்கும் போது வாசித்து பாருங்கள்.
என்னை வெகுவாக‌ பாதித்த‌ க‌தைக‌ள் அவை.

அ.மு.செய்யது said...

DANGSU டாக்டர் வால்ஸ் !!!

அலைபேசி விமர்சனத்திற்கும் சேர்த்து !!!
--------------------------------
@ அப்துல்லா அண்ணே !!!

அதையெல்லாம் எப்படி மறக்க முடியும்.

என்னுடைய வலைக்கு நீங்க வருவதையே ஒரு பெருமைக்குரிய விஷயமா நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.இதுல பெரிய பிரபலங்கள் வரும் போது கேக்கவா வேணும்??

மேலும் என‌க்காக‌ பின்புல‌த்தில் இருந்து நீங்க‌ள் அளித்து வ‌ரும் ஆத‌ர‌வு அளப்ப‌ரியது."ந‌ன்றி அப்துல்லா அண்ணே" அப்டியெல்லாம் நான் சொல்ல‌ மாட்டேன்.

தூஆச் செய்ங்க‌ !!

நேசமித்ரன் said...

நானும் காத்திருந்தேன் இந்த முடிவுக்குத்தான் .மொழி வசமாவது ஒரு மிருகத்தை பழக்குதல் போல உங்களுக்கு அது நட்சத்திரங்களுடன் பேசுவது போல எளிதாய் இருக்கிறது நண்பரே. .உங்களை தவற விட்டுடோமேன்னு பெரிய ஆளுங்க எல்லாம் சொல்றதே உங்களுக்கு கிடைச்ச வெற்றிதான் .சும்மா வாசிச்சுட்டு பின்னூட்டம் போடாம போகிற பதிவர்கள் கூட பின்னோட்டம் போட வைக்கிற உங்கள் இந்த கதை பேரற்புதம் . வாழ்த்துக்கள் . நன்றி

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்துல்லாவின் அறிமுகத்தில்தான் நானும் முதலில் இங்கு வந்தேன். பின் பின்தொடர்ந்தேன். பின் போட்டி பயத்தில் உழன்றுகொண்டிருக்கிறேன்.

அ.மு.செய்யது said...

நன்றி நேசமித்ரன் !!

உங்களின் பாராட்டுகள் சிலிர்க்க வைக்கிறது.வருகைக்கும் கருத்துகளுக்கும்
மீண்டும் நன்றி !!
-----------------------
@ஆதியண்ணே !!! நான் ரொம்ப ச்சின்னப் பையண்ணே !!!