Sunday, January 18, 2009

ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.

கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.

*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.

*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.

*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.

"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!


Sunday, January 11, 2009

ப‌ன்றி இறைச்சி த‌டை ஏன் ???

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.

இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.
****************************************************************

Thursday, January 8, 2009

நான்வெஜ்-------ஜீவகாருண்யம்


நீங்கள் சைவமா ?
காந்தியின் புலால் உண்ணாமையை கடைபிடிப்பவரா ?
ஜீவகாருண்ய வாதியா ?
ப்ளூகிராஸ் உறுப்பினரா ?

கண்டிப்பாக உங்கள் மனதை புண்படுத்த இந்த பதிவை நான் எழுத வில்லை.

இக்கருத்தை பலபேர் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பிரித்து மேய்ந்து முன்மொழிந்திருந்தாலும், என்னுடைய இந்த பதிவை ஒரு வழிமொழிதலாக நினைத்துக் கொள்ளவும்.
"எனக்கு பிடிக்காது..உடல் ஒத்துக் கொள்ளாது..எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பழக்கம் இல்லை.அதனால் எனக்கும் பழக்கம் கிடையாது" என ஒரு சில காரணங்களை முன்வைத்து அசைவத்தை மறுப்போர் ஒருபுறம்.
"உயிர்க‌ளைக் கொல்வ‌து பாவ‌ம்.அந்த வாயில்லா ஜீவனை துடிக்கத்‌ துடிக்க‌ வெட்டி கொடுமைப் ப‌டுத்துகிறீர்க‌ளே !!! கொல்லா உயிர்க‌ளெல்லாம் நின்று தொழும்" என்றும் இன்னொருபுற‌ம் வில‌ங்கின ஆர்வ‌ல‌ர்கள்.
"அப்படியானால் தாவரங்களுக்கும் தான் உயிர் இருக்கிறது.தாவரங்களும் வாயில்லா உயிரினங்கள் தான்.அவைகளை மட்டும் கொல்லலாமா?"
என்று வழக்கம் போல ஒரு சாதாரண கேள்வியை, என் சைவ நண்பனிடம் கேட்டேன்.
"தாவரங்களுக்கு 2,3 அறிவுகள் தானே !! பரவாயில்லை.இது ஒரு பெரிய பாவமாகாது..அத கூட சாப்பிடலனா வேறென்னத்த திங்கிறது..அதற்கு தான் நம்மைப் படைத்த இறைவன் தாவரங்களையும் படைத்தான்" என்று மேலோட்டமாக பதிலளித்தார்.

இன்று வரை அது ஒரு முற்றுப் பெறாத விவாதமாகவே தொடர்கிறது.

தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவைகளுக்கு உணர்ச்சியும் இருக்கிறது.தாவரங்கள் சிலநேரங்களில் அழுகின்றன என அறிவியல் கூறுகிறது.
அது மனித செவிகளுக்கு கேட்காமலிருப்பதன் காரணம், 20Hz ஐ விட குறைவான ஒலி அதிர்வெண்களால் ஆனது அந்த அழும் ஓசை.20Hz முதல் 20000Hz வரை தான் நமக்கு ஸ்பீக்கர்கள் வேலைசெய்யும். ஆனால் நாய் போன்ற பிற பிராணிகளால் இந்த ஓசையைத் துல்லியமாக கெட்க முடியும்.

இதுமட்டுமின்றி, தாவரங்கள் பசிக்காக அழும் ஓலியை மனித செவிகள் கேட்கும் வண்ணம் (amplify) மாற்றியமைக்கும் கருவியை ஒரு விஞ்ஞானி கண்டு பிடித்திருக்கிறார்.

ஆகவே !! உயிர்கள் என்ற அடிப்படையில் மனிதனோ,விலங்குகளோ,தாவரமோ !!! அனைத்தும் சமம் தான். "நான் சைவம்,வெஜிடேரியன்.நான் தான் ஜீவகாருண்யத்தை சரியாக கடைபிடிக்கிறேன்" என்று யாராலும் கூற முடியாது.

நீங்கள் சுவாசிக்கும் போது எத்தனை மில்லியன் நுண்ணுயிர்கள் பலியாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? நாம் உயிர் வாழவே பல்லாயிரக்கணக்கான பிற உயிர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத தர்மம்.
என‌வே, இதுவரை நான் எந்த உயிரையும் கொன்றதே கிடையாது என்று யாரும் வாதிடவும் முடியாது.
உயிர்க‌ளைக் கொல்லாமை என்ற க‌ருத்தும் இங்கேயே அடிப‌ட்டு போய்விடுகிற‌து.இதுமட்டுமின்றி, உயிரினங்களின் உடல் கூறுகளில் உள்ள வேறுபாடுகளை
நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.ஆடு,மாடு,மான் போன்ற தாவர (herbivorous) உண்ணிகளின் பல் வரிசைகளிலுள்ள அதிகபட்ச ஒற்றுமை, அவைகளின் பற்கள் அனைத்தும் தட்டையாக, செடி,கொடிகளை அரைப்பதற்கு ஏதுவாக‌ இருக்கும்.இதுவே, சிங்கம்,புலி,சிறுத்தை போன்ற ஊன் (carnivorous) உண்ணிகளின் பற்கூறுகள் யாவும் கூர்மையாகவும் மாமிசத்தைக் குத்தி கிழித்து உண்பதற்கு வாட்டமாக இருக்கும்.மனிதனுக்கு (omnivorous) மட்டும் இந்த இரண்டு வகை பற்களும் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாம் இரண்டு வகை உணவையும் உண்ணலாம் என்று நம்மைப் படைத்தவனிடமிருந்தே வந்த கீரின் சிக்னல்.

சரி..இந்த நான்வெஜ் விஷயத்தைக் கொஞ்சம் PAUSE பண்ணி வைப்போம்.
******************************

ஜீவகாருண்யத்தை கொஞ்சம் அலசுவோம்.

இந்த கொடுமய எங்க போய் சொல்ல ???
அமெரிக்கர்களின் இப்போதைய வாழ்க்கையே செல்லப்பிராணிகளுடன் தான்.
அதனால் தான் செல்லப்பிராணிகளுடன் பழகுவது/பழக்குவது எப்படி? போன்ற பயிற்சி
கூட‌ங்க‌ள் அங்கே அதிக‌மாகி விட்ட‌ன.நாய்க‌ளுக்கு என்று தனியே அங்கே ஃபிட்ன‌ஸ் சென்ட‌ர்க‌ள் கூட உண்டு.வீட்டிலுள்ள‌ வய‌துக்கு வ‌ந்த பிள்ளைக‌ளையெல்லாம் வெளியே துர‌த்தி விட்டு,செல்லப்பிராணிகளுடன் குடும்ப‌ம் ந‌ட‌த்த‌ ஆர‌ம்பித்து விட்ட‌ன‌ர்.
அமெரிக்காவில் நாய்களுக்கு மட்டும் செலவிடப் படும் பணத்தை ஒன்று திரட்டினால், உலகிலுள்ள அத்தனை கால் இழந்தவர்களுக்கும் செயற்கை கால் பொருத்தி விடலாம் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது பரவாயில்லை.
13 நொடிக‌ளே வ‌ரும் வோட‌ஃபோன் விள‌ம்ப‌ர‌த்தில் 10 இட‌ங்க‌ளில் அந்த நாய் கொடுமை ப‌டுத்தப்ப‌ட்டிருக்கிற‌து என்று போர்க்கொடி தூக்கியிருக்கிற‌து ஒரு அமைப்பு.
அங்கே இலங்கையில் தமிழ் பிணங்களுடன் புணர்ந்து கொண்டிருக்கிறது இலஙகை ராணுவம்.
என்னத்தைச் சொல்வது ??? ஒருவேளை அந்த நாய்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அந்த வழக்கைத் தொடுத்திருப்பார்களோ ??
நாம் விரும்பி ரசிக்கும் 5 நிமிட சினிமா பாடல் காட்சிக்காக எத்தனை நாட்கள் சிறுகுழந்தைகளின் இடுப்புகள் ஒடிக்கப் படுகின்றன தெரியுமா ?? கேட்டால் நடனம்,கலை என்று பதில் வரும்.
எல்லா குழந்தைகளும் விரும்பி தான் அப்பாடல் காட்சிகளில் நடனமாடுகிறார்கள் என்று அவர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா ? குழந்தை தொழிலாளர் சட்டமெல்லாம் எங்கே போயிற்று ???
ஜீவகாருண்யத்தையோ .. சைவ கொள்கைகளையோ தவறு என்று சொல்லவில்லை.அதே வேளையில்,
அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்.'
அது' க‌ளைப் ப‌ராம‌ரிக்கும் போது, கொஞ்ச‌ம் 'அவ‌ர்க‌ளை'ப் ப‌ற்றியும் சிந்திக்க‌க் கூடாதா ??
(பன்றி இறைச்சி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப் பட்டுள்ளது.ஹலால்,ஹராம் விளக்கம் அடுத்த பதிவில் )