Tuesday, July 21, 2009

பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்

*********

கால‌வ‌ழுவ‌மைதி

பையில் பத்து ரூபாயும்
பஸ் பாஸூம்
கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்
வாய்க்கும் காலநிலையில்
அறிமுகமாவாள்;
நண்டு வளையில்
உலகம் காட்டுவாள்;
பொம்மைக‌ளோடு
ச‌ண்டையிட‌ க‌ற்றுத் த‌ருவாள்;
அரைநாள் பேசாவிட்டால்
ஒம்பேச்சுக்கா என்பாள்

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.



*******

இட‌வ‌ழுவ‌மைதி

நேற்று எதிர்பார்க்க‌வில்லை
எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.
ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்
அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில்
வ‌ர‌வே கூடாதென்று.

எதிர்பார்த்த‌ப‌டியே
ஏமாற்றாமல் ஒருநாள்
வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"
மின்சார‌ ர‌யிலில்.

"வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?"
"வெயில்ல‌ அலைஞ்சி ரொம்ப‌ க‌ருப்பாயிட்ட‌ல்ல‌?"
"அம்மா ந‌ல்லா இருக்காங்க‌ளா?"
"அக்கா கொழ‌ந்த‌ இப்ப‌ வ‌ள‌ந்துருப்பால்ல?"
"இப்பவும் க‌விதைல்லாம் எழுதுறியா?"
"எப்ப‌டிடா இருக்க‌?"
"ச‌ந்தோஷ‌மா இருக்கியா?"
"என்ன‌ ம‌றந்துட்டியா?"
"இல்ல‌ இப்ப‌வும் நினைச்சிப்பியா?"

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!


**********

63 comments:

நட்புடன் ஜமால் said...

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.]]

அழுகை ...

நட்புடன் ஜமால் said...

ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி]]

அருமைப்பா

நட்புடன் ஜமால் said...

பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்

கால‌வ‌ழுவ‌மைதி

இட‌வ‌ழுவ‌மைதி
]]


இவையாவையும் நான் இரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்
]]


நல்ல உவமை.

பீர் | Peer said...

அசத்திட்டீங்க அ.மு.செய்யது அருமை.

Unknown said...

சூப்பர்....!! அருமையா இருக்கு....!! முதல் கவிதையை .... திரும்பத் திரும்ப வாசித்தேன்... விளங்காமல் அல்ல..... விரும்பி..... !!




// மாயாவி ஒருத்தி! //


யாருப்பா அது........???

Admin said...

//அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்//

என் நெஞ்சத்தை தொட்டு விட்டன.... தொடருங்கள்....

நாடோடி இலக்கியன் said...

அருமை அருமை நண்பரே.

sakthi said...

seyyathu fantastic

sakthi said...

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.

mmmm

கஷ்டமாயிருக்கு

sakthi said...

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்

வரிகள் அருமை பா

sakthi said...

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!

யாரந்த ஒருத்தி

VISA said...

நல்ல கவிதை. நான் சும்மா எல்லாம் பாராட்ட மாட்டேன். உண்மையாவே புடிச்சிருந்துதுங்கோ......குறிப்பாக கால‌வ‌ழுவ‌மைதி

ப்ரியமுடன் வசந்த் said...

பாஸ்வேர்ட் தேவதைகள்

தலைப்பு ரொம்ப பிடிச்சுருக்கு செய்யது

pudugaithendral said...

அருமை...

அகநாழிகை said...

செய்யது,
இரண்டு கவிதைகளும் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்ககள்.
பாஸ்வேர்டு என்பதை தமிழில் எழுதியிருக்கலாமே.


“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

ஆதவா said...

இரண்டில் இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அ.மு.செய்யது.

கடவுச்சொல் இழந்த தேவதைகள் திறப்பதற்கு வழியின்றி அலைவது போல....

வாழ்வின் இடுக்குகள் பூட்டுகளாலேயே நிறைக்கப்பட்டிருக்கிறது.
கடவுச்சொற்களை மறந்து நிற்கிறார்கள்...
தே(வை)வதைகள்

சிலசமயம் மாயாவிகள், கேட்காமலேயே போய்விடக்கூடும்....
கேள்விகள் மட்டும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு............

பாராட்டுக்கள் அ.மு.செய்யது!

SUFFIX said...

//பையில் பத்து ரூபாயும்
பஸ் பாஸூம்
கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்
வாய்க்கும் காலநிலையில்
அறிமுகமாவாள்; //

கனவுகள் கங்கனம் கட்டி வண்ணமயமாய் பூக்கும் காலம்

//அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.//

உலகமே இருன்டது போன்ற உணர்வு.

//கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!//

என்ன சொல்ல....

உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு செய்யது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பாஸ்வேர்டு தேவதைகள் - வருத்தத்திற்குரிய உண்மை.

வழுவமைதிகள் ரசிக்கும்படி.

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும். //

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி! //

சுடும் வரிகள்.

முந்தைய ஆபிஸில் பணிபுரியும் போது, பணி நிமித்தம் ஃபீல்டில் (ஷிப்யார்டில்) இருந்த என் நண்பன் அவசரமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டி
என்னைத் தொடர்பு கொண்டான். நானும் யூசர் ஐடியை டைப் செய்துவிட்டு, பாஸ்வேர்ட் கேட்க (போனில்) அவனிடம் அமைதி அமைதி அப்படியொரு அமைதி
என்னப்பா மெயில் அனுப்பனுமா வேணாமா, எனக்கு வேலையிருக்கு சொல்லு என்று கடுகடுக்க, அவன் உடைந்த குரலில் கீதா என்பதை ஆங்கிலத்தில் திருப்பி போட்டு டைப் செய்
அதான் என் பாஸ்வேர்ட் என்றான். இதுவரை கேட்காத குரல் அவனுடையது, எந்தப் பதிலும் சொல்லாத அமைதி என்னிடத்தில்.

இந்தக்கவிதையின் தலைப்பை பார்த்தவுடன் எனக்கு அவன் ஞாபகம் தான் வந்தது. இப்போது தலைவர் கல்யாணமாகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். :)) பாஸ்வேர்டு அனேகமாக குழந்தையின் பேராக இருக்கும்.

(மன்னிக்கவும் சுய / நீண்ட பின்னூட்டத்திற்கு)

ப்ரியமுடன் வசந்த் said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

சுடும் வரிகள்.

முந்தைய ஆபிஸில் பணிபுரியும் போது, பணி நிமித்தம் ஃபீல்டில் (ஷிப்யார்டில்) இருந்த என் நண்பன் அவசரமாக ஒரு மெயில் அனுப்ப வேண்டி
என்னைத் தொடர்பு கொண்டான். நானும் யூசர் ஐடியை டைப் செய்துவிட்டு, பாஸ்வேர்ட் கேட்க (போனில்) அவனிடம் அமைதி அமைதி அப்படியொரு அமைதி
என்னப்பா மெயில் அனுப்பனுமா வேணாமா, எனக்கு வேலையிருக்கு சொல்லு என்று கடுகடுக்க, அவன் உடைந்த குரலில் கீதா என்பதை ஆங்கிலத்தில் திருப்பி போட்டு டைப் செய்
அதான் என் பாஸ்வேர்ட் என்றான். இதுவரை கேட்காத குரல் அவனுடையது, எந்தப் பதிலும் சொல்லாத அமைதி என்னிடத்தில்.

இந்தக்கவிதையின் தலைப்பை பார்த்தவுடன் எனக்கு அவன் ஞாபகம் தான் வந்தது. இப்போது தலைவர் கல்யாணமாகி சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார். :)) பாஸ்வேர்டு அனேகமாக குழந்தையின் பேராக இருக்கும்.//

உங்க நண்பர்க்கு மட்டுமில்ல மேடம் என்னப்போல லவ் ஃபெயிலர் எல்லாரோட ஈமெயில் பாஸ்வேர்ட் தன் முதல் காதலியோடதுதான்......

Unknown said...

இப்படித்தான் சில சினிமாத்தன காதல்கள் நிகழ்வதும் மறைவதும்.
நல்ல கவிதை.

வால்பையன் said...

//நேற்று எதிர்பார்க்க‌வில்லை
எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.//

செம டச்சிங் வரிகள் தலைவா!

எல்லோருக்கும் தன் வாழ்நாளில் அந்த எதிர்பாராத ”இன்று” ஒருநாள் வந்துவிடுகிறது!

chandru / RVC said...

ரெண்டாவது கவிதை ரொம்ப யதார்த்தமாகவும் அழகாகாவும் இருக்குங்க..! வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் காக்கா...( அழுகை ..விடை கண்டு பிடிச்சிட்டீங்களே )

நன்றி பீர்முகம்மது .

நன்றி மேடியண்ணே !!! ( அது அவங்க தாண்ணெ )

அ.மு.செய்யது said...

நன்றி சந்ரு

நன்றி நாடோடி இலக்கியன் ( உங்க பேரு பிடிச்சிருக்குண்ணே )

நன்றி சக்தியக்கா !!! ( அந்த ஒருத்தி அவங்க தான்...அது எவங்க தான்னு கேக்கப்பிடாது ? )

அ.மு.செய்யது said...

நன்றி விசா

நன்றி பிரியமுடன் வசந்த் அண்ணே !!!

நன்றி புதுகையக்கா...

Vidhoosh said...

சூப்பர் செய்யது.
அமித்து அம்மா சொன்ன கதை போல ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு கதை இருக்கும் போல..
உங்கள் கவிதை, இங்கு வந்திருக்கும் கருத்துகள் எல்லாமே ஆயிரம் பதில் சொல்லும் ஒரு மௌன புன்னகைக்கு வழி சொல்கிறது.
அருமை.

அ.மு.செய்யது said...

நன்றி வாசு சார்....கடவுச்சொல் என்று வைத்தால் எத்தனை பேர் உள்வாங்கி கொள்வார்கள் என்ற பயம்தான்.
---------------------------------
வாங்க ஆதவா ( நீங்க புது பதிவரா ?? )

( வழக்கம் போலவே மாயாவி விளக்கம் அருமை !! )
-------------------------------
நன்றி ஷஃபிக்ஸ் !!!!! அழகான பின்னூட்டத்திற்கு !!!!!!!!!!!!

குடந்தை அன்புமணி said...

காதலிக்காத அல்லது காதல் சாரலில் நனையாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். அந்த வகையில் காதல் கவிதைகளுக்கு எப்போதுமே ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. அது சோக கவிதைகளானாலும் சரி, உருகி எழுதும் கவிதைகளானாலும் சரி. அந்த வகையில் இந்த இரு கவிதைகளையும் ரசிக்காமலிருக்க முடியவில்லை.

நல்லாருக்குப்பா...

அ.மு.செய்யது said...

நன்றி அமித்து அம்மா..உங்கள் அனுபவ பகிர்வு சுவராஸியமாக இருந்தது.பலபேருடைய பாஸ்வேர்ட்களின் பின்னால் ஒரு காவியமே ஒளிந்திருக்கிறது..

நன்றி ப்ரியமுடன் வசந்த்.( உண்மை வெளிய வருது )

அ.மு.செய்யது said...

நன்றி சுல்தான் அவர்களே

நன்றி வால் அண்ணே !!!!

நன்றி RVC !!!

அ.மு.செய்யது said...

நன்றி விதூஷ்.....அழகான தங்கள் பின்னூட்டத்திற்கும் புன்னகைக்கும் !!!

நன்றி அன்புமணி சார் ( கருத்தோடு ஒத்துப் போகிறேன் )

அப்துல்மாலிக் said...

இருவேறு சூழ்நிலைகளை எடுத்து அழகா கையாண்டிருக்கும் விதம் அரும செய்யது

அதிக நாட்கள் எடுத்து தரமான ஒரு பதிவை இடுவதில் செய்யதுக்கு நிகர் யார்

S.A. நவாஸுதீன் said...

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.

அருமை செய்யது.

அப்துல்மாலிக் said...

//குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும் //

கவிதகக்ளிலே உவமை (நல்லா பாடம் நடத்துகிறீர்)

அப்துல்மாலிக் said...

//அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்//

நிதர்சனமான உண்மை
வலியின் உச்சகட்டம் அது

S.A. நவாஸுதீன் said...

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!

வாவ்வ்வ்வ்வ்வ்வ். அசத்தலா இருக்கு செய்யது. இன்னும் அதிகமா தொடர்ந்து நீங்க எழுதனும்

அப்துல்மாலிக் said...

//நேற்று எதிர்பார்க்க‌வில்லை
எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று//

ஒவ்வொருடைய வாழ்விலும் அந்த இன்று வந்துவிடும்...
அது எப்போவாகிலும், நாளை அ 10 வருஷம் கழித்து அ 70 வருஷம் கழித்து.........

அப்துல்மாலிக் said...

//கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!
//

பாஸ்வேர்டு தேவ‌தை

முத‌ல் காத‌ல் முற்றிலும் ம‌றையா, அதை ந‌ம்ம‌க்க‌ள் த‌ன‌க்கு இஸ்ட‌மான‌ பாஸ்வேர்டாக‌ வைத்துக்கொள்வார்க‌ள் ம‌ற‌க்கிறேன் என்று சொல்லி ஞாப‌க‌ப்ப‌டுத்துவ‌த‌ற்காக‌....நிறைய திறமை ஒளிந்துள்ள‌து.....

Anonymous said...

என்னப்பா நீ நான் இன்னும் ஜுன் 10 அதிலிருந்தே வெளிவரவில்லை இன்னும் அதற்குள் இந்த காலவழுவமைதி என்னை மீண்டும் கண்ணீரில் கோலமிட வைத்திட்டதே... நண்டு வளையில் உலகம் ..ஆம் காதலுக்கு கால் தடம் கூட உலகமெனும் போது நண்டுவலையில் உலகம் மிகையான வார்த்தை அழகாய் பின்னிய அழுகை ஓவியம்....

Anonymous said...

இடவழுவமைதி...முதல்ல இந்த ரெண்டு தலைப்புக்கும் எத்தனை பாராட்டினாலும் மிகையாகாது..ஆம் அத்தனை புது மொழியா இருந்தது...பாஸ்வோர்ட் தேவதைகள் உன்னை பரிதவிக்க வைப்பதை காண இயலவில்லை..

//கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!//

உன்னை காலாவதியாக்கிவிட்டு அவள் கண்களால் கேட்டு விட்டு போய்விட்டாள்.... முற்றிலும் புதுசா அழகாயிருக்குன்னு சொல்ல ஆசை ஆனால் வலி சொல்லவிடலை...

பாலா said...

செய்யது
அந்த இட வழுவமைதி
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்

இது அதவிட டாப்

கார்த்திகைப் பாண்டியன் said...

அசத்தல்.. வலி நிரம்பிய வார்த்தைகள்.. அருமை நண்பா..

பா.ராஜாராம் said...

செய்யது...என்னங்கையா நீங்க...புகைத்து கொண்டிருக்கும் சிகரெட்டின் நெருப்பு தீண்டுவது உணராது போகிறது...மனசில் இருந்து சிந்துகிற மனசு எப்போதும்.மீண்டும் மீண்டும் வந்து கிறங்க வேணும்.வேலையோடு வேலையாக..வீடு வரையில் வந்துட்டு போங்கள்.உங்களோடு நானும் வர வேணும்.வெளி திண்ணையை வைத்திருங்கள்.

வெற்றி-[க்]-கதிரவன் said...

எங்களுக்கும் கவிதை எழுத தெரியும், எதிர் பதிவ வந்து பார்க்கவும் -:)

http://paarvaigalpalavitham.blogspot.com/2009/07/blog-post_8055.html

அத்திரி said...

அருமை அசத்தல்.................

Anonymous said...

”பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்” என்ற ரெட்டை வார்த்தைகளே ஒரு தனிக்கவிதை.

Venkatesh Kumaravel said...

ஜமாய்ச்சிட்டீங்க!

அ.மு.செய்யது said...

நன்றி அபுஅஃப்ஸர் தல...

//அதிக நாட்கள் எடுத்து தரமான ஒரு பதிவை இடுவதில் செய்யதுக்கு நிகர் யார்//

இந்த கவிதைக்கு ரொம்ப நாள் எல்லாம் எடுத்துக்கல்ல..ஒரே ஒரு இரவு தான்.
------------------------------

நன்றி நவாஸூதீன் !!

உங்களுக்காகவே நிறைய எழுத ட்ரை பண்றேன்.

------------------------------
நன்றி தமிழரசியக்கா..

இது ஒரு புனைவு என்பதை கருத்தில் கொள்க !!

அ.மு.செய்யது said...

நன்றி பாலா ( உங்களுக்கு ஒரு எதிர்கவுஜ பித்தன் பிளாக்ல பாத்தீங்களா ?? )

-----------------------------
நன்றி கார்த்திகை பாண்டியன் ( தொடர் வருகை மகிழ்ச்சியளிக்கிறது )

-----------------------------
நன்றி பா.ராஜாராம் ( நீஙக் என்ன சொல்றீங்கன்னு புரியல )

அ.மு.செய்யது said...

நன்றி பித்தன்...எதிர்கவுஜ எக்ஸ்பர்ட் ஆயிட்டேள் !!!!

ரசித்து சிரித்தேன்
-----------------------------

நன்றி அத்திரி அண்ணே
-----------------------------

நன்றி அமிர்தம் ( முதல் வருகைக்கு -----------------------------


நன்றி வெங்கிராஜா...

-----------------------------
அனைவ‌ர‌து வ‌ருகையும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.

தாரணி பிரியா said...

முதல் கவிதையில் எனக்கு காதலியாய பாக்க தோணலை செய்யது நல்ல தோழி ஒருத்தி ஒரு வயதுக்கு பிறகு அன்னியம் ஆவாளே அதை பத்திதானே சொல்லி இருக்கிங்க.

ரெண்டாவது அருமை.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப அருமைங்க. இந்தக் கவிதைகளை எல்லாப் பின்னூட்டங்களும் எப்படிப் புகழ்தனவோ அப்படியே நானும் புகழ்கிறேன்.

அ.மு.செய்யது said...

தேங்க்ஸூ தாரணி அக்கா, உங்க கற்பனைக்கு முழு சுதந்திரம் உண்டு.

உழவன் அண்ணே !!!உங்களுக்கும்.

ஆடுமாடு said...

ஓவர் பீலிங்கால்ல இருக்ககு!

நேசமித்ரன். said...

அருமை

தொடருங்கள்....

அ.மு.செய்யது said...

வாங்க‌ ஆடுமாடு அண்ணே...ந‌ன்றி !!!

ந‌ன்றி க‌விஞ‌ரே !!! ( kavingan )

gayathri said...

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!


nalla iruku pa kavithai

வலசு - வேலணை said...

//
கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!
//
நன்றாய் இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

அதிரை அபூபக்கர் said...

//அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.// நல்ல வரிகள்...

நிஜாம் கான் said...

//கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!//
சொல்லாமல் சொல்கிறாள் அவள் படும்துயரத்தை. அருமை அருமை.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

எத்தனை உப்பளங்களை
அவள் மகிழ்சியோடு உடைத்தாளோ
தெரியவில்லை பாவம்

கலாட்டா அம்மணி said...

நல்ல கவிதை..