Tuesday, July 14, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று ஆண்டுக‌ள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌,பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..

அண்ணன் செந்த‌ழ‌ல் ர‌வி மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர் அமித்து அம்மா என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.

அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!

என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன்,ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.


இவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்க‌ நான் த‌குதியான‌வ‌னா என்ற‌ கேள்வி உள்ளுக்குள்
பீடிகை போட‌த்தான் செய்கிற‌து.எது எப்ப‌டியாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?

பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்"

என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய
"ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.

ஆடுமாடு

ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.

சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"

எஸ்.ரா.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார் லேகா.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.

ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"

இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."நீ நான் அவ‌ள்" என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.ந‌ர்சிம்,ப‌ரிச‌ல் வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !

அக‌நாழிகை பொன்.வாசுதேவன்

வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு கே.ர‌விஷ‌ங்கர் ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "போடா ஒம்போது" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.

அனுஜ‌ன்யா

'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு.கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.
இவ‌ருடைய‌ "ரொட்டியும் மீன்க‌ளும்" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.

சாஸ்திர‌ ச‌ம்பிர‌தாய‌ப்ப‌டி,ஆறுபேரும் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு இவ்விருதை ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டுமாம்.


**************

58 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

தங்களிடம் பெற்ற மற்றவர்களுக்கும்

நட்புடன் ஜமால் said...

ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கூப்பிட்டு,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்\\


ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...

நானானி said...

ரெகுலர் கஸ்டமர்களை விடுத்து புது கஸ்டமர்களை தேடிப்பிடித்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்! செய்யது!
உங்கள் பதிவுகளை மேலோட்டமாகப் பார்த்தேன். நல்லாருக்கு. நேரம் கிடைக்கையில் படித்து பின்னூட்டுகிறேன். சேரியா?

சந்ரு said...

தங்களுக்கும் ..... ஏனைய விருது பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

sakthi said...

வாழ்த்துக்கள் செய்யது தம்பி

sakthi said...

ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.


அருமையான அலசல்

அற்புதமான தேர்வு

Anonymous said...

--வாழ்த்துகள் நண்பரே.

நீங்க சொல்லியிருக்கும் பதிவர்களை படிக்கின்றேன் இனி.

நன்றி. அவங்களுக்கும் வாழ்த்துகள்ங்க.

rose said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஜ‌மால் அண்ணே (நாங்க‌ ஹ‌மாம் ஃபேமிலி)
------------------------------

ந‌ன்றி நானானி (முத‌ல் வ‌ருகைக்கு ந‌ன்றி)

------------------------------
ந‌ன்றி சந்ரு !!வாழ்த்துக‌ளுக்கு ந‌ன்றி

------------------------------
ந‌ன்றி ச‌க்தி அக்கா !!வாழ்த்துக‌ளுக்கு ந‌ன்றி

------------------------------
ந‌ன்றி ல‌வ்லிக‌ர்ல் !! க‌ண்டிப்பா ப‌டிங்க‌ !!

------------------------------
ந‌ன்றி ரோஸ்..வாழ்த்துக‌ளுக்கு ந‌ன்றி

------------------------------

சென்ஷி said...

அசத்தலான தேர்வு செய்யது! ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் தனக்குரிய தளத்தை அழுத்தமாக பதித்து பதிவுலகில் இயங்குபவர்கள்.

Anonymous said...

விருது பெற்ற உமக்கு முதல் வாழ்த்துக்கள்.....

பெற்றுக் கொண்ட அனைத்து அற்புத பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

தெரிவுகள் சரிதான் நக்கீரா....

"அகநாழிகை" said...

அ.மு.செய்யது,
மிக்க நன்றி. விருது பெற்ற மற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

//க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்//

இது கொஞ்சம் அதிகமோ என தோன்றுகிறது.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பாலா said...

அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம்

ithuthaanga correcttu
rompa rompa correcttu

வினோத்கெளதம் said...

வாழ்த்துக்கள்

Vidhoosh said...

உங்களுக்கு விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
மிகச் சரியான தேர்வுகள் செய்தமைக்கும் ஒரு சபாஷ்.
--- வித்யா

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தாங்கள் வழங்கி பெற்றுக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள். தாங்கள் விருது வழங்க சொன்ன காரணங்களை கைதட்டி வரவேற்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

யாரிடமிருந்து எதற்காக என்றெல்லாம் கணக்கில் கொள்ளாமல் விருது என்றாலே ஒரு குறுகுறுப்பான சந்தோஷத்தைத்தான் தருகிறது எனினும், உடன் அதைப்பெறுபவர்களாலேயே அதன் முக்கியத்துவம் மேம்படுகிறது. விருது பெறும் மற்ற பதிவர்களின் பெருமையறிந்தவன் நான். நிச்சயம் அவர்களுக்கு ஈடானவன் என்று என் மனம் ஒப்பவில்லை. கொஞ்சம் பெருமையுடனே ஏற்கிறேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

உங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.!

வெங்கிராஜா said...

ஆஹா! ஆறில் சில தளங்கள் இப்போது தான் அறிமுகம். இப்போவாச்சும் சீசன் மாறுச்சே.. பட்டாம்பூச்சி, 32 முடிஞ்சு இப்போ இது... நடக்கட்டும்!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் விருது வழங்கிய அனைவருமே அசத்தல் ரக எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள்.

வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

இதுவரை எனக்கு லேகாவின் பதிவு அறிமுகமில்லை, இனிதான் படிக்கவேண்டும்.

நன்றி திரு. செய்யது.

நர்சிம் said...

வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் செய்யது!!
உங்களுக்கும் நீங்கள் வழங்கியவர்களுக்கும்!!

செந்தழல் ரவி said...

ஹைய்யா...சூப்பர் தேர்வுகள்...

உங்களுக்கும் வாழ்த்துக்கள், உங்களை கையால் விருதை வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்........

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் செய்யது. மிகச் சரியான தேர்வு. அதற்கான விளக்கமும் மிகச் சரி. பாராட்டுக்கள்.

ஷ‌ஃபிக்ஸ் said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்களிடம் விருது பெற்றோர்க்கும்.

வால்பையன் said...

எல்லாம் பெரிய தலைகள்!

அதனால் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்!

லேகா said...

நன்றி செய்யது.

வலைத்தளம் குறித்த அறிமுகமோ,அறிவோ இன்றி படித்த புத்தகங்களை குறித்து எழுத தொடங்கி இப்பொழுது ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது.

சக நண்பர்கள் தரும் ஊக்கமும் உற்சாகமுமே தொடர்ந்து இயங்க செய்கின்றது.

மீண்டும் நன்றி.

ஜெஸ்வந்தி said...

முதலில் உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

அபுஅஃப்ஸர் said...

நானும் என் வாழ்த்துக்களை கூவிக்கிறேன் செய்யது

விருது பெற்ற அனைவரும் பொருத்தமானவர்களே

அபுஅஃப்ஸர் said...

//ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று ஆண்டுக‌ள் முதல் பரிசு வாங்கியவன் /

தெரியுது ஒத்துக்கறோம் நல்ல விளம்பரமையா ஹா

அபுஅஃப்ஸர் said...

//ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்//

தெளிவா (தெளிவா??) இருக்கேள்

பொழச்சுக்குவிய‌

செந்தழல் ரவி said...

விருது பற்றி தெரியப்படுத்தியமைக்கு நன்றி..!!!!!!!!

அ.மு.செய்யது said...

நன்றி சென்ஷி...நீங்கள் சொல்வது சரிதான்

நன்றி தமிழரசியக்கா

நன்றி அகநாழிகை வாசு சார்....

நன்றி பாலா...வருகைக்கு !!

நன்றி வினோத்கெளதம்

அ.மு.செய்யது said...

நன்றி விதூஷ்...

நன்றி அன்புமணி சார்

நன்றி ஆதியண்ணே !!!

நன்றி வெங்கிராஜா...எல்லாத்தையும் படிங்க..

நன்றி அமித்து அம்மா...கண்டிப்பா படிங்க.

அ.மு.செய்யது said...

நன்றி தேவா சார்..

நன்றி செந்தழல் ரவியண்ணே !!

நன்றி நவாஸுதீன் தல...( உங்களுக்கும் வாழ்த்துகள் !! )

நன்றி ஷஃபிக்ஸ்

அ.மு.செய்யது said...

நன்றி வால்பையன்

நன்றி நர்சிம்.

நன்றி லேகா...வாங்க..

நன்றி ஜெஸ்வந்தி

அ.மு.செய்யது said...

வாங்க அபு....ஜீவனிடமிருந்து விருது பெற்றமைக்கு உங்களுக்கும் வாழ்த்துகள் !!!!

அனுஜன்யா said...

செய்யது,

மகிழ்ச்சியாக இருக்கு. ஆதி சொன்னது போல் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்களைப் பார்த்து நான் மிகவும் கவுரவிக்கப் பட்டது போல் உணர்கிறேன். ரொம்ப நன்றி.

மும்பை வாருங்கள். வரும்போது, இதற்குப் பரிசாக அந்தப் புதிய பாலத்தில் சவாரி கூட்டிச் செல்கிறேன் :)

அனுஜன்யா

அ.மு.செய்யது said...

நன்றி அனுஜன்யா அவர்களே !!

ஓர்லி மட்டுமல்ல..மும்பையே நான் இதுவரை வந்ததில்லை.

வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வருகிறேன்.மழை ஓயட்டும்.

cute baby said...

vaazhthukkal seiyathu

ஆப்பு said...

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!

Gymg said...

Machi.....
Kalakkitta da.....
Romba short period la nalla familiar aayitta.....

Indha paarattukalukku nee sariyana aaluthan...

Unna paarthu enakkum Blog ezuthanumnu thonuthu.....

Oru velai naan blog ezutha aarambicha neethan enakku MAANASEEGA GURU.....

Keep it machi.....niraya ezuthu...
nalla visayangal ezuthu...

Time irundha naan request panna matter'a patthi konjam ezuthu....

Ellarum already unna niraya paaratti iruppanga...

Irundhalum naanum sollanumnu aasai padaren....

Unakkum unnudaya ezuthukkalukkum un nanbanakiya en mana maarndha vaazthukkal matrum paarattukal...!

பித்தன் said...

vaalthukkal... -:))))

reena said...

நட்புடன் ஜமால் said...
ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் கூப்பிட்டு,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்\\


ஆனாலும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ...


//ரிப்பீட்டு...

வாழ்த்துக்கள்... தங்களுக்கும் தங்களிடம் விருது பெற்றவர்களுக்கும்..//

அ.மு.செய்யது said...

நன்றி ஆப்பு தல..( கிளம்பிட்டான்யா !!! )

நன்றி பித்தன் அண்ணே !!

அ.மு.செய்யது said...

நன்றி ஜிம்ஜி மச்சி !!!

ப்ளாக் என்றால் என்னவென்றே தெரியாத எனக்கு அதை உருவாக்கி கொடுத்து
பின்புலத்தில் இருந்து ஆதரவு அளித்து வரும் தாங்களும் வலைக்கு வந்து கலக்க‌
வேண்டும் என்பது என் தனிப்பட்ட வேண்டுகோள்.

சீக்கிரம் வாங்க..

காத்திருப்புகளுடன்,

அதே சர்க்கியூட் சையத்,
சி.பி.டி,தரமணி,
சென்னை‍-600113

அ.மு.செய்யது said...

நன்றி ரீனா.வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்..

பிரியமுடன்.........வசந்த் said...

விருது பெற்ற அனைவருக்கும் செய்யதுக்கும் வாழ்த்துக்கள்....

ஆடுமாடு said...

//அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்//

அண்ணேன் என்னது. இதெல்லாம் நெசம்தானா? வலிக்குது... அழுதுடுவேன்...


எனிவே நன்றிங்க.

" உழவன் " " Uzhavan " said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

நன்றி கியூட் பேபி..

நன்றி பிரியமுடன் வசந்த்

நன்றி ஆடுமாடு அண்ணே !!! நெசமாத்தாங்க..

நன்றி உழவன் !!

ஜீவன் said...

முதலில் உங்களுக்கும், உங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

RAMYA said...

விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள்!!

விருது உங்களிடம் இநருந்து பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

RAMYA said...

எழுத்தில் குசும்பு, துள்ளலும் கொஞ்சம் தூக்கலாக உள்ளது.

ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் :))

புதுகைத் தென்றல் said...

வாழ்த்துகள்! தங்களுக்கும்

தங்களிடம் பெற்ற மற்றவர்களுக்கும்

அ.மு.செய்யது said...

நன்றி ஜீவன்...

நன்றி ரம்யா..புதுகைத் தென்றல் அக்காக்கள்.

S.A. நவாஸுதீன் said...

செய்யது போய்ப் பாருங்க

http://www.vadakaraivelan.com/2009/07/blog-post_20.html

ஆடுமாடு said...

செய்யது அண்ணேன். நன்றி. லேட்டாதான் பார்க்க முடிஞ்சது. நானும் கொஞ்ச நாள் முன்னால வலைச்சரத்துல எழுதினேன். முடிஞ்சா இதை லிங்கை படிச்சுப் பாருங்க:

http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_8202.html

http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_07.html


http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_05.html

http://blogintamil.blogspot.com/2008/02/1.html

http://blogintamil.blogspot.com/2008/02/1.html

நன்றி.