Wednesday, July 8, 2009

உயர்ரக மந்திகள்


"இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல.நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது.இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.ஒருநாள்,ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம்.தினமுமா? இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்" க‌ண‌வ‌னிட‌ம் பொரும ஆரம்பித்தாள் பார்வ‌தி.

"பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல‌.உக்காத்தி வ‌ச்சி பேசிப்பாரு!! அவ‌ளுக்கு தேவையான‌த‌ செஞ்சி கொடு!!" அன‌ந்த‌ன் சொன்னதும் பார்வ‌திக்கு கொஞ்ச‌ம் விட்டுதான் பிடிக்க‌லாமென்று தோன்றிய‌து.

அன‌ந்த‌ன் பார்வ‌தி த‌ம்ப‌தியின‌ர் ஆர‌ஞ்ச் க‌வுண்டி அபார்ட்மென்டிற்கு குடிவ‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாய் வேலைக்காரி லீலா தான் அவ‌ர்க‌ளுக்கு எல்லாம்...க‌ண‌வ‌ன் உட‌னிருந்த‌ வ‌ரை ஜாம்ஜாமென்று வாழ்ந்து கொண்டிருந்த‌வ‌ள் அவ‌னை விட்டு பிரிந்த‌தும்,நூல‌றுந்த‌ ப‌ட்ட‌ம் போல‌ ஆனாள்.வ‌யிற்று பிழைப்புக்காக‌வும் வீட்டு வாட‌கைக்காக‌வும் ம‌ட்டுமில்லாம‌ல் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்து ந‌ல்ல‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌ம் அவ‌ளிட‌ம் அதிக‌ம் இருந்த‌து.

"மாச‌ சம்பளத்த‌ கூட்டி கொடுத்தா எந்த‌ வேலையையும் மொகஞ்சுழிக்காம‌ செய்வா!"

பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டிய‌து.நேற்று ஸ்டூல் மேல் ஏறி,ப‌ர‌ணிலிருந்த‌ எலிப்பொறியை எட்டி எடுக்கும்போது, க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்த‌து.இது போன்று ப‌ல‌த‌ருண‌ங்க‌ள் அன‌ந்த‌னை உசுப்பி விட‌ ஆர‌ம்பித்த‌து.வேண்டுமென்றே தான் இப்ப‌டி உடைய‌ணிகிறாளா..இல்லை செய்யும் வேலையை போன்றே துணியுடுத்துவ‌திலும் அச‌ட்டை தானா?

ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்.வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள்.இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது.பெர்ச‌ன‌ல் வொர்க் என‌ மேனேஜ‌ரிட‌ம் சொல்லிவிட்டு மதியம் 2 ம‌ணிக்கே கிள‌ம்பினான்.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.

காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான்.

"உட‌ம்பு ஏதும் ச‌ரியில்லீங்க‌ளாய்யா !! சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌" ....

"ஆமா லேசா த‌லைவ‌லி அதான்..." க‌த‌வை தாளிட்டான் அன‌ந்த‌ன்.

"இருங்க‌ய்யா நான் காபி போட்டு த‌ர்றேன்" ....லீலாவின் விய‌ர்வை வாடை அனந்தனை கிறங்கடித்தது

"உன் பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ காசு வேணும்னு சொன்ன‌ல்ல.அந்த‌ க‌றுப்பு பாலிதீன் பைக்குள்ள‌ வ‌ச்சிருக்கேன் எடுத்துக்க‌..

எனக்கு உன்ன‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு லீலா..ஒரே ஒருமுறை...இன்னிக்கு ம‌ட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.உன் பைய‌ன‌ கான்வெண்ட் ஸ்கூல்ல‌ ப‌டிக்க‌ வைக்க‌ப்போறியா...இல்ல கார்ப்ப‌ரேஷ‌ன் ஸ்கூல் போதுமா?.."

பின்புற‌மிருந்து லீலாவை க‌ட்டிய‌ணைக்க‌ முய‌ன்ற‌வ‌னை ப‌டாரென்று த‌ள்ளி விட்டு,முந்தானையை சரிசெய்து கொண்டு சுவற்றில் சரிந்தாள் லீலா.அவ‌ள் கண்கள் நிறைந்திருந்தன.

அரை நிமிட சுழற்சியை சட்டென நிறைவு செய்தது கடிகாரம்.

பெறும் கதறலுக்கு பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு "வேணாம்யா...இந்த‌ அபார்ட்மென்ட் க‌ட்ட‌ற‌ நேர‌ம் இங்க‌ எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌ இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..என்ன‌ விட்ருங்க‌..நாளையிலிருந்து நான் வ‌ர‌ மாட்டேன்." க‌ண்ணீரை துடைத்து கொண்டு வெளியேறினாள்.

"காய‌வ‌ச்ச‌ துணியெல்லாம் மழையில நனைஞ்சிண்டுருக்கு..பாருங்க‌!!
இன்னிக்கும் துணிய‌ எடுக்காம‌ போயிட்டாளா?" த‌லையை துவ‌ட்டி கொண்டே வ‌ந்த பார்வ‌தியிட‌ம், "ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."


*******************************

73 comments:

நட்புடன் ஜமால் said...

இதுலையும் ரகமா ...

வினோத் கெளதம் said...

நல்லா இருக்கு..:)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அழகான கதை. 'இந்தப் பழம் புளிக்கும் ' என்று முடித்தது இன்னும் தத்ரூபமாயிருக்கிரது.

துளசி கோபால் said...

நல்லா வந்துருக்குங்க.

பாராட்டுகள்.

இந்த ரு று வைக் கொஞ்சம் சரி செஞ்சுருங்க.

எ.கா: பொறும = பொரும

அகநாழிகை said...

நண்பா அ.மு.செய்யது,
கதை நன்றாக இருக்கிறது. மனித உள்மன வக்கிரங்கள் எல்லோருக்கும் பொதுவானது. சந்தர்ப்பம், சூழல் இவற்றைப் பொறுத்து உள்ளிருக்கும் மனக்குரங்கு குதியாட்டம் போடத் தயாராகிறது. நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் சாரே !!! ( ஆல்ரெடி படிச்சது தான )
---------------------------

நன்றி வினோத் கெளதம் சகா.
---------------------------

நன்றி ஜெஸ்வந்தியக்கா.

---------------------------

நன்றி துளசி கோபால் அவர்களே !!! ( சரி செய்து விட்டேன்.வருகை மகிழ்ச்சியளிக்கிறது. )
---------------------------

நன்றி அகநாழிகை வாசு சார்..( அழகான பின்னூட்டத்திற்கும் வாழ்த்துகளுக்கும்..)

---------------------------

குடந்தை அன்புமணி said...

வாசு சார் சொல்வது சரிதான். ஒழுக்கம் என்பது சந்தர்ப்பமின்மையே என்று எங்கேயோ படித்த ஞாபகம். கதையும் அதற்கு கொடுத்த தலைப்பும் நல்லாருக்கு.

அ.மு.செய்யது said...

நன்றி அன்புமணி !!! உங்கள் கருத்துகளோடு உடன்படுகிறேன்.

Virginity is not the dignity

It is just the lack of oppurtunity

என்று சொல்வதில்லையா..அந்த மாதிரி தான்.

அமுதா said...

நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

"உயர்ரக மந்திகள்"

என்னது, தலைப்பு சவுதி ஸ்பெஷல் மாதிரி தெரியுது. இருங்க உள்ளே போயிட்டு வர்றேன்.

தேவன் மாயம் said...

கதை நல்லா வந்திருக்கு செய்யது!! மனக்குரங்கை கட்டித்தான் வைக்கவேண்டும்

S.A. நவாஸுதீன் said...

அட இது தமிழ் மந்தி.

கதை நல்லா இருக்கு செய்யது.

அ.மு.செய்யது said...

நன்றி அமுதா

நன்றி டொக்டர் தேவா

நன்றி நவாஸ் ( அப்ப நீங்க நினைச்ச மந்தி ?? )

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா வந்திருக்கு, ஆரம்பத்தை கொண்டே கடைசியில் கதையை முடித்த விதமும் அருமை.

தலைப்பு சூப்பர்

நட்புடன் ஜமால் said...

அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு \\


பல அர்த்தங்கள் பொதிந்து இருக்குப்பா

நட்புடன் ஜமால் said...

துவக்கத்தில

பாத்திரத்தில் அழுக்கு

முடிவில்

’பாத்திரத்தில்’ அழுக்கு ...

தமிழ் அமுதன் said...

தலைப்பு அருமை!!

///"ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."//

இந்த வரிகளும்...............

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு (டெம்ப்ளேட் பின்னூட்டமில்லை).

VISA said...

arumaiyaaga eluthi iruntheerkal
enaku pidithathu intha varigal.

//.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.
//
உமிழ்ந்த‌து vaarthai pirayoagam super

SUFFIX said...

தலைப்பை பாத்துட்டு இது எங்க ஊரு மந்தியோன்னு நினைச்சுட்டேன், உள்ளே போய் எல்லாத்தையும் படிச்சுட்டு வர்ரேன்

SUFFIX said...

சபலம்... கதை நன்றாக எழுதியிருக்கின்றீர்கள்!! ‌

அ.மு.செய்யது said...

நன்றி அமித்து அம்மா !!!
----------------------------

நன்றி ஜமால் அண்ணே ( ரூம் போட்டு யோசிப்பீங்களோ !! )

----------------------------
நன்றி ஜீவன் அண்ணே ( நலம் தானே ? )
----------------------------

நன்றி விசா அவர்களே ...( தொடர் வருகை மகிழ்ச்சியளிக்கிறது )
----------------------------

நன்றி வித்யா ( ஹா..ஹா...)

------------------------------

நன்றி ஷ‌ஃபிக்ஸ் அண்ணே..( அது என்னங்க உங்க ஊரு மந்தி ?? )

ஆ.சுதா said...

நல்லா இருக்கு எழுத்தும் கதையும்.

"உழவன்" "Uzhavan" said...

தலைப்புக்கு முதலில் தலைவணங்கியே ஆகவேண்டும் தல. புற அழுக்கில் ஆரம்பித்து அக அழுக்கில் நிறைவு செய்துள்ளவிதம் அருமை.

SUFFIX said...
This comment has been removed by the author.
SUFFIX said...

..( அது என்னங்க உங்க ஊரு மந்தி ?? )

இது தான் எங்க ஊரு மந்தி http://farm1.static.flickr.com/20/70460096_3423a495dc.jpg

S.A. நவாஸுதீன் said...

நன்றி நவாஸ் ( அப்ப நீங்க நினைச்ச மந்தி ?? )

Shafi கொடுத்திருக்கிற லிங்க் பாருங்க செய்யது. அதான் அதேதான்.

SUFFIX said...

http://farm1.static.flickr.com/20/70460096_3423a495dc

கடைசியல .jpgனு சேர்த்துக்கோங்க, சரியா பேஸ்ட் பன்னலைனு நினைக்கிரேன். சாரிப்பா

அ.மு.செய்யது said...

நன்றி ஷஃபிக்ஸ்..படம் பகிர்ந்தமைக்கு..

நன்றி நவாஸ்..பார்த்து விட்டேன்.

ஆமா..அது என்ன நான்வெஜ் ஐயிட்டம் மாதிரி இருக்கு...??

S.A. நவாஸுதீன் said...

அ.மு.செய்யது said...

நன்றி ஷஃபிக்ஸ்..படம் பகிர்ந்தமைக்கு..

நன்றி நவாஸ்..பார்த்து விட்டேன்.

ஆமா..அது என்ன நான்வெஜ் ஐயிட்டம் மாதிரி இருக்கு..

மாதிரி எல்லாம் இல்ல. ஒரு ஆட்டை நாலு பீஸ் போட்டதுல ஒரு பீஸ்தான் அது

Joe said...

இந்தாளு பண்ண தப்புக்கு, அந்தம்மா வேலை போச்சு...
என்ன நியாயம்?

ரவி said...

டிப்பரண்டா இருந்தது............!!!!!!!!!!!!!

அப்துல்மாலிக் said...

தல என்ன இது இப்படியெல்லாம்

அழகான எழுத்தோடம், கதையில் நிதர்சனம் தெரியுது

என்னமோ சட்டெனெ முடிந்த ஒரு இயல்பு, கருத்தை சுருக்கமாக சொன்னவிதம் அருமை

அப்துல்மாலிக் said...

//பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல.//

இப்பவே தெரிந்தது அவனுடைய பிளான்

அப்துல்மாலிக் said...

//பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டியது//

இப்படி போட்டுக்குடுக்குறதுக்காகவே நிறையபேரு அழையுரானுங்கய்யா

அப்துல்மாலிக் said...

//க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்தது//

ம்ம் ம்ம் நிறைய கதை(?) படிப்பிய போலருக்கு

அப்துல்மாலிக் said...

//ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்//

வூட்டுக்காரம்மா கூட இருக்கும்போது எங்கேர்ந்துதான் வருதோ இவனுங்களுக்கு பசியெல்லாம்

அப்துல்மாலிக் said...

//ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்தது//

ரசித்தேன் இந்த் வரியை

அப்துல்மாலிக் said...

//எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌ இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..//

நச் நச் நச் நச்சுனு மண்டைலே கடப்பாரையை வெச்சு அடிச்சாமாதிரி இருந்திருக்கனும்....... ம்ம்ஹூம்

வித்தியாசமான கதை கரு

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஜோ..

ந‌ன்றி செந்த‌ழ‌ல் ர‌வி...

இருவ‌ரின் வ‌ருகையும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.

அ.மு.செய்யது said...

@அபுஅஃப்ஸர்

//அழகான எழுத்தோடம், கதையில் நிதர்சனம் தெரியுது//

வாங்க‌ த‌ல‌...

//என்னமோ சட்டெனெ முடிந்த ஒரு இயல்பு, கருத்தை சுருக்கமாக சொன்னவிதம் அருமை//

பாராட்டுறீங்களா ?? திட்றீங்களா ??

அ.மு.செய்யது said...

// நச் நச் நச் நச்சுனு மண்டைலே கடப்பாரையை வெச்சு அடிச்சாமாதிரி இருந்திருக்கனும்....... ம்ம்ஹூம்//

என் தலையிலயா ?? ஏன் இந்த கொலவெறி ??

அ.மு.செய்யது said...

// அபுஅஃப்ஸர் said...
//க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்தது//

ம்ம் ம்ம் நிறைய கதை(?) படிப்பிய போலருக்கு
//

ஓ "அதுவா"...பத்துருவா கொடுத்தா நியூஸ்பேப்பர்ல மடிச்சி கொடுக்கற ப்ளாட்பாரக் கத புஸ்தகம் தானே !!! ( நாங்கெல்லாம் க‌த‌ ப‌டிக்கற‌வ‌ங்க‌ இல்ல‌ த‌ல‌ )

Unknown said...

// இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல. நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது. ///




என்னது... சட்டைய கழுவுவாங்களா..? ஆஹா....ஒரு க்ரூப்பாதேன் கெலம்பீருக்குறீங்க ......!!!






// ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம் //






ஓஒஒவ்வ்......! யூ மீன் ....... வெர்டிகள் லிமிட்......!!!





// இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்"







மந்திலி ஒரு டொண்டி பைவ் தவுசன் வருமா.....??


இஸ் இட்.......??? குட் நைட்.......!!!!!!







// வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள் //





ஓஒஒவ்வ்......!! நின்னுக்கோரி ... வர்னும்... வர்ணும்.....!!!!


நின்னுக்கோரி ... வர்னும்... வர்ணும்.....!!!!






// இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது. ///




ஆமாம்... !! மூணு பக்கிட்டு வெறும் முப்பது ருவாயில் ....!!

வருகை தாருங்கள் ......

" முனிமா ஸ்டோர்ஸ்.."' ,
ஸ்டெல்லா பஜார்.,
டகுலு குப்பம் ,
நியூ ஜெர்சி - 007 007 ..!!!

எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை....!!!!



// ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து. //


அதுவும் புள் லோடா ......???



// காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான். //


நம்தன ..... நம்தன .... நம்தன.... நம்தன...!!


அஅஆ.... அஅஆ....
அ அ ஆ..... அஅஆ......




// அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்." //



அட... அவ்வளோதானா கத.... ????


நல்லாருக்கு மச்சி....!!! வாழ்த்துக்கள்...!!!

அ.மு.செய்யது said...

//என்னது... சட்டைய கழுவுவாங்களா..? ஆஹா....ஒரு க்ரூப்பாதேன் கெலம்பீருக்குறீங்க ......!!!//

// இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.//

நான் இத சொன்னேன்...லவ்டேல் அண்ணே !!!

அக்குவேறா ஆணி வேறா ஆக்கீட்டீங்க‌ளேண்ணே !!!

ச‌ரி ஆனது ஆய்போச்சு..( ஆகாத‌து டேப்ள‌ட் போட்டுச்சு )

வருகைக்கு மிக்க நன்றி !!!

sakthi said...

செய்யது என்ன ஒரு அழகான ஆழமான கதை அசத்தல்

வால்பையன் said...

பாடி டச்சிங்
மனசு டச்சிங்காயிருச்சு!

நல்லாயிருக்கு!

sakthi said...

கதை நன்றாக இருக்கிறது. மனித உள்மன வக்கிரங்கள் எல்லோருக்கும் பொதுவானது. சந்தர்ப்பம், சூழல் இவற்றைப் பொறுத்து உள்ளிருக்கும் மனக்குரங்கு குதியாட்டம் போடத் தயாராகிறது. நல்ல கதை.
வாழ்த்துக்கள்.


நானும் ரீப்பிட்டுகிறேன்...

sakthi said...

ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."

கண்டிப்பா உன்னை போன்ற ஆட்களுக்கு யாரும் சரி வர மாட்டாங்கய்யா

sakthi said...

50

நசரேயன் said...

இயல்பா இருக்கு

rose said...

athukullayum ivlo pinnutama

rose said...

kathai nalla irukku

சப்ராஸ் அபூ பக்கர் said...

நல்லா இருந்ததுங்க....

வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

பாலா said...

nalla irunthuthu seyad
beat kuraiyaamale azhachuttu poreenga
rasiththen

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு..:)))முடிவும் அருமை

அ.மு.செய்யது said...

நன்றி சக்தி அக்கா

நன்றி வால் அண்ணே

நன்றி சப்ராஸ் அபூ பக்கர்

நன்றி நசரேயன்

நன்றி ரோஸ்

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

நன்றி பாலா

அனைவரது வருகையும் மகிழ்ச்சியளிக்கிறது.தொடர்ந்து வருக !!!

Anonymous said...

கடைசியில் வேலைக்காரியின் நன்றி உணர்வு நல்லாயிருந்தது... கதையை செய்யது பாணியில் சொல்லியிருக்கலாம் மனைவிக்கு தெரியாமல் வேலைக்காரியின் மகன் படிப்புக்காக பணம் தருவது போல..ஏன்னென்றால் இப்போதெல்லாம் உதவும் பக்குவம் பெரும்பான்மையோருக்கு இருக்கிறது ஒரு தகவல் தந்தது போலவும் இருந்து இருக்கும்...

kanagu said...

சூப்பருங்க செய்யது...

அதுலயும்..

/*"ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."*/

இந்த முடிவு வரிகள் உண்மையிலயே நல்லா இருந்துது :)

அ.மு.செய்யது said...

நன்றி தமிழரசி அக்கா..( அடுத்த வாட்டி கதை எழுதும் போது உங்க கிட்ட காமிச்சிட்டு வெளியிடுறேன் )
----------------------------------

நன்றி கனகு..வருகைக்கும் பகிர்வுக்கும் மிக்க மகிழ்ச்சி !!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

வாசித்தா நினைவு படுத்திக் கொள்றேங்க.....

anbudan vaalu said...

தலைப்பு அருமை...கதையை படிச்சதும் கொஞ்சம் கஷ்டமா போச்சு...

மந்த புத்தியாயிருந்தா கூட பரவாயில்லை இப்படி மந்தி புத்தியாயிருக்க கூடாது....

*இயற்கை ராஜி* said...

நல்லா வந்துருக்குங்க.

பாராட்டுகள்.

அ.மு.செய்யது said...

நன்றி அபூபக்கர் !!

நன்றி டாக்டர் வால்ஸ் !!

நன்றி இயற்கை !!

பா.ராஜாராம் said...

மன விகாரங்களை வெளிபடுத்திய
விதம்,நன்று செய்யது.நடை,மிக அற்புதம்!

Thamira said...

படிச்சாச்சு.!

ரவி said...

சுவாரஸ்ய வலைப்பதிவர் விருதுக்கு வாழ்த்துக்கள்...!!!

நோ வெயிட்டிங். நீங்க ஆறுபேரை செலக்ட் செஞ்சு விருது கொடுத்தாகனும்....

அ.மு.செய்யது said...

நன்றி ராஜாராம் !!

நன்றி ஆதியண்ணே ( கதை பிடிக்கலியோ ?? )

அ.மு.செய்யது said...

நன்றி செந்தழல் அண்ணே !!! உங்கள் மூலமாக ஆரம்பித்து
அமித்து அம்மா கையால் பெறுவது பெருமை கலந்த மகிழ்ச்சி !!!

பிரவின்ஸ்கா said...

கதை ரொம்ப நல்லாருக்கு


- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

கலாட்டா அம்மணி said...

கதை நல்லா இருக்கு..

ஆதவா said...

நல்லவேளை, வேலைக்காரியோட அட்வைஸ்ல அய்யா திருந்தறாப்ல நீங்க எழுதிடல..

ஏன்னா,,,, இங்க யாரும் ஒத்தைச் சொல்லில் திருந்துவது கிடையாது,.

கதை அம்சமா இருக்கு..

வாழ்த்துக்கள் அ.மு.செய்யது

அ.மு.செய்யது said...

நன்றி பிரவின்ஸ்கா

நன்றி கலாட்டா அம்மணி

நன்றி ஆதவா !!!!