Sunday, July 5, 2009

மேகங்கள் திரட்டுவது நீ !


பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.


************

பி.கு: பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்
எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.

**********************

81 comments:

தேவன் மாயம் said...

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.///

ஆகா ஆகா!!

தேவன் மாயம் said...

மீள் பதிவா? பிரமாதம் நண்பரே!!

தேவன் மாயம் said...

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.
///

நம்பிக்கை வரிகள் அருமை!!

அ.மு.செய்யது said...

//தேவன் மாயம் said...
மீள் பதிவா? பிரமாதம் நண்பரே!!
//

வாங்க தேவா..மிக்க நன்றி !!

பீர் | Peer said...

//மேகங்கள் திரட்டுவது நீ !//

நினைத்து வந்தது வேறு?

பீர் | Peer said...

கிடைத்தது கூட அருமைதான்.

Unknown said...

//// வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல். //


ம்ம்ம் .... ம்ம்ம் ...... ... பட்டய கெளப்புங்க தலைவரே .....!!!



முன் குறிப்பு : போட்டோ இன்னும் கொஞ்சம் க்லோசப்புல எடுதிருந்திருக்கலாம் ...!! பரவால விடுங்க.....!!!!

sakthi said...

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

அருமை பா

sakthi said...

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.

அழகு வரிகள்

sakthi said...

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

wonderfull

அ.மு.செய்யது said...

நன்றி பீர்முகம்மது

நன்றி லவ்டேல்மேடி

நன்றி சக்தி அக்கா !

வெற்றி-[க்]-கதிரவன் said...

:)

நட்புடன் ஜமால் said...

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.\\

நால் வரியில் எத்தனை சிந்தனைகள்

அருமை ப்பா

நட்புடன் ஜமால் said...

பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து\\


காதலில் இது தானே கலவி ...

நட்புடன் ஜமால் said...

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.\\


காதலில் இதுதானே காதல் ...

நட்புடன் ஜமால் said...

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்\\

நிதர்சணம்

அருமை காதல்

நட்புடன் ஜமால் said...

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.\\

ராஸா தூள் ...

நட்புடன் ஜமால் said...

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.\\


ஜஸ்ட் ரொமாண்டிக் ...

நட்புடன் ஜமால் said...

வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.\\


அருமையான காதல் ...

(மீள் பதிவா - அப்பத்திலேர்ந்தே இப்படித்தானா ...)

அ.மு.செய்யது said...

வாங்க பித்தன்..( இளிப்பானுக்கு நன்றி )
-------------------------------
//நால் வரியில் எத்தனை சிந்தனைகள்

அருமை ப்பா//

வாங்க‌ ஜ‌மால் !!!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.\\


அருமையான காதல் ...

(மீள் பதிவா - அப்பத்திலேர்ந்தே இப்படித்தானா ...)
//

இப்படித்தான் அப்பத்திலர்ந்தே ...!!!! நன்றி !!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.\\


காதலில் இதுதானே காதல் ...
//

மீள்பதிவாக இருந்தாலும் ரிப்பீட்டு ஆடியன்ஸுகள்.

பாலா said...

குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும்

yaaru sonnathu ??????????????

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.


piramaatham
pineeteenga ponga

Vidhya Chandrasekaran said...

நல்லாருக்கு..

பா.ராஜாராம் said...

மழை மாதிரி மிக
நெகிழ்வான ஒரு அனுபவ
கவிதை வரிகள்,செய்யது!வாழ்த்துக்கள்!!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி பாலா..

ந‌ன்றி வித்யா..

ந‌ன்றி பா.ராஜாராம்.

அனைவ‌ர‌து வ‌ருகையும் ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.

Anonymous said...

கல்லூரிக் காலங்களிலேயே கலக்கல் தொடங்கி விட்டதா? அப்படியே அனுபவிச்சி ரசித்து எழுதியது போல ரொம்ப நல்லாயிருக்கு காதல் சொட்டச் சொட்ட....

குடந்தை அன்புமணி said...

//விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.//

காதலர்கள் மட்டுமல்ல கணவன்-மனைவியருக்குள்ளும் இப்படித்தான் இருக்கணும்.

குடந்தை அன்புமணி said...

கல்லூரி காலத்தில் எழுதியதா? பரவாயில்லையே அப்பொழுதிருந்தே கலக்கியிருக்கீங்க போலிருக்கு...

anbudan vaalu said...

:)))

SUFFIX said...

//பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.//

ஊடலுக்குப்பின் கூடல்...குதூகலந்தான் போங்கோ!!

SUFFIX said...

//விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.//

இம்புட்டுதானா... நல்லா நடிக்கிரானுங்கய்யா

SUFFIX said...

//உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்//

டச்சிங் வரிகள்

SUFFIX said...

//வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.//

DEEP LOVE!!

அ.மு.செய்யது said...

நன்றி தமிழரசி,குடந்தை அன்புமணி !!!

காலேஜ்ல இல்லங்க..ஸ்கூல்லயே ஆரம்பிச்சாச்சு !!!

-------------------------------
நன்றி வாலு..இளிப்பானுக்கு..

-------------------------------

நன்றி ஷஃபிக்ஸ்..பிரிச்சி மேய்ஞ்சதுக்கு !!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ஆழமான காதலில் விளைந்த வார்த்தைகள்.. அருமை நண்பா..

Venkatesh Kumaravel said...

இதெல்லாம் புனைவு மாதிரி இல்ல... நிஜமாவே டைரிக்குறிப்புகள் தானா? மக்கள் மேற்கோள் காட்டிய கர்வம்/ஏக்கம் வரிகள் சான்ஸே இல்ல!

அ.மு.செய்யது said...

நன்றி கார்த்திகைப் பாண்டியன் சார்.

------------------------------
நன்றி வெங்கிராஜா வருகைக்கு...

பிராமிஸா அது புனைவு தாங்க..எங்க வேணாலும் துண்டு போட்டு தாண்ட தயார்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

மழைக்கு ஒதுங்கிய நாளிலும் உனை மறவேன்

உனக்கு எல்லாமும் இணையும் ஆனேன்

S.A. நவாஸுதீன் said...

இதோ உள்ளே வந்துட்டேன். வரும் வழியில் கொஞ்சம் டிராபிக் ஜாஸ்தி. அதான் லேட்.

S.A. நவாஸுதீன் said...

பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

பொய்யான ஊடல், புனிதமான காதல். கவிதை மழை. கொட்டுங்க கொட்டுங்க

S.A. நவாஸுதீன் said...

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

உண்மைக்காதல் வெளிச்சத்திற்கு வரும்

S.A. நவாஸுதீன் said...

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

அழகா சீண்டுறீங்க போங்க.

S.A. நவாஸுதீன் said...

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

கலக்குறீங்க செய்யது. பாவம் விடுங்கள், மழையும் நனையட்டும் உங்கள் காதலில்.

S.A. நவாஸுதீன் said...

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும் மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

அசத்தல்.

S.A. நவாஸுதீன் said...

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

வழிவது கண்ணீர் அல்ல, காதல். என்னமோ பண்ணுது போங்க.

S.A. நவாஸுதீன் said...

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.

தெரியுது செய்யது.

நல்ல ஒரு அருமையான கவிதை படிச்ச திருப்தி இன்று கிடைத்தது.

பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்
எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.

குவாண்டிட்டி தான் கம்மியா இருக்கு. இதுபோன்று உங்களின் எல்லா கவிதைகளையும் மீள்பதிவு இடுங்களேன். நாங்களும் கொஞ்சம் நனைகிறோம்

S.A. நவாஸுதீன் said...

பி.கு: பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால் எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.

குவாண்டிட்டி தான் கம்மியா இருக்கு. இதுபோன்று உங்களின் எல்லா கவிதைகளையும் மீள்பதிவு இடுங்களேன். நாங்களும் கொஞ்சம் நனைகிறோம்

அ.மு.செய்யது said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
மழைக்கு ஒதுங்கிய நாளிலும் உனை மறவேன்

உனக்கு எல்லாமும் இணையும் ஆனேன்
//

ந‌ன்றி ஸடார்ஜ‌ன் வ‌ருகைக்கும் க‌விதைக்கும்..

அ.மு.செய்யது said...

//S.A. நவாஸுதீன் said...
இதோ உள்ளே வந்துட்டேன். வரும் வழியில் கொஞ்சம் டிராபிக் ஜாஸ்தி. அதான் லேட்.
//

வாங்க அதான பார்த்தேன் பதிவில ஏதோ மிஸ் ஆகுதேன்னு !!

அ.மு.செய்யது said...

//குவாண்டிட்டி தான் கம்மியா இருக்கு. இதுபோன்று உங்களின் எல்லா கவிதைகளையும் மீள்பதிவு இடுங்களேன். நாங்களும் கொஞ்சம் நனைகிறோம்//

பாராட்டுகளுக்கு நன்றி !!! நவாஸ்.

மற்றபடி, நான் எழுதிய ஒன்றிரண்டு பழைய கவிதைகள்ல சுமாரா இருந்தது இதான்.
இதுக்கு மேல வேற எதுவும் இல்ல..

ஆய்ப்போச்சி !!!

அப்துல்மாலிக் said...

என்ன தல மழை வந்ததும் மீள் பதிவு???? எல்லாம் காதல் படுத்தும் பாடல்லவா.....

அப்துல்மாலிக் said...

படத்தோட கூடிய கவிதையும் மழையில் அழகா கவிபாடுதுங்க.. படிக்கயில் உணர்வுக்குள் புகுந்து மூளையில் மயங்கி இதயத்தில் உறைந்தது எல்லாமே........................................................

அப்துல்மாலிக் said...

//பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.
//

என்னா மாதிரியான மழை என்பது செய்யதுக்கு மட்டுமே வெளிச்சம்.. என்னனெம்மோ யோசிக்க தோனுது

அப்துல்மாலிக் said...

//விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.
//

ஆமாமாமாமாமா நிச்சயம் வெளுத்துவிடும்...

அப்துல்மாலிக் said...

//தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்//

ஊடலின் அடித்தளமே இதுதானே.....

கூடல் சிகரமாய் விரியும்

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
என்ன தல மழை வந்ததும் மீள் பதிவு???? எல்லாம் காதல் படுத்தும் பாடல்லவா.....
//

வாங்க அபு தல..

ம‌ழை ம‌ட்டும் தான் இங்க‌..மத்ததெல்லாம் இப்ப‌ அவுட் ஆஃப் சிலபஸ் ஆயிடு..

அப்துல்மாலிக் said...

//வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்./

க்க்ளாஸ் டச் தல‌

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...

என்னா மாதிரியான மழை என்பது செய்யதுக்கு மட்டுமே வெளிச்சம்.. என்னனெம்மோ யோசிக்க தோனுது
//

கரிக்கிட்டா சொன்னீங்க.

அப்துல்மாலிக் said...

//பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்
எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.
/

ஏதோ சொல்றீங்க நம்பிட்டோம்..................

கண்காணாத இடத்துலே இருக்கீக சாக்கிரதையா இருங்க.. அங்கே உள்ளவகளுக்கு???? டமில் தெரியாதாம்.. அதனாலே டமில் கவிதை வேகாது.....

அ.மு.செய்யது said...

// கண்காணாத இடத்துலே இருக்கீக சாக்கிரதையா இருங்க.. அங்கே உள்ளவகளுக்கு???? டமில் தெரியாதாம்.. அதனாலே டமில் கவிதை வேகாது.....//

இந்த கவிதை ஆல்ரெடி தமிழ்நாட்டில வேக வைக்க ட்ரை பண்ணி
அதிரசம் மாதிரி ஆல்ரெடி கருகிப் போன கதை தெரியாதா உங்களுக்கு..??

அமிர்தவர்ஷினி அம்மா said...

மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல். //

சராசரியான காதலர்களுக்கு நேரும் விஷயங்கள் தான் எனினும் அதை அழகாய் படம் பிடித்த வரிகள் இவை


இப்படியெல்லாம் பி.கு போட்டா நாங்க நம்பிடுவோமா :)-

அ.மு.செய்யது said...

வாங்க அமித்து அம்மா !!

//இப்படியெல்லாம் பி.கு போட்டா நாங்க நம்பிடுவோமா :)‍//

பிராமிஸாங்க..

SUFFIX said...

ம்ம்ம் காலயில தொடங்கியது, இப்பொ வந்து எட்டி பார்த்தால்,நல்ல அடமழையாத்தேன் இருக்கு!! இந்த மழைக்கு ஒதுங்க முடியாதப்பா. லவுஸ் மழையாச்சே!! இன்னொருவாட்டியும் நெனஞ்சுக்குரேன்ப்பா.

அ.மு.செய்யது said...

//ஷ‌ஃபிக்ஸ் said...
ம்ம்ம் காலயில தொடங்கியது, இப்பொ வந்து எட்டி பார்த்தால்,நல்ல அடமழையாத்தேன் இருக்கு!! இந்த மழைக்கு ஒதுங்க முடியாதப்பா. லவுஸ் மழையாச்சே!! இன்னொருவாட்டியும் நெனஞ்சுக்குரேன்ப்பா.
//

வாங்க ஷஃபி !!


ரிப்பீட் ஆடியன்ஸா...சந்தோசம்.

Thamira said...

ரசனை.!

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.//

உண்மைக் காதலை விபரிக்கும் அழகான வரிகள். மிகவும் ரசித்தேன்.

நசரேயன் said...

எங்க ஊரிலே இது வெயில் காலம்,இருந்தாலும் படிக்க இதமா இருக்கு

வால்பையன் said...

//வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.//

வேர் விட்டுச்சா இல்லையா!

Anonymous said...

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.
\\

அழகாயிருக்கு நண்பரே!

(அதெதுக்குங்க சிலந்தி வலை )

Anonymous said...

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.\\

ரொம்ப எதார்த்தமாயிருக்கு நண்பரே!

Admin said...

//இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.//


அருமை தொடருங்கள்....

வாழ்த்துக்கள்.....

"உழவன்" "Uzhavan" said...

//விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.//

வெளுக்கவில்லையெனில் வாழ்க்கை வெறுத்துவிடுமே.. :-)

சிநேகிதன் அக்பர் said...

என்ன ஒரு அருமையான கவிதை.
படிச்சதும் மனசுக்குள் தூவானம்.
சூப்பர்.

rose said...

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.
\\
wow

rose said...

குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.
\\
nambitompa

அ.மு.செய்யது said...

நன்றி ஆதியண்ணே.

நன்றி ஜெஸ்வந்தி !!

நன்றி நசரேயன் !!

நன்றி வால் !!

நன்றி லவ்விகர்ல் ( காதலர்கள் கோபம் சிலந்தி வலையை போன்று டெம்ப்ரரி என்று சொல்லிருக்கேங்க!! )

நன்றி சந்ரு

நன்றி உழவன்

நன்றி அக்பர்

நன்றி ரோஸ் !!!

பிரவின்ஸ்கா said...

ரசித்தேன் .
ரொம்ப நல்லாருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

அ.மு.செய்யது said...

நன்றி பிரவின்ஸ்கா..

வருகைக்கும் பகிர்வுக்கும்..மட்டற்ற மகிழ்ச்சி !!

அன்புடன் மலிக்கா said...

ரசனை கலந்த காதல் சுவாரஸ்யம்
அருமையான கவிதை

Rajesh V said...

மிக அருமை! உங்கள் படைப்புகளைத் தொடர்வேன்.. :)