முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.
இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.
**********************************************************************
ஓரிறை,ஓர் வேதம் என ஏகத்துவத்தை பின்பற்றும் இஸ்லாமியர்கள் ஏன் ஹனபி,ஷாபி(இந்தியாவில்), சன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக பிரிந்து கிடக்கின்றனர்.இந்த பிரிவினைகளை இஸ்லாம் ஆதரிக்கிறதா ?? இஸ்லாத்தில் சாதீயம் என்ற ஒரு கருத்து இருக்கிறதா ??
இதற்கு பதில் "நிச்சயமாக இல்லை" என்பதே.மேலும் இந்த நெறிமுறைகளின் வீரியம் கொஞ்சம் அதிகம்.
இதற்கான ஆணித்தரமான விடை குர்ஆனில் இருக்கிறது.
"நிச்சயமாக எவர் தம்முடைய மார்க்கத்தை ( தம் விருப்பப்படி பலவாறாகப் பிரித்து) பல குழுக்களாக பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே !) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை;அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது.அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்."
6:159 ஸூரத்துல் அன் ஆம்.
மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சந்ததியினர் 72 பிரிவுகளாக பிரிந்து பிளவுபடுவார்கள் என கணித்துள்ளார்.அவர்கள் அனைவரும் நரக நெருப்பில் விழக் கடவது எனவும் சபித்துள்ளார்கள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.
இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.
சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.
இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வருத்தமளிக்கிறது.
ஆகவே,இஸ்லாம் என்ற ஒரு மார்க்கத்தில் பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லை.சாதிகளோ குழுக்களோ இல்லை.
யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.
குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான் தொழுகை நடத்த வேண்டும் என்ற உயர்சாதிய கோட்பாடுகள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட யாராக இருந்தாலும் ( விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில் ) மறுகணமே தொழுகை நடத்தலாம்.
மேற்கூறிய சன்னி,ஷியா,மாலிகி போன்றவை வெறும் கொள்கைகளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.
மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைகள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.
ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கிய போது கருப்பர் என்ற நிறவெறியின் காரணமாக அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
*****************************
அம்மாவும் பண்டிகைகளும்
-
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து செய்வாள் அம்மா பண்டிகை
என்றால் கடவுளுக்கும் சேர்த்து பார்த்து செய்வாள் அம்மா பள்ளிக்கு
விடுமுறைஅலுவலுக்க...
2 months ago
100 comments:
நல்ல விளக்கமாக எல்லோர்க்கும் புரியும் விதமாக கூறியதற்கு பாராட்டுகள் செய்யது...
தேர்ந்த நடை.!
நல்லதொரு பதிவு செய்யது. இயல்பு தமிழில் இஸ்லாத்தின் நிலைப்பாட்டை எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக விளக்கி இருக்கின்றீர்கள். நல்ல முயற்சி.
\\ஆதிமூலகிருஷ்ணன் said...
தேர்ந்த நடை.!\\
வழிமொழிகிறேன்.
intha pathivu thevai patta neramey ithu...thelivaga sonner...avasara kalathil porkaala nadavadikkaiai intha pathivu....yosithukondu manathodu vaithu kollamal palar unara pathivaai ittadhu thaan nandru....yar enna sonnal enna? nam sagothara sagotharigalai erupom nilaipoom....
தெளிவான விளக்கம். யார் படித்தாலும் புரிந்து கொள்வார்கள்,
|சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.|
அதிர்ச்சியான செய்தி எங்கு போனாலும் இவர்கள் இப்படிதான் போல!!!
வழி மொழிகிறேன்
அருமையான விளக்கம்
நன்றி வேத்தியன்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி நவாஸுதீன்
நன்றி வித்யா
நன்றி தமிழரசி
நன்றி முத்துராமலிங்கம்
நன்றி நசரேயன்
நன்றி அத்திரி
புரியறது போல சொல்லி இருக்கிங்க செய்யது. அமெரிக்க அரசாங்கம் எங்க போனாலும் அவங்க வேலையை சரியா செய்திடறாங்க :(
சாதி, மதம், இனம் போன்றவை எல்லாமே நம் சமூகம் நமக்குள் ஏற்படுத்திக் கொண்ட வட்டம் தானே.
உங்கள் நடையில் இஸ்லாம், சாதி குறித்த உங்களின் தெளிவான விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது.
எனக்கும் மற்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நண்பர்கள் மற்ற மதத்தில் குறைவு என்றாலும் இருக்கும் வரை நிறைவு! சாதி மதம் பேதங்களை எல்லாம் மறந்துவிட்டுத்தான் பழகிவருகிறோம்... வெவ்வேறு மதத்தினரே இப்படி இருக்கும் பொழுது சம மதத்தினர் சாதிகளால் பிரிந்து போகக்கூடாது!!!
இந்தியாவிலும் இரண்டு பிரிவுகள் இருப்பதை இப்பொழுதுதான் அறிகிறேன்!!!
அன்புடன்
ஆதவா
//யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.//
ஒருமுறை ஈரான் அதிபர் டில்லி வந்திருந்த போது தொழுகைக்கு கடைசி நேரத்தில் வந்து அங்கிருந்த பிச்சைகாரர்களோடு தோளோடு தோள் சேர்த்து தொழுத காட்சி கண்டு சுற்றியிருந்த நிருபர்கள் வியந்த சம்பவம் எல்லோரும் அறிந்த ஒன்று தானே....
//இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் //
உண்மைதான்ணே :((
பாகிஸ்தானில் 'அஹமதியா' என்ற பிரிவினர் இருப்பதாகவும் அவர்களை மற்ற பிரிவினர் தரக்குறைவாக நடத்துவதாகவும் படித்திருக்கிறேன்.
தமிழகத்திலேயே உருது பேசும் முஸ்லிம்கள் உருது பேசாத (லெப்பைகள் என்று வழங்கப் படுபவர்கள்) முஸ்லிம்களை தாழ்வுடன் நோக்குவதையும் பார்த்திருக்கிறேன்.
எந்த ஒரு அரபு நாட்டு முஸ்லீமும் ஒரு கருப்பின முஸ்லீமை மணந்து கொண்டதாகக் கண்டதில்லை, கேட்டதில்லை.
ஆனால் ஒரு வெள்ளை யினத்தவர் ஒரு கருப்பினத்தவரை மணப்பது அமெரிக்காவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. ஒபாமாவின் பெற்றோர் இவ்வகைப் பட்டோர்.
இஸ்லாமிய மதத்தில் ஜாதிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஜாதி போல இல்லாமல் எதோ ஒரு வழியில் மக்கள் உயர்ந்தவர் / தாழ்ந்தவர் எனப் பிரிக்கப்படுவது மனித சமூகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. இந்து மதத்திலும் செய்யும் தொழில் தர்மமாக இருந்தது. பிற்காலத்தில் அதுவே ஜாதியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது. அப்படி இல்லையென்றால் இன்று உயர் சாதியினரான பிராமணர்களிடையே உயர்வு தாழ்வு காட்டும் உட் பிரிவுகள் 100க்கும் மேல் எப்படி உருவாகியிருக்கக் கூடும்/
அரிச்சந்திரன் அரசனாக இருந்து சுடுகாடு காப்போனாக மாறினாலும் அவன் தொழிலை யாரும் அவமதிக்க வில்லை.
பிற்காலத்தில், பொருளாதார வளர்ச்சி அடைந்த சில பிரிவினர் தங்களை மேலாகக் காட்டிக்கொள்ள சாதிப் பிரிவுகளை உண்டாக்கிக் கொண்டனர் என்பது என் கருத்து.
நண்பர் திரு ஆ மூ செ அவர்கட்கு பணிவான வணக்கம்,
அழகாக, நேர்த்தியாக, பிசிராமல், பணிவான பொய்களை சொல்லியமைக்கு முதற்கண் வாழ்த்துகள்.
சுன்னி எனப்படுபவர்கள் ஏன் ஷியாக்களை வெறுக்கிறார்கள், முடிந்தால் வேரறுக்க பார்கிறார்கள் என்று விரிவாக உண்மையாக திரிபில்லாமல் கூற மறந்து விட்டீர்கள். உலகத்தில், குறிப்பாக இஸ்லாம் சார்ந்த நாடுகளில் நடப்பது என்ன என்பதை தவறிகூட சொல்லகூடாது என்று முடிவானபின் உங்களிடம் இருந்து வருவது பாதி உண்மைகளாக மட்டுமே இருக்க முடியும்.
இதயும் படித்து, இன்பத்தில் துடித்து, உடனே பாராட்டிதள்ளும் படித்தும் படிக்காத நண்பர்களே. எந்தன் அறிவுரையும் வேண்டம், திரு செ வின் அரைகுறை வெள்ளை அடித்தலும் வேண்டம். நேராக கூகிள் சென்று, ஷியா சுன்னி meaning and conflict என்று டைப் செய்து, வருவதை நன்றாக படியுங்கள். புரிபடுவதற்கு நேரம் ஆகும். இரண்டு நாட்களாவது எடுத்துக்கொள்ளுங்கள். எல்லா தொடர்புகளயும் பாருங்கள். பின்னர் முடிவெடுங்கள் எது உண்மையென்று!
எதை கேட்டாலும், எல்லா மதவாதிகளும் கூறுவது ஒன்று. எங்கள் பொன்னான புத்தகத்தில் இது இப்படி இருக்கிறது ஆகவே அதுதான் உண்மை.
அதை எழுதியது யார் என்றல், பல பல வருடங்களுக்கு முன் எழுதியது, அதை துளியும் கூட மாறாமல் நாங்கள் போற்றி காப்பாற்றி வந்தோம் என்று பேச்சை வேறு திசை திருப்புவது. இன்னும் கூர்ந்து ஆராய்ந்தால், எதற்கும் சாட்சியோ, நல்ல ஒரு உண்மையான அதரமோ கிடையவே கிடையாது. இப்படி இருக்கும்?
கணினி முதற்கொண்டு பல வகையான கருவிகள் மற்றும் அச்சிடும் முறைகள் இருக்கும் இந்த காலத்திலேயே யார் எதைசொன்னது உண்மை என்று கண்டு பிடிக்க முடியவில்லை. நூறு வருடங்கள் முன் பார்த்தல் இந்த உண்மை கிடைப்பது கூட மிக மிக கடினம்.
அனால் நம்முடிய மதம் பிடித்த எல்லா நண்பர்களும் உடனே ஒரு புத்தகத்தை கண்பித்து, இதோ பார், அன்று போட்ட காபி இன்னும் அட்டகாசமாக அதே போல் இருக்கிறது என்று கதை மேல் கதை விட்டுகொண்டிருகின்றனர்!
Assertions without evidence can be dismissed without evidence
Faith - Believing without any evidence!
Difference between an Atheist and a believer is that the believer believes in one god more!
அதாவது, நாத்திகன் எல்லா கடவுளரும் இல்லை என்கிறான். தீவிர மத நம்பிக்கையளரோ, அதை ஒப்புக்கொண்டு, அதாவது மற்ற கடவுள்கள் இல்லை என்பதை மட்டும் ஒப்புக்கொண்டு தன் கடுவுள் மட்டும் இதற்கு விதி விலக்கு என்று திண்ணமாக நம்புகிறான்.
அன்பர் திரு செ போன்றவர் இருக்கும் வரையில், மத பிசாசுகள் உண்மையை மறைகத்தான் செய்யும்! காலத்தின் கோலமிது.
தேவையான நேரத்தில் தெளிவானதொரு பதிவு செய்யது...இஸ்லாத்தைப் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் சொல்லியிருப்பது பராட்டத்தக்கது...
//யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து மஸ்ஜிதில் தொழலாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.//
இது இஸ்லாத்திற்கே உரிய தனிச் சிறப்பு...
நன்றி அப்துல்லா அண்ணே !!!
நன்றி புதியவன் !!!
கருத்துகளை புரிந்து கொண்டமைக்கு !!!
ரங்குடு,
பதிவின் நோக்கத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
இஸ்லாத்தின் கொள்கைகள், பிரிவினையை ஆதரிக்காமல் இருக்கும் பட்சத்தில்,இஸ்லாமியர்கள் என்று தங்களை சொல்லிகொள்ளும் மக்கள் ஏன் இது போன்ற உயர்/தாழ் கோட்பாடுகளை பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வியை தான் நானும் முன் வைத்திருக்கிறேன்.
//தமிழகத்திலேயே உருது பேசும் முஸ்லிம்கள் உருது பேசாத (லெப்பைகள் என்று வழங்கப் படுபவர்கள்) முஸ்லிம்களை தாழ்வுடன் நோக்குவதையும் பார்த்திருக்கிறேன்.//
உண்மை தான்.அந்த கீழ்த்தரமான பார்வையை தான் நானும் சாடியிருக்கிறேன்.
தவிர, என் ( லெப்பையென்று சான்றிதழ்களால் அறியப் பட்டேன்) அக்காவிற்கு,
ஒரு உருது பேசும் முஸ்லிமை தான் திருமணம் செய்து கொடுத்தோம்.மேலும் எனது நண்பர்கள் அனைவரும் உருது பேசும் தெக்கனி முஸ்லிம்களே !!!
இஸ்லாத்தை முழுமையாக புரிந்து கொள்பவர்களுக்குள் இந்த பிரிவினை நிச்சயம் இருக்காது.
//எந்த ஒரு அரபு நாட்டு முஸ்லீமும் ஒரு கருப்பின முஸ்லீமை மணந்து கொண்டதாகக் கண்டதில்லை, கேட்டதில்லை. //
1400 ஆண்டுகளுக்கு முன்பே இது நடந்தது ரங்குடு அவ்ர்களே !!!
முஹம்மது நபி "மாரியத்துல் கிப்தியா" என்ற கறுப்பின அடிமை வம்சத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கு இப்ராஹிம் என்ற குழந்தையும் பிறந்தது.
மேலும்,பிலால் (ரலி) என்ற கறுப்பினத்தவரை சேர்ந்த ஒருவரை, தன் ஆஸ்தான தோழராகவும் ஏற்று கொண்டார்கள்.அவர் தான் மிகவும் பரிசுத்தமானவர் எனவும் புகழ்ந்திருக்கிறார்கள்.
முஹம்மதின் உம்மத்துக்கள் ( சந்ததியினர் ) என சொல்லி கொள்ளும் முஸ்லிம்களுக்கு கறுப்பின பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு என்ன கேடு ??
//ஆனால் ஒரு வெள்ளை யினத்தவர் ஒரு கருப்பினத்தவரை மணப்பது அமெரிக்காவில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்று. ஒபாமாவின் பெற்றோர் இவ்வகைப் பட்டோர்.//
சிறந்த எடுத்து காட்டு.
எனவே, அமெரிக்காவில் நிறவெறி என்ற ஒன்று இல்லவே இல்லை என வாதிடுகிறீர்களா ??? சிரிப்பொலி சேனல் பார்த்து விட்டு வந்து காமெடி பண்ணாதீர்கள்.
இந்த கருத்தை மைக்கேல் ஜாக்சனிடம் இதை சொல்லுங்கள்.
மதிப்பிற்குரிய அனானி,
//சுன்னி எனப்படுபவர்கள் ஏன் ஷியாக்களை வெறுக்கிறார்கள், முடிந்தால் வேரறுக்க பார்கிறார்கள் என்று விரிவாக உண்மையாக திரிபில்லாமல் கூற மறந்து விட்டீர்கள்.//
இந்த பதிவே அதற்காகத் தானே !!!
சுன்னி,ஷியா இரு பிரிவினர்க்கும் நடக்கும் மோதல்களும்,படுகொலைகளும் வன்முறை கட்டவிழ்ப்புகளும் உலகறிந்ததே !!இதை நான் சொல்லித் தான் மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும்,சதாம் ஹூசைன் தன்னுடைய உயிரியல் ஆயுதங்களை பரிசோதிக்கும் ஆய்வுக்களமாக பயன்படுத்தியது ஷியா முஸ்லிம்களை.
ஷியா முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாக சதாம் ஹுசைனால் கொன்று புதைக்கப் பட்டனர்.
//உலகத்தில், குறிப்பாக இஸ்லாம் சார்ந்த நாடுகளில் நடப்பது என்ன என்பதை தவறிகூட சொல்லகூடாது என்று முடிவானபின் உங்களிடம் இருந்து வருவது பாதி உண்மைகளாக மட்டுமே இருக்க முடியும்.
//
சிரியா,இரான்,லெபனான் போன்ற நாடுகளை தவிர்த்து,அமெரிக்காவின் வால்களாக இருக்கும் சில அரபு நாடுகள் குறித்து நான் ஏற்கெனவே கருத்துகளை வெளியிட்டிருக்கிறேன்.
எனவே உண்மையை சொல்ல நான் என்றுமே தயங்கியதில்லை.
//எதை கேட்டாலும், எல்லா மதவாதிகளும் கூறுவது ஒன்று. எங்கள் பொன்னான புத்தகத்தில் இது இப்படி இருக்கிறது ஆகவே அதுதான் உண்மை.
அதை எழுதியது யார் என்றல், பல பல வருடங்களுக்கு முன் எழுதியது, அதை துளியும் கூட மாறாமல் நாங்கள் போற்றி காப்பாற்றி வந்தோம் என்று பேச்சை வேறு திசை திருப்புவது. இன்னும் கூர்ந்து ஆராய்ந்தால், எதற்கும் சாட்சியோ, நல்ல ஒரு உண்மையான அதரமோ கிடையவே கிடையாது. இப்படி இருக்கும்? //
இதற்கு பா.ராகவன் சொல்லும் பதிலை பாருங்கள்.
"மற்ற இறைத்தூதர்களைப் பற்றிய தகவல்களுக்கு நாம் புராணக் கதைகளையே ஆதாரங்களாகக் கொள்ள வேண்டியிருக்கிற நிலையில், இவர் ஒருவரைக் குறித்த விவரங்களை மட்டும்தான் கதைகளிலிருந்து அல்லாமல், சரித்திரத்தின் பக்கங்களிலிருந்தே நாம் பெற முடிகிறது. காலத்தால் நமக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது மட்டுமே இதற்குக் காரணமல்ல. அவரது காலத்தில் வாழ்ந்தவர்கள், அவருடன் நேரில் பழகியவர்கள், அவரது பிரசங்கங்களை, போதனைகளைக் கேட்டவர்கள் எழுதிவைத்த குறிப்புகள் ஏராளமாக இருக்கின்றன. முகம்மது குறித்த ஒவ்வொரு தகவலும் பல்வேறு நிலைகளில் சரிபார்க்கப்பட்டு, ஒப்புநோக்கப்பட்டு, அவருடன் நேரடியாகப் பழகியவர்கள் விவரித்துள்ளவற்றுடன் பொருந்தினால் மட்டுமே அச்சேறின. இதனால், முகம்மது குறித்த விவரங்களின் நம்பகத்தன்மை பற்றிய அத்தனை கேள்விகளும் அடிபட்டுப் போய்விடுகின்றன. ஆதாரம் இல்லாத ஒரு குட்டிக்கதை, கதையின் ஒருவரி... ஒரு சொல் கூடக் கிடையாது.இதன் அடிப்படையில்தான் இப்படியொரு முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது."
ஆகவே, இஸ்லாமிய கோட்பாடுகளின் நம்பகத்தன்மை என்பது மிகவும் உறுதியானது.
ஆதாரமில்லா தகவல்களை நீங்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள் கூட நம்புவதில்லை.
இன்றைய கால கட்டங்களிம் இஸ்லாமியர்கள் நிறைய Authentic Source குறித்த விழிப்புணர்வு அதிகம் இருக்கிறது.
//அன்பர் திரு செ போன்றவர் இருக்கும் வரையில், மத பிசாசுகள் உண்மையை மறைகத்தான் செய்யும்! காலத்தின் கோலமிது.//
குர் ஆனையோ,நபிமொழியையோ பொய் என்று நீங்கள் சொன்னால்,அது தனிமனித நம்பகத்தன்மைக்கான கட்டமைப்புகளைச் சாரும். ஆகவே அது குறித்து நான் கருத்து கேட்க வில்லை.
மற்றபடி, என்னுடைய பதிவில் எந்த கருத்துகள் பொய் என்று சொல்கிறீர்கள்.???
மாம்பழம் இனிக்கும் என்று நான் கருத்து வெளியிட்டால், பாகற்காய் கசக்கும் என்ற உண்மையை அ.மு.செய்யது மறைக்கிறார் என்ற பொருள் ஆகாது அனானியே !!!
சரியா சொன்னீங்க செய்யது இன்று இஸ்லாத்தில் உள்ளவர்கலுக்கே அதன் அடிப்படை தெரியாமல் இருக்கும் போது நாம் மற்றவர்களை குற்றம் சொல்லி என்ன பயன்.உங்கள் பதிவு மேலும் வளர வாழ்த்துக்கள்
நல்ல விளக்கமாக எல்லோர்க்கும் புரியும் விதமாக கூறியதற்கு பாராட்டுகள் செய்யது.
//அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.//
முகமதுஅலி மதம் மாறியதற்கும் இஸ்லாத்தில் சாதி பிரிவு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்!
அப்படியானால் மைக்கேல் ஜாக்ஸன் மதம் மாறியதற்கு ஒரு காரணம் இருக்குமே!
மதம் அனைத்துமே மூடிய கதவுக்கு பின்னால் நிறைய இருக்குங்கிற கற்பனையில தான் வாழுது!
மதமே தப்பு! அதுல சாதி மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது!
//வால்பையன் said...
அமெரிக்க அரசால் நிராகரிக்கப் பட்ட குத்துச்சண்டை வீரர் கேஸியஸ் கிளே, ஓக்லஹாமா நதியில் தனது பதக்கத்தை தூக்கி வீசிவிட்டு பிற்காலத்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.//
முகமதுஅலி மதம் மாறியதற்கும் இஸ்லாத்தில் சாதி பிரிவு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்!
//
முஹம்மது அலி இஸ்லாத்தை தழுவியதற்கு காரணம் இஸ்லாத்தில் நிறவெறி இல்லை.
மைக்கேல் ஜாக்சன் மதம் மாறியதும் இதே காரணம் தான்.மைக்கேல் ஜாக்சனின் முக்கால் வாசி பாடல்கள் நிறவெறியை எதிர்த்து தான் அமைக்கப் பட்டிருக்கும்.
நிறவெறி மட்டுமல்ல.மற்ற எந்த உயர்/தாழ் தீண்டாமை பாகுபாடுகளும் இங்கு இல்லை.
பதிவை முழுசா படிங்க தல..இங்கே சாதியை மட்டும் சாடவில்லை.
எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேன்.
//மதம் அனைத்துமே மூடிய கதவுக்கு பின்னால் நிறைய இருக்குங்கிற கற்பனையில தான் வாழுது!
மதமே தப்பு! அதுல சாதி மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது!//
முதல்ல சாதிய நம்மளால ஒழிக்க முடியல..அப்புறம் மதத்த பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்.
//வால்பையன் said...
...மதமே தப்பு! அதுல சாதி மட்டும் உங்களுக்கு தப்பா தெரியுது!//
மதம் என்பதொரு வழிகாட்டி, அதனால் தான் இஸ்லாத்தை மதம் என்று சொல்லாமல், மார்க்கம் என்று சொல்கிறோம்.
கட்டுப்பாடில்லாமல்
காட்டெருமையாய் திரிந்த மனிதனை கட்டுப்படுத்தி வழிகாட்டிய ஒரு சக்திதான் இந்த மதம்/மார்கம் என்பது. மனித நாகரிக வளர்ச்சியில் இதற்கு மிகமுக்கிய பங்குண்டு. மதங்களை பற்றிய சரியான புரிதல் இல்லாதது தான் இப்போதுள்ள (சாதி உட்பட) பிரச்சனைகளின் காரணி என்பது என் புரிதல்.
//மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைகள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. //
பெரியாரை சான்றுக்கு இழுக்க உங்களுக்கு ஒரு தகுதியும் இல்லை என்பது எனது தாழ்மையான கருத்து!
மதவாதிகள் எப்பொழுதுமே தனக்கு சாதகமானதை மட்டும் எடுத்து கொண்டு மற்றதை மறந்துவிடுகிறீர்கள்.
சாதிபிரிவினால் அல்லல்ப்படும் மக்களை இஸ்லாம் எவ்வளவோ தேவலை என்று சொன்னது உமை தான், அதே நேரம் அவர் பெண் விடுதலைக்காக பேசியது எதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
அதை கடைபிடிப்பீர்களானால் பெரியாரை கூப்பிடுங்கள்
//ஒருமுறை ஈரான் அதிபர் டில்லி வந்திருந்த போது தொழுகைக்கு கடைசி நேரத்தில் வந்து அங்கிருந்த பிச்சைகாரர்களோடு தோளோடு தோள் சேர்த்து தொழுத காட்சி கண்டு சுற்றியிருந்த நிருபர்கள் வியந்த சம்பவம் எல்லோரும் அறிந்த ஒன்று தானே....//
ராகுல்காந்தி மண் சுமந்தது,
அரசியல்வாதிகள் தேர்தல் நேரத்தில் முதாட்டிகளை கட்டிபிடித்து ஆசிர்வாதம் வாங்குவது, அரை நாள் உண்ணாவிரதம் இருப்பது அனைத்துமே உங்கள் பார்வையில் உண்மை தான் போல!
ஈரான் அதிபர் செய்தார் நீங்கள் செய்வீர்களா!
இன்றும் உங்கள் தொழுகை இடத்திற்கு வெளியே பிச்சைகாரர்கள் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள், நீங்களும் தொழுதபின் பிச்சைகாரர்களுக்கு பிச்சை போட்டு விட்டு சென்று விடுகிறீர்கள்.
ஆக உங்களுக்கு தர்மம் செய்ய பிச்சைகாரர்கள் வேண்டும் அதற்காக அவர்கள் பொருளாதார அடிப்படையில் முன்னேற ஒன்றுமே செய்யமாட்டீர்கள்.
இங்கே மட்டுமல்ல எங்கேயும் சாதியில்லை,
பணக்காரன், ஏழை என்ற இரண்டு பிரிவு தான் உண்டு!
பணக்காரணாய் இருந்தால் எவனும் எவன் தோளிலும் கை போட்டு செல்வான். அவனுக்கு மதமும் கிடையாது, சாதியும் கிடையாது
//முஹம்மது நபி "மாரியத்துல் கிப்தியா" என்ற கறுப்பின அடிமை வம்சத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவர்களுக்கு இப்ராஹிம் என்ற குழந்தையும் பிறந்தது.//
முதலில் இம்மாதிரியான உதாரணங்களை விட்டு தள்ளுங்கள்,
புத்தகத்தில் இருப்பதெல்லாம் உண்மையென்றால்
ராமர்பாலம் உண்மை தான்!
கிருஸ்தவர்கள் உண்மை தான்!
ஏன் உங்களின் பரம எதிரியான யூதமதமும் உண்மை தான்!
அந்த புத்தகத்தை நம்புவதற்கு உங்களுக்கு ஒரே கரணம் தான்!
நம்பமுடியாமல் இருப்பதற்கு எங்களுக்கு(நாத்திகர்களுக்கு) ஆயிரம் காரணம் இருக்கு!
//எனவே, அமெரிக்காவில் நிறவெறி என்ற ஒன்று இல்லவே இல்லை என வாதிடுகிறீர்களா ??? சிரிப்பொலி சேனல் பார்த்து விட்டு வந்து காமெடி பண்ணாதீர்கள்.
இந்த கருத்தை மைக்கேல் ஜாக்சனிடம் இதை சொல்லுங்கள்.//
தீவிரவாதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதால் மொத்த இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாதோ, அதே போல் ஒன்றிரண்டு நிறவெறியர்கள் இருப்பதால் மொத்த அமெரிக்காவும் நிறவெறியோடு திரிவதுபோல் அமெரிக்காவில் நிறவெறி இல்லையா என கேட்க கூடாது!
அமெரிக்க அதிபர் ஒரு கறுப்பர் தான்!
மேலும் அமெரிக்க என்ற ஒரு நாடே சமகாலத்தில் உருவாகியது!
அங்கிருக்கும் கறுப்பர்கள் அனைவரும் அடிமைகளாக ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு செல்லப்பட்டவர்கள் தான்!
அமெரிக்கா மேல் இருக்கும் பாசம் கொஞ்சம் கூட ஆப்பிரிக்கா மேல் இல்லையே உங்களுக்கு!
இன்றும் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் மக்கள் அங்கிருக்கிறார்கள் என்றால் அருகில் இருக்கும் இஸ்லாமிய நாடுகள் நிறவெறியினால் தானே உதவி செய்யாமல் இருக்கிறது!
//ஷியா முஸ்லிம்கள் கூட்டங்கூட்டமாக சதாம் ஹுசைனால் கொன்று புதைக்கப் பட்டனர்.//
இதையும் சொல்லியிருக்கிறீர்கள்!
சதாம் ஒரு ஷியா முஸ்லீமால் தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார் என அமெரிக்காவை எட்டப்பனாக்கி விட்டீர்கள்!
நாங்க அடிச்சிகுவோம், கூடிக்குவோம் நீங்க ஏண்டா உள்ள வர்றிங்கன்னு கேக்குறிங்களா?
//இதற்கு பா.ராகவன் சொல்லும் பதிலை பாருங்கள்.//
பா.ராகவன் என்ன இறைத்தூதுவரா?
1400 வருடங்களுக்கு முன்னால் நடந்ததை பா.ரா எங்கே சென்று பார்த்தார்!
அனைத்தும் புத்தகங்கள் தான்!
பா.ரா ஒரு புத்தகபுழு!
கிருஸ்துவத்தை பற்றி எழுத சொன்னாலும் அந்த புழு கிருஸ்துவர்களுக்கு சாதகமாக தான் எழுதும், ஒருவேளை இஸ்லாத்தை கேள்விகுள்ளாக்கியிருந்தால் பா.ராவை சும்மா விட்டிருப்பீர்களா என்ன?
//ஆதாரமில்லா தகவல்களை நீங்கள் மட்டுமல்ல, முஸ்லிம்கள் கூட நம்புவதில்லை.//
உங்களுக்கு சாதகமானைகள் எல்லாம் உங்களுக்கு ஆதாரம் தானே!
//முதல்ல சாதிய நம்மளால ஒழிக்க முடியல..அப்புறம் மதத்த பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்.//
எல்லா பிரிவினைகளுக்கும் மூலக்காரணமே மதமும், கடவுளும் தான்!
அதை ஒழித்தால் எல்லாம் சரியாகிவிடும்!
//மதம் என்பதொரு வழிகாட்டி, அதனால் தான் இஸ்லாத்தை மதம் என்று சொல்லாமல், மார்க்கம் என்று சொல்கிறோம். //
உங்கள் வார்த்தை விளையாட்டுகளை நான் அறிவேன்.
கிருஸ்தவன் கூட மதம் இல்லை மார்க்கம் என்கிறான்!
சரி விடுங்கள், ஆங்கிலத்தில் என்ன சொல்வீர்கள், ரிலீஜியன் என்றா இல்லை பாத் என்றா?
நாகரிக வளர்ச்சிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
மதங்கள் அனைத்தும் பிற்போக்கு சிந்தனைகளில் மீழ்கி திளைத்தது தானே!
நீங்கள் சொல்வது புதுகதையாக இருக்கு!
அரேபிய நாடுகளில் உருவான இஸ்லாமிய கோட்பாடுகளை இங்கேயும் கடைபிடிப்பது பிற்போக்கா இல்லையா?
அஸ்ஸலமு அழைக்கும் சகோதரரே,
ஜஸகல்லாஹு க்ஹைர். மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். இதையும் சேர்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்:
நபி (அவர்களின் மீது அமைதி உண்டாகட்டும்) அவர்களின் கடைசி சொற்பொழிவு:
"All mankind is from Adam and Eve, an Arab has no superiority over a non-Arab nor a non-Arab has any superiority over an Arab; also a white has no superiority over a black nor a black has any superiority over white except by piety and good action. "
என்னுடைய தாழ்மையான கருத்து ஒன்று. நானும் வால்பையன் அவர்கள் தங்களை 'பகுத்தறிவுவாதி' என்று கூறிக்கொள்வதால் அவரிடம் நல்ல முறையில் விவாதம் புரியலாம் என்று அவருடைய பதிவொன்றில் அவருடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முற்ப்பட்டேன்.
ஆனால் அவரை பொறுத்த வரையில் புத்தகங்கள் எல்லாம் வீணானவை, வரலாறு எல்லாம் கட்டுக்கதை, இன்னும் ஏன் நான் ஒரு சுட்டியில் மனநல மருத்துவர்களின் 'அரைகுறை ஆடை அணியும் பெண்களை ஆண்கள் ஒரு object ஆக மட்டுமே பார்கிறார்கள்' என்ற ஆய்வினை சுட்டியதற்கு, அந்த ஆய்வு அவர்களின் 'மனதில் தோன்றியதாக இருக்கலாம், அதை ஏற்றுக்கொள்ள முடியாது' என்று கூறிவிட்டார். இது ஒன்று போதும் இவருடன் நீங்கள் பேசினால் உங்கள் நேரத்தை தான் வீனாக்கிகொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு.
:)
ஒன்னுமில்லை அனானி சிரிப்பு வந்துருச்சு!
நிர்வானமாக இருக்கும் உடலுக்கு அறுவைசிகிச்சை செய்யும் ஒரு மருத்துவருக்கு காம இச்சைகள் தோன்றுமா?
அவரும் மருத்துவர் தானே!
ஒரே ஒரு கேள்வி
அரைகுறை ஆடையிருந்தால் காமைஇச்சையுடன் தான் பார்ப்பார்கள் என்றால் நீங்களும் அப்படி தான் பார்ப்பீர்களா?
ஒழுங்க வாதம் பண்ண தெரியல!
இதுல சப்ப கட்டு வேற!
//ஈரான் அதிபர் செய்தார் நீங்கள் செய்வீர்களா!
இன்றும் உங்கள் தொழுகை இடத்திற்கு வெளியே பிச்சைகாரர்கள் நின்று கொண்டு தான் இருக்கிறார்கள், நீங்களும் தொழுதபின் பிச்சைகாரர்களுக்கு பிச்சை போட்டு விட்டு சென்று விடுகிறீர்கள்.
//
வால் அண்ணே உங்களின் இந்தக் கருத்தோடு முற்றிலும் மாறுபடுகின்றேன். பள்ளிவாசல் முன்னால் இருக்கும் வறியவர்கள் உள்ளே வந்து மற்றவர்களோடு சமமாக இணைந்து தொழுகை முடித்துவிட்டு பின்னர் வெளியில் வந்து நின்று யாசகம் கேட்பார்கள். என்னுடைய நம்பகத்தன்மையை நீங்கள் நன்றாக அறிந்தவர்...என் அருகில் இதுவரை எண்ணிலடங்காத தடவை வறியவர்கள் என் அருகில் அமர்ந்து இருக்கின்றனர்.எனக்குமட்டுமல்ல ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் இந்த அனுபவம் 100% உறுதியாக இருக்கும். ஒருவேளை என் வார்த்தையில் உங்களுக்குச் சந்தேகம் இருப்பின் இன்று வெள்ளிக்கிழமை.உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிவாசல் சென்று பாருங்கள்...வறியவர்கள் உள்ளே தொழுகை முடித்துவிட்டு வந்து பின்னர் வெளியில் வந்து யாசகம் கேட்கின்றனரா இல்லை அனுமதியின்றி ஆரம்பம் முதலே வெளியில் நிற்கின்றனரா என்று. அதே வறியவர்களிடம் கேளுங்கள் உள்ளே நீ எப்படி யாரோடு எங்கே அமர்ந்து இருந்தாய் என்று?
உங்களின் மற்ற கேள்விகளுக்கு செய்யதே பதில் சொல்லட்டும் :)
அப்துல்லா அண்ணே!
மதம் எவ்வகையிலும் மனிதத்தை பிரித்தாளக்கூடாது என்பது தான் என் ஆசை!
இம்மதமா அம்மதமா ஆண்டவன் எந்த மதம் என்பது என் கேள்வியல்ல!
ஒருவேளை வறியவர்களுக்கும் சமமான மரியாதை தருவீர்களானால் சந்தோசம் தான்! ஆனால் எல்லோரும் அப்படி நடந்து கொள்வார்களா?
//ஒருவேளை வறியவர்களுக்கும் சமமான மரியாதை தருவீர்களானால் சந்தோசம் தான்! ஆனால் எல்லோரும் அப்படி நடந்து கொள்வார்களா?
//
நேர்மையா பதில் சொல்லனும்னா வெளில எத்தனை பய அதைச் செய்வான்னு தெரியாது! ஆனால் பள்ளிவாசல் உள்ளே அருகில் வந்து அமரும் எவரையும் எவரும் ஒதுக்க முடியாது. முந்திக்கிறவனுக்கு முன்னாடி இடம்..பிந்திக்கிறவனுக்கு பின்னாடி இடம். அது மட்டுமின்றி வெளியில் பொருளாதார உயர்வுதாழ்வு பார்க்கும் எவரும் பள்ளிவாசலில் மட்டும் பார்ப்பதில்லை. அந்த ரகசியம் மட்டும் எனக்குப் புரியவில்லை. எப்பவும் எங்கேயும் ஒரே மாதிரி இருந்துட்டு போகலாமே?
//எப்பவும் எங்கேயும் ஒரே மாதிரி இருந்துட்டு போகலாமே? //
சாதாரண வீட்டில் இருப்பவன், பங்களா வீட்டில் இருப்பவனை பார்த்து “என்ன நீ மட்டும் இவ்வளவு பெரிய வீட்ல இருக்குற, எனக்கு பாதி கொடு”ன்னு கேக்க போறதில்லை
அவன் கேட்பதெல்லாம் அங்கிகாரம் மட்டுமே ஒரு வணக்கம் போதுமானது இல்லையா!
//அவன் கேட்பதெல்லாம் அங்கிகாரம் மட்டுமே ஒரு வணக்கம் போதுமானது இல்லையா!
//
நாம் மற்றவரிடம் எதிர்பார்பதை நாம் அடுத்தவங்களுக்கு குடுத்தா போதும்.இதுக்கு எந்த லாஜிக்கும் தேவையில்லை :)
//நாம் மற்றவரிடம் எதிர்பார்பதை நாம் அடுத்தவங்களுக்கு குடுத்தா போதும்.இதுக்கு எந்த லாஜிக்கும் தேவையில்லை :) //
அதே தான்னே!
இத சொன்ன கம்யூனிஸ்டு, நக்ஸலைட்டுன்னு அதுகுள்ள பிரிவு பிரிக்கிறானுங்க! இந்த மதத்தையும், சாதியையும் எதாவது ஒரு வகையில் பிடித்து தொங்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்!
//இத சொன்ன கம்யூனிஸ்டு, நக்ஸலைட்டுன்னு அதுகுள்ள பிரிவு பிரிக்கிறானுங்க! இந்த மதத்தையும், சாதியையும் எதாவது ஒரு வகையில் பிடித்து தொங்கி கொண்டிருக்கும் அரசியல்வாதிகள்!
//
haa...haa..அலுவலகம்னு கூட மறந்துட்டு சத்தம்போட்டு சிரிச்சுட்டேன். சரிண்ணே போய் வேலையைப் பாக்குறேன். உங்களின் மற்ற கேள்விக்கு செய்யது சொல்லப் போகும் பதிலைக் காண ஆவலோடு காத்திருக்கின்றேன். இல்லாட்டி நானே வந்து சொல்றேன்
:)))
\\ஒழுங்க வாதம் பண்ண தெரியல!
இதுல சப்ப கட்டு வேற!\\
ஒழுங்க வாதம் பண்ண தெரியாதுன்னு சொல்றதுக்கு ஒன்னுமே இல்லை. உங்க ஒரு பதில் போதும் உங்களோட வாதம் பண்ணுவது நேரத்தை வீணாக்கும் செயல் என்று.
பல மருத்துவர்கள் ஒன்றுகூடி சமர்ப்பித்த ஒரு ஆய்வறிக்கையை பார்த்து 'அது அவர்களின் மனதில் தோன்றி இருப்பதை கூறி இருப்பார்கள்' என்று சொல்லும் உங்களுக்கு தான் ஐயா வாதம் பண்ண ரொம்ப நல்ல தெரியும்.
:D :D :D
எனக்கும் உங்களை பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருது.
நான் உங்ககிட்ட கேட்ட கேள்வி வேற!
அரைகுறை ஆடையில் உங்களுக்கு என்ன தோன்றும்!
பல மருத்துவர்கள் சேர்ந்து என்னதான் ஆய்வு செய்திருந்தாலும் எல்லோரும் ஒரே ரிப்போர்ட் கொடுத்திருக்க மாட்டார்கள்!
இறுதி முடிவு யாரோ ஒருவர் கையில் தான் இருக்கும்!
மற்றவர்களை பற்றி நமக்கெதுக்கு,
உங்களை பற்றி சொல்லுங்கள்!
நீங்கள் நல்லவரென்றால் மற்றவர்களும் நல்லவர்களாக இருக்க முடியாதா?
நீங்கள் நல்லவர் இல்லையென்றால்!
என்னாத்துக்கு இந்த வரட்டு வாதம்!
ஆரம்பத்தில் சொந்த ஐடியில் வந்து பின்னூட்டம் கூலாக போட வேண்டியது! எதாவது கருத்து வேறுபாடு வந்தால் அனானியா வந்து சிண்டு முடிப்பது!
எதுக்கு இந்த வேலை உங்களுக்கு!
//உங்கள் வார்த்தை விளையாட்டுகளை நான் அறிவேன்.//
நான் இதுவரை எங்கும் விளையாடியதில்லையே…
சரி அது கிடக்கட்டும்,
//கிருஸ்தவன் கூட மதம் இல்லை மார்க்கம் என்கிறான்!//
வால் அண்ணே, நான் சொன்னது.. மதம் என்பதொரு வழிகாட்டி. அதாவது (நாத்திகம் பேசும்) உங்களுக்கு சொல்வது, ‘மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்துவதற்கு அவசியமாகிறது’ என்று. அல்லாது, ‘மனிதனை நல்வழிப்படுத்தும் மதம் இஸ்லாம் மட்டுமே’ என்றல்ல.
நீங்கள் மதம் என்று ஒன்று இருப்பதாக ஏற்றுக்கொண்டால்…(?) அதில் ஏன் இஸ்லாம் சிறந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
//நாகரிக வளர்ச்சிக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்?
மதங்கள் அனைத்தும் பிற்போக்கு சிந்தனைகளில் மீழ்கி திளைத்தது தானே!
நீங்கள் சொல்வது புதுகதையாக இருக்கு!//
மனிதன் மனிதனை அடித்து தின்று, உறவுகளுக்கிடையே (ஆண், பெண்) வேற்றுமையின்றி புணர்ந்து, யாருக்கும் எதற்கும் கட்டுப்படாமல் காட்டெருமையாய் திரிந்து கொண்டிருந்த அந்த நாட்களில்,
இறைவன் ஒருவன் இருக்கிறான்,
அவன் உன் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்,
உன் அனைத்து வினைகளுக்கும் கூலி இருக்கிறது,
இதை செய், இதை செய்யாதே என்று வரையருத்து, அவனைக் கட்டுப்படுத்தியது தான் இந்த மதம்.
அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த சொல்கிறது, அவ்வளவே.
// அரேபிய நாடுகளில் உருவான இஸ்லாமிய கோட்பாடுகளை இங்கேயும் கடைபிடிப்பது பிற்போக்கா இல்லையா?//
எந்த ஒரு கோட்பாடும், கட்டுப்பாடும் இல்லாமல் திரிவதுதான் முற்போக்கு எனச் சொல்கிறீர்களா?
மதம் என்பது மனிதனை நல்வழிப்படுத்த என்பது கட்டுக்கதை.
மதத்தின் வருகைக்கு முன்னரே மனிதன் தனிமனித ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து கொண்டான்!
மதம் இருப்பதை நான் ஒப்புகொண்டால் அதில் இஸ்லாம் எவ்வாறு சிறந்தது என விளக்குவேன் என சொல்லியுள்ளீர்கள்!
1400 வருடங்களுக்கு முன் தோன்றியது உங்கள் மதம், அதற்கு முன்னரே பல மதங்கள் இந்த பூமியில் இருந்தன! தேவையானதை மட்டும் வைத்து கொண்டு சர்ச்சைகுறிய வரிகளை நீக்கிய பல மதகோட்பாடுகளின் தொகுப்பே இஸ்லாம்!
அதனால் அது எனக்கு வேண்டாம்!
விலங்குகளில் இருந்து வந்த நாம் கண்டமேனிக்கு புணர்ந்து திரிய வாய்ப்பில்லை! சிம்பன்சியில் இன்ஸ்செஸ்ட் கிடையாது! யானையில் கிடையாது! பென்குயினில் கிடையாது! நாம் மட்டும் கண்டமேனிக்கு திரிந்தோம் என்பது 10 ஆயிரம் வருட பழைய கதையாக இருக்கலாம்! அப்போது மனிதம் ”ஹோமோசேபியன்ஸ்”, கடந்த ஐயாயிரம் வருடங்களில் படிப்படியான நாகரிக வளர்ச்சி சரியாக தான் இருந்தது! சில சோம்பேறிகளின் வருமானத்திற்காக கடவுளும் மதமும் தோற்றுவிக்கப்பட்டது!
\\நான் உங்ககிட்ட கேட்ட கேள்வி வேற!\\
வால்பையன் அவர்களே, முதல்ல நான் கொடுத்த சுட்டிய படிசிருந்தீங்கன்ன உங்ககிட்ட பேசுறதுல பிரயோஜனம் இருக்கு. ஒரு விஷயத்த சரி, தவறுன்னு சொல்றதுக்கு முன்னாடி, இருக்குற தகவல்களை படிச்சு, பிறகு சொல்லணும். எதையுமே ஏத்துக்காம உங்களுக்கு தோணுறத மட்டும் சொல்ற ஆளுங்க கிட்ட பேசி பயன் இல்லை.
\\மற்றவர்களை பற்றி நமக்கெதுக்கு,
உங்களை பற்றி சொல்லுங்கள்!\\
ஒரு விஷயத்தை பற்றி விவாதிக்கொம்போது, அதற்குரிய ஆதாரங்களை நான் எடுத்து வைத்தால், அதை புறக்கணித்து விட்டு, என்னை பற்றி அறிந்து கொண்டு என்ன பயன்?????
\\நீங்கள் நல்லவரென்றால் மற்றவர்களும் நல்லவர்களாக இருக்க முடியாதா?
நீங்கள் நல்லவர் இல்லையென்றால்!
என்னாத்துக்கு இந்த வரட்டு வாதம்!
நீங்கள் நல்லவரென்றால் மற்றவர்களும் நல்லவர்களாக இருக்க முடியாதா?
நீங்கள் நல்லவர் இல்லையென்றால்!
என்னாத்துக்கு இந்த வரட்டு வாதம்!\\
இவரு என்ன சொல்ல வாரார்னு யாருக்காச்சும் புரிஞ்சுதுன்னா கொஞ்சம் வெளக்குங்களேன் ப்ளீஸ். இது தான் typical vaalpaiyan way of argument. சம்பந்தமே இல்லாம பேசுறது.
\\ஆரம்பத்தில் சொந்த ஐடியில் வந்து பின்னூட்டம் கூலாக போட வேண்டியது! எதாவது கருத்து வேறுபாடு வந்தால் அனானியா வந்து சிண்டு முடிப்பது!\\
நான் ஒரு முழு நேர பிளாக்கர் கிடையாது. ஆனா ரெகுலரா படிப்பேன். இப்பவும் என் ஐ டி ய தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? ஓகே, கூடிய சீக்கிரம் நானும் தமிழில் ஒரு ப்லோக் ஆரம்பிச்சுட வேண்டியது தான், இன்ஷா அல்லாஹ்!
பாருங்க, மறுபடியும் நேரத்த வீணடிக்கிறேன்.
----------------------------------
Brother Syed, I hope you don't mind using up your space.
//முதல்ல நான் கொடுத்த சுட்டிய படிசிருந்தீங்கன்ன உங்ககிட்ட பேசுறதுல பிரயோஜனம் இருக்கு.//
தமிழ் தான் எனக்கு தெரியும்!
நீங்க சுட்டிய மொழி பெயர்த்து போடுங்க!
//ஒரு விஷயத்த சரி, தவறுன்னு சொல்றதுக்கு முன்னாடி, இருக்குற தகவல்களை படிச்சு, பிறகு சொல்லணும். எதையுமே ஏத்துக்காம உங்களுக்கு தோணுறத மட்டும் சொல்ற ஆளுங்க கிட்ட பேசி பயன் இல்லை.//
மதம் பொய்ன்னு சொல்ற புத்தகமும் இருக்கு, உண்மைன்னு சொல்ற புத்தகமும் இருக்கு! ரெண்டையும் படிச்சு என்னை மெண்டலாக சொல்றிங்களா! நமக்குன்னு சுய அறிவு இருக்குல்ல! உங்களை போல் அறிஞர்களிடம் பேசி கற்று கொண்டதே நிறைய இருக்கு! அதனால கேள்வி மட்டுமே கேட்டுகிட்டு இருக்காம பதிலும் சொல்லி பழகுங்க!
//என்னை பற்றி அறிந்து கொண்டு என்ன பயன்?????//
அந்த உதாரணத்தில் எல்லா ஆண்களும்னு தான் போட்டிருக்கு!
நீங்களும் ஆண் தானே!
//சம்பந்தமே இல்லாம பேசுறது. //
புரியலைன்னு சொன்னா போதும்! சம்பந்தமில்லாத வாதம் முதலில் இழுத்தது நீங்க!
இங்கே யாரும் பெண்களின் உடைய பத்தி பேசல!
//நான் ஒரு முழு நேர பிளாக்கர் கிடையாது. ஆனா ரெகுலரா படிப்பேன். இப்பவும் என் ஐ டி ய தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க? ஓகே, கூடிய சீக்கிரம் நானும் தமிழில் ஒரு ப்லோக் ஆரம்பிச்சுட வேண்டியது தான்,//
அனானியாக பின்னூட்டம் இட்டால் அது உங்கள் மெயிலுக்கு பாலோஅப் ஆகாது! நான் பதில் சொன்னேனா இல்லையா என்பதே உங்களுக்கு தெரியாது! அடிக்கடி வந்து பார்ப்பேன் என்ற வரட்டு வாதம் உதவாது!
உங்களது ஐடியுடன் கூடிய பின்னூட்டம் கண்டிப்பாக மேலே இருக்கு! உங்களை கண்டுபிடிக்க வெகுநேரம் ஆகாது! முகமூடி இல்லாமல் கண்டிப்பாக நீங்கள் எனது நண்பராக தான் இருப்பீர்கள்! உங்கள் மானத்தை வாங்க விருப்பமில்லை!
பதிவுக்கு சம்பந்தமான கருத்து பரிமாற்றத்துக்கு வருவோம்!
//அதே நேரம் அவர் பெண் விடுதலைக்காக பேசியது எதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?
//
தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
இப்போது தான் விவாதங்களை பார்க்க நேரிட்டது.
வால் அண்ணே !!! இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகிறது என்பது உங்கள் வாதமா ??
//சர்ச்சைகுறிய வரிகளை நீக்கிய பல மதகோட்பாடுகளின் தொகுப்பே இஸ்லாம்!
//
பா.ராகவன் புத்தகப் புழு என்றால் நீங்கள் எதையும் படிக்காமல் அழகாக தீர்ப்பு வழங்குகிறீர்களே இதை எப்படி எடுத்து கொள்வது ??
இதற்கு பேர் தான் நீதிபதி ஸ்தானம்.
உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க எண்ணி தான் அலைபேசியில் அழைத்தேன்...
no response !!!
//ஒருவேளை வறியவர்களுக்கும் சமமான மரியாதை தருவீர்களானால் சந்தோசம் தான்! ஆனால் எல்லோரும் அப்படி நடந்து கொள்வார்களா?//
அதுக்கு தானே ஜகாத்னு ஒரு கான்செப்டே இருக்கு !!!
நூறு ரூபாய் வச்சிருந்தா 2.50ரு ஏழைகளுக்கு கொடுத்தே ஆகணும்.
நகைக்கும் இந்த கணக்கு இருக்கு !!! இதை எல்லாரும் ஃபாலோ பண்ணா நீங்க சொன்ன வறியவர்கள் வாழ்வை கொஞ்சமாவது முன்னுக்கு கொண்டு வரலாம் இல்லையா ?
இதற்கு மேல் உங்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டுமா ?
கேட்டால் புத்தகங்கள் அனைத்தும் புனைவே என்று பதிலளிப்பீர்கள்.
//வால் அண்ணே !!! இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகிறது என்பது உங்கள் வாதமா ??//
மொத்த ஆண் சமூகமும் பெண்ணை அடிமைபடுத்துகிறது! அதில் மதம் ஒரு குறியீடே!
//பா.ராகவன் புத்தகப் புழு என்றால் நீங்கள் எதையும் படிக்காமல் அழகாக தீர்ப்பு வழங்குகிறீர்களே இதை எப்படி எடுத்து கொள்வது ??//
பா.ராவின் எல்லா புக்கும் படிச்சிடிங்களே! அவரது புத்தகங்க்கள் பல ஆங்கில புத்தகம் மற்றும் இணையதள செய்திகளின் தொகுப்பே!
//உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க எண்ணி தான் அலைபேசியில் அழைத்தேன்...//
நீங்கன்னு தெரியாது! அதனால தான் திரும்ப கூப்பிடல ஸாரி! இங்கே நல்ல மழை ஆபிஸ்க்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்!
//அதுக்கு தானே ஜகாத்னு ஒரு கான்செப்டே இருக்கு !!!//
உயிரிடத்தில் அன்பு காட்டுன்னு எல்லா மத நூல்களிலும் கான்செப்ட் இருக்கு! ஆனா உங்களுக்கு இந்த புத்தகம் மட்டும் தானே உண்மை, மற்றதெல்லாம் புனைவு!
எனக்கு எல்லாமே புனைவு!
//மதத்தின் வருகைக்கு முன்னரே மனிதன் தனிமனித ஒழுக்கத்தின் தேவையை உணர்ந்து கொண்டான்!//
இது நல்ல காமெடி !!!
தொடர்ந்து வருகிறேன்...வெயிட் பண்ணுங்க !!!
//இது நல்ல காமெடி !!!//
கடவுள் தான் மனிதனுக்கு ஒழுக்கத்தை கற்று கொடுத்தார்ன்னு சொல்லுவிங்க, நான் சிரிக்க கூடாது!
1400 வருசத்துக்கு முன்னாடி வந்த ஒரு நபியோட கதையை மட்டும் வச்சிக்கிட்டு, மத்த நபிகள் என்ன சொன்னாங்கன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிகிட்டு நான் சொல்றதுக்கு சிரிப்பிங்க!
தனிமனித ஒழுக்கம் தான் மனித நாகரிகத்தின் ஆரம்பமே! அது இல்லையென்றால் ஏன் அவன் வீடு கட்டி வாழணும்!
//
தனிமனித ஒழுக்கம் தான் மனித நாகரிகத்தின் ஆரம்பமே! அது இல்லையென்றால் ஏன் அவன் வீடு கட்டி வாழணும்!
//
வீடு கட்டி வாழ்றதும்,அவயங்களை மறைச்சுக்கறது மட்டுமே நாகரிகம் ஆகாது.அது காட்டிமிராண்டிகளிடமிருந்து மனிதனாக மாறிய Transition period.
நாகரிகம்ன்றது ஒரு பெரிய ப்ராடர் வியூ.அதுல தான் நீஙக் சொல்ற பெண்ணியம் எல்லாமே அடங்கும்.
//1400 வருசத்துக்கு முன்னாடி வந்த ஒரு நபியோட கதையை மட்டும் வச்சிக்கிட்டு, மத்த நபிகள் என்ன சொன்னாங்கன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிகிட்டு நான் சொல்றதுக்கு சிரிப்பிங்க! //
மத்த நபிகள் என்ன சொன்னாங்கன்னு நீஙக் என் கிட்ட கேட்டிருக்கணும் தல..
வாதம் திசை மாறி பயணிக்கிறதோ ?
//இந்த புத்தகம் மட்டும் தானே உண்மை, மற்றதெல்லாம் புனைவு!
//
அதெப்படிங்க படிக்காமலே இந்த புத்தகங்கள் புனைவு என்ற முடிவுக்கு உங்களால் வரமுடிந்தது ??
பெரியாரின் புத்தகங்களையும்,தமிழச்சியின் பெரியார் வலைதளத்தையும் கரைத்து குடித்த நீங்கள் எப்படி எந்த ஒரு கோட்பாடையும் படிக்காமல் ஆராயாமல் அந்த கொள்கைகள் குறித்து தீர்ப்பெழுத முடியும். ??
இதுல என்ன இருக்கப் போகுது,கட்டுக்கதைகள் தானே என்ற அலட்சியப் போக்கு தான் பகுத்தறிவா ?? இல்லை இப்படித்தான் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்வது தான் முற்போக்கு சிந்தனையா ??
என்னைப் பொறுத்த மட்டில் அவை புனைவுகள் அல்ல.
திரிபுகள் என்று தான் சொல்வேன்.
ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களையும் சிலைகளையும் வணங்கும் இந்து மதத்தினரது வேதங்கள் சொல்லும் உண்மையை கொஞ்சம் பாருங்கள்.
1.யசூர் வேதம்
* " நா தஸ்ய பிரதிம அஸ்தி "
அவனுக்கு எந்தவொரு தோற்றமும் கிடையாது.
( யசூர் வேதம் 32:3 )
*அவன் உருவமற்றவனும் பரிசுத்தமானவனும் ஆவான்( யசூர் வேதம் 40:8 )
இதையேதான் திருக்குர்ஆன் (42:11),
" அவனைப் போன்று எப்பொருளும் இல்லை" என்கிறது.
* " அன்தாதம ப்ரவிஸன்தி ஏ அசம்பூதி முபாசதே"
எவர்கள் இயற்கை வஸ்துகளை வணங்குகிறார்களோ அவர்கள் இருளில் பிரவேசிக்கிறார்கள்.இன்னும் எவர்கள்மனிதனால் படைக்கப்பட்ட பொருட்களை வணங்குகிறார்களோ அவர்களும் இருளில் ஆழமாக மூழ்குகிறார்கள். ( யசூர் வேதம் 40:9)அசம்பூதி - இயற்கை வஸ்துக்கள்; காற்று,நீர் போன்றவை........
சம்பூதி - மனிதனால் படைக்கப்பட்டவை; நாற்காலி,சிலைகள் போன்றவை.......
3.ரிக் வேதம்
* ஏக இறைவனையே ஞானிகள் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர்.
( ரிக் வேதம் 1:164:46)
//உங்களுக்கு இந்த புத்தகம் மட்டும் தானே உண்மை, மற்றதெல்லாம் புனைவு!
//
இதற்கான விடையை தான் மேலே சொல்லியிருக்கிறேன்.
\\மதம் பொய்ன்னு சொல்ற புத்தகமும் இருக்கு, உண்மைன்னு சொல்ற புத்தகமும் இருக்கு! ரெண்டையும் படிச்சு என்னை மெண்டலாக சொல்றிங்களா!\\
ரெண்டையும் படிச்சா மெண்டல் ஆவேன்னு சொல்ற முதல் ஆளு நீங்க தான் சகோதரரே.
\\உங்களது ஐடியுடன் கூடிய பின்னூட்டம் கண்டிப்பாக மேலே இருக்கு! உங்களை கண்டுபிடிக்க வெகுநேரம் ஆகாது! முகமூடி இல்லாமல் கண்டிப்பாக நீங்கள் எனது நண்பராக தான் இருப்பீர்கள்! உங்கள் மானத்தை வாங்க விருப்பமில்லை!\\
நீங்க வறட்டு வாதம் செயரிங்கன்னு சொல்றதுக்கு இன்னொரு சாம்பிள். என்னுடைய Indian Muslimah id எ உங்கள் வலைப்பூவில் தான் உபயோகப்படுத்தினேன். இங்க இல்ல. என்னுடைய வலைப்பூ இப்போதைக்கு ஆங்கிலத்துல தான் இருக்கு:
mywindowmyworld.wordpress.com
ஆகா மொத்ததுல நீங்க என்னை ஒரு ஆண் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நல்ல காமெடி.
//நாகரிகம்ன்றது ஒரு பெரிய ப்ராடர் வியூ.//
நாகரீகம் பிராடர் வியூ தான்! ஆனால் அதை ஆரம்பிக்கும் மையப்புள்ளியிலேயே நாகரீகம் ஆரம்பித்துவிட்டது!
சக்கரம், தீ எல்லாம் நாகரிகத்தின் ஆரம்பம்! அபோதே மனிதன் உடை கூட உடுத்த ஆரம்பித்துவிட்டான்!
இன்னொன்று தெரியுமா!
இப்போது தான் மனிதன் கண்ட நேரம் புணர்ந்து கொண்டு திரிகிறான்! அப்போதெல்லாம் விலங்குகளுக்கு போல் நமக்கும் சீசன் உண்டு!
//மத்த நபிகள் என்ன சொன்னாங்கன்னு நீஙக் என் கிட்ட கேட்டிருக்கணும் தல..//
நியாயமான கேள்வி தான்!
எப்போ உதாரணம் காட்டினாலும் ஒரே ஒரு நபியோட கூற்றை மட்டுமே சொல்லி வந்தீர்களா! அதனால் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது!
//பெரியாரின் புத்தகங்களையும்,தமிழச்சியின் பெரியார் வலைதளத்தையும் கரைத்து குடித்த நீங்கள் எப்படி எந்த ஒரு கோட்பாடையும் படிக்காமல் ஆராயாமல் அந்த கொள்கைகள் குறித்து தீர்ப்பெழுத முடியும். ??//
பெரியார் வெரி பிராக்டிகல் மேன்!
அவர் புத்தகங்கள் படித்து வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கவில்லை!
பின்நாளில் தான் அவருக்கு புத்தகம் தேவைப்ப்ட்டது! அதனால் தான் என்னவோ தனது கொள்கைகளில் சிறிது பின் வாங்கினார்!
பெரியார் சொன்னதையெல்லாம் நான் நம்பினால் நான் பெரியார் என்ற கடவுளுக்கு சேவகன் என்று அர்த்தம்!
எனக்கு பெரியாரும் ஒன்று தான்!
நண்பர் அ.மு. செய்யதுவும் ஒன்று தான்!
மனிதனை மனித அடையாளத்துடன் பார்ப்பதே எனது பழக்கம்!
//ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்களையும் சிலைகளையும் வணங்கும் இந்து மதத்தினரது வேதங்கள் சொல்லும் உண்மையை கொஞ்சம் பாருங்கள்.//
புனைவுகளிக்கும், திரிபுகளுக்கும் பெரிதாக அர்த்த வித்தியாசமில்லை!
ரிக், யசூர் போன்ற புத்தகங்கள் (not vedham) மட்டுமல்ல, விவிலியம், குரான் எழுதியதும் நம்மை போல் அறிவு படைத்த மனிதன் தான்!
தனது சமூகம் எப்படி நடக்கவேண்டும் என அவனாக முடிவு செய்து எழுதி கொண்டது! எந்த கருத்துகளெல்லாம் ஏற்று கொள்ளமறுக்கப்பட்டதோ அவைகள் திருத்தி கொள்ளப்பட்டது!
அதன் இறுதி வடிவம் தற்பொழுது நம் கையில் தவழுவது!
எல்லா மதமும், மார்க்கமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது தான்!
சில வினாடிகள் மதம் என்னும் வட்டத்திலிருந்து வெளியே வந்து அந்த மதத்தை சந்தேக கண்ணோடு பாருங்கள்!
உங்களுக்குள் ஊற்றெடுக்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு அங்கே பதில் இருக்காது!
அதனால் எல்லா மதமும் சந்தேகம் இல்லாமல் கண்ணை மூடி கொண்டு புத்தகத்தில் இருப்பதை நம்பு என சொல்கிறது!
என்னால் அப்படி இருக்க முடியாதே!
\\மதம் பொய்ன்னு சொல்ற புத்தகமும் இருக்கு, உண்மைன்னு சொல்ற புத்தகமும் இருக்கு! ரெண்டையும் படிச்சு என்னை மெண்டலாக சொல்றிங்களா!\\
ரெண்டையும் படிச்சா மெண்டல் ஆவேன்னு சொல்ற முதல் ஆளு நீங்க தான் சகோதரரே. //
நான் ஆகும் வாய்ப்பிருக்கு!
//நீங்க வறட்டு வாதம் செயரிங்கன்னு சொல்றதுக்கு இன்னொரு சாம்பிள். //
அங்கேயும் இதை தான் சொல்லிட்டு போனிங்க! அப்ப இங்கே மட்டும் திரும்பவும் உரையாடலுக்கு தயாராகிட்டிங்க!
//என்னுடைய Indian Muslimah id எ உங்கள் வலைப்பூவில் தான் உபயோகப்படுத்தினேன். இங்க இல்ல. என்னுடைய வலைப்பூ இப்போதைக்கு ஆங்கிலத்துல தான் இருக்கு://
அந்த ஐடிய அதர் ஆப்சன்ல பயன்படுத்தியிருந்திங்க! அதை வைத்து உங்கள் ப்ளாக்கை கண்டுபிடிக்கமுடியாது! இன்னோரு விசயம் அதர் ஆப்சனில் பின்னூட்டம் போட்டாலும் கமெண்ட் ப்லோஅப் உங்கள் மெயிலுக்கு வராது!
ஆங்கிலம் எனக்கு தெரியாது!
//ஆகா மொத்ததுல நீங்க என்னை ஒரு ஆண் என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள். நல்ல காமெடி.//
எனக்கு ஆணா பெண்ணா என்றெல்லாம் தெரியாது! உரையாடலுக்கு வந்துவிட்டால் எனக்கு எல்லாம் ஒன்று தான்! இது சீரியஸ் மேட்டர், காமெடியா தெரியுதா!
மதம் என்பது எச்சூழ்நிலையிலும் மனிதனை பிரித்தாளக்கூடாது என்பதே என் ஆசை!
நேர்மையாக வாழுதல், உண்மையாக நடந்து கொள்வது போன்றவை ஒரு மனிதன் குற்ற உணர்வில்லாமல் வாழ அவனுக்கே இருக்க வேண்டிய கடமைகள்!
இதை ஒரு மதகோட்பாடாக எல்லாம் மதமும் வைத்திருந்தாலும் எல்லாவற்றிலும் அதை மீறுபவர்கள் இருக்கிறார்கள்!அதனால் அவர்கள் பிறப்பாலேயே அதை செய்ய பிறந்தவர்கள் என அர்த்தம் இல்லை!
அவர்கள் வாழும் சூழ்நிலையும், அமையும் சந்தர்ப்பங்களும் அதை தீர்மானிகின்றன!
என்னை பொறுத்தவரை மனிதர்களில் கெட்டவர்கள் என்று யாருமில்லை!
அனைவருமே நல்லவர்கள் தான்! வாழ பிறருக்கு உதவ சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் அதை செய்வார்கள்!
ஒரு இஸ்லாமிய பணக்காரர் ஒரு இஸ்லாமிய ஏழைக்கு மட்டும் உதவுவது, ஒரு இந்து பணக்காரர் ஒரு இந்து ஏழைக்கு மட்டும் உதவுவது போன்றவை மனிதனை பிறித்தாளும் சூழ்ச்சி தானே!
அப்படியே மதம் இருந்தாலும் அது கடைபிடிக்க வேண்டியது! பேச வேண்டியதல்லவே! நீங்கள் பேசப்போய் நானும் பேச வேண்டியதாகி விட்டது!
எச்சூழ்நிலையிலும் நான் எனது நண்பர்களை இழக்க தயாராகயில்லை!
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்ப்பட்டால் அதற்கும் இந்த மதம் காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது!
தான் என்ன பாலினம் என்று கூட அறியா வயதில் நண்பர்களுடன் ஓடி ஆடி விளையாடும் சிறார், சிறுமிகளை பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்கு மதம் தெரியுமா, சாதி தெரியுமா!
நல்வழிபடுத்துகிறேன் என்ற பெயரில் பரந்த மனதுடன் வர வேண்டிய ஒருவனை குறுகிய வட்டத்திற்கும் சிக்க வைப்பது நம் போன்ற பொற்றோர்கள் தானே!
மனிதம் காப்போம்!
மதத்தை ஒழிப்போம்!
திங்கள் அன்று சந்திப்போம்!
நன்றி நண்பர்களே!
one quick question.
////ஒருவேளை வறியவர்களுக்கும் சமமான மரியாதை தருவீர்களானால் சந்தோசம் தான்! ஆனால் எல்லோரும் அப்படி நடந்து கொள்வார்களா?//
அதுக்கு தானே ஜகாத்னு ஒரு கான்செப்டே இருக்கு !!!
நூறு ரூபாய் வச்சிருந்தா 2.50ரு ஏழைகளுக்கு கொடுத்தே ஆகணும்.
நகைக்கும் இந்த கணக்கு இருக்கு !!! இதை எல்லாரும் ஃபாலோ பண்ணா நீங்க சொன்ன வறியவர்கள் வாழ்வை கொஞ்சமாவது முன்னுக்கு கொண்டு வரலாம் இல்லையா ?
//
இத்திட்டம் எப்படி செயல்படுதுன்னு விளக்க முடியுமா?
இப்போ ரூ 1 லட்சம் வைத்திருப்பவர் அதில் ரூ 2500 ஐ கொடுக்க வேண்டும். அதை யாருக்குக் கொடுப்பார்?
அ. தன் கையில் ஏதுமில்லா வறியவருக்கா?
ஆ. இல்ல ஒரு ரூ 1000 வைத்திருப்பவருக்கா?
சரி, கையில் ரூ 100 வைத்திருப்பவர் ரூ 2.50ஐ யாருக்கு கொடுக்க வேண்டும்?
அப்புறம் இது வருட வருமானத்தின் அடிப்படையிலா இல்லை சொத்து மதிப்பின் அடிப்படையிலா?
இதை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதுமா இல்லை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டுமா?
ஒரு பணக்கார இஸ்லாமியர் இத்திட்டத்தை கடைபிடிக்காவிட்டால் அதை தட்டிக் கேட்க ஏதேனும் வழியுண்டா?
//சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.//
இதுக்கும்//இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வருத்தமளிக்கிறது.//
இதுக்கும் என்ன தொடர்பு?
Americans just exploited the difference. Why blame them?
Why the sayings of Allah(PBUH) and Prophet Mohammed(PBUH) couldn't strongly convince the followers on the wisdom of unity or universal brotherhood? Doesn't it explain that human mind wavers despite following a rigid religion like Islam?
//மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது சந்ததியினர் 72 பிரிவுகளாக பிரிந்து பிளவுபடுவார்கள் என கணித்துள்ளார்.அவர்கள் அனைவரும் நரக நெருப்பில் விழக் கடவது எனவும் சபித்துள்ளார்கள்.//
Could you explain in detail?
Did the prophet (PBUH) predicted that everyone in Islam would split into 72 groups?
Or a sizable chunk of Muslim would remain loyal to sayings of Allah (PBUH) and remaining folks would split into these 72 groups?
Is it told to Prophet by Allah or his own interpretation? Why Allah has to let these people waver from his preachings and award hell to them?
//வால்பையன் said...
//நாகரிகம்ன்றது ஒரு பெரிய ப்ராடர் வியூ.//
நாகரீகம் பிராடர் வியூ தான்! ஆனால் அதை ஆரம்பிக்கும் மையப்புள்ளியிலேயே நாகரீகம் ஆரம்பித்துவிட்டது!
சக்கரம், தீ எல்லாம் நாகரிகத்தின் ஆரம்பம்! அபோதே மனிதன் உடை கூட உடுத்த ஆரம்பித்துவிட்டான்!
//
ப்ராடர் வியூ என்பது என்ன ?
உடையும்,உறையுளும் தீயும் சக்கரமும் அத்யாவசிய தேவைகள்.
வீடுகட்டுதல் அத்யாவசியம் என்றால் அதற்குள்
கழிப்பறைவசதியும் ட்ரைனேஜ் கட்டுதலும் தான் நாகரீகம்.
இலைதழைகளை கொண்டு அங்கங்களை மறைத்தல் தேவை
என்றால் பேண்டு சர்ட் அணிவது தான் நாகரீகம்.
இது வாழ்வியலுக்கும் பொருந்தும்.
எனவே நாகரீகம் என்பது, காட்டு மிராண்டிகளை
மனிதனாக்குவது மட்டுமல்ல.அவனை நன்னெறி படுத்துதலே.
சாலைகள் உங்களுக்கு அவசியம் என்றால் சாலைவிதிகளும்
அவசியமே.
//எச்சூழ்நிலையிலும் நான் எனது நண்பர்களை இழக்க தயாராகயில்லை!
அப்படி ஒரு சூழ்நிலை ஏற்ப்பட்டால் அதற்கும் இந்த மதம் காரணமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது!//
என்னைப் பொறுத்த மட்டில் ஆரோக்கியமான விவாதங்கள்
பிரிவுகளுக்கு வழிகோலாது.
நீங்கள் சொன்னதைப் போன்று,இந்த விவாதங்களில் நிறைய
செய்தி பரிமாற்றங்கள் இருக்கின்றன.
நாலுவிசயம் நீங்க சொன்னீங்கன்னா..
நான் நாலு விசயம் சொல்லுவேன்.
இன்பரமேசன் இஸ் வெல்த் !!!!!!!!!!!!!
//என்னை பொறுத்தவரை மனிதர்களில் கெட்டவர்கள் என்று யாருமில்லை!
அனைவருமே நல்லவர்கள் தான்! வாழ பிறருக்கு உதவ சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவரும் அதை செய்வார்கள்!
மசூதிக்குள் இறைவன் முன் அனைவரும் சமம் என நடந்து கொள்ளும்
முஸ்லிம்கள் ஏன் அதை மசூதிக்கு வெளியே கடைபிடிப்பதில்லை
என்ற ஆதங்கத்தினால் எழுதப் பட்ட பதிவு தான் இது.
மற்றபடி, லக்கும் தீனுக்கும் வலியதீன்.
//மனிதம் காப்போம்!
மதத்தை ஒழிப்போம்!//
இந்த டெட்டால் போட்ட வார்த்தைகளைப் பார்க்க
அழகாக இருக்கிறது.
வேற அனானிக்கு ஜகாத் குறித்த விளக்கங்கள்.
எட்டு வகையினருக்கு ஜகாத் பிரிக்கப்பட வேண்டும் என்கிறது குர்ஆன். அவர்களில் அதிகப்படியாக நம்மை சுற்றி வாழ்பவர்கள் மூன்று வகையினர். பரம ஏழைகள். ஏழைகள். கடன்காரர்கள்.
2 - ஜகாத் பற்றி கூறும் இறைவன் லாபம் பற்றியெல்லாம் பேசாமல் 'அம்வால் - செல்வ'த்திலிருந்து ஜகாத் எடுக்கப்பட வேண்டும் என்று கூறி இருப்பது.
இந்த இரண்டையும் சிந்தித்தால் 'மேலதிகமாக உள்ள' செல்வம் அனைத்தின் மீதும் ஜகாத் கடமையாகும் அவற்றிற்கான ஜகாத்தை பிரித்தெடுத்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை சந்தேகமின்றி விளங்கலாம்.
//இப்போ ரூ 1 லட்சம் வைத்திருப்பவர் அதில் ரூ 2500 ஐ கொடுக்க வேண்டும். அதை யாருக்குக் கொடுப்பார்?
அ. தன் கையில் ஏதுமில்லா வறியவருக்கா?
ஆ. இல்ல ஒரு ரூ 1000 வைத்திருப்பவருக்கா?//
தன் கையில் ஏதுமில்லா வறியவருக்கு தான். ( மேலே உள்ள பின்னூட்டத்தைப் பார்க்கவும் )
//சரி, கையில் ரூ 100 வைத்திருப்பவர் ரூ 2.50ஐ யாருக்கு கொடுக்க வேண்டும்?//
100 ரூபாய் மட்டும் வைத்திருப்பவர் தர தேவையில்லை.இது ஒரு சதவீத கணக்கு.
2.5 சதவீதம் தன் தேவைகளுக்கேற்ப வருமானம் பெறுவோர், ஏழைகளுக்கு தர வேண்டும்.
//அப்புறம் இது வருட வருமானத்தின் அடிப்படையிலா இல்லை சொத்து மதிப்பின் அடிப்படையிலா?//
இரண்டின் அடிப்படையிலும் தான்.மேலதிகமாக கையிருப்பைப் பொறுத்து இவை அமையும்.
//இதை வாழ்க்கையில் ஒரு முறை செய்தால் போதுமா இல்லை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டுமா?//
வருடாவருடம்.
//ஒரு பணக்கார இஸ்லாமியர் இத்திட்டத்தை கடைபிடிக்காவிட்டால் அதை தட்டிக் கேட்க ஏதேனும் வழியுண்டா?//
இல்லை.வேண்டுமென்றால் அறிவுரை வழங்கலாம்.தவிர 90
சதவீதம் முஸ்லிம்கள் ஜகாத்தை நிறைவேற்றி விடுகின்றனர்.
ஜகாத் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதற்கு
ஒரு ஜகாத் கால்குலேட்டர்:
http://masdooka.googlepages.com/zakatcalculator1.xls
மேலும் ஜகாத் குறித்த விரிவான விளக்கங்கள் அறிய
இங்கேபாருங்கள்.
//Americans just exploited the difference. Why blame them?//
//Why the sayings of Allah(PBUH) and Prophet Mohammed(PBUH) couldn't strongly convince the followers on the wisdom of unity or universal brotherhood? Doesn't it explain that human mind wavers despite following a rigid religion like Islam?//
குர் ஆன் நபிமொழிகளும் இதற்கு எப்போதோ உறுதியான
தீர்வளித்து விட்டன.
கொள்கைகளையும்,விதிமுறைகளையும் மீறுவது தானே மனிதம்.
நீங்களும் ஒரு முஸ்லிம் என்று தெரிந்து விட்டது.
இதற்கு நான் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டுமா ??
// Could you explain in detail?
Did the prophet (PBUH) predicted that everyone in Islam would split into 72 groups? //
// Or a sizable chunk of Muslim would remain loyal to sayings of Allah (PBUH) and remaining folks would split into these 72 groups? //
//Is it told to Prophet by Allah or his own interpretation? Why Allah has to let these people waver from his preachings and award hell to them? //
உங்களுக்கு இதைப் பற்றி விளக்க ஒரு மிகப் பெரிய
பதிவு போட வேண்டியிருக்கும்.
இது குறித்தான மேலதிக விவாதங்களுக்கு எந்நேரமானாலும்
என்னை அலைபேசியில் அழைக்கலாம்.நான் இந்தியாவில் தான் இருக்கிறேன்.
09764005601 எண்ணை குறித்து கொள்ளுங்கள்.
//கொள்கைகளையும்,விதிமுறைகளையும் மீறுவது தானே மனிதம்.
//
What is the purpose of Islam?
a. To ensure every follower practice tenets of Allah(PBUH) strictly and assure heaven or
b. To be liberal with the follower and allow them to do whatever they wish and reward hell to them?
//நீங்களும் ஒரு முஸ்லிம் என்று தெரிந்து விட்டது.
இதற்கு நான் கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டுமா ??
//
:)
No, I'm not.
Even if I am, by the above posers it appears Muslims need more clarity on the sayings of Allah(PBUH).
//இது குறித்தான மேலதிக விவாதங்களுக்கு எந்நேரமானாலும்
என்னை அலைபேசியில் அழைக்கலாம்.நான் இந்தியாவில் தான் இருக்கிறேன்.//
I prefer the medium of internet over phone. The advantage being it is public and the discussion is open for a larger audience.
அருமையான விளக்கம்!!
cute baby said...
நல்ல விளக்கமாக எல்லோர்க்கும் புரியும் விதமாக கூறியதற்கு பாராட்டுகள் செய்யது.
rrrrreeeeeeeeeppppppppppeeeeeeeeeetttttttuu
//
a. To ensure every follower practice tenets of Allah(PBUH) strictly and assure heaven or
b. To be liberal with the follower and allow them to do whatever they wish and reward hell to them?//
Worship of the One True Almighty God of the Universe [Allah in Arabic] as a primary goal or aim in life provides a believer with everything he needs to succeed in both this life and the Next Life.
The word for total surrender, submission, obedience, purity of heart and peace in the Arabic language is "Islam". Those who try to perform these actions are called "MU-slims".
To a Muslim the whole purpose of life is "ibadah" or worship to the One True Almighty God on Terms and under His Conditions.
The term "worship" to a Muslim includes any and all acts of obedience to Almighty Allah.
So his purpose of life is a standing purpose; Worshipping Allah by accepting Allah's Will over his own.
This act of ibadah [worshipping, thanking and extolling the Greatness Almighty Allah on His Terms and Conditions] is for the Muslim, throughout his whole life regardless of the stage. Whether he is a child, adolescent, adult or aged person, he is seeking after the Will of the Almighty in all these stages.
His life here on earth although short, is full of purpose and is totally meaningful within the complete framework of total submission [Islam].
Similarly, in the Next Life as well, his faith, intentions, attitudes and good deeds will all be weighed into his account as favorable putting him in high esteem with his Creator and Sustainer.
Because Islam teaches that this life is only a test or trial for the individual to show him his true nature it is only natural that he would accept death as not so much an ending to everything but more as a beginning of the final and lasting life in the Hereafter.
Before entering into either of the final lodging places i.e.; Heaven or Hell, there must needs be a Day of Judgment or showing of one's true self to make them aware of their own nature and thereby understand what they have sent on ahead during the life here on the earth.
Every person will be rewarded [or punished] according to their attitude, appreciation and efforts during this stay on earth. None will be asked about the actions and beliefs of others, nor will anyone be asked regarding that which he was unaware of or incapable of doing.
As the life here is considered as an examination for the individual, the death stage is considered as a resting period after the test. It could be easy for those who were faithful and dedicated or it could be grueling and horrible for the wicked.
Reward and punishment will be in direct proportion to each person and it is only Allah, alone who will be the Final Judge over us all.
So in the teachings of the True Surrender, Submission, Obedience, In Sincerity and Peace to the Almighty One God [Islam], the line of life and its purpose is logical, clear and simple:
The first life is a test
The life in the grave is a resting or waiting place before the Day of Judgment
The Day of Judgment brings about the clear understanding of what will now happen to the individual based on his own desires and actions
The Permanent or Afterlife will either be spend in luxurious splendor or miserable punishment .
Following this clear understanding of life, the Muslim's purpose is clear.
நன்றி ஆதவன் ..( மன்னிக்கவும்.உங்கள் பின்னூட்டத்தை இப்போது தான் பார்த்தேன்.)
நன்றி கீழை ராஸா..
நன்றி ரம்யா..( ஆமா...யாரோட விளக்கத்த பாராட்டியிருக்கீங்க..)
நன்றி காயத்ரி !!!
//இலைதழைகளை கொண்டு அங்கங்களை மறைத்தல் தேவை
என்றால் பேண்டு சர்ட் அணிவது தான் நாகரீகம்.//
மனிதன் வாழ்ந்துகொண்டு தான் இருந்தான்!
வாழ்கிறான், வாழுவான்!
இடையில் மதம் எதற்கு?
நாகரிகம் வளர்ந்த போது வளர்ந்த கடவுள் எதற்கு!
//சாலைகள் உங்களுக்கு அவசியம் என்றால் சாலைவிதிகளும்
அவசியமே. //
தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்குமென்ன சம்பந்தம்!
////இலைதழைகளை கொண்டு அங்கங்களை மறைத்தல் தேவை
என்றால் பேண்டு சர்ட் அணிவது தான் நாகரீகம்.//
மனிதன் வாழ்ந்துகொண்டு தான் இருந்தான்!
வாழ்கிறான், வாழுவான்!
இடையில் மதம் எதற்கு?
நாகரிகம் வளர்ந்த போது வளர்ந்த கடவுள் எதற்கு! //
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று தறி கெட்டு அலைந்த மனிதனை
நேர்வழி படுத்த மார்க்கம் நிச்சயம் தேவை.
எதுவுமே எனக்கு தேவையில்லை என்பது தான் வறட்டு வாதம்.
////சாலைகள் உங்களுக்கு அவசியம் என்றால் சாலைவிதிகளும்
அவசியமே. //
தனிமனித ஒழுக்கத்திற்கும் கடவுளுக்குமென்ன சம்பந்தம்//
நான்கு சுவர்களுக்குள் தனிமனித ஒழுக்கத்தை ஒருவன் கடைபிடிக்கிறான் என்றால் அவன் கடவுள் என்ற ஒற்றை சக்திக்கு பயந்து மட்டுமே அது சாத்தியமாகும்.
நான் ஒழுங்க இருக்கனும்னா யாராவது ஒரு குச்சிய வச்சி குத்திகிட்டே இருங்கன்னு நினைக்கிறவங்களுக்கு மதமும் கடவுளும் தேவைப்படலாம்!
இறப்புக்கு பின் ஒரு வாழ்க்கை!
சொர்க்கம் நரகத்தில் நம்பிக்கை போன்றவைகள் தன்னம்பிக்கை குறைவானவர்களுக்கும், தன்னளவில் பாதுகாப்பற்ற வாழ்க்கையை வாழ்வது போல் உணருபவர்களுக்கும் ஏற்படுபவை!
தனிமனித ஒழுக்கம் வாழும் போதே குற்ற உணர்வு அல்லாமல் நிம்மதியாக வாழ்வதற்கு! அதற்கும் கடவுளுக்கும் சம்பந்தமில்லை! சம்பந்த படுத்தியதும் மனிதர்கள் தான்! அதை பிடித்து தொங்கி கொண்டிருப்பதும் மனிதர்கள் தான்!
ஏன் கடவுள் எதற்கு மதம் என்பதற்கு உங்களுடய பதில் மேலுள்ளவைகளில் எதாவது ஒன்றாக தான் இருக்கும்!
கடவுள் நம்பிக்கையில்லாமலேயே தனிமனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவனுக்கு கடவுள் எதற்கு!
அப்படியே இருந்தாலும் ஒழுங்காக தனது கடமையை செய்பவன் அதை மட்டும் செய்தால் போதுமே!
அப்படியிருந்தும் ஒரு கடவுள் தனக்கு மரியாதையும், நன்றியும் தெரிவிக்க வேண்டுமெனெ விரும்பினால் அது கடவுளே இல்லை! இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் கடவுளால் படைக்கப்படிருந்தால் நமக்கு மட்டும் ஏன் இந்த ரூல்ஸ்!
இஸ்லாம் மதத்தை பொறுத்தவரை நான் மதிக்கும் ஒரே விசயம் உங்கள் கடவுளை தவிர வேறு யாரும் மேலானவர்கள் இல்லை என்பதே!
மற்ற மதங்களில் மத குருமார்களின் தொல்லைகள் தாங்க முடியாது!
வால்பையன் அவர்களே,
உங்களுக்கு சில கேள்விகள். அதற்கு நீங்கள் பதில் கூறுவீர்கள் என எதிர்ப்பார்கிறேன்:
உங்களை பொறுத்த வரையில், இறைவன் என்றால் என்ன? ஒன்று இருக்கிறது,இல்லை என்று கூறுவதற்கு முன்னாள், அதை பற்றின முழுமையான புரிதல் இருக்க வேண்டும். நான் ஒரு பொருளை பார்த்து இது பேனா என்கிறேன், நீங்கள் இது பேனா இல்லை என்கிறீர்கள். அது பேனாவா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள முதலில் பேனா என்றால் என்ன என்பதை இருவருமே புரிந்திருக்க வேண்டும். ஆக, உங்கள் அகராதியில் கடவுள் என்றால் என்ன?
இறைவன் இருக்கிறானா, இல்லையா என்பதற்கு ஆம், இல்லை, இவற்றில் எதேனும் ஒன்று தான் பதிலாக இருக்க வேண்டும். இல்லை என்று கூறும் நீங்கள், அதற்க்கான தெளிவான காரணத்தை கூறுங்கள்.
நல்ல பதிவு
அண்ணே இருக்குங்கறதை நானும் ஒத்துக்கிறேன்!
பேனாவை மட்டும்!
கடவுள் இருக்குன்னு சொல்றிங்கல்ல
அதை முதல்ல நிறூபிங்க,
இல்லைங்குறது இல்லை தான் அதை என்னான்னு நிறுபிக்கிறது,
\\அண்ணே இருக்குங்கறதை நானும் ஒத்துக்கிறேன்!
பேனாவை மட்டும்!\\
அதை தான் நானும் சொல்றேன். ஒரு பேனான்னா என்னன்னு தெரிஞ்சா தான் அது இருக்க இல்லையான்னு சொல்ல முடியும். அது போல உங்கள் புரிதலில் கடவுள் என்றால் என்ன அதை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள். விளக்கமான பதிலை கூருவிர்கள் என்று எதிர்பார்கிறேன்.
கேட்ட கேள்விக்கு விளக்கம் சொல்லுங்க . இறைவன் என்றால் என்ன, அதை ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள் . இல்லைன்னா இல்லை தான்னு சொல்லுவது சிறுபிள்ளைதனமாக இருக்கிறது. "என்னை பொறுத்த வரையில் இறைவன் கிடையவே கிடையாது, அதற்க்கு காரணம் எல்லாம் நான் கூற முடியாது" என்று சொல்லுவதை போல் உள்ளது உங்க பதில். நான் கேட்பது, விரிவான விளக்கம். முடிந்தால் தாருங்கள்.
முதலில் உங்க பதிலை சொல்லுங்க, பிறகு நான் என்னோட விள்ளக்கதை கூறுகிறேன்.
அண்ணே மனித நாகரீகம் ஐயாயிரம் வருடங்களுக்கு மேலானது!
அதற்கு முன் முழுமையாக வளர்ச்சியடையாத மனிதர்கள், ஆனால் கடவுள் கடந்த இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் தான் தோன்றியது,
கண்,காது, மூக்கு வைத்து பிரபலபடுத்தப்பட்டது. ஒரு மனிதன் பிறந்து வாழ்ந்து சாக கடவுள் தேவைபடாத பொழுது அது இல்லைன்னு தானே அர்த்தம்.
இந்த விளக்கம் கூட சொல்லியிருக்க மாட்டேன், நீங்க புதுசு மாதிரி தெரியுது, மேலும் இந்த மாதிரி குழந்தைதனமான கேள்விகள் குழந்தைங்க கூட இப்போ கேக்குறதில்லை!
இதுக்கும் ஏன்னு ஒரு விளக்கம்
சைனாவில் இருக்கும் நெருப்பு கக்கும் டிராகன், கடற்கன்னிகள், இறக்கையுள்ளள குதிரை இவைகளெல்லாம் இல்லை கற்பனைன்னு நான் சொல்றேன்.
இல்லை இருக்குன்னு நீங்க சொல்றிங்க!
அப்ப யார் நிறுப்பிக்கனும்?
யாரவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க துணைக்கு!
\\இந்த விளக்கம் கூட சொல்லியிருக்க மாட்டேன், நீங்க புதுசு மாதிரி தெரியுது, மேலும் இந்த மாதிரி குழந்தைதனமான கேள்விகள் குழந்தைங்க கூட இப்போ கேக்குறதில்லை\\
இதற்கு பெயர் வறட்டு வாதம் என்று கூறுவதை தவிர வேறெதுவும் இருக்கிறதா? நான் கேட்ட கேள்விக்கு உங்களால் நேரடியாக பதில் கூட கூற முடியவில்லையே. நான் ondrum theriyaadha ஒரு sirupillai endrae vaithukkollungal. enakku ungalaal padhil koora mudiyuma? koorithaan paarungalaen, thatti kazhippadhai vituvitu. ஒரு பேனாவையோ அல்லது வேறெந்த பொருளையோ காண்பித்து, இதை யார் செய்தார்கள் என்றால் அதை செய்யும் தொழிற்சாலையையோ அல்லது அதை வடிவமைத்த பொறியாளரை கை காட்டுவோம். அதே போல இந்த migapperiya andamum, நாம் vaazhvadharkka thagundha vagaiyil erpaduthappatta ibboomiyum sadharanamaaga adhuvaagave thondra vaaippillai.
big bang theory enappadum peranda vedippai patri குரான் ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறது. மேலும் கருவில் இறக்கும் குழந்தையின் நிலை (அதை கண்டுபிடித்த கெய்த் மூர் குரானின் அடிப்படையிலேயே கண்டுபிடித்தார் என்பதை கூகிள் தேடலில் கண்டுபிடிக்கலாம்), ஒரு கடல் இன்னொரு கடலுடன் கலக்காதது, வாட்டர் சைக்கிள், pondra ennatra அறிவியல் unmaigal thirkkuraanil podhindhu kidakkindrana. idhu nichayamaaga iraivanin vaarthaigaleyandri verillai.
நீங்கள் இறைவனையும், கண் காது மூக்கு வாய்த்த கற்ப்பனை கதாபாத்திரங்களையும் ஒப்பீடு செய்யும் போதே தெரிகிறது, நீங்கள் தான் சிறுபிள்ளைதனமாக முடிவு செய்கிறீர்கள் என்று.
என்னால் இதோ, இறைவன் இருக்கிறான் என்று நாம் logical ஆகா நிரூபிக்க இயலும். ஆனால், அதற்க்கு நீங்கள் முதலில் logical திங்கிங் உடையவராக இருக்க வேண்டுமே. உங்கள் இறை மறுப்பு கொள்கை மிக மிக கண்மூடித்தனமாக அல்லவோ இருக்கிறது. எப்படி சில பேர் ஒரு வடிவத்தை காண்பித்து அதற்க்கு கண் காது மூக்கு வைத்து நம்பிக்கொண்டிருக்கிரார்களோ, அதே போல தான் உங்கள் இறை மறுப்பு kolgaiyum mooda nambikkaikku oppaaga ulladhu.
உலகில் உள்ள கோடான கோடி மக்கள் பின்பற்றும் பல மதங்களிலும் மார்கத்திலும் எது உண்மையாக இருக்கலாம் என்ற சிறு தேடல் கூட இல்லாமல், டிராகன், கடற்க்கன்னியர் போன்றவைகளுக்கு இறைவனோடு ஒப்பீடு seivadhu arivukku ovvadha seyalaagave irukkiradhu.
enakku ungalaal step by step eduthukkoora mudiyuma, இறைவன் illaiyendru? i want a very logical explanation.
\\யாரவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க துணைக்கு!\\
இப்படி thattikkazhikkaamal, ozhungaana vilakkathai koorungalen paarpom.
சரி உங்களிடம் மிக மிக நேரடியாக கேட்கிறேன்.
என்னால் இறைவன் இருக்கிறான் என்று குரானின் அடிப்படையிலும் (முக்கியமாக அதிலுள்ள அறிவியல் உண்மைகளை மேற்கோள் காட்டி) பகுத்தறிவினாலும் நிரூபிக்க இயலும்.
அதே போல, ஏதேனும் அறிவியல் உண்மைகளாலோ அல்லது தெளிவான ஆதாரங்களோடு தெளிவான விளக்கத்தை உங்களால் தர இயலுமா?
உங்களின் இந்த வறட்டு வாதம் ஒரு மிகப்பிரபலமான வாக்கை உறுதிப்படுத்துவது போல் உள்ளது'
Philosopher Francis Bacon Quotes; "An atheist is a man who looks through a telescope and tries to explain all that he can't see."
"நாத்திகவாதி என்பவன் ஒரு தெலெஸ்கொப் மூலம் தெரியாத ஒன்றை விளக்க முயல்பவன்"
குரான் என்பது எழுதப்பட்ட ஒன்று!
தானாக முளைத்துவரவில்லை,
அதில் இருக்கு என்பதால் அதை நம்புகிறீர்கள், அப்படியே சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் எல்லாத்தையும் நம்புங்கள் யார் வேண்டாம்னு சொன்னா!
குழந்தை மாதிரி தான் இருப்பேன்னு அடம்பிடிக்கிறவங்களை எதாவது பண்ணமுடியுமா?
உங்கள் மத நம்பிக்கையை கழட்டி வைத்து விட்டு எங்கே கடவுள்ன்னு சொல்லுங்க!
\\குரான் என்பது எழுதப்பட்ட ஒன்று!\\
இது ஒன்று போதும் எவ்வாறு நீங்கள் கற்ப்பனை செய்துக்கொள்வதை தான் இறை மருப்பென்று கூறுகிறீர்கள் என்று.
குரானை பற்றி கொஞ்சமேனும் நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்தல் உங்களுக்கு தெரிந்திருக்கும் அது எழுதப்பட்ட ஒன்றல்ல என்று. இதனை அறிவியல் உண்மைகள் பொதிந்து கிடக்கும் குரானை ஆயிரத்தி நானூறு வருடங்களுக்கு முன்னால் எந்த மனிதனாலும் யூகிக்க கூட இயலாது. ஏன் உலகெல்லாம் உலகம் தட்டை என்ற கூறிவந்த நாட்களில் உலகம் உரைநடை என்ற கருத்தை அப்போதே முன்வைத்து குரான்.
இப்போது தானே மேலும் நிரூபணமாகிறது, ஓன்றல்ல வறட்டு வாதமே புரிகிறீர்கள். உலகில் உள்ள பேரறிஞர்கள் எல்லாம் குரானை ஆராய்ந்து அது கூறும் உண்மைகளை மெயப்படுதும்போது, நீங்கள் மட்டும் எந்த புத்தகத்தையுமே படிக்க மாட்டேன், எந்த ஆதரதையுமே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது நிச்சயமாக மூடநம்பிக்கையைவிட மூடத்தனமானது.
நான் என்னுடைய விளக்கத்தை கொடுத்து விட்டேன். ஆனால் நீங்கள் இன்னமும் கர்ப்பனைக்கதைகளையே பிடித்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் ஆதாரப்பூர்வமான விளக்கத்தை இன்னும் தரவில்லை
குரான் எழுதப்பட்ட ஒன்றுன்னு சொன்னா நான் கற்பனைவாதியா?
அப்ப குரான் கல்வெட்டுல செதுக்கபட்ட ஒன்றுன்னு சொல்லட்டுமா? உங்களுகெல்லாம் லாஜிக்கா யோசிக்கவே தெரியாதா? மூளைய எப்பவுமே ஃபெரஷ்ஷா வச்சிகுவிங்களா? கொஞ்சம் வேலை கொடுங்க சார் அதுக்கு!
//குரானை பற்றி கொஞ்சமேனும் நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்தல் உங்களுக்கு தெரிந்திருக்கும் அது எழுதப்பட்ட ஒன்றல்ல என்று.//
அது என்ன நடுநிலையோடு?
நான் என்ன இந்து மததையோ, கிருஸ்துவ மதத்தையோ தூக்கி பிடித்து கொண்டா இருக்கிறேன்! எல்லா மதநூல்கலும் எழுதப்பட்ட ஒன்று தான்!
//உலகெல்லாம் உலகம் தட்டை என்ற கூறிவந்த நாட்களில் உலகம் உரைநடை என்ற கருத்தை அப்போதே முன்வைத்து குரான். //
குரானை தவிர வேறு எதுவுமே படிக்க மாட்டிங்களா?
குரான் எழுதப்பட்டது மூணாம் நூற்றாண்டில், அதற்கு முன்னரே உலகம் உருண்டைன்னு கண்டுபிடிச்சிட்டாங்க! இந்தய வானவியல் ஆராய்ச்சிகள் 2500 வருடத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்படது! உங்களுக்கு தெரிந்தது மட்டுமே உண்மைன்னு நம்பாதிங்க
//வறட்டு வாதமே புரிகிறீர்கள். //
நான் பண்றது வரட்டு வாதம்.
நீங்க பண்றது கொழ கொழ வாதமா?
//உலகில் உள்ள பேரறிஞர்கள் எல்லாம் குரானை ஆராய்ந்து அது கூறும் உண்மைகளை மெயப்படுதும்போது,//
குரானை சிறப்புன்னு சொல்றவன் தானே உங்களுக்கு அறிஞன், எதுத்து கேள்வி கேட்டா வரட்டுவாதம் பண்றவன் கரைக்டா?
//நீங்கள் மட்டும் எந்த புத்தகத்தையுமே படிக்க மாட்டேன், எந்த ஆதரதையுமே ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது நிச்சயமாக மூடநம்பிக்கையைவிட மூடத்தனமானது.//
என்ன ஆதாரம் வச்சிருக்கிங்க, செவி வழி செய்திகளை தவிர! ஆதாம், ஏவாள் கதையை எப்படி நீங்க நம்புறிங்கன்னு எனக்கு புரியல! நான் மூடநம்பிகையுடய ஆளா? நல்லா ஜோக் அடிக்கிறிங்க!
நான் என்பத கற்பனை கதையும் சொல்ல்வில்லை. நீங்கள் சொல்லும் கதைகள் போல் எல்லா மதத்திலும் பல கதைகள் இருக்கு! எல்லாத்தையும் கேட்டாச்சு, நீங்களும் சொல்லுங்க கேட்போம்!
நான் தான் நூறாவது பின்னூட்டம்!
Post a Comment