Monday, May 11, 2009

சில்லறை சித்தாந்தம் !


எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.

விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.



31 comments:

GNU அன்வர் said...

நல்ல சிந்தனை

புதியவன் said...

சினனச் சின்ன விசயங்களில் தேடலை தொடர்வதால் சில்லறை சிததாந்தம் என்று தலைப்பு வைத்து விட்டீர்களா செய்யது...?

புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு செய்யது

//தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.//

மிகவும் ரசித்த வரிகள்...

வால்பையன் said...

அப்படி என்னாத்த தான் தேடுறானாம்?

S.A. நவாஸுதீன் said...

இங்கேயும் ஒரு தேடல். எதார்த்தமான வார்த்தைகளோடு எடுப்பாக ஒரு கவிதை. நீங்க தொடர்ந்து கலக்குங்க செய்யது

S.A. நவாஸுதீன் said...

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.

இது ரொம்ப நல்லா இருக்கு

Unknown said...

// சில்லறை சித்தாந்தம் ! //


தலைப்பு நெம்ப சூப்பர்....!!!!



// ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான். //


ஒருவேள அவன் சஞ்சய் ராமசாமியா இருப்பானோ.....???




/// அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே. //


நெம்ப கரக்ட் ... இது எல்லா மனிதனுக்குளையும் நெரிய இருக்கு...!!!



கலக்கல் கவிதை....!!! வாழ்த்துக்கள்....!!!!!

அப்துல்மாலிக் said...

மீண்டும் ஒரு தேடுதல்...

யாராவது எதையாவது தேடிக்கொண்டுதான் இருக்கிறோம் வாழ்க்கையில்

அதை அழகான வரிகளில் உணர்த்திவிட்டீர் செய்யது...

ரொம்ப தேடுறீங்களோ??????

அப்துல்மாலிக் said...

//முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை//

ரசித்தேன்..

தேடலை நிறுத்திவிட்டால் வாழ்வில் சுவராஸ்யம் இருக்காது செய்யது..

அப்துல்மாலிக் said...

//அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.
//


இது எல்லோருக்கும் பொருந்தும்..

அருமையா எழுதிருக்கீங்க ஒற்ற வார்த்தையை வைத்து

நல்ல முன்னேற்றம்

வாழ்த்துக்கள் செய்யது

Anonymous said...

தேடலும் ஒரு வகை சுகம் ஆம் அதன் வேகம் அப்பப்பா...சிக்கும் வரை சிதறாது சிந்தனை...தேடல் தாங்க வாழ்க்கையை வழி நடத்துவதே....கடைசிவரி சுவை..பொம்மை புத்தகப்பை வளையல் துண்டுகளில் அலுவலகத்தில் படுக்கையில் ஆஹா...கனவிலும்...இது சுவாரஸ்யமான தேடல்தாங்க!!!!!

குடந்தை அன்புமணி said...

தேடல்கள் இருந்தால் நல்லதுதானே... சில்லறை தேறும் என்று சொல்லுகிறதோ இந்த சித்தாந்த கவிதை! நல்லா இருக்கு!

அ.மு.செய்யது said...

நன்றி சிந்தாமணி // முதல் பின்னூட்டத்திற்கு !!!
----------------------------

நன்றி புதியவன்..// நீங்க தான் எப்பவுமே பக்ன்சுவாலிட்டி ..

----------------------------
நன்றி வால்பையன்..//அதாங்க எனக்கும் தெரியல..
----------------------------

நன்றி நவாஸ் ..// உங்க சிறுகதை சூப்பர்.
----------------------------

நன்றி லவ்டேல் மேடி ..// பின்னூட்ட பெட்டியில பாதி இடத்த நீங்க தான் குத்தகைக்கு எடுத்துடறீங்க...( தொடருங்கள் )
----------------------------

நன்றி அபுஅஃப்ஸர்...// நலம் தானே ??
----------------------------

நன்றி தமிழரசி ..// உங்கள் பின்னூட்டம் எப்போதும் அழகு ..
----------------------------

நன்றி குடந்தை அன்பு மணி // வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

சி தயாளன் said...

தேடல் உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்

து.ம. து படத்தில் வந்த பாடல்...ஞாபகத்துக்கு வருது

rose said...

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை
\\
ரசித்த வரிகள்

rose said...

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.
\\
தேடல் கூட ஒருவித அழகுதான்

rose said...

மொத்ததில் உங்கள் தேடல் அழகு செய்யது

வெற்றி-[க்]-கதிரவன் said...
This comment has been removed by the author.
வெற்றி-[க்]-கதிரவன் said...

//தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
//

-:)

சில்லறை வேதாந்தம்

தேடல் இல்லாமல் தொடங்கி
ஏதும் தெரியாமல் பேசி
தன் பேச்சே தேடலை
தொடங்கிவைக்க
எங்கெங்கோ அலைந்து
தான் தான் என்று தெரிந்தபின்னும்
தன்னை நம்பாது
தொடக்கதுக்கே
செல்வது.

-ஸ்ரீ ல ஸ்ரீ பித்தானந்த பித்தன்
சுவாமிகள்
http://paarvaigalpalavitham.blogspot.com/2009/05/blog-post_12.html

தேவன் மாயம் said...

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.
///
இவ்வளவுநாளும் வலையில் நான் தேடுவதெல்லாம்.....................................?

நசரேயன் said...

தேடு வண்டி இல்லைனா எனக்கு வேலை செய்ய தெரியாது

ஆதவா said...

நல்லா இருக்குங்க கவிதை.. ஆனா பாருங்க தேடல் கவிதைகள் நிறைய இருக்கு... அதில் இது ஒன்று என்று ஆகிவிடாமல் தள்ளி நிற்பதுதான் சிறப்பாக இருக்கும்.

///நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.///

தேடல் நிறுத்திவிட்டால் இந்த உலகமே இயங்காது.... ஆதிகாலத்திலிருந்து மனிதன் சக்கரம் கண்டுபிடித்ததும் ஒரு தேடலே... இன்று எத்தனையோ சாதனைகள் நிகழ்வதும் ஒரு தேடலே..

சச்சின் ஒரு பந்தை சிக்ஸருக்கு விரட்டுவது கூட ஒருவகையிலான தேடல்தான்!!!

உங்கள் கவிதையின் ஆரம்பம் வெகு ஜோர்... முடிவு சுமார்.

வேத்தியன் said...

கவிதை கலக்கலா இருக்கு செய்யது...
(நம்மளுக்கு கவிதை அனுபவிக்க மட்டுமே தெரியும், ஆராயத் தெரியாது...)

வந்து பார்க்கவும்...

Thamira said...

கவிதை மாதிரியும் இருக்குது, கவுஜ மாதிரியும் இருக்குது..

Revathyrkrishnan said...

நல்ல கவிதைங்க... அவன் அப்படிங்கறது நீங்களா? பொதுவா?

ஆ.சுதா said...

தேடுதல் கவிதை நல்லா இருக்கு.
தேடுதல் தானே மனிதனை வேறுவேறு தளத்திற்கு கொண்டு செல்கின்றது.

அமுதா said...

/*அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.*/
நல்ல தேடல்

VISA said...

நல்ல கவிதை. இது போல் நிறைய எழுதுங்கள்.
சும்மா நான் டிரை பண்ணது .....

இதோ கிடைத்துவிட்டது
குனிந்து எடுப்பதற்குள்
கவ்விக்கொண்டு போனது ஒரு நாய்
எச்சில் இலை.
-விசா

gayathri said...

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.//


enaku rompa pudici irunthuchipa intha lines

அ.மு.செய்யது said...

நன்றி டொன்லீ
நன்றி ரோஸ்
நன்றி பித்தன்
நன்றி தேவா
நன்றி நசரேயன்
நன்றி ஆதவன்
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வேத்தியன்
நன்றி ரீனா
நன்றி முத்துராமலிங்கம்
நன்றி அமுதா
நன்றி விசா
நன்றி பார்சா குமாரன்
நன்றி காயத்ரி

Nagendra Bharathi said...

saagaa varam petra thedal . arumai