Sunday, December 28, 2008

வியாச‌ர்பாடி ( இது எங்க ஏரியா...)


ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த ஏரியாவுக்கு இரவில் நீங்கள் வருவதாயிருந்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்காது.வியாசர்பாடி என்றாலே ரவுடி ஏரியா என்று நிறைய பேருக்கு தெரியும்.
வடசென்னை முன்பெல்லாம் லேபர் ஏரியா என்றுதான் சொல்வார்கள்.
ப‌டிப்பு வாச‌னையே இல்லாத வெள்ள‌ந்தி ம‌னித‌ர்க‌ள் இங்கு ஏராள‌ம்.அழுக்கு ப‌டிந்த‌ ச‌ட்டை,ப‌ர்மா "பாதெக்" (Bataik) கைலிக‌ள்,வாயில் பீடி நாற்ற‌ம் இது தான் வியாச‌ர்பாடி ம‌க்க‌ளின் அடையாள‌ம்.
ஆனால் சென்னை மக்களுக்கு தெரியாத இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இந்த வியாசர்பாடி ஏரியாவில் உண்டு.

பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர் இந்த பகுதிகளை உள்ளடக்கியதே இந்த வியாசர்பாடி.அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக,அப்போதிருந்த தமிழக அரசு வியாசர்பாடியில் நிலங்களை ஒதுக்கியது.முன்னரே குடியிருந்த மக்களுக்கும்,இந்த புலம் பெயர்ந்த குடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது தான், ரவுடியிசமும் கட்டப் பஞ்சாயத்துகளும் கோலோச்சத் துவங்கின.குட்டி காஷ்மீர் மாதிரி.எதாவது ஒரிடத்தில் சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும்.
பட்டப் பகலில் வெட்டுக் குத்து கொலைகள் சகஜம்.ஆயிர‌க் க‌ணக்கான ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருந்தாலும், சுப்பையா,பிலிப்,பெஞ்ச் ப‌டுகொலைக‌ள் இங்கே பிர‌ப‌ல‌ம்.குறிப்பாக‌ பிலிப் என்ற‌ ர‌வுடி, ஒரு ம‌திய‌ வேளையில் பைக்கில் சென்ற‌ போது, முக‌த்தில் ஆசிட் ஊற்றி வ‌ழிம‌றித்து,ஒரு கும்ப‌ல் ம‌ற்ற‌ ம‌க்க‌ள் முன்னிலையில் ச‌ர‌மாரியாக வெட்டிக் கூறுபோட்ட‌து. செய்தது காதுகுத்து ர‌வியின் ஆட்க‌ள்.எல்லாம் 14 முத‌ல் 15 வ‌ய‌துள்ள சிறுவ‌ர்க‌ள். நீண்ட கால போராட்டத்திற்குப் பின் தமிழக காவல்துறை இந்த ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.எல்லா வீரமறவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய பிறகு தான் வியாசர்பாடி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதெல்லாம் இப்போது இறந்த காலமாகி விட்டது.
இப்போது நீங்கள் வியாசர்பாடி வந்தால் உங்கள் அனுபவமே வேறு.



பர்மாவிலிருந்து வந்ததால் இப்பகுதி மக்களிடையே ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை உணர முடியும்.
உணவு,உடை பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலுமே.
சென்னையில் (தண்டையார்பேட்டை,செகண்ட் லைன் பீச் ரோடுகளைத் தவிர) வேறங்கும் கிடைக்காத
சில உணவு வகைகள் இப்பகுதிகளில் கிடைக்கும்.
அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ அனைத்தும் பர்மிய உணவு வகைகள்.
குறிப்பாக அத்தோ,கவ்ஸ்வே சின்னசின்ன‌ ரோட்டோர கடைகளில் (Only at nights) கிடைக்கும். "அத்தோ" கடை எங்க இருக்கு" என்று விசாரித்தால் குட்டிச் சாத்தான்க‌ள் கூட சொல்லும்.
ஆர‌ஞ்ச் நிற‌த்தில் பெரிய சைசில் நூடுல்ஸ்,ப‌ச்சை முட்டைகோஸ்,வ‌றுத்த‌ பூண்டு,புளி தண்ணீர்,கொத்த ம‌ல்லி,அரைத்த‌ மிள‌காய் இன்னும் ப‌ல வ‌ஸ்துக்க‌ளை சேர்த்து கையிலியே பிசைந்து ஒரு பிர‌ள‌ய‌த்தையே உண்டுபண்ணி
பீங்கான் கோப்பைக‌ளில் ப‌ரிமாறுவார்க‌ள்.தொட்டுக் கொள்ள ப‌ச்சைமீன் வ‌டித்த‌ த‌ண்ணீரில் வாழைத்தண்டுகள் போட்டு கெட்டியாக சுடச்சுட அஜினமோடோ கலவையுடன் ஒருகுழ‌ம்பு ( Highly viscous liquid ) த‌ருவார்க‌ள்.
கடித்துக் கொள்ள "பேஜோ" என்று நம்மூர் அடை மாதிரி தான் ஆனால் கொஞ்சம் பெரிய சைசில் கடினமாக இருக்கும்.
இவ்வ‌ள‌வும் சேர்த்து விலை 15 முதல் 20ஐ தாண்டாது.


U.K Robert Gordon University-யில் M.S படித்த‌வராக இருந்தாலும்,இன்போசிஸில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும் Treat என்று வந்துவிட்டால் ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.
அதுமட்டுமன்றி, பர்மிய தின்பண்டங்கள்,"கவ்னி" அரிசி,செருப்புகள்,கைலி அனைத்தும் குறைந்த விலையில் பி.வி.காலனியில் கிடைக்கும்
மக்களிடையே பர்மிய வார்த்தைகள் புழக்கம் அதிகம்.அவற்றுள் சிலவற்றை கீழே பாருங்கள். ( நீங்கள் பர்மாபஜாரில் பொருள் வாங்க செல்லும் போது இந்த வார்தைகளை உபயோகித்தால், பர்மா மக்கள் மாதிரி காட்டிக் கொண்டு பேரம் பேசலாம் )

சியா- வாத்தியார்
அசே- ஒரிஜின‌ல்
அட்டூ- டூப்ளிகேட் ( இந்த‌ வார்த்தை சென்னை ம‌க்க‌ளிடையே இப்போது பிர‌ப‌ல‌ம்.<"அட்டு பிக‌ர் மாமே !!!!> )
இந்த 3 வார்த்தைகள் போதும்.இதை வைத்து ஒரு சின்ன உதாரணம்.
" ஸியா !!!!! இந்த பீஸ் அசெயா ? இல்ல அட்டூவா ?" என்று கேட்கலாம்.

பேச்சு வார்த்தையோடு நின்று விடாமல்,
லுங்கியையும் நாக்கையும் மடித்து வைத்து குத்தியெடுக்கும் சாவுக்குத்தும்,கானாப் பாடல்களும் உருவான தாயகமும் எங்கள் வியாசர்பாடி ( பேஜார்பாடி ) தான்.கானா உல‌க‌நாத‌ன்
வியாச‌ர்பாடி வாசி.


விளையாட்டைப் பொறுத்த மட்டில்,
சென்னை முழுவதும் தெரு கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும்,எங்களுக்கு தேசிய விளையாட்டு கால்பந்து தான். பிரேசில்,மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இங்கு ஏராளம்.நிறைய பேருக்கு அரசு உத்யோகம் கால்பந்து உபயமாகத் தான் கிடைத்தது.
சத்யமூர்த்தி நகர் மாநகராட்சிப்பள்ளியில் பயிற்சி செய்தே ஒரு மாணவன்,தேசிய கால்பந்து அணிக்காக போர்ச்சுகல் வரை சென்று வந்தான்.

பாரிமுனையிலிருந்து 10ரூ ஷேர் ஆட்டோவுக்கு தந்தால்,30 நிமிடத்தில் இந்த பர்மிய பிரதேசத்தை அடைந்து விடலாம்.
சென்னையில் இப்ப‌டி ஒரு இட‌மா ? என்று நீங்க‌ள் புருவ‌ம் உய‌ர்த்த கார‌ண‌ம் ஆயிரம்.
(இன்னும் நிறைய‌ இருக்கு...)

48 comments:

அமுதா said...

சென்னையில் இப்ப‌டி ஒரு இட‌மா?? /*அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ ...*/
ம்... எப்படி இருக்குனு பார்க்கணும் போல இருக்கு...

அமுதா said...

Pls. remove word verification for posting comments...

கணினி தேசம் said...

நண்பா, அருமையான பதிவு

ஏழு வருடம் சென்னைவாசியாக இருந்தும் வியாசர்பாடி வந்ததில்லை.

பாரீஸ் கார்னெர் தான் சென்னையின் எல்லை என்பதாகவே நினைப்பு. அதைத்தாண்டி ஒருமுறை மட்டுமே டோல்-கேட் வரை நண்பரை பார்க்க வந்துள்ளேன்.

வாய்ப்பு கிடைத்தால் பர்மா உணவை ருசி பார்க்க நிச்சயம் வியாசர்பாடி வருகிறேன்.

கணினி தேசம் said...

//ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.//

கையேந்தி பவனில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெங்கும் கிடைக்காது. பலமுறை அனுபவித்திருக்கிறேன்!!

அ.மு.செய்யது said...

//சென்னையில் இப்ப‌டி ஒரு இட‌மா?? /*அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ ...*/
ம்... எப்படி இருக்குனு பார்க்கணும் போல இருக்கு...//

பார்த்தால் மட்டும் போதாது..சாப்பிட்டுப் பார்த்துவிட்டும் செல்ல அனுமதி உண்டு.

நன்றி அமுதா தங்கள் வருகைக்கு..

அ.மு.செய்யது said...

கணினி தேசம் said...

//நண்பா, அருமையான பதிவு

ஏழு வருடம் சென்னைவாசியாக இருந்தும் வியாசர்பாடி வந்ததில்லை.

பாரீஸ் கார்னெர் தான் சென்னையின் எல்லை என்பதாகவே நினைப்பு. அதைத்தாண்டி ஒருமுறை மட்டுமே டோல்-கேட் வரை நண்பரை பார்க்க வந்துள்ளேன்.

வாய்ப்பு கிடைத்தால் பர்மா உணவை ருசி பார்க்க நிச்சயம் வியாசர்பாடி வருகிறேன்.
//

வரும்போது ஒரு மிஸ்கால் மட்டும் கொடுத்துட்டு வாங்க !!!!!
நாங்களும் அப்படியே join பண்ணிக்கிறோம்.

நன்றி நண்பா !!!!! தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்..

அ.மு.செய்யது said...

கணினி தேசம் said...
//ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.//

கையேந்தி பவனில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறெங்கும் கிடைக்காது. பலமுறை அனுபவித்திருக்கிறேன்!! //

நிச்சயமாக !!! சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா ??

anbudan vaalu said...

எனக்கு சென்னையே ஒரு 2% தான் தெரியும்.....அதுலயும் இப்படி ஒரு ஏரியாவா????
very interesting......
//அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ // இதெல்லாம் பத்தி ஒரு தனி பதிவு போடுங்களேன் please.........
உங்க ஏரியாவ ஒருநாள் வந்து பார்க்கணும் கூடவே அந்த உணவுகளையும்.......

அ.மு.செய்யது said...

//அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ // இதெல்லாம் பத்தி ஒரு தனி பதிவு போடுங்களேன் please.........//

உங்களுக்காகவே நிச்சயம் போடுகிறேன் வால்ஸ்...என்னிடம் டிஜிட்டல் கேமிரா இல்லை.இருந்தால் இன்னும் நிறைய படங்கள் போட்டிருப்பேன்.அடுத்த‌ ப‌திவில் போடுகிறேன்.

அ.மு.செய்யது said...

anbudan vaalu said...
//உங்க ஏரியாவ ஒருநாள் வந்து பார்க்கணும் கூடவே அந்த உணவுகளையும்.......//

கண்டிப்பாக..வியாசர்பாடிக்கு விஜயம் செய்பவர்களுக்கு ஷேர் ஆட்டோ கட்டணம் Reimburse செய்யப்படும்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நீங்கள் குறிப்பிட்ட உணவு வகைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், அது உங்க ஏரியாதானா
எங்க ஏரியா - உள்ள வந்துட்டோமே.

அ.மு.செய்யது said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
நீங்கள் குறிப்பிட்ட உணவு வகைகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், அது உங்க ஏரியாதானா
எங்க ஏரியா - உள்ள வந்துட்டோமே.
//

நன்றி அம்மா தங்கள் முதல் வருகைக்கு...வலைதளத்திற்கும் வியாசர்பாடிக்கும் சேர்த்து...

anbudan vaalu said...

//உங்களுக்காகவே நிச்சயம் போடுகிறேன் வால்ஸ்...என்னிடம் டிஜிட்டல் கேமிரா இல்லை.இருந்தால் இன்னும் நிறைய படங்கள் போட்டிருப்பேன்.அடுத்த‌ ப‌திவில் போடுகிறேன்.//
waiting for it :))))

anbudan vaalu said...

you removed the word verification???!!!!
thanx for it sayed.....

//வியாசர்பாடிக்கு விஜயம் செய்பவர்களுக்கு ஷேர் ஆட்டோ கட்டணம் Reimburse செய்யப்படும்//

:)))

அ.மு.செய்யது said...

//you removed the word verification???!!!!
thanx for it sayed.....//

Vaals,
நீங்க முதல் முறையாக கமெண்ட் கொடுத்த போதே சொன்னீங்க.அப்ப எனக்கு என்னன்னே புரியல.ஒருவேளை நான் எழுதிய இரண்டாவது கமெண்டை தான் உங்க blog-ல இருந்து தூக்கச் சொல்றீங்களோனு நினச்சி delete பண்ணி வைத்தேன்.அமுதா சொன்னவுடன் தான் தீவிர ஆராய்ச்சிக்கு பின் அதை Remove செய்தேன்.
நன்றி இருவருக்கும்......

குடுகுடுப்பை said...

அருமையான பதிவு சார், வந்தா கண்டிப்பா வருவேன்.புதுவகை சாப்பாடுன்னா நமக்கு உயிரு.

அ.மு.செய்யது said...

நன்றி குடுகுடுப்பை !!!!!!!1

தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்...
சாப்டு பார்த்துட்டு பார்சல் கூட வாங்கிட்டுப் போங்க !!!!!!

Anonymous said...

நண்பா, அருமையான பதிவு

பாசகி said...

ரொம்ப interesting-ஆ இருக்குங்க. கூடிய சீக்கரம் வந்தடறேன், pick-up பண்ண தயார இருங்க :-)

அ.மு.செய்யது said...

நன்றி கடையம் ஆனந்த்..

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும்.

அ.மு.செய்யது said...

கண்டிப்பாக பாசகி !!!! வருகைக்கு மிக்க நன்றி !!!!
உங்கள் வலைதளத்தையும் பின் தொடர முடிந்தது.

பாசகி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

காரூரன் said...

நானும் சென்னையை பல தடவை சுற்றியும் வியாசர் பாடிக்குள் வந்ததில்லை. நன்றாகத்தான் ஊரின் நிலையை விளக்கியுள்ளீர்கள். "மழைக்கு ஒதுங்கியவை" என்ற வார்த்தைப் பதம் பாடசாலைக்கு கட்டாயத்தின் பேரில் போவோரை குறிக்கும்.

வாய்ப்புக்கள் தான் மனிதர்களை பக்குவப் படுத்தும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அ.மு.செய்யது said...

//"மழைக்கு ஒதுங்கியவை" என்ற வார்த்தைப் பதம் பாடசாலைக்கு கட்டாயத்தின் பேரில் போவோரை குறிக்கும்.
//

நான் வலையுலகுக்கு வந்ததும் யதேச்சையாகத் தான்.
ஆனால் நிறையக் கற்றுக் கொண்ட பிறகு, ஒதுங்கிய இடத்தை விட முடியவில்லை.
நன்றி காரூரன் தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்......
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

mohamed said...

thnx buddy..then the next treat will be there when i come to chennai...hope to invite you...jakallah hyran

அ.மு.செய்யது said...

Hyrunlakum....Doctor...Sure We 'll have the treat..and that too wud b in my area Insha Allah...!!!!!!!!!!!!

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நன்றி தாரணி பிரியா !!!!!!!!
நன்றி பாச‌கி !!!!!!!!

உங்க‌ளுக்கும் நல்வாழ்த்துக்கள்

- இரவீ - said...

வியச்சர்பாடிக்குள் இவ்ளோ விஷயமா ?

அ.மு.செய்யது said...

//Ravee (இரவீ ) said...
வியச்சர்பாடிக்குள் இவ்ளோ விஷயமா ?
//

(இன்னும் நிறைய‌ இருக்கு...இரவீ !!!!!

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி.. மீண்டும் வாருங்கள்

S.Lankeswaran said...

நான் இந்தியாவில் இருந்த நேரம் ஒரு தடவை வியாசர்பாடி வந்துள்ளேன். உண்மை தான் சென்னையிலும் இப்படி ஒரு இடமா என்று வியந்த இடம் அது.

அ.மு.செய்யது said...

நன்றி இலங்கேஸ்வரன்...

தங்களின் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.அடுத்த முறை இந்தியா வரும்போதும் தெரியப்படுத்துங்கள்.

- இரவீ - said...

////உங்களுக்காகவே நிச்சயம் போடுகிறேன் வால்ஸ்...என்னிடம் டிஜிட்டல் கேமிரா இல்லை.இருந்தால் இன்னும் நிறைய படங்கள் போட்டிருப்பேன்.அடுத்த‌ ப‌திவில் போடுகிறேன்.//
waiting for it :))))// இக்கு ஒரு ரிபீட்டே...

//இன்னும் நிறைய‌ இருக்கு...இரவீ !!!!!//
இதுக்கு இன்னொரு பதிவு ...
சீக்கரமா போடுங்க - இல்ல சீக்கரமா சென்னைக்கு ரவுடியா வரமாதிரி ஆய்டும்.

அ.மு.செய்யது said...

//Ravee (இரவீ ) said...
சீக்கரமா போடுங்க - இல்ல சீக்கரமா சென்னைக்கு ரவுடியா வரமாதிரி ஆய்டும்.//

இரவீ !!!! என்னோட பதிவுகள பாங்கறவங்க தான் ரவுடியா ஆவாங்க...

பேச்சு பேச்சாத்தான் இருக்கணு..வன்முறைய கைல எடுக்கப்படாது...

நட்புடன் ஜமால் said...

ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே

அ.மு.செய்யது said...

//அதிரை ஜமால் said...
ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே
//

வாங்க ஜமால் !!!
நன்றி தங்கள் வருகைக்கு..

ஙா யேர அக்கோலோங் அசி ஸியா !!!

அப்துல்மாலிக் said...

இவ்வளவு காலம் சென்னையில் இருந்தும் வியாசர்பாடி போகாதது நினைத்து வருத்தமாக இருக்கிறது... ரொம்ப அருமையா சொன்னீங்க செய்யது.. ஒருநாள் வருவோம்...

அ.மு.செய்யது said...

கண்டிப்பாக !!!

வாங்க அபுஅஃப்ஸர்...
நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.

புதுகை.அப்துல்லா said...

அந்தக் காலத்துல பாரிமுனையில் ஒரு நிறுவனத்தில வேலை பார்த்த காலத்துல செகண்ட் லையன் பீச்சில் போஸ்ட் ஆபிஸ் பின்னால் அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா மாதிரி பர்மா சாப்பாடு சாப்பிடும் பழக்கம் ஒட்டிக்கிச்சு. அப்புறம் இதோட தாயகம் வியாசர்பாடின்னு தெரிஞ்சு உங்க ஏரியாவுல வந்தும் கொட்டிக்கிட்டு போய்ருக்கேன். இப்பல்லாம் நேரமின்மையால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியிரதில்ல. பார்ப்போம் அடுத்து எப்ப வரலாம்னு :))

அ.மு.செய்யது said...

வாங்க புதுகை அப்துல்லா !!!!!!!
அனுவ‌த்தை ப‌கிர்ந்து கொண்ட‌மைக்கு ந‌ன்றி !!

//இப்பல்லாம் நேரமின்மையால் என்னால் அவ்வளவு தூரம் வர முடியிரதில்ல. பார்ப்போம் அடுத்து எப்ப வரலாம்னு //

ஒருநாள் அத்தோ கடயிலேயே நம்ம அடுத்த பதிவர்கள் சந்திப்ப வச்சிட்டா போச்சு !!!

ஜியா said...

//அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக//

Naangalum Burmavaasithaan.... aana 40 laiye thirumba India vanthuttoam... :)) athanaala, Kausaiya thavira vera entha Burma itemum theriyaathu... sema flow unga postlaam...

ஜியா said...

//ஸியா இந்த பதிவு அட்டூ அல்ல அசே//

Repeatye..

//ஙா யேர அக்கோலோங் அசி ஸியா !!!//

ithukkum innoru repeatye :))

அ.மு.செய்யது said...

// Naangalum Burmavaasithaan.... aana 40 laiye thirumba India vanthuttoam... :)) athanaala, Kausaiya thavira vera entha Burma itemum theriyaathu... sema flow unga postlaam... //

அப்படியா....நம்மாளு கூட ஒருத்தர் இங்க இருக்காருப்பா..

வாங்க ஜி..சியா..

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள செய்யது,

நல்ல பதிவு. என்னுடைய அலுவலகம் பாரிமுனையில்தான் உள்ளது. செகண்ட் லைன் பீச்சை தாண்டித்தான் இரவு போக வேண்டும். ஒரு முறை நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் 'அத்தோவை' முயற்சி செய்தேன். பிடிக்கவே இல்லை. அந்த வழி போகும் போதெல்லாம் எப்படி இதை சாப்பிடுகிறார்கள் என்று வியப்பாக இருக்கும்.

மற்றபடி நீங்கள் சொன்ன பர்மிய வார்த்தைகள் (அது 'அஸ்ஸி'தானே.) பர்மா பஜாரில் உலவும் போது ரொம்பவும் உபயோகமாகும். முக்கியமாக ரூபாயின் மதிப்பை குறிக்க டையா,டைசா என்று சங்கேத பாசையில் பேசிக் கொள்வார்கள். நான் வசிப்பது பெரம்பூரில். (உங்க ஆளுதான். :-)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல பதிவு. வியாசர்பாடி சென்னையில் எனக்குப் பிடித்த இன்னொரு பகுதி. அத்தோவைச் சுவைத்திருக்கிறேன்(அது பாரீஸ் கார்னரில்). மற்ற அயிட்டங்களை இனிமேல்தான் ஒரு கை பார்க்க வேண்டும் :)

-ப்ரியமுடன்
சேரல்

அ.மு.செய்யது$ said...

நன்றி சேரல் வருகைக்கும் பகிர்வுக்கும்..!! மகிழ்ச்சி !!

ராகவன் said...

மேஜோ அடை செய்வது எப்படி தெரியுமா உங்களுக்கு