ஈரம் செறிந்த
தரை விரிசலினூடே
கண் சிமிட்டும்
மெல்லிய அரும்புகள்
விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்
விழியோர பாசறையில்
தேடல் ஆயுதங்களில்
படிந்திருக்கும்
கனவின் கறை।
ஏக்கம் ஆழ்ந்து
வெளிரிய இதழ்களில்
கீறல்கள் படர்ந்த
வடுக்களின் உதயம்।
பார்வை தெரிந்தும்- நாணப்
போர்வையெறிந்தும்
மெய்யிரண்டும் மெலிதாக உரச
சிறு சலசலப்பின்றி ஓர் மெளன ஊடல்।
கருமுகில் நோக்கி
காய்ந்த மண் தவம்।
விண்சுடரெண்ணி
விடியலின் தவம்।
ஓர் இதழினசைவை வேண்டி- இவ்
எளியனின் கடுந்தவம்.
6 comments:
வார்த்தை கிழிக்கிறது. வானம் பொய்ப்பை. காதல் வரும் கண்நீர்வரும் தண்ணீர் வந்தாலே.
//பார்வை தெரிந்தும்- நாணப்
போர்வையெறிந்தும்
மெய்யிரண்டும் மெலிதாக உரச
சிறு சலசலப்பின்றி ஓர் மெளன ஊடல்। //
வார்த்தைகளில் ஊடல் அழகு...
//கருமுகில் நோக்கி
காய்ந்த மண் தவம்।
விண்சுடரெண்ணி
விடியலின் தவம்।
மனுநீதி வேண்டி
மானுடம் தவம்।//
ரொம்ப கடுமையான தவம் போல...
//ஓர் இதழினசைவை வேண்டி- இவ்
எளியனின் கடுந்தவம்.//
வரம் கிடைச்சதா...?
//புதியவன் said...
//ஓர் இதழினசைவை வேண்டி- இவ்
எளியனின் கடுந்தவம்.//
வரம் கிடைச்சதா...?
//
வேறொரு வரம் கிடைச்சது....
நன்றி புதியவன்..பழைய பதிவிற்கு வந்து கருத்து சொல்லியமைக்கு..
ஆஹா! ரொம்ப பெரிய தவம் தானுங்கோ
Post a Comment