Friday, January 7, 2011

புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்

போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று
ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.

வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.

தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.

சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.

த‌மிழினி:

சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்
நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்

கிழக்கு:

காஷ்மீர் பா.ராக‌வ‌ன்
ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்

உயிர்மை:

க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்
எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா
ம‌ண்பூத‌ம் வாமுகோமு

காலச்சுவடு:

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்
பாத்துமாவின் ஆடு பஷீர்
மதில்கள் பஷீர்
ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி
ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி அ.முத்துலிங்க‌ம்
கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா

வ‌ம்சி:

உரையாட‌லினி அய்ய‌னார்
க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா

கலீஃபாக்கள் வரலாறு
இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்
இஸ்லாமும் பெண்களும்

********************

7 comments:

நட்புடன் ஜமால் said...

:)
சென்ற முறை வாங்கிய நூட்களை படித்தாயிற்றா ;)

அதை பற்றியும் கொஞ்ச-ம் எழுதுங்களேன் :P

அ.மு.செய்யது said...

சுகந்தண்ணே ?

பாதி ப‌டித்தாயிற்று.மீதி பாதி இர‌வ‌ல் கொடுத்தேன் திரும்ப‌ வ‌ர‌வில்லை.அதனால் அதே புத்த‌க‌ங்க‌ளை இந்த‌ வ‌ருட‌மும் வாங்கினேன்.

என‌க்கு பிரிய‌மான‌ புத்த‌க‌ங்கள் நான் ப‌டித்து முடித்துவிட்டாலும் என் அல‌மாரியில் இருக்க‌ வேண்டுமென்று ஆசைப்ப‌டுவேன்.

ஆதவா said...

கலக்கறீங்க செய்யது!! புத்தகக் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் தேடுவதே ஒரு சுவாரசியமான நிகழ்வுதான்!

நட்புடன் ஜமால் said...

மீதி பாதி இர‌வ‌ல் கொடுத்தேன் திரும்ப‌ வ‌ர‌வில்லை.]]

என்னாதுங்கோ

சரியா கவணிங்க நான் என்னா சொல்லியிருக்கேன்னு :P

ஹுஸைனம்மா said...

இந்த வலைப்பூவையும், பதிவரையும் எங்கேயோ பாத்த/படித்த நாவகம். யாருன்னு சட்டுனு நினைப்புல வரமாட்டேங்குதே... அதேபோல அந்த “நட்புக்கரம்” நீட்டுறவரையும்...

ஒருவேளை ரெண்டு பேரும் புதுசாக் கல்யாணமாகிக் காணாமப் போனவங்களோ? ;-)))))

அன்புடன் அருணா said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவு போல!

தமிழ் அமுதன் said...

///ஹுஸைனம்மா said...

இந்த வலைப்பூவையும், பதிவரையும் எங்கேயோ பாத்த/படித்த நாவகம். யாருன்னு சட்டுனு நினைப்புல வரமாட்டேங்குதே... அதேபோல அந்த “நட்புக்கரம்” நீட்டுறவரையும்...

ஒருவேளை ரெண்டு பேரும் புதுசாக் கல்யாணமாகிக் காணாமப் போனவங்களோ? ;-)))))////

அதே.!;;))) செய்யது பிசி... சரி...!

ஜமால்...? ;;)