Wednesday, June 16, 2010

ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்

ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்
புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்
முன்னிர‌வே டெம்போவில்
வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌
ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.

தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்
"தூணோர‌மா உக்காந்திருக்க‌
ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"
ப‌த்தாம‌ போகுமோண்டு
ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும்
ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.

வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா.

இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !


********

23 comments:

Anonymous said...

Vow.. excellent.

நட்புடன் ஜமால் said...

அ.மு கல்யாணத்துல இது எதுவும் இல்லாம பார்த்துக்கப்பூ :)

அபுஅஃப்ஸர் said...

வரதட்சணை கொடுத்து கல்யாணம் முடிக்கும் பெற்றோற்/உற்றார் தவிப்பு அருமை.

கடைசியில் உள்ள ட்விஸ்ட் கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

அதே ஜமால் சொன்னத ஃபாலோ பண்ணுங்க

அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

வால்பையன் said...

27 ஆம் தேதி ஒரு பாய் வீட்டு கல்யாணம் இருக்கு, இதை படிச்சிட்டு போய் சாப்பிடலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்!

தேவன் மாயம் said...

கல்யாணத்துக்கு அப்பாக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளாது!!

VISA said...

Hei welcome back.

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் வாங்க.!

நன்றி அபுஅஃப்ஸர்.(இன்ஷா அல்லாஹ்)

நன்றி வால்ஸ்..

நன்றி தேவா

நன்றி விசா..உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு நன்றி !

எம்.எம்.அப்துல்லா said...

:)

ஹேமா said...

செய்யது...சுகம்தானே !
ரொம்ப நாளுக்கு அப்புறமா நல்லதொரு பதிவு.
இது நீங்க நேரில பார்த்து அனுபவப்பட்ட நிகழ்வுதான் நிச்சயமாய்.அவ்வளவு வேதனையோட சொல்லியிருக்கீங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜாலியா படிக்கலாம்னு வந்தா நெகிழ வெச்சுட்டீங்க!

மாதவராஜ் said...

நெகிழவைத்த சொற்சித்திரம்!

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஒரு கல்யாணம் முடித்துக் கொடுக்க எவ்வளவு கஷ்டம்..

SUFFIX said...

காட்சிகளின் வர்ணனை நல்லா இருக்கு செய்யது.

ஹுஸைனம்மா said...

//எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !//

ஏன் பாஸ், கல்யாணத்துக்கு எதுத்த வீடு, அடுத்த வீடெல்லாம் கூப்பிடத்தானே செய்வாஹ, முருகேசனும் வந்து சாப்பிடுக்கிட வேண்டியதுதானே பிரியாணிய??

(என்னிய திட்டக்கூடாது சொல்லிட்டேன்!!))

பா.ராஜாராம் said...

அற்புதமா வந்திருக்கு செய்யது!

நல்ல ஒரு சிறுகதையை சீவி, சீவி கூர்மை படுத்தியதில் கவிதையாக பிறந்தது போல இருக்கு. அல்லது

மலர்ந்தது போல.

அரபுத்தமிழன் said...

நானும் யார்கிட்டக் கேட்குறதுன்னு யோசித்துக் கொண்டிருந்தேன்.
'அ.மு.செய்யது எங்கே என‌', இப்பத்தான் தெரியுது நாலு மாசமா
கல்யாண வேலையில் பிஸி என்று :-)

ஆதிமூலகிருஷ்ணன் said...

மிக அருமையானதொரு கவிதை தம்பி. வாழ்த்துகள்.

(அப்புறம் நெப்பந்தஸ் கதை தொடரும் போட்டிருக்கீங்க, எப்ப முடிப்பீங்க? அப்பதான் முழுசா படிக்க வசதியா இருக்கும். :-) இன்னும் படிக்கலை)

sakthi said...

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
KANAKKU SARIYATHAN PODARENGA SEYYATHU

sakthi said...

ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா

ORU THAYIN THAVIPU ATHANE

அன்புடன் மலிக்கா said...

கல்யாணமுன்னாலே கண்முன்னே
கலக்கம் கட்டுக்கடங்காமல் ஓடும் பெற்றோருக்கு.

நல்ல பகிர்வு

அக்பர் said...

அருமையாக உணர்ந்து எழுதியுள்ளீர்கள். கடைசி ட்விஸ்ட் மனசை கஷ்டப்படுத்தியது.

nidurali said...

RAMADAN KAREEM

Assalamuallikum.
May Allah keep us on the right path, and accept our fasting and prayers.
We wish the best blessings of Ramadan to all. May Allah accept our worship and may He help us rejuvenate our faith. May He help us share the joy of this month with all our family, friends and neighbors.
Jazakkallahu khairan
Mohamed Ali jinnah

பிரவின்ஸ்கா said...

Nalla irukku..