Monday, January 11, 2010

கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்

கணிசமான தொகைக்கு இந்த வருடம் புத்தக சந்தையில் அள்ளியாகி விட்டது.வழக்கம் போலவே,வாங்க வேண்டும் என்ற நினைத்த பட்டியல் வேறு.புத்தக சந்தையில் நுழைந்த பின் உருவான பட்டியல் வேறு.மற்றபடி,அபிமான எழுத்தாளர்களான யுவன்சந்திரசேகர்,கோபி கிருஷ்ணன் இவர்களின் புத்தகங்களை வாங்க தவறவில்லை.நண்பர்கள் கேட்ட,பரிந்துரைத்த சில புத்தகங்கள் நிறைய கிடைக்கவில்லை.ஒவ்வொரு நாளும் பதிவுலக நண்பர்களை விழாவில் சந்தித்தது சுவாரஸியமான அனுபவம்.கிழக்கு வெளியீட்டில், ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு புத்தகத்தை அண்ணன் அப்துல்லா வாங்கி கையெழுத்திட்டு அன்பளித்தார்.

பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை அச்சில் பார்த்ததும் ஏற்பட்ட பரவசம் சொல்லில் அடங்காது.

-------------

ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.

என‌க்கு முன் பாயில் ச‌ம்ம‌ண‌மிட்டு அம‌ர்ந்திருந்த ஒரு பெண்ம‌ணி,எக்க‌ச்ச‌க்க‌ ஒப்ப‌னையில்,க‌விஞ‌ர் சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் உரையில் லயித்திருந்தார்.லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு.பிறகு,நேர‌ம் செல்ல‌ செல்ல எல்லா க‌வனச்சிதறல்களையும், தேநீர் பிஸ்கட் கேக் போன்ற வஸ்துக்களின் வாசனைகளையும் த‌ன் பேச்சு ஆளுமையால் சுகுமார‌ன் முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார்.

ஒரு மீசைக்கார‌ க‌விஞ‌னின் ப‌டைப்பு தான் த‌ன்னை முத‌ன் முத‌லில் புர‌ட்டிப் போட்ட‌தாக‌வும்,அதுவே தான் எழுத வ‌ந்த‌மைக்கு முழுமுத‌ற்கார‌ண‌மும் என்று சொன்னார்.எழுத‌ வ‌ந்த‌ கால‌த்தில் க‌வியுல‌கில் அப்போது க‌ர‌காட்ட‌ம் ஆடிக் கொண்டிருந்த பிச்ச‌மூர்த்தி,த‌ர்மு சிவ‌ராமு,பிர‌மிள் இவ‌ர்க‌ளின் பாணி த‌ன்னுள் வராம‌ல் இருக்க பெருஞ்சிரத்தை எடுத்துக் கொண்ட‌தாக‌வும் தெரிவித்தார்.எழுத்தாள‌ர் பாஸ்க‌ர் ச‌க்தியும்,ஞானியும் புன்முறுவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

ச‌ரியாக ஐந்த‌ரை ம‌ணிக்கு ந‌ண்ப‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு இட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.மொழிபெய‌ர்ப்பு குறித்து கிருஷ்ண‌பிர‌பு கேட்ட‌போது,அதில் இருக்கும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை சுகுமார‌ன் எடுத்துரைக்க ஆர‌ம்பித்தார்.ம‌லையாள‌ எழுத்தாள‌ர் ப‌ஷீரின் க‌தைக‌ளை த‌மிழில் மொழிபெய‌ர்த்தல் எவ்வ‌ளவு ரிஸ்க் ஆன‌ காரிய‌ம் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து."எண்ட உப்பப்பாட்ட ஒரு ஆன உண்டு" குறுநாவலை "என் தந்தையிடம் ஒரு யானை இருந்தது" என்று ஒருவர் தவறாக மொழிபெயர்த்த கதையையும் கூறினார்.இருந்தாலும் குள‌ச்ச‌ல் யூசுப்பின் மீது என‌க்கு ந‌ம்பிக்கையிருக்கிற‌து."உல‌கப்புக‌ழ் பெற்ற‌ மூக்கு" வாங்கி வைத்திருக்கிறேன்.பார்ப்போம்.

அர‌சிய‌ல் சார்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌,க‌விதை இய‌க்க‌மான "வான‌ம்பாடி" குறித்து நிறைய‌ ச‌ர்ச்சைக‌ள் எழுந்த‌ன.பிற‌கு அந்த‌ ச‌ர்ச்சை,பெண் க‌விஞ‌ர்க‌ளான‌ ச‌ல்மா,குட்டி ரேவ‌தி,மால‌தி மைத்ரிக்கு தாவியது.ஞாநி,சென்ஷேன‌லைஸ் செய்வ‌து மீடியா தான் என்று வாதிட்டார்.பிற‌கு,கவிதை புரித‌ல் குறித்து நானும் என் ப‌ங்குக்கு ஒரு கேள்வி கேட்டேன்.சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.

ராகுகால கூட்டம் என்ற பெயர் மாறி,இச்சந்திப்பு இன்று ஒரு பிடிவாத கூட்டமாக அமைந்திருக்கிறது.புத்தக கண்காட்சி போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய கூட்டம் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது என‌வும் சில நாட்களுக்கு முன்னர் தான்,இதய அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும் பிடிவாதமாக இம்மாத கேணி சந்திப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று வெற்றிகரமாக நடத்திய ஞாநி அவர்களுக்கும்,கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் பாஸ்கர் சக்தி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம்.

*******

18 comments:

நட்புடன் ஜமால் said...

நீ இருந்த அவையினிலே - பின் வரிசையில் அமர்ந்து இருந்தது போல் இருந்தது இதனை படிக்கையில் ...

:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கலக்குங்க பாஸ், வாழ்த்துக்கள்

லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை //

ஆனாலும் எக்கச்சக்கக்க்க......... தைரியம் பாஸ் உங்களுக்கு ;)

SUFFIX said...

சுருக்கமாக, நல்லா எழுதியிருக்கீங்க செய்யது. புத்தக கண்காட்சி சமயத்தில் தாங்கள் சென்னையில் இருந்தது மகிழ்ச்சி!!

குடந்தை அன்புமணி said...

அனுபவங்களை அழகாக விவரித்துள்ளீர்கள். நானும் ஒருமுறைதான் கேணி அமைப்புக்கு சென்றிருக்கிறேன். அதற்கு பிறகு செல்லும் வாய்ப்பு அமையவில்லை. வாழ்த்துகள்.

கலையரசன் said...

அடுத்தது நீங்களா.. ரைட்டு!
லிட்ஸ்டை வெளியிடலையே...

தேவன் மாயம் said...

ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.///

ஞானி,சுகுமாரன் என்று நல்ல இலக்கியவட்டத்தில் ஐக்கியமாகியிருக்கிறீர்கள்!!

பைத்தியக்காரன் said...

அன்பின் செய்யது,

புத்தக கண்காட்சியில் - தமிழினி பதிப்பகத்தில்தான் - இருந்தேன். நீங்கள் வந்திருப்பது தெரிந்திருந்தால் நிச்சயம் சந்தித்திருப்பேன். பரவாயில்லை. மறுமுறை சென்னை வருகையில் நேரமும் விருப்பமும் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். சந்திக்கலாம்.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

S.A. நவாஸுதீன் said...

ஊர்ல இருக்கும் மக்களுக்கு ரொம்ப வசதி. எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துக்க முடியுது. ரொம்ப சந்தோசம் செய்யது.

நல்ல பகிர்வு.

S.A. நவாஸுதீன் said...

////லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு////

அவ்வளவு சத்தமா........வா கேட்டுது. (இது அவங்களுக்கு செய்யது)

பாலா said...

சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.


மாப்ள அங்க போயுமா இதே கேள்விய கேட்ப?
(கிகிகிகிகிகிகிகி )

பாலா said...

பதிவு அருமை மாப்பி
எனக்குதேன் குடுத்து வைக்கலை
:(

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

தமிழரசி said...

ஹெவி மதிய உணவுக்கு பிறகுமா அந்த ஐய்டங்களை எல்லாம் சாப்பிட்டாய்..

சந்திப்பின் போது உடன் இருந்ததை போன்று உணர்வு...

கிருஷ்ண பிரபு said...

/-- சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம். --/

விஷ்ணுவுக்கு பொருந்தும்படி ஒரு கவிதை சொன்னாயே... அதையும் சேர்த்திருக்கலாமே... ஹ ஹ ஹ

பீர் | Peer said...

;)

விக்னேஷ்வரி said...

நல்லா இருக்கு உங்க எழுத்து நடை. முதல் முறை வாசிக்கிறேன்.

சத்ரியன் said...

செய்யது,

சந்தேகமிருந்தா கேளுங்கடா-ன்னு வகுப்புல வாத்தி சொன்னா ஒரு பயபுள்ளையும் வாயத் தொறக்குறதில்ல. ...இப்ப என்னடான்னா சந்தைக்கு போன எடத்துலயும் கேள்வியா...? நடத்துங்க.

நல்லதொரு அனுபவப் பகிர்வு நண்பா!

தமிழர்த் திருநாள் வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

விக்னேஷ்வரி said...


//நல்லா இருக்கு உங்க எழுத்து நடை. முதல் முறை வாசிக்கிறேன்.//

முக்கியமான இணைய எழுத்தாளர்களில் ஒருவர் விக்னேஷ்.உள்ளே நுழைந்து பாருங்கள்.

தாமதமாயிருச்சு செய்யது.அருமையான பகிரல்.நன்றி!