Tuesday, January 19, 2010

மனப்பிறழ்வு.காம் சில குறிப்புகள் பாகம்-1முடிவுகளை நோக்கி பயணிக்காத கதைகள் தரும் சுதந்திரம் அளப்பரியது.ஒழுங்கின்மையும் சீரமைக்காத வார்த்தைகளும் வரையறைகளுக்கு இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்க‌ வல்லவை.அதை ஏன் கதை என்று சொல்ல வேண்டும்.எழுதப்போவது கதை என்றாலே அங்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.நாவல் என்று வைத்து கொள்வோமோ ? குறுநாவல்,ஒரு பக்க கதை,தொடர்கதை எதுவும் வேண்டாம்.வரையறைகளே வேண்டாம்.வரையறை என்ற சொல்லாடல் வரும் போது தான் அங்கு மேற்சொன்ன கட்டுப்பாடுகளும் விதிகளும் இலவச இணைப்புகளாக வந்து விடுகின்றனவே.இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.ஒரு விதிக்கு ஆங்கில நாட்டவரின் பெயர் வைத்தால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.தானாகவே அந்த விதிக்கு ஒரு வசீகரம் கூடிவிடுகிறது.)பொன்னுசாமி விதி,குப்புசாமி விதி என்று சொல்லிப்பாருங்கள்.சகிக்கவில்லை தானே ?

இதே கோட்பாடு "டேனிய‌ல் விதி" என‌க்கும் ஒரு பெண்ணுக்குமான‌ உற‌வில் ஏற்ப‌ட்ட‌ நிலையைத் தான் சொல்ல‌ நினைக்கிறேன்.முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்.

என‌து சுய‌ம், க‌ன‌வு, தோல்விக‌ள் ஏற்ப‌டுத்திய ர‌ண‌ங்கள்,போலியான‌ ச‌மூக‌ க‌ட்ட‌மைப்புக‌ளின் மீதிருந்த அதிருப்தி என‌ என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அப‌த்த‌ங்க‌ளுக்கும் அவ‌ளிட‌ம் ஒரு ப‌தில் இருந்த‌து.இந்த விஷயத்தில் மட்டும் சிக்ம‌ண்ட் ஃபிராய்ட் அநியாய‌த்திற்கு விழித்துக் கொள்கிறார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவு ப‌டுத்திக் கொண்டே இருக்கிறார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஏதோ ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றதை கொண்டாட‌ச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.இருக்க‌ட்டும் இருக்க‌ட்டும்.பிற‌கு கவனிக்கிறேன் அவரை.

இப்ப‌குதியை எழுத ஆர‌ம்பித்த‌ போது வித்தியாச‌மான சில‌ குறிப்புகளைக் கொண்டு அவ‌ளைச் சொல்வ‌தென‌ தீர்மானித்தேன்.ஒரு கோர்வையாக‌ எழுத வ‌ராம‌ல் குறிப்புக‌ள் அனைத்தும் பிற‌ழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ சித‌றிக் கிட‌க்கிற‌து.அவ‌ற்றிற்கு ந‌ம்ப‌ர்க‌ள் கொடுத்து ஒரு வ‌ரைய‌றைக்குள்......ம‌ன்னிக்க‌வும்..ஏதோ ஒரு முறையில் த‌ந்திருக்கிறேன்.பாருங்க‌ள்.

--------

உறவுக‌ளை வ‌ரைய‌றுத்த‌ல் அபத்த‌மான‌து என்ற கொள்கை ஆழ்ம‌ன‌தின் வ‌க்கிர‌ங்க‌ளை ச‌மன் செய்யும் ந‌வீன‌ சித்தாந்த‌மாக‌ இருவ‌ரும் ஏற்றுக் கொண்டோம்.

காத‌ல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைக‌ள் வ‌ழ‌க்கொழிந்த‌ சொற்களாகி விட்ட‌ நிலையில்,உட‌ல் ப‌ற்றிய‌ பிர‌க்ஞையே இல்லாம‌ல் அவ‌ளோடு ப‌ழ‌க முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல‌ முடியாது.

எத்தனை முறை முயன்றும் அவளுக்கான இந்த முதல் பத்தியை சிறப்பாக எழுதிவிட முடியவில்லை.எந்த வரிகளாலும் அவளை நிரப்பி விட முடியாதோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிற‌து.எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.

உட‌ல் தின்று உயிர் வாழும் வ‌ல்லூறுக‌ளின் ந‌க‌ங்க‌ள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வ‌ரைய‌றை இல்லாத‌ உற‌வுமுறை இருவ‌ருக்குமே பிடித்திருந்த‌து.

தீவிர அவதானிப்புடன் எழுதப்பட்ட புனைகதைக்குள் வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.

க‌ட‌ற்காக‌ங்க‌ளும் வ‌ல்லூறுக‌ளும் ந‌ண்டுக‌ளும் மீன்க‌ளும் அன்றைய‌ தின‌த்தின் புனித அறிக்கைகளை செவ்வானத்திடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த ர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட ஒரு அந்தி வேளையில்,இர‌வுப்ப‌ணிக்காக‌ பெள‌ர்ண‌மி நில‌வு முழு வீச்சில் ஆய‌த்த‌மாகிக் கொண்டிருந்த‌து.

அன்று Sigmund Freud கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே விழித்திருந்தார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவுப‌டுத்திக் கொண்டே இருந்தார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.

இடைவெளிகளை நிரப்புவதில் அவளுக்கும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும்.

பெளர்ணமி நாளின் நிலவின் குளிர்ச்சியும்,அவள் அருகாமை ஏற்படுத்திய உஷ்ணமும் ஒரு சேர அனுபவிக்கும் தருணங்கள் எத்தனை கொடுமையானது என்று அலைகளைச் சபித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் என்மீது கடற்கரை மணலைத் தூவி விளையாடி கொண்டிருந்தாள்.

என்கிரிப்டட் கவிதைகளை டிசைஃபர் செய்யும் உத்திகளை பழகிக் கொண்டிருக்கிறேன்.காலப்போக்கில் நிறைய புலப்பட்டு விடும்.

அவள் சுயமைதுனச் சித்திரங்களின் ஒரு கிளையாக எனது விரல்களும் நீட்சியடைந்திருக்கக்கூடும்.

எம்மை சோதனைகளில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து ரட்சித்தருளும்.

நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அது ஒரு சிக்கலான மதிப்பீடு.

*********

24 comments:

நட்புடன் ஜமால் said...

டேனியல் விதி நல்லாருக்கு

மிச்சம் அப்பாலிக்கா ...

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன் பாஸ் !!!!!!!!!!!!!!

S.A. நவாஸுதீன் said...

////இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.////

இனி தடையே இல்லாமல் சொல்லிகிட்டே இருங்க. ரசிச்சு கேட்க நாங்களும் இருக்கோம். ரொம்ப அருமையா ஆரம்பிச்சிருக்கீங்க செய்யது.

S.A. நவாஸுதீன் said...

/////முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்./////

நோக்கம் அதுவல்ல என்று நீங்கள் சொன்னாலும் விளைவு அதுவாகத்தான் இருக்கும் போல எனக்குத் தோன்ற்கிறது.

S.A. நவாஸுதீன் said...

////நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஏதோ ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றதை கொண்டாட‌ச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.////

உஃப்ஃப்ஃப்ஃப்ஃப். சொல்றதுக்கு வேற ஒன்னுமில்லை.

S.A. நவாஸுதீன் said...

எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.

க்ளாஸ்.

S.A. நவாஸுதீன் said...

///வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.///

///நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது///

அடிச்சு தூள் கெளப்புறீங்க செய்யது.

தமிழரசி said...

அடுத்த நூற்றாண்டின் கலாச்சாரம் இதோ இப்போதே வடிவமைக்கப்பட்டது....

எல்லா மனிதனுக்குள் உயிர்த்திருக்கும் உந்துதல்...

அருமை என்ற வார்த்தை வேண்டாம் இந்த ஆக்கத்திற்கு இது அதற்கும் அப்பாற்ப்பட்டது......

SUFFIX said...

//என‌க்கும் ஒரு பெண்ணுக்குமான‌ உற‌வில் ஏற்ப‌ட்ட‌ நிலையைத் தான்சொல்ல‌ நினைக்கிறேன்.//

இப்படி ஒரு கெமிஸ்ட்ரி / ஃப்ரிக்வென்ஸி உள்ளவங்களா அவங்களும்.

VISA said...

Oh...F**k. What a narration man. Brilliant. No words to say..உங்கள் எழுத்தில் நிறைய முன்னேற்றங்களை நான் கண் கூடாக பார்க்கிறேன். நிறைய வாசிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஒரு சிறந்த இலக்கியவாதி இஸ் அன்டர் கன்ஸ்ட்ரக்ஷன்.

அபுஅஃப்ஸர் said...

செய்யத் நாளுக்கு நாள் எழுத்து மெருகேரிக்கொண்டே இருக்கு

வித்தியாசமான சொல்லாடல், திறன்

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

சிக்ம‌ண்ட் ஃபிராய்ட் ---> இவருக்கு சமீபத்தில் “ப்லாக்கர்” என்றொரு பெயரும் இருக்கு - போட்டு குடுப்பார்

------------------

என்னால் அறுதியிட்டுச் சொல்ல‌ முடியாது. ---> நேர்மை

இதே முறையையே முழுதும் கையாண்டது போல் தெரிகிறது.

------------------

நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.

ஹூம் ஹூம் ...


-----------------

உட‌ல் தின்று உயிர் வாழும் வ‌ல்லூறுக‌ளின் ந‌க‌ங்க‌ள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வ‌ரைய‌றை இல்லாத‌ உற‌வுமுறை இருவ‌ருக்குமே பிடித்திருந்த‌து.]]

இதுல துவங்கியது தான் எல்லாம் போல

வால்பையன் said...

புரியுதோ இல்லையோ, படிக்க நல்லாயிருக்கு!

பா.ராஜாராம் said...

புதுசா,இறுக்கமா,பிரமிப்பா இருக்கு இந்த மொழி செய்யது.

வாசிப்பனுபவம் உணர வாய்க்கிறது.ஒவ்வொரு வரிகளிலும்.varaity எழுத்து.

great!

**

தொகுப்பு என வாய் வைத்தீர்கள்.கிடைத்தது.

தகப்பனாக இருப்பது கவிதைக்கு,இந்த வருடத்தின் முக்கியமான கவிதைகளில் ஒன்றாக இருக்கும் என சொன்னீர்கள்.கிடைத்தது.

**

யாரையும் திட்டி விடாதீர்கள் மக்கா..

:-)

பாலா said...

மாப்ள பயமுறுத்துற போ
பயமா இருக்குய்யா
தீவிர வாசிப்பின் வெளிப்பாடு உன் எழுத்து

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க உழைப்பு தெரியுது நண்பா.. புதிய தளம்.. இறுக்கத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து..:-))))

ஹுஸைனம்மா said...

//இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் //

கட்டுப்பாடற்ற சுதந்திரம் எப்போதும் ஆபத்தானது தம்பி!! கவனம்!!

(ஹை, எனக்கும் செய்யதின் முடிவில்லாக் கதை புரிஞ்சுடுச்சே!!)

NESAMITHRAN said...

செய்யது.. இலக்கற்ற பாதைகளின் பயணிகள், வழி அறியும் துணைகள்
பகிரும் சொற்கள் விரிக்கும் உலகம்
முன்னறியாதது

ரகசியங்களின் கணிதம் சூத்திரஙகளால் சமிக்ஞைகளால் உருப்பெறுவன

இந்த வரிகளின் ஊடான பயணம் புதிய வாசனை பரப்புகிறது பிறகும்...

NESAMITHRAN said...

விழாவிடாதேயும் ?
is it correct ?

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால்..!!

நன்றி அமித்து அம்மா..

நன்றி நவாஸ் சாரே !!!

//நோக்கம் அதுவல்ல என்று நீங்கள் சொன்னாலும் விளைவு அதுவாகத்தான் இருக்கும் போல எனக்குத் தோன்ற்கிறது.//

ஏங்க பயமுறுத்துறீங்க ??

அ.மு.செய்யது said...

நன்றி தமிழம்மா !!

நன்றி வால்..!!

நன்றி ஷஃபிக்ஸ்..!!

நன்றி விசா..( கிறங்க வைக்கிறது உங்கள் பின்னூட்டம் )

அ.மு.செய்யது said...

நன்றி அபுஅஃப்ஸர்..( நலமா...?? )

நன்றி பா.ரா அண்ணே !!! ( இன்னும் உங்க கிட்ட சொல்ல வேண்டியது நிறைய இருக்கு..நேர்ல பாப்போம் )

நன்றி மாப்பி..

நன்றி கா.பா புரொபி..

நன்றி நேசன்..( விழவிடாதேயும் தாங்க..நன்றி திருத்தியமைக்கு )

நன்றி ஹூசைனம்மா...( பாத்து சூதானமா இருப்போம்ல)

dhana said...

hmmm neraya interesting comments pola intha karpani kathaiku........ romba santhosama iruku... second part start paniyachunu soli irunthenga viraivil ethir parkiren..

dhana said...

sudhanama irupengala .....
Hmmm nambita....
anyway valzthukkal..