Monday, August 17, 2009

நத்தை

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."

--------------------------------
ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு இன்று தான் பிறந்த‌ நாளென்று நாடார்வீட்டு ச்செவ‌ப்பி மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌து எப்ப‌டி ம‌ற‌க்கும் அவ‌ளுக்கு.அத‌ற்காக‌ ப‌த்து வெளாம்ப‌ழ‌ம‌ல்ல‌வா ப‌றிகொடுக்க‌ வேண்டியிருந்த‌து.ஆளைப்பார்ப்ப‌தே ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌,வெறும் ஞாப‌க‌ம் ம‌ட்டுமே வைத்து கொள்வ‌தில் என்ன‌ ப‌ய‌ன்.அதுவும் பார்க்கும் போதெல்லாம்,எண்ணெய் வ‌ழிய‌,எள்ளும் கொள்ளும் வெடிக்க‌,சுண்ட‌ வைத்த‌ வெஞ்ச‌ன‌க்கிண்ண‌ம் போல்,முக‌த்தை உர்ரென்று வைத்து
அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம்.எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து சத்தியம் செய்து கொண்டாள்.

அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.ம‌திய‌நேர‌மாக‌ இருந்தால் அம்மா சீரிய‌ல் பார்க்கும் நேர‌ம் பார்த்து,மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி,பூஸ்ட‌ரில் செருகியிருக்கும் கேபிள் வ‌ய‌ரை பிடுங்கி விட்டால், உள்ளிருந்து திட்ட‌ப்ப‌டி அம்மாவின் குர‌ல் வ‌ரும், "பேதில‌ போயிருவாய்ங்க‌..ந‌ல்ல‌து பொல்ல‌து பாக்க‌ விட‌மாட்டாய்ங்க..எப்பப் பாரு கேபிள் கரெண்டு கட்டு! ஏளா மெஹ‌ரு..அந்த‌ கேபிள்கார‌ய்ங்க‌ளுக்கு போன‌ போடுளா"..!!இது ஒரு வ‌கை.ஐந்தாம் தேதி த‌ர‌வேண்டிய‌ கேபிள் ப‌ண‌த்தை, எட்டு ப‌த்து ப‌தினைந்து வ‌ரை வேண்டுமென்றே இழுத்த‌டித்து அடிக்க‌டி வீட்டுக்கு வரவைத்து முக‌ம் பார்ப்ப‌து இன்னொரு வ‌கை.

ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.எல்லாம் ஓரிரு நொடிகள் குறுகுறுப்பு ப‌ர‌வ‌ச‌ பார்வைக‌ளுக்காக‌த் தானன்றி,அந்த பட்டிக்காட்டில் வேறென்ன வேறென்ன சாதித்து விடமுடியும்.நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.

தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!ந‌ம்ப‌ முடிய‌வில்லை.ஏழெட்டு மாத‌ங்களுக்கு முன்பிருந்த‌ நிலைமை இப்போது த‌லைகீழ். ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா? அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

மாலை இருட்டும் வரை கால்கடுக்க நின்றது தான் மிச்சம்.கடைசி வரை அத்தெருவுக்குள் அவன் வரவே இல்லை.கோபத்தில் உதடுகள் துடித்தன.கண்கள் நிறைந்து விட்டன.என்ன தெரியும் அவனுக்கு.செக்குமாடு மாதிரி இர‌வு வ‌ரை சைக்கிள் மிதித்து,வீடு வீடாய் கேபிள் கனெக்ச‌ன் மட்டுந்தான் கொடுக்க‌த் தெரியும். கடந்த ஆறுமாதங்களாக இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.ஒவ்வொரு நாளும் இப்படித்தான் எதிர்பார்த்தபடியே ஏமாற்றுவான்.

தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.

( வரவேற்பை பொறுத்து மீதி.......)

*******************************

66 comments:

நட்புடன் ஜமால் said...

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."]]


துவக்கமே அருமைப்பா ...

anujanya said...

நடை முதலில் பிடிபடவில்லை. இரண்டாம் பத்தியிலிருந்து சுலபமாகி விட்டது. தொடரவும். ஆனால், நீண்ட தொடர்களுக்கு வலையில் அவ்வளவு வரவேற்ப்பு இல்லை என்பதும் உண்மை.

கடல்புறா படித்து இருக்கிறீர்களா? ஏனோ அந்தக் கதை நினைவில் வந்தது. நல்லா எழுதுறீங்க செய்யது. வாழ்த்துகள்.

அனுஜன்யா

அமுதா said...

நன்றாக இருக்கிறது

/*பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

*/
/*அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.
*/
இரசித்தேன்

அப்துல்மாலிக் said...

ஒரு டைரக்டர் ரேஞ்சுக்கு கதை சொல்லிருக்கீங்களே

ஒவ்வொரு காட்சியையை அழகா செதுக்கியவிதம் அருமை

ஏக்கமாய் தவிக்கும் பெண்ணின் குணாதசியங்களை சொன்னவிதமும் சரி, கிராமத்தின் சூழலை படம்பிடித்தவிதமும் சரி, கதாநாயகனின் தொழில் அதன் சூழலை சொன்ன விதமும் சரி... உங்க கிரேடு ஏறிக்கிட்டே போகுது.......

முழுதும் ரசிச்சேன்

நட்புடன் ஜமால் said...

மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி]]

திருட்டுதனமாக செய்யும் செயல் - என்பது வரிகளில் மிக அழகாக ...

Vidhoosh said...

"ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற"

மற்ற வரிகளை இந்த வரிகள் விழுங்கி விடுமளவுக்கு சுவை பொதிந்து இருக்கு.

வளர்க வளர்க..

--வித்யா

S.A. நவாஸுதீன் said...

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."

ஒரு அழகான காதல் கதையின் அறிகுறிகள் இப்போதே தெரிகிறது. அதிக இடைவெளி விடாமல் விரைவில் தொடரவும்.

S.A. நவாஸுதீன் said...

நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.

அழகா சொல்லி இருக்கீங்க செய்யது. உங்க லெவலுக்கு எழுதணும்னா பூனா வந்துதான் கத்துக்கணும் போல

S.A. நவாஸுதீன் said...

தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.

அவஸ்தையைக் கூட அழகா சொல்றீங்களே!

S.A. நவாஸுதீன் said...

சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.

அருமை செய்யது. ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு.

வால்பையன் said...

ஆசிரியர் பாணி விவரணைகள் சில இடங்களில் சலிப்பை தருகின்றன!

இக்கால கட்டத்திற்கு தேவை!
நச் மற்றும் சுருக்!

ஆயில்யன் said...

//தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!//

அழகு! :)

ஆயில்யன் said...

//தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்//

வெளிப்படுத்த வேண்டிய காதல் வெளிக்கொணர முடியா சூழலில் -ஈர்த்துப்போனது வரிகள்!

ஆயில்யன் said...

//வரவேற்பை பொறுத்து மீதி.......//

அதெல்லாம் தானாக வரும்!

நீங்கள் தொடருங்கள்! :)

Raju said...

வால் சொல்ற மாதிரி சலிப்பு தட்டினாலும், சில இடங்களில் சபாஷ்...!
சிம்ப்ளி சூப்பர்ப்.

anbudan vaalu said...

நல்லாயிருக்கு sayed...

//நடை முதலில் பிடிபடவில்லை. இரண்டாம் பத்தியிலிருந்து சுலபமாகி விட்டது. தொடரவும்//

ரிப்பீட்டேய்....

அமிர்தவர்ஷினி அம்மா said...

சிவப்பு கம்பள வரவேற்பு இந்தப் பதிவுக்கு

கதை நாயகி போல ரொம்ப எங்கள எதிர் பார்க்க விடாம சட்டு புட்டுன்னு முடிச்சிடனும், ஆம்மா.

அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல் //

உயிர்ப்புள்ள வரிகள்

SUFFIX said...

எழுத்தோட்டம் அருமை செய்யது, முதிர்ந்த எழுத்தாளருக்கு உரிய நடை!! காட்சிகளை விவரித்த விதம் ரசிக்கும்படியாக‌ இருந்தது.

கலாட்டா அம்மணி said...

\\தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.\\

கலக்குறிங்க..

இவ்வளவு அழகா எழுதிட்டு வரவேற்பை பொறுத்து மீதினு சொல்லுறிங்களே ...இந்த எழுத்துக்களுக்கு வரவேற்பு இல்லாம போகுமா?

S.A. நவாஸுதீன் said...

கலக்குறிங்க..

இவ்வளவு அழகா எழுதிட்டு வரவேற்பை பொறுத்து மீதினு சொல்லுறிங்களே ...இந்த எழுத்துக்களுக்கு வரவேற்பு இல்லாம போகுமா?

ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்டெய்

VISA said...

//இவ்வளவு அழகா எழுதிட்டு வரவேற்பை பொறுத்து மீதினு சொல்லுறிங்களே ...இந்த எழுத்துக்களுக்கு வரவேற்பு இல்லாம போகுமா?//

REPEATUUUUUUUUUU!!!!

Venkatesh Kumaravel said...

வாழ்த்துகள். தயை கூர்ந்து தொடரவும். அந்த நத்தையைப்பற்றின ஆரம்ப வரிகள் பிரமாதம்.

பாலா said...

அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச்

வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.

செய்யது அருமையா இருக்கு
ரசித்தேன்

Unknown said...

நடை நல்லா இருக்கு.நல்லா எழுத வருது.

//பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும்//

இதெல்லாம் செயற்கையா இருக்கு.

அத்திரி said...

எங்க ஊரு வாசம் வருதே.....................

அருமை செய்யது

abi said...

அபு!!
அருமை!!
தொடருங்க!

rose said...

தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."
\\
ஆரம்பமே அமர்க்களம்

abi said...

இந்த சிறந்த இடுகைக்கு 4/4 ஓட்டுப்போட்டாச்சு.

rose said...

கதை முழுதும் கிராமத்து வாசனை சொல்லியிருக்கும் விதம் அருமை செய்யது

பீர் | Peer said...

நல்ல எழுத்து நடை செய்யது...

சப்ராஸ் அபூ பக்கர் said...

///( வரவேற்பை பொறுத்து மீதி.......)//

நான் ஒருத்தன் வந்தா 100 பேர் வந்த மாதிரி....ஹி... ஹி.... அதனால தொடருங்கள்.... மிகுதியை வாசிக்க காத்திருக்கிறோம்.....

Thamira said...

ரசனையான பதிவுகள்/ படைப்புகளுக்கு என்றைக்கும் வரவேற்பு உண்டு. அமித்துஅம்மா, அனுஜன்யா கருத்துகளே எனது.

நீண்ட தொடர் வேண்டாம். இரண்டு மூன்றில் முடித்துவிடலாம். கொஞ்சம் கத்தரி போடலாம். கிரிஸ்ப்பா இருக்கும்.

உங்கள் ரசனையான மனம் தெரிகிறது. வாழ்த்துகள்.!

sakthi said...

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."


அழகு ஆரம்பமே

sakthi said...

எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து சத்தியம் செய்து கொண்டாள்.

அது சரி

sakthi said...

ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து

இதற்கு பேர் என்னவோ???

sakthi said...

பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

என்ன வர்ண சாயம் சகோதரா??

sakthi said...

ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா?

பொதுவாக பேசற பொண்ணுங்க இப்படிதான் மாட்டிக்கும்

sakthi said...

நல்ல நடை செய்ய்து தொடருங்கள் ஆனால் அதிகம் வேண்டாம்

sakthi said...

தாமத வருகைக்கு மன்னிக்கவும் இப்போது அலுவலகத்தில் ஆணி அதிகமாகிவிட்டது

Unknown said...

// ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌ //


ஐயா ... ராசா.... இப்பெல்லாம் அங்கதான் அதிகமா மழை பெய்யுது....!! இது போன நூற்றாண்டுல எழுதுன கதையா.....???



// முக‌த்தை உர்ரென்று வைத்து அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம் //



அடங்கொன்னியா.....!! என்னது உர்ர்ர்ர்....' னா...?? அந்த மிருகத்த கேவல படுத்துரியா நீயி.... ?? அதுகிட்ட சொல்லி அதோட காச்சால உனக்கு பரப்ப சொன்னாத்தான் நீ கம்முனு இறுபபியாட்டோ...???





// ப‌ர்மா கிழ‌வி //


ஏனுங் தம்பி.... பர்மாவுல மட்டும்தேன் கேழவிங்க இருப்பாங்களா....???



---------------------------------


ஆனா பினிஷிங் நெம்ப சூப்பருங்க தம்பி..... அருமை... அருமை......!!

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

நன்றாக இருக்கிறது தொடரட்டும். வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப அற்புதமா வந்திருக்கு செய்யது.சீரான நதியோட்டம்.சீக்கிரம் தொடரட்டும்.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஜ‌மால் !!

தொட‌ரும் மீத‌ ஃப‌ர்ஸ்ட்டுக‌ளுக்கு...

நன்றி அனுஜ‌ன்யா.

உங்க‌ள் க‌ருத்தை ஏற்று கொள்கிறேன்.க‌ட‌ல்புறா ப‌டித்த‌தில்லை.
வ‌ண்ண‌நில‌வ‌னின் "க‌டல்புர‌த்தில்" ப‌டிக்க‌ வேண்டும் என்ற‌ ஆவ‌ல் இருக்கிற்து.

ந‌ன்றி அமுதா !!!

நன்றி அபுஅஃப்ஸர்.

நான் எடுக்கற அடுத்த படத்துக்கு நீங்க தான் ஹீரோ.ரெடியா இருங்க.

அ.மு.செய்யது said...

நன்றி விதூஷ்...( நான் குள்ளம்ன்ற கம்பெனி சீக்ரெட் உங்களுக்கு எப்படி தெரியும் ?? )

ந‌ன்றி ந‌வாஸ்.( ஜித்தாவுக்கு வ‌ந்து நான் நிறைய‌ க‌த்துக்க‌ வேண்டியிருக்கு !! )


ந‌ன்றி வால்பைய‌ன். ( இனிமேல் வ‌ர்ண‌னைக‌ளை குறைத்து கொள்ள‌ முய‌ல்கிறேன் )

ந‌ன்றி ஆயில்ய‌ன். முத‌ல் வ‌ருகைக்கும் அழ‌கான‌ பின்னூட்ட‌த்திற்கும்..

ந‌ன்றி ட‌க்ள‌ஸ் அண்ணே..ஏற்று கொள்கிறேன் உங்க‌ள் அறிவுரையை.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி டாக்ட‌ர் வால்ஸ் !!!

ந‌ன்றி அமித்து அம்மா..( சீக்கிர‌மா முடிச்சிட‌றேன்.அந்த அளவுக்கா ச‌கிக்க‌ முடிய‌லை )

ந‌ன்றி ஷ‌ஃபிக்ஸ்..பூஸ்ட் போன்விட்டாவிற்கு !!!

ந‌ன்றி க‌லாட்டா அம்ம‌ணி..உங்க‌ள் வரவேற்பிற்கும் அன்பிற்கும் ந‌ன்றி !!!

ந‌ன்றி விசா ( க‌தையை ப‌டிக்க‌வே இல்ல‌ல‌ ...நெக்ஸ்ட் மீட் ப‌ண்றேன் )

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ரோஸ்...( ம‌ண‌ம் வீசுகிற‌து உங்க‌ள் க‌ருத்து )

நன்றி சப்ராஸ் அபூ பக்கர் ( பாஷா )

ந‌ன்றி ஆதிய‌ண்ணே ..

வ‌ர‌வேற்பிற்கு...இதை ஒரே பாக‌மாக‌த் தான் எழுத‌ நினைத்தேன்.
நீள‌ம் க‌ருதி ரெண்டு பாக‌மாக்கினேனே த‌விர‌ இது தொட‌ர்க‌தை அல்ல‌.ம‌ற்ற‌ப‌டி,நீங்கள் சொல்வது போல் நிறைய‌ க‌த்த‌ரி போட‌ வேண்டியிருக்கு...

ந‌ன்றி ச‌க்தி அக்கா.

//sakthi said...
ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து

இதற்கு பேர் என்னவோ???
//

இத‌ற்கு பேர் தான் ஃபீலிங்கு.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ல‌வ்டேல் மேடிய‌ண்ணே !!!

//ஐயா ... ராசா.... இப்பெல்லாம் அங்கதான் அதிகமா மழை பெய்யுது....!! இது போன நூற்றாண்டுல எழுதுன கதையா.....??? //

தெப்ப‌மாக‌ ம‌ழையில் நனைந்திருந்த‌..( இந்த‌ ஆர‌ம்ப‌ வ‌ரிக‌ளை நீங்க‌ள் பார்க்க‌வில்லையா )

//// ப‌ர்மா கிழ‌வி //


ஏனுங் தம்பி.... பர்மாவுல மட்டும்தேன் கேழவிங்க இருப்பாங்களா....???
//

எங்க‌ ஊர்ல‌ ப‌ர்மாவில‌ இருந்து குடிபெய‌ர்ந்த‌வ‌ர்க‌ள் அதிக‌ம் என்ப‌தால் இந்த‌ திணிப்பு.

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஷிஜூசித‌ம்ப‌ர‌ம்.

உங்க‌ பேர் கொஞ்ச‌ம் சிர‌மமா இருக்குங்க‌...

ந‌ன்றி பா.ராஜாராம்.

தொட‌ர்வ‌ருகைக்கும் அள‌விலா அன்புக்கும் ந‌ன்றி த‌ல‌.

குடந்தை அன்புமணி said...

நன்றாக இருக்கிறது செய்யது. அது என்ன கேள்வி வரவேற்பை பொறுத்து என்று தொடருங்கள். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறோம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமை நண்பா.. ஆனால் தொடராக வேண்டாம் என்பது ஏன் கருத்து.. பதிவுலகில் வரவேற்பு இருப்பதில்லை.. சொந்த அனுபவம்..

அ.மு.செய்யது said...

நன்றி குடந்தை அன்புமணி !!!

நன்றி கார்த்திக்..( இது தொடர் இல்லை.கதை பெரிசு என்பதால் இரண்டாக வெட்டினேன் )

RAMYA said...

//
ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு
//

எப்பூடி இப்படி எல்லாம் ஆரம்பமே அசத்தல்தான்!

RAMYA said...

//
அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.
//

இந்த காட்சி கண் முன்னே விரிகிறது படிக்கும்போதே!

RAMYA said...

//
ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.
//

பத்திக்கு பத்தி வரிகளில் மெருகு ஏறி இருக்கிறது!!

RAMYA said...

கதை அருமை!! தொடர் கதையா
பார்க்கலாம் உங்கள் தொடருக்கு
ஆதரவு கிடைக்கலாம் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்!!

ஹேமா said...

கதை ஓட்டம் நல்லாயிருக்கு.
பொறுமையாக வாசித்தேன்.

"உழவன்" "Uzhavan" said...

ராமநாதபுரத்துக்காரன் மழையை எவ்வளவு ஆர்வமாக எதிர்பார்ப்பானோ அவ்வளவு ஆர்வம் அடுத்த பகுதிக்கு. வாழ்த்துக்கள்!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ர‌ம்யாக்கா..

ந‌ன்றி ஹேமா..( உங்க‌ வ‌லைப்ப‌திவை ஏன் என்னால் பின்ப‌ற்ற‌ முடிய‌வில்லை )

ந‌ன்றி உழ‌வ‌ன் அண்ணே !!!

Admin said...

//இவ்வளவு அழகா எழுதிட்டு வரவேற்பை பொறுத்து மீதினு சொல்லுறிங்களே ...இந்த எழுத்துக்களுக்கு வரவேற்பு இல்லாம போகுமா?//

வழிமொழிகிறேன். தொடருங்கள்

Thamiz Priyan said...

நல்லா எழுதி இருக்கீங்க.. உணர்வுகளைக் கையாண்ட விதம் அருமை. இன்னும் கொஞ்சம் எளிமையாக்கி இருக்கலாம்.

முதல் மூன்று பாராக்களில் இருக்கும் கிராமிய சொல் வழக்குகள் கடைசிகளில் இலலாமல் போய் விட்டன. அதனால் ஒரே சீராக தெரியவில்லை. ஒன்று இப்படி எழுதுங்கள்.. இல்லையெனில் அப்படி எழுதுங்கள்.. :-)

வாழ்த்துக்கள் செய்யது!

அ.மு.செய்யது said...

நன்றி சந்ரு..

நன்றி தமிழ்பிரியன்..( முதல் வட்டார சிறுகதை என்பதால் கொஞ்சம் தடுமாறிவிட்டேன்.அடுத்த பாகத்தில் சரி செய்து விடுகிறேன் )

மாதவராஜ் said...

ரசிக்கும்படியான நடை. பல இடங்களில் சொற்கள் அற்புத வடிவம் கொண்டு நிற்கின்றன. தொடருங்கள்.

நிஜாம் கான் said...

// வரவேற்பை பொறுத்து மீதி......//

செய்யது பாய்! இதுக்கு மேல வரவேற்ப் வேனுமா?

அ.மு.செய்யது said...

நன்றி மாதவராஜ் அவர்களே !!! வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், இந்த கதையை நீங்கள் கூர்ந்து கவனித்திருந்தால்,உங்கள் சிறுகதைகளின் பாதிப்பு நிச்ச‌ய‌மாக‌ இதில் இருக்கும்.
--------------------------------

ந‌ன்றி எதிரொலி நிஜாம்.ந‌ல‌ம் தானே ??

Anonymous said...

//அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.//

இங்கு கவிதையாகி போனது இந்த காதல்...

காதல் செல்லும் இடம் தெரிவதே இல்லை..சுகமாய் இருக்கிறது இந்த காதலின் பிரவாகம்....அந்த பெண்ணின் தவிப்பு மெல்லிய வலி...

அன்புடன் அருணா said...

நல்லா எழுதிருக்கீங்க.....ம்ம்ம் அப்பறம் என்ன ஆச்சு?