Wednesday, May 27, 2009

யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!

ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள் சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து.நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌.திருமணத்திற்கு பிறகு தோன்றும் காதலை "பெற்றவை"களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம்.

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...

வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....

மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......

சாலையில் சிதறி கிடக்கும் பூக்களையும் சிதறாமல் விரிக்கப்பட்டிருக்கும் கோலங்களையும் மிதித்து விடுவோமோ என்ற பிரக்ஞையில், தாவி தாவி நடக்கும் மார்கழி மாத பனித்துளி முகத்தில் சொட்டும் வைகறைகளிலா...!!

உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

இருக்கலாம்....

பல தருணங்களில் நாம் கவனித்திருக்க மாட்டோம் நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று.

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.

வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!

*******************

222 comments:

1 – 200 of 222   Newer›   Newest»
sakthi said...

பர்ஸ்டு

sakthi said...

இரு செய்யது தம்பி படிச்சிட்டு வந்து

பின்னூட்டமிடுகிறேன்.கோச்சுகாதே

நட்புடன் ஜமால் said...

அதானே யார் சொன்னது ...

நட்புடன் ஜமால் said...

அட பாருப்பா இந்த சக்திய

சக்தி நிறைய வந்துடுச்சோ

இப்படி நமக்கு முந்திகிட்டு வாராவோ!

சரி சரி தங்கச்சி தானே போனோ போகட்டும்

தன் கட்சி

நட்புடன் ஜமால் said...

\\ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து\\

இன்னா-பா மேட்டரு ...

sakthi said...

நட்புடன் ஜமால் said...

அட பாருப்பா இந்த சக்திய

சக்தி நிறைய வந்துடுச்சோ

இப்படி நமக்கு முந்திகிட்டு வாராவோ!

சரி சரி தங்கச்சி தானே போனோ போகட்டும்

தன் கட்சி

அது நன்றி ஜமால் அண்ணா

அ.மு.செய்யது said...

அதுக்குள்ளயா ??? இப்ப தான் பப்ளிஷ் கிளிக் பண்ணேன்...

sakthi said...

பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...

சூப்பர் ஸ்டார்டிங்

எந்த கணத்தில்

sakthi said...

அ.மு.செய்யது said...

அதுக்குள்ளயா ??? இப்ப தான் பப்ளிஷ் கிளிக் பண்ணேன்..

கண்ணு வைக்காதே

sakthi said...

வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...

ஹே என்ன ரசனை

நட்புடன் ஜமால் said...

\\அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன\\

நான் இந்த வரிகளுக்கு உடன் படுகிறேன்

அ.மு.செய்யது said...

பின்னூட்ட சுனாமியையே முறியடித்த ஷக்தி !!!!

sakthi said...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....

அருமை அருமை

அந்த ருசி எங்கு கிடைக்கும் செய்யது

நட்புடன் ஜமால் said...

\\தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே\\

நல்லா இரசிச்சி சொல்லியிருக்கேப்பா

தேர்ந்த எழுத்தராக இருக்கின்றாய்

இதனை சொல்லும் தகுதியினைகூட இன்னும் எட்டவில்லை ...

Vidhya Chandrasekaran said...

லவ்லி:)

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
அதானே யார் சொன்னது ...
//

வாங்க....!!!

sakthi said...

மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அரை மணி நேர காதல் அடுத்த கவிதைக்கு டாபிக் ரெடி

நட்புடன் ஜமால் said...

\\வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!\\

வைர வரிகள் போல் உள்ளது

மிக அருமை

அ.மு.செய்யது said...

//தேர்ந்த எழுத்தராக இருக்கின்றாய்

இதனை சொல்லும் தகுதியினைகூட இன்னும் எட்டவில்லை ...//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க..

நான் இன்னும் அதிரைஜமால்.காம் யுனிகோட்டில் தான் எழுதி கொண்டிருக்கிறேன்.

sakthi said...

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......

ஹ ஹ ஹ

சைட் அடிச்சேன்
சைட் அடிக்கப்பட்டேன் என்பதை
எத்தனை அழகாய்
சொல்லிக்கொண்டு
இருக்கிறார் என் உ.பி.ச

அ.மு.செய்யது said...

//வித்யா said...
லவ்லி:)
//

நன்றி வித்யா..செம்ம ஃபாஸ்ட்..

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

பின்னூட்ட சுனாமியையே முறியடித்த ஷக்தி !!!!\\

நாங்கள் இருவருமே ஒரே நிமிடத்தில் தான் பின்னூட்டியுள்ளோம்.

மேலும்!

என் பதவி என்றோ பறி போய் விட்டது

புதியவர்களுக்கு(அவருக்கில்லைப்பா) வழி விட்டு ஒதுங்கியிருக்கோம் ...

sakthi said...

அ.மு.செய்யது said...

//தேர்ந்த எழுத்தராக இருக்கின்றாய்

இதனை சொல்லும் தகுதியினைகூட இன்னும் எட்டவில்லை ...//

அப்படியெல்லாம் சொல்லாதீங்க..

நான் இன்னும் அதிரைஜமால்.காம் யுனிகோட்டில் தான் எழுதி கொண்டிருக்கிறேன்.

ஹ ஹ ஹ

கையை குடுங்க சகோதரா

me too

தமிழ் அமுதன் said...

நெஞ்சை தொட்ட பதிவு !

நாளைக்கு வந்து விலாவாரியா கருத்து சொல்லுறேன்!

நெறைய சொல்லணும்!

sakthi said...

ha ha ha

first round off 25

அ.மு.செய்யது said...

//sakthi said...

சைட் அடிச்சேன்
சைட் அடிக்கப்பட்டேன் என்பதை
எத்தனை அழகாய்
சொல்லிக்கொண்டு
இருக்கிறார் என் உ.பி.ச
//

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க அக்கா..

sakthi said...

தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்

இதற்கு நான் என்ன சொல்ல

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க

அ.மு.செய்யது said...

//என் பதவி என்றோ பறி போய் விட்டது

புதியவர்களுக்கு(அவருக்கில்லைப்பா) வழி விட்டு ஒதுங்கியிருக்கோம் ...//

சரித்திரத்த ஒரு நிமிசம் புரட்டி பாருங்க..தமிழ் மணத்துல அதிகமா யாரு பின்னூட்டம் போட்டிருக்கானு
அது சொல்லும்.

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...

சைட் அடிச்சேன்
சைட் அடிக்கப்பட்டேன் என்பதை
எத்தனை அழகாய்
சொல்லிக்கொண்டு
இருக்கிறார் என் உ.பி.ச
//

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க அக்கா..

ஒக் கே டீல்

அ.மு.செய்யது said...

// sakthi said...
மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அரை மணி நேர காதல் அடுத்த கவிதைக்கு டாபிக் ரெடி
//

உங்களுக்கா ??

sakthi said...

வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!

நல்ல வாழ்த்து

நட்புடன் ஜமால் said...

\\நான் இன்னும் அதிரைஜமால்.காம் யுனிகோட்டில் தான் எழுதி கொண்டிருக்கிறேன்.\\

ரொம்ப சந்தோஷமோ இருக்குப்பா

அந்த வலைப்பக்கம் சீக்கிரம் மூடப்படும், அதனால right click and view source, then save as unicode.html in your local computer இப்படி செய்துவிட்டால் நீங்கள் இனைய இனைப்பு இல்லாமலே தமிழ் தட்டச்சு செய்யலாம்

அ.மு.செய்யது said...

//ஜீவன் said...
நெஞ்சை தொட்ட பதிவு !

நாளைக்கு வந்து விலாவாரியா கருத்து சொல்லுறேன்!

நெறைய சொல்லணும்!
//

பொறுமையா வாங்க ஜீவன்...மிக்க நன்றி !!

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து\\

இன்னா-பா மேட்டரு ...

எங்கோ கவுந்துட்டாரு அதான் மேட்டரு

நட்புடன் ஜமால் said...

\\சரித்திரத்த ஒரு நிமிசம் புரட்டி பாருங்க..தமிழ் மணத்துல அதிகமா யாரு பின்னூட்டம் போட்டிருக்கானு
அது சொல்லும்.\\

இல்லன்னு யாரு சொன்னா

இப்போ இல்லபா

அ.மு.செய்யது said...

//அந்த வலைப்பக்கம் சீக்கிரம் மூடப்படும், அதனால right click and view source, then save as unicode.html in your local computer இப்படி செய்துவிட்டால் நீங்கள் இனைய இனைப்பு இல்லாமலே தமிழ் தட்டச்சு செய்யலாம்//

நல்ல ஐடியா..ஆனால் சில கணினிகளில் உங்க வலைதளம் திறக்க முடியவில்லையே என்ன காரணம் ?

வேத்தியன் said...

ஆரம்பமே அசத்தல் செய்யது...

வேத்தியன் said...

நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌//

உண்மை...

sakthi said...

அ.மு.செய்யது said...

பின்னூட்ட சுனாமியையே முறியடித்த ஷக்தி !!!!

வடமொழி சக்தி

நட்புடன் ஜமால் said...

உன் பதிவுகளை படிச்சா எனக்கே நிறைய கவிதை மாதிரி எழுதனுமுன்னு தோனுதுப்பா

நம்ம சகோதரி சக்தியின் சக்திய சொல்லனுமா என்ன

அ.மு.செய்யது said...

//sakthi said...
நட்புடன் ஜமால் said...

\\ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து\\

இன்னா-பா மேட்டரு ...

எங்கோ கவுந்துட்டாரு அதான் மேட்டரு
//

அதெல்லாம் ஒன்னுமில்ல...பதிவு போட ஒரு விசயம் இல்லன்னா இப்படி தான் நாங்க உளறுவோம்.

அத்திரி said...

SUPERB

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\சரித்திரத்த ஒரு நிமிசம் புரட்டி பாருங்க..தமிழ் மணத்துல அதிகமா யாரு பின்னூட்டம் போட்டிருக்கானு
அது சொல்லும்.\\

இல்லன்னு யாரு சொன்னா

இப்போ இல்லபா

யாருப்பா அது

வேத்தியன் said...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....
//

இந்த அனுபவங்கள் சொல்லி விளக்கிவிட முடியாதுல்ல...
இனிமையானது...

sakthi said...

அஹா 50 மிஸ்

வேத்தியன் said...

ஐ மீ த 50...
:-)

அ.மு.செய்யது said...

நன்றி வேத்தியன் ...

நன்றி அத்திரி ...

வேத்தியன் said...

sakthi said...
அஹா 50 மிஸ்//

ஆஹா வடை போச்சா???
:-)

நட்புடன் ஜமால் said...

\\நல்ல ஐடியா..ஆனால் சில கணினிகளில் உங்க வலைதளம் திறக்க முடியவில்லையே என்ன காரணம் ?\\

டேட்டு expiry ஆயிடுச்சி பா, இன்னும் எப்படி ஒர்க் ஆகுதுன்னே தெர்ல பா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

பின்னூட்ட சுனாமியையே முறியடித்த ஷக்தி !!!!\\

நாங்கள் இருவருமே ஒரே நிமிடத்தில் தான் பின்னூட்டியுள்ளோம்.

மேலும்!

என் பதவி என்றோ பறி போய் விட்டது

புதியவர்களுக்கு(அவருக்கில்லைப்பா) வழி விட்டு ஒதுங்கியிருக்கோம் ...

என்ன அண்ணா இப்படி சொல்லிட்டிங்க

வேத்தியன் said...

திருமண வீட்டில் உணவு பரிமாறும் தருனம்..
அருமை..

அ.மு.செய்யது said...

//sakthi said...
நட்புடன் ஜமால் said...

\\சரித்திரத்த ஒரு நிமிசம் புரட்டி பாருங்க..தமிழ் மணத்துல அதிகமா யாரு பின்னூட்டம் போட்டிருக்கானு
அது சொல்லும்.\\

இல்லன்னு யாரு சொன்னா

இப்போ இல்லபா

யாருப்பா அது
//

பத்தாயிரம் பின்னூட்டங்கள் பெற்றவர் யாரோ அவரே !!!

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
அஹா 50 மிஸ்//

ஆஹா வடை போச்சா???
:-)

ஆமா போட்டி அதிகமாகிவிட்டதா

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
நட்புடன் ஜமால் said...

\\சரித்திரத்த ஒரு நிமிசம் புரட்டி பாருங்க..தமிழ் மணத்துல அதிகமா யாரு பின்னூட்டம் போட்டிருக்கானு
அது சொல்லும்.\\

இல்லன்னு யாரு சொன்னா

இப்போ இல்லபா

யாருப்பா அது
//

பத்தாயிரம் பின்னூட்டங்கள் பெற்றவர் யாரோ அவரே !!!

நமது நட்புடன் அண்ணா வா

வாழ்த்துக்கள் அண்ணா

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\நல்ல ஐடியா..ஆனால் சில கணினிகளில் உங்க வலைதளம் திறக்க முடியவில்லையே என்ன காரணம் ?\\

டேட்டு expiry ஆயிடுச்சி பா, இன்னும் எப்படி ஒர்க் ஆகுதுன்னே தெர்ல பா
//

புதுசா காசு கொடுத்து ஒரு டொமைன் வாங்க வேண்டியது தானே.

வேத்தியன் said...

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.//

செய்யது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிற்பாட்டாமல் வாசித்து முடித்த பதிவு இது தான்...
ரசித்துப் படித்தேன் நண்பா...

பகிர்வுக்கு நன்றி...

தேவன் மாயம் said...

அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம். ///

உண்மையை உணர்ந்து எழுதியிருக்கீங்க !!

வால்பையன் said...

காதலிப்பதைவிட
காதலிக்கப்படுதல்
பெரும் சுகம்!

sakthi said...

,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா

வேத்தியன் said...

சின்ன போட்டினு நினைச்சேன்...
ஜமால் அண்ணனும் இருக்காரா???
சொல்லவே இல்லை..
:-)

அ.மு.செய்யது said...

//வேத்தியன் saiட்...

செய்யது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிற்பாட்டாமல் வாசித்து முடித்த பதிவு இது தான்...
ரசித்துப் படித்தேன் நண்பா...

பகிர்வுக்கு நன்றி...
//

மிக்க‌ ந‌ன்றி வேத்திய‌ன்...( அப்ப‌ இத்த‌ன‌ நாளா பார்க் ப‌ண்ணி பார்க் ப‌ண்ணி தான் ப‌டிச்சிங்க‌ளா ? )

வேத்தியன் said...

sakthi said...
,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா//

மாப்ள மாட்டிக்கிட்டாரா???
:-)

sakthi said...

வேத்தியன் said...

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.//

செய்யது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிற்பாட்டாமல் வாசித்து முடித்த பதிவு இது தான்...
ரசித்துப் படித்தேன் நண்பா...

பகிர்வுக்கு நன்றி...

ஆம் செய்யது

அழகான பதிவு

அருமையான பதிவு

நட்புடன் ஜமால் said...

\\புதுசா காசு கொடுத்து ஒரு டொமைன் வாங்க வேண்டியது தானே.\\

அதுக்காக தான் வெயிட்டிங்

சீக்கிரம் வாங்கனும் ASP.NET படிக்கனும் அதுல பப்ளிஷ் செய்யனும்

அதுக்குல்லே நம்ம ப்லாக் யார்கிட்டனா ஒப்படைக்கனும்

sakthi said...

அ.மு.செய்யது said...

//வேத்தியன் saiட்...

செய்யது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிற்பாட்டாமல் வாசித்து முடித்த பதிவு இது தான்...
ரசித்துப் படித்தேன் நண்பா...

பகிர்வுக்கு நன்றி...
//

மிக்க‌ ந‌ன்றி வேத்திய‌ன்...( அப்ப‌ இத்த‌ன‌ நாளா பார்க் ப‌ண்ணி பார்க் ப‌ண்ணி தான் ப‌டிச்சிங்க‌ளா ? )

அதானே

வேத்தியன் said...

அ.மு.செய்யது said...
//வேத்தியன் saiட்...

செய்யது...
நீண்ட நாட்களுக்குப் பிறகு நிற்பாட்டாமல் வாசித்து முடித்த பதிவு இது தான்...
ரசித்துப் படித்தேன் நண்பா...

பகிர்வுக்கு நன்றி...
//

மிக்க‌ ந‌ன்றி வேத்திய‌ன்...( அப்ப‌ இத்த‌ன‌ நாளா பார்க் ப‌ண்ணி பார்க் ப‌ண்ணி தான் ப‌டிச்சிங்க‌ளா ? )//

அப்பிடி இல்லை..
சில நீளமான பதிவுகள் நிற்பாட்டி தானே வாசித்து முடிக்க வேண்டும்...
அதான் சொன்னேன்..
:-)

ரசித்துப் படித்தேன்...

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா//

மாப்ள மாட்டிக்கிட்டாரா???

அப்படியா

நட்புடன் ஜமால் said...

\\வேத்தியன் said...

சின்ன போட்டினு நினைச்சேன்...
ஜமால் அண்ணனும் இருக்காரா???
சொல்லவே இல்லை..\\

எதாச்சையா வந்தேன்ப்பா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\புதுசா காசு கொடுத்து ஒரு டொமைன் வாங்க வேண்டியது தானே.\\

அதுக்காக தான் வெயிட்டிங்

சீக்கிரம் வாங்கனும் ASP.NET படிக்கனும் அதுல பப்ளிஷ் செய்யனும்

அதுக்குல்லே நம்ம ப்லாக் யார்கிட்டனா ஒப்படைக்கனும்

இதுக்கு என்ன அர்த்தம் அண்ணா

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\வேத்தியன் said...

சின்ன போட்டினு நினைச்சேன்...
ஜமால் அண்ணனும் இருக்காரா???
சொல்லவே இல்லை..\\

எதாச்சையா வந்தேன்ப்பா

நம்பிட்டேன்

அ.மு.செய்யது said...

வாங்க தேவா !!!

நான் இன்னும் திருமண வாழ்க்கையை எட்ட வில்லை.இருந்தாலும் ஒரு கணிப்பு.அவ்வளவே !!
_________________________________

வாங்க வால் !!

// வால்பையன் said...
காதலிப்பதைவிட
காதலிக்கப்படுதல்
பெரும் சுகம்! //

அட‌ ஆமாங்க‌..சாப்பிட‌ கூட‌ ம‌ன‌சு வ‌ராது.அதை அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.

sakthi said...

வால்பையன் said...

காதலிப்பதைவிட
காதலிக்கப்படுதல்
பெரும் சுகம்!

ஹே பெரிய பெரிய பதிவர் எல்லாம் சொல்றாங்கப்பா

கேட்டுக்கோ செய்யது

sakthi said...

வால்பையன் said...

காதலிப்பதைவிட
காதலிக்கப்படுதல்
பெரும் சுகம்!

ஹே பெரிய பெரிய பதிவர் எல்லாம் சொல்றாங்கப்பா

கேட்டுக்கோ செய்யது

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் வாங்கனும் ASP.NET படிக்கனும் அதுல பப்ளிஷ் செய்யனும்

அதுக்குல்லே நம்ம ப்லாக் யார்கிட்டனா ஒப்படைக்கனும்
//

வாஸ்தவமான பேச்சு !

நட்புடன் ஜமால் said...

\\அட‌ ஆமாங்க‌..சாப்பிட‌ கூட‌ ம‌ன‌சு வ‌ராது.அதை அனுப‌வித்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்.\\

ஆமா!

ஆமா!

உண்மை

முற்றிலும் உண்மை

சர்வ நிச்சியம்

இன்னும் என்ன வார்த்தையில சொல்லனும்

நட்புடன் ஜமால் said...

\\வாஸ்தவமான பேச்சு !\\

அப்போ நீங்க ரெடியா

என் ப்லாக்கை எடுத்துக்கிறியளா

அ.மு.செய்யது said...

//வேத்தியன் said...
sakthi said...
,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா//

மாப்ள மாட்டிக்கிட்டாரா???
//

அத்தை பொண்ணு இப்ப தான் அஞ்சாம் கிளாஸ் படிக்கி !

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\வாஸ்தவமான பேச்சு !\\

அப்போ நீங்க ரெடியா

என் ப்லாக்கை எடுத்துக்கிறியளா
//

உங்க ப்ளாக் அ நான் எடுத்துக்கவா ?? அதுக்கு ஒரு தகுதி வேணும்.

வேத்தியன் said...

அ.மு.செய்யது said...
//வேத்தியன் said...
sakthi said...
,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா//

மாப்ள மாட்டிக்கிட்டாரா???
//

அத்தை பொண்ணு இப்ப தான் அஞ்சாம் கிளாஸ் படிக்கி !//

அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??
:-)

நட்புடன் ஜமால் said...

28 நிமிடங்களில்

86 பின்னூட்டங்கள்

அ.மு.செய்யது said...

//அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??//

பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
28 நிமிடங்களில்

86 பின்னூட்டங்கள்
//

என் பதிவில் இது ஒரு வரலாறு காணாத எண்ணிக்கை தான்.

sakthi said...

அ.மு.செய்யது said...

//வேத்தியன் said...
sakthi said...
,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

ஆஹா அப்போ அத்தை பொண்ணு வெயிட்டிங்கா//

மாப்ள மாட்டிக்கிட்டாரா???
//

அத்தை பொண்ணு இப்ப தான் அஞ்சாம் கிளாஸ் படிக்கி !

அதனால என்ன 5 வருசம் பொறுத்துக்குங்க தம்பி
என்ன இருந்தாலும் அத்தை பொண்ணு மாதிரி வருமா

நட்புடன் ஜமால் said...

எல்லாம் ஒரு சக்தி தான்பா

sakthi said...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
28 நிமிடங்களில்

86 பின்னூட்டங்கள்
//

என் பதிவில் இது ஒரு வரலாறு காணாத எண்ணிக்கை தான்.

யாமிருக்க பயமேன்

நட்புடன் ஜமால் said...

\\அதனால என்ன 5 வருசம் பொறுத்துக்குங்க தம்பி
என்ன இருந்தாலும் அத்தை பொண்ணு மாதிரி வருமா\\

ஆமா! ஆமா!

கேட்டுக்கப்பா ...

sakthi said...

அ.மு.செய்யது said...

//அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??//

பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !

அது யாரோ

அ.மு.செய்யது said...

//sakthi said...

அதனால என்ன 5 வருசம் பொறுத்துக்குங்க தம்பி
என்ன இருந்தாலும் அத்தை பொண்ணு மாதிரி வருமா//

அது என்னவோ நியாயம் தான்...

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\வாஸ்தவமான பேச்சு !\\

அப்போ நீங்க ரெடியா

என் ப்லாக்கை எடுத்துக்கிறியளா
//

உங்க ப்ளாக் அ நான் எடுத்துக்கவா ?? அதுக்கு ஒரு தகுதி வேணும்.\\

என்ன மாதிரி தகுதியெல்லாம் எதிர் பார்க்கிறீங்க

அ.மு.செய்யது said...

//யாமிருக்க பயமேன்//

பவரு !!!

வேத்தியன் said...

அ.மு.செய்யது said...
//அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??//

பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !//

ஓ உங்களுக்கு அந்த பிரச்சினை ஒன்னு இருக்கில்ல...
:-)

நட்புடன் ஜமால் said...

\\பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !\\

இந்த பக்கமா அந்த பக்கமா

sakthi said...

முதல் முறையாக சகோதரன் வலைப்பூவில் 100 அடித்ததற்கு பெருமை கொள்கிறேன்

அ.மு.செய்யது said...

//என்ன மாதிரி தகுதியெல்லாம் எதிர் பார்க்கிறீங்க//

வயதும் முதிர்ச்சியும அனுபவமும் பக்குவமும் பெருந்தன்மையும்...

வேத்தியன் said...

sakthi said...
அ.மு.செய்யது said...

//அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??//

பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !

அது யாரோ//

யாரு??
யாரு??
யாரு???

நட்புடன் ஜமால் said...

100 அடிச்ச சகோதரிக்கு வாழ்த்துகள்

sakthi said...

நட்புடன் ஜமால் said...

\\பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !\\

இந்த பக்கமா அந்த பக்கமா

எந்த பக்கம் அண்ணாச்சி கேட்கிறார் இல்லை
சொல்

சொல்

சொல்

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
அ.மு.செய்யது said...

//அப்போ அந்த மேட்டர விட்டுரலாம்ல...
பக்கத்து வீட்டுல ஏதாச்சும்??//

பக்கத்து தேசத்தில் என்று வேண்டுமானால் சொல்லலாம் வேத்தி !

அது யாரோ//

யாரு??
யாரு??
யாரு???

யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//என்ன மாதிரி தகுதியெல்லாம் எதிர் பார்க்கிறீங்க//

வயதும் முதிர்ச்சியும அனுபவமும் பக்குவமும் பெருந்தன்மையும்...\\

இதுல எல்லாமே தங்களுக்கு இருக்கு என்பது என் கருத்து

இருப்பவர்களை கேட்ப்போமே

சகோதரியும், சகோதரனும் சொல்லுங்கப்பா ...

வேத்தியன் said...

sakthi said...
முதல் முறையாக சகோதரன் வலைப்பூவில் 100 அடித்ததற்கு பெருமை கொள்கிறேன்//

வாழ்த்துகள்...

sakthi said...

நட்புடன் ஜமால் said...

100 அடிச்ச சகோதரிக்கு வாழ்த்துகள்

நன்றி அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ\\

எதுகை மோனை துவங்கியாச்சா

ஹா ஹா ஹா

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
முதல் முறையாக சகோதரன் வலைப்பூவில் 100 அடித்ததற்கு பெருமை கொள்கிறேன்//

வாழ்த்துகள்...

நன்றி வேத்தியன் தம்பி

வேத்தியன் said...

@ sakthi...

யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ//

ஆஹா...
ரைமிங்ல பின்னுறியளே...
:-)

வெற்றி-[க்]-கதிரவன் said...

//நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.
//

-:)

பிஞ்சி விரலினால் பிச்சையிடும் பொழுது,,, காசை பார்க்காமல் நம்மை பார்த்த பிச்சைகாரர்கள்.

வயதான் பாட்டியின் கைய்யை பிடித்துக்கொண்டு சாலையை கடக்க உதவி செய்யும்பொழுது.

இப்படியும் கூட சொல்லிக்கொண்டே போகலாம் -:)

******

துரோகம்
வறுமை,
பசி,
வலி
கண்ணீர்
துக்கம்
சோகம்

என்றே வாழ்கை நகரும் பொழுது பிடித்திருக்கின்றது இந்த வாழ்கையை

இவைகள் என்னை காதலிப்பதினால். -:)

-பித்துபிடித்த கவிஞன் பித்தன்

sakthi said...

காதல் வந்தால் சொல்லி அனுப்புனு நீ பாடற மாதிரி தோணுது

அப்படியா

அ.மு.செய்யது said...

//sakthi said...
முதல் முறையாக சகோதரன் வலைப்பூவில் 100 அடித்ததற்கு பெருமை கொள்கிறேன்
//

தப்பு..ஏற்கெனவே என்னோட ஒரு பதிவில நீங்க 100 அடிச்சிருக்கீங்க.

sakthi said...

வேத்தியன் said...

@ sakthi...

யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ//

ஆஹா...
ரைமிங்ல பின்னுறியளே...
:-)

நம்ம கடை பக்கம் வந்ததில்லை அதான் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்க

நட்புடன் ஜமால் said...

பித்துபிடித்தது உண்மைதான்

இவரின் கதையினையும்

தங்கள் கவிதையினையும்

படிக்கையில் ...

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
முதல் முறையாக சகோதரன் வலைப்பூவில் 100 அடித்ததற்கு பெருமை கொள்கிறேன்
//

தப்பு..ஏற்கெனவே என்னோட ஒரு பதிவில நீங்க 100 அடிச்சிருக்கீங்க.

சரி 2 nd சென்சுரி

sakthi said...

இப்போ 125

வேத்தியன் said...

sakthi said...
வேத்தியன் said...

@ sakthi...

யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ//

ஆஹா...
ரைமிங்ல பின்னுறியளே...
:-)

நம்ம கடை பக்கம் வந்ததில்லை அதான் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்க//

வந்ததில்லையா??
வந்துள்ளேeஎனே...

இது கேள்வியல்ல..
பாராட்டு..
:-)

ச்சும்மா டீ.ஆர் மாதிரி கலக்குறீங்க ரைமிங்ல..
:-)

sakthi said...

அண்ணா

உங்க பேரை காப்பாத்திட்டேனா

அ.மு.செய்யது said...

பித்தன் நீங்க சொன்ன விஷயங்களும் என் நினைவுக்கு வந்தது...

ஆனால் பதிவின் நீளம் கருதி போட வில்லை.

வாழ்வில் அனைத்து வகை துன்பங்களினாலும் காதலிக்கப் படுபவன் வெற்றி பெற்றவனாகிறான்.

நட்புடன் ஜமால் said...

\\
நம்ம கடை பக்கம் வந்ததில்லை அதான் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்க\\

அப்படியா

என்ன சகோதரா அப்படியா

போய் பாருங்க வேத்தியரே!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
பித்துபிடித்தது உண்மைதான்

இவரின் கதையினையும்

தங்கள் கவிதையினையும்

படிக்கையில் ...
//

யாரோட கதை...யாரோட கவிதை ???

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
வேத்தியன் said...

@ sakthi...

யாரு யாரு யாரு

அவ பேரு என்ன வென்று கூறு

ஹ ஹ ஹ ஹ//

ஆஹா...
ரைமிங்ல பின்னுறியளே...
:-)

நம்ம கடை பக்கம் வந்ததில்லை அதான் இப்படி ஒரு கேள்வி கேட்டுடீங்க//

வந்ததில்லையா??
வந்துள்ளேeஎனே...

இது கேள்வியல்ல..
பாராட்டு..
:-)

ச்சும்மா டீ.ஆர் மாதிரி கலக்குறீங்க ரைமிங்ல..
:-)

இல்லையே உங்களை நான் என் வலைப்பூவில் பார்த்த்தில்லை
நான் தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்திருக்கிறேன்

sakthi said...

135

நட்புடன் ஜமால் said...

\\sakthi said...

அண்ணா

உங்க பேரை காப்பாத்திட்டேனா\\

இல்லியா பின்ன

sakthi said...

அ.மு.செய்யது said...

பித்தன் நீங்க சொன்ன விஷயங்களும் என் நினைவுக்கு வந்தது...

ஆனால் பதிவின் நீளம் கருதி போட வில்லை.

வாழ்வில் அனைத்து வகை துன்பங்களினாலும் காதலிக்கப் படுபவன் வெற்றி பெற்றவனாகிறான்.

அக்ரீட்:)))))))

sakthi said...

பதிவு அருமை தம்பி

அ.மு.செய்யது said...

//இல்லையே உங்களை நான் என் வலைப்பூவில் பார்த்த்தில்லை
நான் தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்திருக்கிறேன்//

சரி சரி சண்ட போடாதீங்க...சும்மா ஒரு போஸ்ட் மட்டும் இன்னிக்கு போடுங்க‌..அப்புறம் பாருங்க..

sakthi said...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
பித்துபிடித்தது உண்மைதான்

இவரின் கதையினையும்

தங்கள் கவிதையினையும்

படிக்கையில் ...
//

யாரோட கதை...யாரோட கவிதை ???

சொல்லுங்க அண்ணா

நட்புடன் ஜமால் said...

\\
யாரோட கதை...யாரோட கவிதை ???\\

கதை உங்களோடது தான் செய்யது

கவிதை பித்தரடோது

வேத்தியன் said...

@ sakthi...

இல்லைங்க...
நீங்க எழுதுற கவிதைல்லாம் வந்து படிச்சுட்டு தான் போவேன்...
வேலை காரணமா பின்னூட்டம் போடாமல் போயிருப்பேன்..
அதற்காக மன்னிச்சுடுங்க தோழி...

வருவேன்..
படிப்பேன்..
இனிமேல் பின்னூட்டமும் அப்போவே போட்டுடறேன்..
:-)

sakthi said...

அ.மு.செய்யது said...

//இல்லையே உங்களை நான் என் வலைப்பூவில் பார்த்த்தில்லை
நான் தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்திருக்கிறேன்//

சரி சரி சண்ட போடாதீங்க...சும்மா ஒரு போஸ்ட் மட்டும் இன்னிக்கு போடுங்க‌..அப்புறம் பாருங்க..

ஹே சண்டையா
என்னப்பா இப்படி சொல்லிட்டே
ஒரு விளம்பறம் தான்

அ.மு.செய்யது said...

//கதை உங்களோடது தான் செய்யது

கவிதை பித்தரடோது//

ஓஹ்..அப்படியா..நன்றி நன்றி !!

sakthi said...

வேத்தியன் said...

@ sakthi...

இல்லைங்க...
நீங்க எழுதுற கவிதைல்லாம் வந்து படிச்சுட்டு தான் போவேன்...
வேலை காரணமா பின்னூட்டம் போடாமல் போயிருப்பேன்..
அதற்காக மன்னிச்சுடுங்க தோழி...

வருவேன்..
படிப்பேன்..
இனிமேல் பின்னூட்டமும் அப்போவே போட்டுடறேன்..
:-)

அது

நட்புடன் ஜமால் said...

\\சரி சரி சண்ட போடாதீங்க...சும்மா ஒரு போஸ்ட் மட்டும் இன்னிக்கு போடுங்க‌..அப்புறம் பாருங்க..\\

இதேதான் இதேதான் நானும் சொல்லுதேன்

வேத்தியன் said...

அ.மு.செய்யது said...
//இல்லையே உங்களை நான் என் வலைப்பூவில் பார்த்த்தில்லை
நான் தான் உங்கள் வலைப்பூ பக்கம் வந்திருக்கிறேன்//

சரி சரி சண்ட போடாதீங்க...சும்மா ஒரு போஸ்ட் மட்டும் இன்னிக்கு போடுங்க‌..அப்புறம் பாருங்க.//

அதானே..
இப்போ போடுங்களேன்..
வரேன்..
:-)

sakthi said...

அண்ணா வாழ்த்துக்கள்

வேத்தியன் said...

150 ஜஸ்டு மிஸ்..
;-)

அ.மு.செய்யது said...

//sakthi said...
பதிவு அருமை தம்பி
//

அப்பாடி...பதிவ படிச்சிட்டீங்களா ??

காலையிலேயே போட்டு அதை கும்மியும் ஆச்சு

sakthi said...

வேத்தியன் said...

150 ஜஸ்டு மிஸ்..
;-)

இது எல்லாம் சகஜம் அப்பு

வேத்தியன் said...

sakthi said...
150//

இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல??
:-)
மீண்டும் வாழ்த்துகள்..

sakthi said...

அ.மு.செய்யது said...

//sakthi said...
பதிவு அருமை தம்பி
//

அப்பாடி...பதிவ படிச்சிட்டீங்களா ??

ம் ம் ம்

அப்பவே

sakthi said...

வேத்தியன் said...

sakthi said...
150//

இன்னைக்கு ஒரு முடிவோட தான் வந்திருக்கீங்க போல??
:-)
மீண்டும் வாழ்த்துகள்..

அண்ணாவிற்கு சொல்லுங்க வேத்தியன்

sakthi said...

அ.மு.செய்யது said...

//கதை உங்களோடது தான் செய்யது

கவிதை பித்தரடோது//

ஓஹ்..அப்படியா..நன்றி நன்றி !!

நானும் கூவிக்கறேன்

நன்றிங்கண்ணா

அ.மு.செய்யது said...

சாப்பிட்டு வரேங்க..

sakthi said...

என்ன வேகம் குறைஞ்சிட்டு

sakthi said...

அ.மு.செய்யது said...

சாப்பிட்டு வரேங்க..

நானும் பா

நட்புடன் ஜமால் said...

மக்களே இங்கே 12 மணி ஆயிடிச்சி

நான் அப்பீட்டுக்கிறேன்

நம்ம கடை நாளை இந்திய நேரம் 3 மணிக்கு தானா திறக்கும்

நானிருக்கமாட்டேன்

பார்த்துக்கோங்கோ ...

வேத்தியன் said...

sakthi said...
அ.மு.செய்யது said...

சாப்பிட்டு வரேங்க..

நானும் பா//

ok..

enjoy dinner...
:-)

Venkatesh Kumaravel said...

நெஞ்ச நக்கிட்டீங்க தல... கலக்கல் பதிவு! குறிப்பா அந்த தெருவொர ட்ரீட், ரயிலடி பாப்பா விரல், மளிகைக்கடை ஃபிகர்.. ஆஹா.. ஆஹா... ஆகாககாகா!
:D :D :D

வேத்தியன் said...

நட்புடன் ஜமால் said...
மக்களே இங்கே 12 மணி ஆயிடிச்சி

நான் அப்பீட்டுக்கிறேன்

நம்ம கடை நாளை இந்திய நேரம் 3 மணிக்கு தானா திறக்கும்

நானிருக்கமாட்டேன்

பார்த்துக்கோங்கோ ...//

நாளை 3 மணிக்கு நான் ஃப்ரீ..
வரேன்..
:-)

sakthi said...

170

sakthi said...

sakthi back

sakthi said...

அதெல்லாம் ஒன்னுமில்ல...பதிவு போட ஒரு விசயம் இல்லன்னா இப்படி தான் நாங்க உளறுவோம்.

உளறலா

இத்தனை அழகான

கவிதையா

வந்திருக்கே

செய்யது

sakthi said...

நட்புடன் ஜமால் said...

மக்களே இங்கே 12 மணி ஆயிடிச்சி

நான் அப்பீட்டுக்கிறேன்

நம்ம கடை நாளை இந்திய நேரம் 3 மணிக்கு தானா திறக்கும்

நானிருக்கமாட்டேன்

பார்த்துக்கோங்கோ ...

சரி அண்ணா

குட் நைட்

sakthi said...

வெங்கிராஜா said...

நெஞ்ச நக்கிட்டீங்க தல... கலக்கல் பதிவு! குறிப்பா அந்த தெருவொர ட்ரீட், ரயிலடி பாப்பா விரல், மளிகைக்கடை ஃபிகர்.. ஆஹா.. ஆஹா... ஆகாககாகா!
:D :D :D

ரொம்ப ரசிச்சிருப்பீங்க போல

sakthi said...

175

sakthi said...

கும்மி தனியாக அடிக்கப்படாது என்ற விதி இருப்பதால் இப்போதைக்கு கழண்டுக்கறேன் செய்யது தம்பி மீதி நாளைக்கு

ஆதவா said...

அ.மு.செய்யது... படித்தேன்... எழுத்தின் தரத்தால் மீண்டுமொருமுறை படிக்கிறேன்... பொறுங்கள்!~!!

Anonymous said...

முதல் பத்தி...... என்ன சொல்வது அ.மு.செய்யது... மிகப்பிரமாதமான அனுமானம்.... ஒருவரின் வெளித்தோற்றம் காதல் கதவின் சாவி என்பதும், உண்மைக்காதல் நீர்த்துப் போவதற்கான காரணங்களும் மிகப்பிரமாதம்!!!

Anonymous said...

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் உங்களையே வைத்துப் பார்த்தேன்..... அதிலும் குறிப்பாக, நண்பர்களோடு கையேந்திபவன் எனும் ஒற்றை வரி, இன்றைய என் சூழ்நிலையில் பொட்டி அடித்தாற்போல் இருக்கிறது...

உறவு வீட்டு திருமண தருணங்கள் எனக்கு அதிகம் வாய்ந்திருக்கிறது... கவனிக்க.. தருணங்கள் மட்டுமே வாய்த்திருக்கிறது!!!!

ஒவ்வொரு எழுத்தையும் நன்கு கவனித்து எழுதியிருக்கிறீர்கள்... குறிப்பாக, வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளை எனும் அவ்வரிகளின் அழுத்தமே சான்று!!!!

Thamira said...

ஓ இங்கே கும்மி நடக்குதா.? நடக்கட்டும். சொல்ல வந்ததை சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்.

பதிவின் தீம் அழகானது, ரசனையானது.. ஆனால் பல சொற்பிழைகள் உள்ளன, சில வரிகள் கடமுடாவென இருக்கின்றன.. கவனம் செய்யது.!

ஆதவா said...

அய்யய்யோ!!! இதென்ன அனானியா போச்சு... அ.மு.செய்யது சார்... இந்த இரண்டு அநானிகளும் நாந்தான்!!!! தெரியாம அழுத்திட்டேன்!!!!

அ.மு.செய்யது said...

ஆத‌வ‌ன் உங்க‌ள் பின்னூட்ட‌ங்க‌ள் ஏன் அனானிமஸ் பெய‌ரில் வ‌ருகிற‌து ?

அ.மு.செய்யது said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...
ஓ இங்கே கும்மி நடக்குதா.? நடக்கட்டும். சொல்ல வந்ததை சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்.

பதிவின் தீம் அழகானது, ரசனையானது.. ஆனால் பல சொற்பிழைகள் உள்ளன, சில வரிகள் கடமுடாவென இருக்கின்றன.. கவனம் செய்யது.!
//

ந‌ன்றி ஆதி அவ‌ர்க‌ளே !!

வ‌ரிக‌ளை எப்ப‌டி சுருக்காக‌ கையாள்வ‌து என்ப‌து என‌க்கு இன்னும் ஒரு ச‌வாலாக‌வே இருக்கிறது.
நிச்ச‌ய‌ம் ச‌ரி செய்து கொள்கிறேன்.

அப்துல்மாலிக் said...

செய்யது என்னாச்சிப்பா

ஒரு வித்தியாசமான பதிவு

இதுக்கூட புதுசா இருக்கே யார் யார் நம்மை நமக்கே தெரியாமல் பார்த்து ரசித்திருக்கிறார்கள், காதலித்திருக்கிறார்கள்

சூப்பர் அப்பூ

அப்துல்மாலிக் said...

180 தாண்டி சுனாமி பின்னூட்டம், என்னுடையது இதுலே கடலில் கரைத்த சுன்னாம்புதான்

அப்துல்மாலிக் said...

//பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.//

இந்த கருத்தை வரவேற்கிறேன் செய்யது, இன்னும் அந்த வட்டத்திற்குள் வராமலே இத்துனை கருத்தா

அப்துல்மாலிக் said...

//குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா.../

அப்போவெல்லாம் தன்னுடைய திறமையால் சில பேருடைய தனிப்பட்ட கண் பட்டு இருக்கலாம், நாங்க விளையாடும்போதும் இப்படி நிறைய உணர்வுகள் தோன்றியதுண்டு ஹா ஹா

அப்துல்மாலிக் said...

//கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....//

இதுதான்யா ஒரிஜினல் பார்ட்டி, கஷ்டப்பட்டு காசு சேர்த்து ஒரு 50 ரூவா தேரும்டா அதுக்குள்ளார நம்ம பார்ட்டியை முடிச்சிக்கனும் கன்டிஷன் போட்டு ஆர்டர் பண்ண பண்ண பாக்கெட் தொட்டுப்பார்த்துக்கொண்டு.... ஹா ஹா இதுலே உலகின் தலைசிறந்த பர்ஜ் அல் அரப் 7 ஸ்டார் ஹோட்டல்லே பார்ட்டிக்கொடுத்தாக்கூட இந்த அனுபவம் வராதுப்பா.......

அப்துல்மாலிக் said...

//குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!
//

சூப்பரப்பு, எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரியுது செய்யது

அப்துல்மாலிக் said...

//க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..
//

ஆஹா இந்த பதிவோட மேட்டர் இங்கேதான் இருக்கு

நிச்சயமா அந்த பார்வையில் ஆயிரம் கவிதை சொல்லும்....

அப்துல்மாலிக் said...

//தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.
//

மன்மதன்யா நீர்.. 1000 ம் ஆயிரம் கண்களால் மேயப்பட்ட்ரிருக்குமோ, தடவியல் துறையுக்கும், தொல்பொருள் துறைக்கும் வேரு வேலையே இல்லியா

அப்துல்மாலிக் said...

யாருமில்லாத கடையிலே தனியா செய்யதுக்காக டீ ஆத்திக்கொண்டிருக்கிறேன்

அப்துல்மாலிக் said...

//வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!
//

இந்த பதிவுதான் அழுததிற்கான பதிவோ

நினைவுகள் அர்த்தமுள்ளவை... நினைவுகளுடனே வாழ்த்துக்கொண்டிருக்கிறீங்களா.......

அப்துல்மாலிக் said...

//sakthi said...
பர்ஸ்டு
//

சக்தி... என்னாதிது... ஒரு கூட்டமாதான் கிளம்பிருக்கீங்க போல‌

அப்துல்மாலிக் said...

//அரை மணி நேர காதல் அடுத்த கவிதைக்கு டாபிக் ரெடி//
இப்படிதான் கவிதை பிறக்குதா

அப்துல்மாலிக் said...

//அதெல்லாம் ஒன்னுமில்ல...பதிவு போட ஒரு விசயம் இல்லன்னா இப்படி தான் நாங்க உளறுவோம்//

ஏன்யா என்னை காப்பியடிக்கிரீங்க‌

அப்துல்மாலிக் said...

//நான் இன்னும் திருமண வாழ்க்கையை எட்ட வில்லை.இருந்தாலும் ஒரு கணிப்பு.அவ்வளவே !!
//

அதான் கேட்டேன் அதுக்குள்ளார இப்படி ஒரு பதிவானு

அப்துல்மாலிக் said...

//வால்பையன் said...

காதலிப்பதைவிட
காதலிக்கப்படுதல்
பெரும் சுகம்!
//

அதானே பெரிய சுகம், மனசுக்குள்ளே சிலாகித்துக்கலாம்... ஹி ஹி

அப்துல்மாலிக் said...

199

அப்துல்மாலிக் said...

200 நாந்தான்

யப்பா 50 100 150 200 இப்படியெல்லாம் போட்டு எவ்வளவு நாளாச்சி

வாழ்த்துக்கள் அபுஅஃப்ஸர், ஹி ஹி நானே சொல்லிக்கிட்டேன்

அருமையான பதிவு செய்யது

நெகிழ்ந்தேன் படித்து

வாழ்த்துக்கள்

நசரேயன் said...

நான் தான் கடைசியோ!!!

என்னவோ சொல்லுறீங்க கேட்டுகிறேன், இருந்தாலும் அத்தை மகள் சோறு போட்டது தான் நடை முறையிலே இருக்கிற காதல்

புதியவன் said...

தலைப்பு கேள்வியாகவும் பதிவு பதிலாகவும் எழுத்தின் நடை வெகு அழகு பதிவின் முதல் பத்தியில் பக்குவப்பட்ட எழுத்தாளரின் தரம் தெரிகிறது செய்யது...

//வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...//

வாழ்வின் யாதார்த்தமான நிமிடங்களை அணு அணுவாக ரசித்து எழுதப்பட்ட வரிகள்...

//மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!//

இந்த வரிகளை இரண்டு முறை ரசித்துப் படித்தேன் அவ்வளவு அழகு...

//உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..//

ம்...இதைக் கூட தேவ வினாடிகள் என்று சொல்லலாம்...

//வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!//

ஹா...ஒளி படந்ததாய் ஒரு உணர்வு தெரிகிறது...

வகைப்படுத்தப்படாதவை என்று சொல்லி விட்டு அழகாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது வாழ்வின் அற்புத கணங்கள்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

cool

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

என்று ஆரம்பித்து கொடுத்திருக்கும் அத்தனை கணங்களுமே நச்

அதுவும் கடைசி வரிகள் ...... பலே பலே, அசத்தறீங்க அ.மு.செ

அ.மு.செய்யது said...

வாங்க‌ அபுஅஃப்ஸ‌ர்...

லேட்டா வ‌ந்தாலும் த‌னியா டீ ஆத்திட்டு போயிருக்கீங்க‌
உங்க‌ க‌ட‌மை உண‌ர்ச்சிய‌ நினைக்கும் போது க‌ண்ணு லைட்டா க‌ல‌ங்குது.

//நினைவுகள் அர்த்தமுள்ளவை... நினைவுகளுடனே வாழ்த்துக்கொண்டிருக்கிறீங்களா.......//

இத‌ற்கு ஒரே ப‌தில் தான்.

//மன்மதன்யா நீர்.. 1000 ம் ஆயிரம் கண்களால் மேயப்பட்ட்ரிருக்குமோ, தடவியல் துறையுக்கும், தொல்பொருள் துறைக்கும் வேரு வேலையே இல்லியா//

நியாய‌மான‌ கேள்வி தான்.

//சூப்பரப்பு, எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரியுது செய்யது//

இப்ப‌டி தான் உசுப்பேத்தி விடுவாய்ங்க‌..அப்ப‌டினு ப‌ய‌லுக‌ சொன்னாய்ங்க‌..

( மிக்க‌ ந‌ன்றி த‌ல‌ )

S.A. நவாஸுதீன் said...

அடப்பாவமே. காலைல ஆபிஸ் வந்து பொட்டிய தொறக்குறதுக்குள்ள இருநூறு ஆச்சா.

சந்தோசம். இருங்கப்பு உள்ள போயிட்டு வர்றேன்.

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
நான் தான் கடைசியோ!!!

என்னவோ சொல்லுறீங்க கேட்டுகிறேன், இருந்தாலும் அத்தை மகள் சோறு போட்டது தான் நடை முறையிலே இருக்கிற காதல்
//

வாங்க‌ ந‌ச‌ரேய‌ன்..

நீங்க‌ சொல்ற‌மாதிரியும் சொல்ல‌லாம்.

அ.மு.செய்யது said...

வாங்க‌ புதிய‌வ‌ன்.

//புதியவன் said...
தலைப்பு கேள்வியாகவும் பதிவு பதிலாகவும் எழுத்தின் நடை வெகு அழகு பதிவின் முதல் பத்தியில் பக்குவப்பட்ட எழுத்தாளரின் தரம் தெரிகிறது செய்யது...
//

மிக்க‌ ந‌ன்றி..எழுத்தாளராக‌ இன்னும் ப‌யிற்சி வேண்டுமென‌ நினைக்கிறேன்.

//வாழ்வின் யாதார்த்தமான நிமிடங்களை அணு அணுவாக ரசித்து எழுதப்பட்ட வரிகள்...//

உங்க‌ள் பின்னூட்ட‌ங்க‌ள் அழ‌கு.

//வகைப்படுத்தப்படாதவை என்று சொல்லி விட்டு அழகாக வகைப்படுத்தப் பட்டிருக்கிறது வாழ்வின் அற்புத கணங்கள்...//

தெளிவான‌ நிதான‌மான‌ உங்க‌ள் க‌ருத்துக்கு மிக்க‌ ந‌ன்றி புதிய‌வ‌ன்.

அ.மு.செய்யது said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...
cool

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

என்று ஆரம்பித்து கொடுத்திருக்கும் அத்தனை கணங்களுமே நச்

அதுவும் கடைசி வரிகள் ...... பலே பலே, அசத்தறீங்க அ.மு.செ
//

ந‌ன்றி அமித்து அம்மா..வ‌லைச்ச‌ர‌த்துல‌ அச‌த்துறீங்க‌ போல‌..

S.A. நவாஸுதீன் said...

ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

தினமும் லோக்கல் ட்ரைன்ல ஆபிஸ் போறீங்களா?

அ.மு.செய்யது said...

//S.A. நவாஸுதீன் said...
அடப்பாவமே. காலைல ஆபிஸ் வந்து பொட்டிய தொறக்குறதுக்குள்ள இருநூறு ஆச்சா.

சந்தோசம். இருங்கப்பு உள்ள போயிட்டு வர்றேன்.
//

வாங்க‌ ந‌வாஸ்...நேத்து க‌ட‌ தொறந்து 20 நிமிச‌த்துல‌ எல்லாம் வித்து போச்சு.

( எல்லாத்துக்கும் ஒரு ச‌க்தி தான் கார‌ண‌ம் )

அ.மு.செய்யது said...

//S.A. நவாஸுதீன் said...
ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

தினமும் லோக்கல் ட்ரைன்ல ஆபிஸ் போறீங்களா?
//

இல்ல‌ங்க‌ ஆபிஸ் கார் தான்..அதெல்லாம் அப்ப..

S.A. நவாஸுதீன் said...

நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள் சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.

நிஜம்

S.A. நவாஸுதீன் said...

ஒவ்வொரு நிகழ்வும் காட்சியாகத் தெரிகின்றன செய்யது. நீங்கள் மழையில் நனைவதை சிரித்துக்கொண்டே ரசித்துக்கொண்டு பேருந்துநிலையத்தில் காத்துநிற்கும் பயணியாய் என்னால் என்னை உணரமுடிகிறது. அதே போல்தான் ஒவ்வொரு நிகழ்வும்.

S.A. நவாஸுதீன் said...

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.

நான் அதிகம் ரசித்த பகுதி. நமக்காக ஒரு தேசம் ஒருபக்கம் இருக்கும்போது நாமும் பிறருடைய தேசத்தில் உலவிக்கொண்டிருப்போம்.

S.A. நவாஸுதீன் said...

பதிவின் கரு, வார்த்தை பிரயோகம், நிகழ்வுகளை வர்ணிக்கும் விதம், மொத்தத்தில் இந்த பதிவு உங்களை மீண்டும் தேர்ந்த எழுத்தாளன் என்பதை நிரூபித்திருக்கிறது.

குடந்தை அன்புமணி said...

விரிவா அலசியிருக்கீங்க... அதைவிட விரிவா (விரைவா) பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. நான் ரொம்ப தாமதமா வந்துவிட்டேன்.எல்லாரும் ஏதோ ஒருவிதத்தில் காதலிக்கப்படுவது உண்மைதான்.

Anonymous said...

புதுசா ஒரு விஷயத்தை அனலைஸ் பண்ணியிருக்கப்பா.....ஆம் இது எல்லார் மனசுகுள்ளும் மெளனமாய் ஒலித்துக் கொண்டு இருக்கும் கேள்வி இது அதை இன்று வேள்வியாய் வெளிக் கொண்டு வந்து இருக்கிறிர்கள் இதை படித்து முடித்து இதில் எதாவது விடுபட்டு இருக்கான்னு....ம்ம்ம்ம்ம் என் அகக் கண்ணுக்கும் சரி புறக்கண்ணுக்கும் சரி ஒன்றும் புலப்படலை...உங்க வயசை ரிவர்ஸ் பண்ணிப்பார்த்த கூட யப்பா அந்த வயசிலும் வருமா இதுக்கு பதில்லுன்னு......இதில் ஒரு பகுதிய குறிப்பிட்டு சொல்லனும் என்று இல்லை அத்தனையும் உண்மை....என் கைதட்டல் ஓசை உங்கள் மனதுக்கு கேட்டால் சொல்லுங்கள்....

அ.மு.செய்யது said...

// S.A. நவாஸுதீன் said...

நான் அதிகம் ரசித்த பகுதி. நமக்காக ஒரு தேசம் ஒருபக்கம் இருக்கும்போது நாமும் பிறருடைய தேசத்தில் உலவிக்கொண்டிருப்போம்.
//

For the world you are someone..For someone you are the world !!!

//பதிவின் கரு, வார்த்தை பிரயோகம், நிகழ்வுகளை வர்ணிக்கும் விதம், மொத்தத்தில் இந்த பதிவு உங்களை மீண்டும் தேர்ந்த எழுத்தாளன் என்பதை நிரூபித்திருக்கிறது.//

மிக்க நன்றி நவாஸ்..தங்களின் நுட்பமான பின்னூட்டத்திற்கு...நெகிழ்ந்தேன்.

அ.மு.செய்யது said...

நன்றி குடந்தை அன்புமணி சார்

உங்களின் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

அ.மு.செய்யது said...

நன்றி தமிழரசி !!!

உங்கள் கைதட்டல் என் மனதில் கேட்டது அதற்கு முன்பே மின்னஞ்சல் வந்து விட்டது.

RAMYA said...

//
பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...
//

இருக்கலாம், ஆனா அந்த சமயத்தில் சிந்தனை வருமா??

RAMYA said...

//
வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...
//

அருமை! அருமை! இதை இப்படியே விடக்கூடாது, நல்லா நின்னு நிதானிச்சு யோசிக்கணும்.

RAMYA said...

//
ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....
//

ம்ம்ம் அப்பவும் யோசிக்கலாம், எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிராங்களோப்பா :)

«Oldest ‹Older   1 – 200 of 222   Newer› Newest»