Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,
கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.

தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"


மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

79 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல சேஷரிங்ப்பா!

நட்புடன் ஜமால் said...

அது


ஷேரிங்

நட்புடன் ஜமால் said...

\\நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.\\

நல்ல விளக்கம் ...

நட்புடன் ஜமால் said...

\\"மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, \\


நமக்கும் உண்டுங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நட்புடன் ஜமால் said...

\\உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம்\\


கிளப்பல்ஸ் ...

நட்புடன் ஜமால் said...

\\"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"
\\


எதார்த்தங்களை

எதார்த்தமான இடத்தில்

யோசித்தேன் என்று

எதார்த்தமாய்

சொல்லியிருக்கின்றீர்கள்

நல்ல

எதார்த்தம்.

அ.மு.செய்யது said...

வாங்க ஜமால் காக்கா.

நலமா ??? பேக் டூ ஃபார்ம்...ஆ ??

பதிவை போட்டு தமிழ்மணத்துல இணைக்கறதுக்குள்ள அவ்ளோ ஃபார்ஸ்ட்டாவா ??

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"
\\


எதார்த்தங்களை

எதார்த்தமான இடத்தில்

யோசித்தேன் என்று

எதார்த்தமாய்

சொல்லியிருக்கின்றீர்கள்

நல்ல

எதார்த்தம்.
//

மூச்சு வாங்குது .........

செத்த தண்ணி குடிச்சுட்டு வரேன்.

நட்புடன் ஜமால் said...

நிறைய குடிங்க ...

ஆ.சுதா said...

சென்னை ஷேர் ஆட்டோவை பற்றி
நல்லா எழுதியிருக்கீங்க, அந்த அனுபவம் எனக்கும் உண்டு,

|என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது|

இது உங்களை பொருத்தமட்டில் அல்ல சென்னையை பொருத்த மட்டிலும்.

கவிதை சூப்ர்ங்க

Vidhya Chandrasekaran said...

சூடு வெச்ச மீட்டர் போல சூப்பர். வாழ்த்துகள்.

நர்சிம் said...

//ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.//

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்

அமுதா said...

/*க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.*/
நிச்சயமா...

குடந்தை அன்புமணி said...

அனுபவம் பேசுகிறது...நீங்கள் சொன்னது உண்மைதான்... சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது தெரியாமல் இடித்துவிட்டால் தி்ட்டுபவர்கள்கூட , இப்படி இடித்துக்கொண்டு அமர்வதற்கு ஏதும் சொல்லாமல் செல்வது... அலுவலகத்தில் வாங்கும் பாட்டைவிட இது தேவலை என்பதாக இருக்குமோ...

அ.மு.செய்யது said...

நன்றி முத்துராமலிங்கம் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

வாங்க வித்யா..( ஷேர் ஆட்டோல மீட்டரா ?? நீங்க ஊருக்கு புட்ச்சா ??

வாங்க நர்சிம் தல..வருகை மகிழ்ச்சியளிக்கிறது பாஸ்

அ.மு.செய்யது said...

நன்றி அமுதா...

நன்றி குடந்தை அன்புமணி..( அனுபவம் பேசுதா.நான் அவன் இல்லீங்க..)

எம்.எம்.அப்துல்லா said...

// நர்சிம் said...

//ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்ற
த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.//

நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்

//


தோடா..கம்பரே பாராட்டிர்காரு. கண்ணு செய்து,
நீ கெலிச்சிட்டபா

:)

anujanya said...

பதிவு முழுதும் அதகளம். ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. தூள்.

அனுஜன்யா

cute baby said...

நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

சூப்பர்......

அப்துல்மாலிக் said...

நல்ல ஷேரீங் தல‌

அனுபவப்பதிவு

அப்துல்மாலிக் said...

//பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

//

சரிதான்பா

அப்துல்மாலிக் said...

//மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.
//

உண்மையிலேயெ த்ரில்தான் நல்ல எழுத்தோட்டம்

அப்துல்மாலிக் said...

//நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளினம்//

நல்ல விளக்க குலுங்களுக்கு

அப்துல்மாலிக் said...

//மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை //

ஊஊஊஉய்ய்ய் ரெண்டு கலென்க்ஷன் பாத்துகொடுத்தா அன்னிக்கு அண்ணாத்தேக்கு ஃபிரீதான்...

S.A. நவாஸுதீன் said...

25 போட்டுட்டு உள்ளே போயிட்டு வாரேன் செய்யது

அப்துல்மாலிக் said...

//அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"

/

கவுஜய தேவையான இடத்துலெ உக்க்காந்து தேவையான் இடத்துலே போஸ்ட் போட்ரிடுக்கீர்ர்

வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

எனக்கு வாழ்க்கையில மிஸ்ஸாகிப் போன பல அனுபவங்கள்ள இதுவும் ஒன்னு. ஹ்ம்ம். டிகிரி சர்டிபிகேட் வாங்கும் முன்னாடி பாஸ்போர்ட் வாங்கினா எப்டி கிடைக்கும்.

S.A. நவாஸுதீன் said...

பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

நான் ரொம்ப நாலா "நாதாரி"ன்னா கேட்ட வார்த்தைன்னு நினைசுகிட்டிள்ளே இருந்தேன். இப்பதான் தெரியுது அது அப்படி இல்லன்னு.

S.A. நவாஸுதீன் said...

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

வாழ்க ஷேர் ஆட்டோ

S.A. நவாஸுதீன் said...

மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

இந்த மாதிரி அனுபவம் எல்லாம் கிடைக்காமல் போச்சே!!

S.A. நவாஸுதீன் said...

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்

அப்போ அடுத்த விஜய் படத்துல குத்தாட்டத்துக்கு ஷேர் ஆட்டோவ பார்க்கலாம்

S.A. நவாஸுதீன் said...

இப்ப ஓரளவு ஷேர் ஆட்டோ அனுபவம் எனக்கும் கிடைத்து விட்டது செய்யது உங்கள் பதிவில் பயணம் செய்ததால்.

Revathyrkrishnan said...

மிக கூர்மையான கவனிப்பு... அழகான சித்தரிப்பு .

Anonymous said...

அனுபவம் ஆத்மார்தமா பகிர்ந்து இருக்கிங்க....உண்மைகளோடும் உணர்வுகளோடும்.....எல்லாம் சொல்லியிருக்கீங்க இதில் அவசியம் அவசரம் கட்டுப்பாடு கலாச்சாரம் புரட்சி இதில் நடக்கும் அநாகரீகம் தேவை எல்லாம் இதில் திணிக்கப்பட்டு இருக்கிறது...ஒரு வித்தியாசமான பதிவும் கூட...சிரிக்கவும் முடிந்தது சிந்திக்கவும் செய்த்து...வாழ்த்துக்கள் நண்பா....

புதியவன் said...

ஷேர் ஆட்டோ பயணத்தை ஷேர் பண்ணிட்டீங்க செய்யது...

எனக்கு ஷேர் ஆட்டோ பயணித்த அனுபவம் இதுவரை இல்லை...

சின்னச் சின்ன விசயங்களையும் ரொம்ப கவனமா பார்க்கிறீங்க...

புதியவன் said...

//ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.//

ஆமா, இது மாபெரும் புரட்சிதான்...

புதியவன் said...

//தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"//

யதார்த்தம்...

ஆதவா said...

எந்த விஷயமும் ரசிக்கத் துவங்கிவிட்டால் வாழ்க்கை ரசனையாகவே செல்லும். ஷேர் ஆட்டோவில் இத்தனை விஷயங்களை நீங்கள் கவனித்து ரசித்திருக்கிறீர்கள் என்பதே நீங்கள் வாழும் வாழ்க்கையை எப்படி அமைத்திருக்கிறீர்கள் என்பதை ஓரளவு நிர்மாணிக்க இயலுகிறது.

ஷேர் ஆட்டோக்கள் திருப்பூரில் இல்லை. ஈரோட்டில் உண்டு. கருங்கல்பாளையத்திற்கும் பஸ் ஸ்டாண்டிற்கும் இடையே ஷேர் ஆட்டோவில்தான் செல்வது... அப்படி ஒரு முறை எனக்குக் கிட்ட நெருங்கி சுவாசிக்கும் தூரத்தில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என் வயதை ஒத்திருந்ததால் கவர்தலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவளை விவரித்து பின்னூட்டத்தைப் பெருக்கிக் கொள்ள விரும்பவில்லை. ஆனால் சங்கோஜங்கள், கசப்புகள் எல்லாம் தாண்டி இருவரையும் பொதுத்தன்மையாகவே ஒட்ட வைத்த பெருமை ஷேர் ஆட்டோக்களுக்கே சொந்தம்.

ஷேர் என்றால் பங்கிடு என்று பொருள்..... ஆண் பெண் என இரு இனங்களை இடப்பிரிவால் பிரித்திடாமல் பங்கிட்டு அமர்தலாலோ ஷேர் ஆட்டோ என்று பெயர்வந்ததோ என்னவோ??

உங்கள் பதிவு ரசிக்கத் தக்கது,. இப்படி பல நிகழ்வுகளை உங்கள் வாழ்விலிருத்ந்து தோண்டி எடுங்களேன்!! பதிவின் அளவுக்கு கவிதை தாக்கவில்லை!

அ.மு.செய்யது said...

வாங்க அப்துல்லா அண்ணே !!! உங்க கருத்தை சொன்னீங்கன்னா டபுள் சந்தோஷம்.

வாங்க அனுஜன்யா...வருகை இன்ப அதிர்ச்சி.

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.
//

உண்மையிலேயெ த்ரில்தான் நல்ல எழுத்தோட்டம் //

வாங்க அபு...பிரிச்சி மேய்ஞ்சிட்டேள்.

//ஊஊஊஉய்ய்ய் ரெண்டு கலென்க்ஷன் பாத்துகொடுத்தா அன்னிக்கு அண்ணாத்தேக்கு ஃபிரீதான்..//

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க தல..

அ.மு.செய்யது said...

//S.A. நவாஸுதீன் said...
மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

இந்த மாதிரி அனுபவம் எல்லாம் கிடைக்காமல் போச்சே!!//

தல..அப்படின்னா நீங்க வாழ்க்கையில இன்னும் அனுபவிக்க வேண்டியது நிறைய இருக்குனு அர்த்தம்.

//அப்போ அடுத்த விஜய் படத்துல குத்தாட்டத்துக்கு ஷேர் ஆட்டோவ பார்க்கலாம்//

இது அதுல்ல...!!!!

அ.மு.செய்யது said...

// அபுஅஃப்ஸர் said...
//அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"

/

கவுஜய தேவையான இடத்துலெ உக்க்காந்து தேவையான் இடத்துலே போஸ்ட் போட்ரிடுக்கீர்ர்

வாழ்த்துக்கள்

//

நன்றி !!! நன்றி !!!!

அ.மு.செய்யது said...

// S.A. நவாஸுதீன் said...
பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

நான் ரொம்ப நாலா "நாதாரி"ன்னா கேட்ட வார்த்தைன்னு நினைசுகிட்டிள்ளே இருந்தேன். இப்பதான் தெரியுது அது அப்படி இல்லன்னு.//

நம்ம கிட்ட இந்த மாதிரி ஒரு டிக்ஷனரியே கீதுங்கோ !!!

அ.மு.செய்யது said...

நன்றி கியூட் பேபி..

நன்றி அமித்து அம்மா !!!!

நன்றி ரீனா..( அடிக்கடி வாங்க )

நன்றி தமிழரசி !! ( அழகான பின்னூட்டம் )

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
ஷேர் ஆட்டோ பயணத்தை ஷேர் பண்ணிட்டீங்க செய்யது...

எனக்கு ஷேர் ஆட்டோ பயணித்த அனுபவம் இதுவரை இல்லை...

சின்னச் சின்ன விசயங்களையும் ரொம்ப கவனமா பார்க்கிறீங்க../

நன்றி புதியவன்..சின்ன சின்ன விஷயங்களில் தான் நிறைய சுவாரஸியங்கள் கொட்டி கிடக்கின்றன.

அ.மு.செய்யது said...

நன்றி ஆதவன்..உங்கள் நுட்பமான பின்னூட்டம் மகிழ்ச்சியளிக்கிறது.

அ.மு.செய்யது said...

//ஆதவா said...


ஷேர் என்றால் பங்கிடு என்று பொருள்..... ஆண் பெண் என இரு இனங்களை இடப்பிரிவால் பிரித்திடாமல் பங்கிட்டு அமர்தலாலோ ஷேர் ஆட்டோ என்று பெயர்வந்ததோ என்னவோ?? //

நீங்க எப்பவுமே இப்படித் தானா ?? இல்ல இப்படித்தான் எப்பவுமே வா ??

//உங்கள் பதிவு ரசிக்கத் தக்கது,. இப்படி பல நிகழ்வுகளை உங்கள் வாழ்விலிருத்ந்து தோண்டி எடுங்களேன்!!//

கண்டிப்பாக செய்கிறேன்...உங்கள் ஊக்கம் மனநிறைவளிக்கிறது.

//பதிவின் அளவுக்கு கவிதை தாக்கவில்லை!//

உண்மை தான்..எனக்குள் இருந்த வாசகனும் அதையே தான் சொன்னான்..தரத்தை உயர்த்தி கொள்ள முயலுகிறேன் ஆதவன்.

அ.மு.செய்யது said...

கருத்து சொன்ன அத்தினி பேருக்கும் தேங்க்ஸ்பா...

ஒரே குஜாலாக்கீது....

சி தயாளன் said...

:-)))

சென்னை வந்த போது share auto பார்த்திருக்கிறன்..ஆனா ஏறினது இல்லை :-)

அ.மு.செய்யது said...

// ’டொன்’ லீ said...
:-)))

சென்னை வந்த போது share auto பார்த்திருக்கிறன்..ஆனா ஏறினது இல்லை :‍)//

ச்சே..பிறவிப் பயன் சஸ்ட் மிஸ்ஸாங்கி...

நன்றி டொன்லீ...

எம்.எம்.அப்துல்லா said...

//வாங்க அப்துல்லா அண்ணே !!! உங்க கருத்தை சொன்னீங்கன்னா டபுள் சந்தோஷம்.

//

வடசென்னை வாழ்வியலைப் பற்றிய உங்கள் எழுத்து எப்போதும் என்னை ஆச்சர்ய மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றது. முன்பு நீங்கள் எழுதிய வடசென்னைப் பற்றிய ஒரு பதிவைப் படித்துவிட்டுதான் நான் உங்கள் ரெகுலர் கஸ்டமர் ஆனேன்.

Thamira said...

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.//

சகிப்புத்தன்மையை சோதிக்கும் அனுபவங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். இந்தக்கொடுமை தாளாமல்தான் கடன்பட்டாவது டூ வீலர் வாங்கித் தொலைத்தேன்.

அத்திரி said...

அருமையான அனுபவம் செய்யது............. எனக்கும் பல நேரங்களில் ஷேர் ஆட்டோதான் கடவுள்..........

அ.மு.செய்யது said...

மிக்க மிக்க நன்றி அப்துல்லா அண்ணே !!!

இது புள்ள !!!!
----------------------------

//இந்தக்கொடுமை தாளாமல்தான் கடன்பட்டாவது டூ வீலர் வாங்கித் தொலைத்தேன்.//

வாங்க ஆதிமூலகிருஷ்ணன்..

--------------------------------
//அத்திரி said...
அருமையான அனுபவம் செய்யது............. எனக்கும் பல நேரங்களில் ஷேர் ஆட்டோதான் கடவுள்..........
//

வாங்க அத்திரி...ஷேர் ஆட்டோ இல்லன்னா இன்னிய தேதிக்கு ஒன்னும் நடக்காது.

RAMYA said...

\\நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.
\\

ஆஹா சூப்பர் கம்பாரிசன்!
எப்படித்தான் யோசிப்பீங்களோ, ஆட்டோவில் உக்காந்து யோசிப்பீங்களோ??

RAMYA said...

\\"மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி,
\\

வேலை மாறிப் போச்சா?? கூவரீங்களா?? அது சரி!!

RAMYA said...

சிந்தனையின் அணிவகுப்புகள் தினம் தினம் நடக்கும் எதார்த்தத்தை உணர்த்துகின்றது.

அருமையான யோசனை, அதை அருமையான முறையில் வெளிப் படுத்தி இருக்கின்றீர்கள்.

RAMYA said...

\\
உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம்
\\

Super Super!!

அ.மு.செய்யது said...

எல்லாம் ஓக்கே தான் டீச்சர் !!!

//அருமையான யோசனை, அதை அருமையான முறையில் வெளிப் படுத்தி இருக்கின்றீர்கள்.//

திடீர்னு எதுக்காக‌ இவ்வ‌ள‌வு ம‌ரியாதை ???

இந்த‌ ம‌ரியாதை என‌க்கு ஏதோ இறுக்க‌த்தை ஏற்ப‌டுத்துகிற‌து.

வால்பையன் said...

//,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.//


இதில் நாதாரி என்ற வார்த்தை என்ன அர்த்ததை குறிக்கிறது!

பாராட்டுகிறதா, திட்டுகிறதா?

வால்பையன் said...

//ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, //

அடடே இப்படி ஒன்னு இருக்குதா!

சமத்துவம் இங்கே இருந்து தான் ஆரம்பிக்குது போல!

எனக்கு தெரிஞ்சி பஸ்ல இடிச்சதா பிரச்சனை வந்துருக்கு!
ஷேர் ஆட்டோவுல இடிச்சதா பிரச்சனையே வரலையே!

வால்பையன் said...

//ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, //

பேருந்துகளில் கூட அளவு உண்டு தெரியுமா?

அதெல்லாம் ஏன் தெரிய மாட்டிங்குது!

வால்பையன் said...

//மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம்//

சக மனிதனை போல் வாழ்வதற்கு அவ்வளவு கஷ்டமா?

அது உங்களுக்கு நிர்பந்தமா?

யாராவது கேளுங்கப்பா!

வால்பையன் said...

ஷேர் ஆட்டோ காலத்தால் தவிர்க்க முடியாத ஒன்று!

SUFFIX said...

மனுஷன் ஷேர் ஆட்டோ பயனத்தை ஜிலு ஜிலு பயனமாக்கிட்டார் போங்கோ!! ஆட்டோவில் படுதுதுகிட்டே யோசிச்சீங்களோ?

Unknown said...

Machi kalkkitta da........!
Article romba super irukku.....
Padikkumpothu un kooda Auto'la travel panna maathiri oru feeling....

Realy Great machi.....
Vaazthukkal......

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.//


இதில் நாதாரி என்ற வார்த்தை என்ன அர்த்ததை குறிக்கிறது!

பாராட்டுகிறதா, திட்டுகிறதா?
//

பாராட்ட‌வும் இல்லை.திட்ட‌வும் இல்லைங்க‌...அது ஒரு அடைமொழி.
இங்கே மோனைத் தொடைக்காக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் ப‌ட்ட‌து.

//எனக்கு தெரிஞ்சி பஸ்ல இடிச்சதா பிரச்சனை வந்துருக்கு!
ஷேர் ஆட்டோவுல இடிச்சதா பிரச்சனையே வரலையே!//

அட‌ ஆமால்ல‌...

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம்//

சக மனிதனை போல் வாழ்வதற்கு அவ்வளவு கஷ்டமா?

அது உங்களுக்கு நிர்பந்தமா?
//

நிர்ப‌ந்த‌மா.எந்த சோம்பேறி சொன்னதுங்க??..

அது ஒரு ஜாலியான‌ அனுப‌வ‌ம்ங்க‌....

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
ஷேர் ஆட்டோ காலத்தால் தவிர்க்க முடியாத ஒன்று!
//


வாஸ்த‌வ‌மான‌ பேச்சு !!!

அ.மு.செய்யது said...

//Shafi Blogs Here said...
மனுஷன் ஷேர் ஆட்டோ பயனத்தை ஜிலு ஜிலு பயனமாக்கிட்டார் போங்கோ!! ஆட்டோவில் படுதுதுகிட்டே யோசிச்சீங்களோ?
//

முதல் வருகைக்கு நன்றி ஷஃபி !!!

ஷேர் ஆட்டோல படுத்துகிட்டே யோசிச்சனா ?? அங்க உக்காரவே இடம் கிடைக்காது.
நீங்க வேற..

அ.மு.செய்யது said...

//Gymg said...
Machi kalkkitta da........!
Article romba super irukku.....
Padikkumpothu un kooda Auto'la travel panna maathiri oru feeling....

Realy Great machi.....
Vaazthukkal......
//

வாங்க ஜிம்ஜி.....

(எல்லாரும் பாருங்க‌ப்பா...என‌க்கு இவ‌ர் தான் ப்ளாக் உலகை அறிமுக‌ப் ப‌டுத்திய‌வ‌ர்.உருவாக்கியும் கொடுத்த‌வ‌ர் )

அ.மு.செய்யது said...

//
அத்திரி said...
அருமையான அனுபவம் செய்யது............. எனக்கும் பல நேரங்களில் ஷேர் ஆட்டோதான் கடவுள்..........//



வாங்க அத்திரி !!

உங்க பின்னூட்டத்த இப்ப தான் பார்த்தேன்..நன்றிங்க !!!

Suresh said...

சேஷர் ஆட்டோ கதைகள் நானும் சில பார்த்து இருக்கிறேன்..

//நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.
//

ஹா ஹா ;)

//தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி./

ஹா ஹா இது உண்மை தான் நானும் பர்த்து இருக்கிறேன்..

ஆண் பெண் பேதம் இல்லாமல் அமர செய்ததில் ஒரு பங்கு நம்ம சேஷருக்கு உண்டு

anbudan vaalu said...

sayed.....i've never traveled in a share auto...so your post was completely different and interesting for me....
:)))

anbudan vaalu said...

sayed.....i've never traveled in a share auto...so your post was completely different and interesting for me....
:)))

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
sayed.....i've never traveled in a share auto...so your post was completely different and interesting for me....
:)))
//

Thanks vaals !! So you r still searching for tamil font ?? hmm ??

anbudan vaalu said...

hmm.....yeah....
:(((

Unknown said...

machan

sorry da ippa than ida nan padichen. sorry for delay. its really nice da machan.

vijay.