Sunday, April 5, 2009

அந்த முதல் சந்திப்பு பாகம்-2பாக‌ம்-1 ப‌டிக்க இங்கே சொடுக்குக !!!!

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.

வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.

"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.

"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.

விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....

அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.

முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.

"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."

"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."

வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."

( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)

129 comments:

நட்புடன் ஜமால் said...

\\மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்\\

துவக்கமே அருமை.

நட்புடன் ஜமால் said...

என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை\\

யப்பா!

தூள்

நட்புடன் ஜமால் said...

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.\\

வர்ணனைகள் மிகவும் அருமை.

மீண்டும் ஒருமுறை(புதிதாக) காதலிக்க தூண்டுகிறது ;)

அ.மு.செய்யது said...

ஜ‌மால்..காக்கா !!!!

பதிவை எடிட் செய்து முடிப்பதற்குள் இவ்வளவு ஃபார்ஸ்ட்டா பின்னூட்டமா..??

வித்யா said...

வரிக்கு வரி அழகு தெறிக்கிறது:)

நட்புடன் ஜமால் said...

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!\\

அது இன்னாபா இவ்வளவு அழகையும் சொல்லிட்டு

ஆனாலும் அழகு

நட்புடன் ஜமால் said...

\\வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன\\

உனக்குள்ளேயேம் ஏதோ இருந்திருக்கு பாரேன்.

sayrabala said...

ayyo ayyo kolreye machan

ovvoru variyayum rasiththu nanainthen

supero super seiyathu

sayrabala said...

eppadi padicchaalum inikuthe

anega ma enakku sugar complaint thaan varapoguthu

புதியவன் said...

//மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,//

அருமையான ஆரம்பம்...
ஆமா, செய்யது சரியா
எண்ணிப் பார்த்தீங்களா
மூவாயிரத்து மூந்நூற்றைந்து தானா...?

புதியவன் said...

//முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.//

அழகை வெளிப்படுத்தியிருக்கும் விதம்
வெகு அழகு...

புதியவன் said...

//நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.//

மிகவும் ரசித்த வரிகள்...

புதியவன் said...

//கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.//

அருமையான உவமை செய்யது...

புதியவன் said...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."//

கோடி முத்தங்கள் பெற்றிருந்தாலும்
அந்த முதல் முத்தத்திற்கு
எப்போதும் முதலிடம் தான்...

முதல் முத்தத்தின் உணர்வுகளை
சொன்ன விதம் அழகு...

புதியவன் said...

//ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."//

முடித்திருக்கும் விதம் வெகு அழகு...

//( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)//

தொடரவே விரும்புகிறோம்...வாழ்த்துக்கள்
செய்யது...

நட்புடன் ஜமால் said...

\\இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."\\

யப்பா டேய்!

இப்படியெல்லாம் எழுதாத

ஆமா! சொல்லிப்புட்டேன்!

நட்புடன் ஜமால் said...

\\"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்\\

மிக்க அருமை.

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."\\

தலைப்பின் மேட்டர் இதுதானா

(இது இன்னும் தொடரவேண்டும் என்பதே எங்கள் அவா)

அபுஅஃப்ஸர் said...

தல ரெண்டாம் பாகம் வந்தாச்சா

அப்படியே உள்ளே போய்ட்டுவாரென்

அபுஅஃப்ஸர் said...

//மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் //

முதல் பால்லேயே கிளீன் போல்ட்

அபுஅஃப்ஸர் said...

//என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை./

பரவாயில்லை.. ஆமாம்.. போன்லே பேசி பேசி உருவத்தை மனதிலே வரைந்து இருந்ததால் சிரமமில்லாமல் இருந்திருக்கலாம் இல்லையா செய்யது

RAMYA said...

இப்போது உள்ளேன் அப்புறம் வாரேன் !!

அபுஅஃப்ஸர் said...

//45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.//

என்னாங்க படிச்சது கணிதமா என்ற சந்தேகம்

அபுஅஃப்ஸர் said...

//முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.
/

ஹே என்னா ஒரு கற்பனை திறன்யா உமக்கு

அபுஅஃப்ஸர் said...

//ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!
//

இன்னாங்க இது ஒன்னுமே பிரியலியே, அழகுமேலே உங்களுக்கு சந்தேகமா

அபுஅஃப்ஸர் said...

//நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.
//

கவிதைக்கே கவி சொல்லும் பெரிய கவிஞரய்யா நீர்

மிகவும் ரசித்த வரிகள்

Syed Ahamed Navasudeen said...

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்

இதைவிட அருமையான தொடக்கம் இருக்க முடியாது

Syed Ahamed Navasudeen said...

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

செய்யது, புகழ வார்த்தை கிடைக்கவில்லை. Excellent

Syed Ahamed Navasudeen said...

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன

அருமை

Syed Ahamed Navasudeen said...

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."

அழகான கெ(கொ)ஞ்சல்

Syed Ahamed Navasudeen said...

என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை

செய்யது, அசத்துறீங்க போங்க. தொடரட்டும் அடுத்தபாகம் சீக்கிரம்.

Syed Ahamed Navasudeen said...

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..

நாங்களும் நனைந்துவிட்டோம். வரிக்கு வரி, உங்கள் ரசனையும் காதலும் அதிகரிப்பது தெரிகிறது

குடந்தைஅன்புமணி said...

நடத்துங்க... நடத்துங்க...ம்!

அபுஅஃப்ஸர் said...

//அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.
///

மாட்டுனீங்க மவனே, இனி நீங்க பேசவெ முடியாது.. எல்லாம் ம் ம் ம் தான்

அபுஅஃப்ஸர் said...

//"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.//

எவ்வளவு நேரம் காத்திருப்பது.. போரவன் வரவனெல்லாம் ஒரு மாதிரியா பாத்துனு போரானுவோ அப்படினு நாலு நல்லகெட்ட வார்த்தையிலே திட்டுவிழுந்திருக்கும்.......

ம்ஹூம் மறைக்கிரீங்க‌

அபுஅஃப்ஸர் said...

//வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,/

அப்படியா! எட்டாவது அதிசியமா

அபுஅஃப்ஸர் said...

//வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக //

தல இன்னாதிது...ஸ்லாம்டாக் மில்லியனர் மாதிரி நீங்களும் ஒரு காலத்துலே பில்கேட்ஸ் விட 1$ அதிகம் சம்பாதிப்பீங்க என்ற நினைத்து இருக்கலாம்.. ஹி ஹி

எம்.எம்.அப்துல்லா said...

இன்னா சொல்லி இத்த பாராட்ரது???

டக்கராகீதுபா

:)

gayathri said...

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்

ithu enna puthu kanakku

அபுஅஃப்ஸர் said...

//ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.//

இது கலக்கல்

gayathri said...

ennaga anna unga love story appadiye kathiaya eluthutengala

அபுஅஃப்ஸர் said...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."
///

ம்ம் முதல் முத்தம் நித்தமும் மறக்கா....

gayathri said...

( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)//

kandipa thodaranum anna

ithuku apparam thana eaan da love pannamonu rendu perum fella panuvanga athelm kuda solluga anna

எம்.எம்.அப்துல்லா said...

காதல் உணர்வுகள்

வடசென்னை வாழ்வியல்

வரிக்கு வரி எதார்த்தம்

அய்யா...நீர் புலவர்.

gayathri said...

இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்

adaDA IVALAVU SEKARAM MUTHAM KODUTHUTANGALA APA NEEGA KODUTHU VACHAVANGA THAN

அபுஅஃப்ஸர் said...

//ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."
//

ஒஹ்ஹ் இதுதான் தலைப்பின் ரகசியமா, நான் வேறு ஒது கவிதையிலே எழுதினேன்.....

"மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு"

அபுஅஃப்ஸர் said...

//எம்.எம்.அப்துல்லா said...
காதல் உணர்வுகள்

வடசென்னை வாழ்வியல்

வரிக்கு வரி எதார்த்தம்

அய்யா...நீர் புலவர்.
//

வலையுலக அண்ணாத்தையே சொல்லியாச்சு அப்போ நாங்களும் புலவர்னு ஒத்துக்க வேண்டியதுதான்

அபுஅஃப்ஸர் said...

//gayathri said...
( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)//

kandipa thodaranum anna

ithuku apparam thana eaan da love pannamonu rendu perum fella panuvanga athelm kuda solluga anna
///

ஹஹா ரிப்பீட்டேய்

அபுஅஃப்ஸர் said...

//ஒரு வேளை தொட‌ர‌லாம்...)/

ஏன் ஒரு வேளை ஒரு 20 தபா தொடருங்க தல‌

அபுஅஃப்ஸர் said...

//அ.மு.செய்யது said...
ஜ‌மால்..காக்கா !!!!

பதிவை எடிட் செய்து முடிப்பதற்குள் இவ்வளவு ஃபார்ஸ்ட்டா பின்னூட்டமா..??
//

கம்பன் எக்ஸ்பிரஸ்

அபுஅஃப்ஸர் said...

செய்யது பதிவுலே 50 போட்டாச்சி

வாழ்த்துக்கள் செய்யது

நல்லாயிருந்நது உங்க எழுத்தின் நடை, கவிதை, உவமை எல்லாமே

rose said...

மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு

rose said...

என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.
\\

கண்டுபிடிப்பது ஈஸிதான் ஆனால் கலட்டிவிடுறதுதானே கஷ்டம்

rose said...

மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."

( ஒரு வேளை தொட‌ர‌லாம்
\\

வரிகள் அழகு.கண்டிப்பாக தொடருங்கள்

rose said...

நட்புடன் ஜமால் said...
முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.\\

வர்ணனைகள் மிகவும் அருமை.

மீண்டும் ஒருமுறை(புதிதாக) காதலிக்க தூண்டுகிறது ;)

\\
உங்க மனைவியை தானே?

rose said...

அ.மு.செய்யது said...
ஜ‌மால்..காக்கா !!!!

பதிவை எடிட் செய்து முடிப்பதற்குள் இவ்வளவு ஃபார்ஸ்ட்டா பின்னூட்டமா..??
\\
அவரு எப்போதுமே அப்படிதான் சாப்பிட போனாகூட கையில லேப்டப் இருக்கும்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.
///

மாட்டுனீங்க மவனே, இனி நீங்க பேசவெ முடியாது.. எல்லாம் ம் ம் ம் தான்

\\
நல்ல அனுபவம்

rose said...

gayathri said...
மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்

ithu enna puthu kanakku

\\
ithu avaroda kanakku gaya

அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.
///

மாட்டுனீங்க மவனே, இனி நீங்க பேசவெ முடியாது.. எல்லாம் ம் ம் ம் தான்

\\
நல்ல அனுபவம்
//

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஹா ஹா

அபுஅஃப்ஸர் said...

//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
///

நேர்லே பாத்தாமாதிரி சொல்றீங்களே, இதுவும் அனுபவம்னு எடுத்துக்கலாமா

அபுஅஃப்ஸர் said...

//rose said...
என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.
\\

கண்டுபிடிப்பது ஈஸிதான் ஆனால் கலட்டிவிடுறதுதானே கஷ்டம்
//

இது எங்கேயோ இடிக்குதே?

ஃபோர்க்குக்கு பதிலா லேப்டாப்லே எடுத்து சாப்பிடுவாரோ...

இன்னாப்பா இது ஒரே டமாஷாக்கீது

Syed Ahamed Navasudeen said...

அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.
///

மாட்டுனீங்க மவனே, இனி நீங்க பேசவெ முடியாது.. எல்லாம் ம் ம் ம் தான்

\\
நல்ல அனுபவம்
//

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஹா ஹா

April 6, 2009 2:03 AM
Blogger அபுஅஃப்ஸர் said...

//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
///

நேர்லே பாத்தாமாதிரி சொல்றீங்களே, இதுவும் அனுபவம்னு எடுத்துக்கலாமா

2 கிளாஸ் கட் அடிச்சிட்டு போனா அதுக்குள்ளே இங்க சாக்பீஸ், டஸ்டர் எல்லாம் பறக்குதுப்பா

அபுஅஃப்ஸர் said...

//\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
///

நேர்லே பாத்தாமாதிரி சொல்றீங்களே, இதுவும் அனுபவம்னு எடுத்துக்கலாமா

2 கிளாஸ் கட் அடிச்சிட்டு போனா அதுக்குள்ளே இங்க சாக்பீஸ், டஸ்டர் எல்லாம் பறக்குதுப்பா///

ஹி ஹி இதையெல்லாம் புடிக்கிறது யாரு

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் said...
\\இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."\\

யப்பா டேய்!

இப்படியெல்லாம் எழுதாத

ஆமா! சொல்லிப்புட்டேன்!
//

ஏன் ஏன் ஏன் இப்படியெல்லாம்

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
///

நேர்லே பாத்தாமாதிரி சொல்றீங்களே, இதுவும் அனுபவம்னு எடுத்துக்கலாமா

\\
நேர்ல பார்த்திருக்கேன்ப்பா. நீங்க பத்தி விடாதிங்க அபு

rose said...

அபுஅஃப்ஸர் said...
//rose said...
என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.
\\

கண்டுபிடிப்பது ஈஸிதான் ஆனால் கலட்டிவிடுறதுதானே கஷ்டம்
//

இது எங்கேயோ இடிக்குதே?

\\
உங்கள மாதிரி நிறைய பேற கலட்டிவிட்ட அனுபவம்தான்.எப்புடி?

rose said...

Syed Ahamed Navasudeen said...
அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.
///

மாட்டுனீங்க மவனே, இனி நீங்க பேசவெ முடியாது.. எல்லாம் ம் ம் ம் தான்

\\
நல்ல அனுபவம்
//

கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க ஹா ஹா

April 6, 2009 2:03 AM
Blogger அபுஅஃப்ஸர் said...

//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
///

நேர்லே பாத்தாமாதிரி சொல்றீங்களே, இதுவும் அனுபவம்னு எடுத்துக்கலாமா

2 கிளாஸ் கட் அடிச்சிட்டு போனா அதுக்குள்ளே இங்க சாக்பீஸ், டஸ்டர் எல்லாம் பறக்குதுப்பா

\\
வாங்க தலைவா நீங்க அடிக்கடி கட் அடிக்குறதாலதான் இங்க டஸ்டர்லாம் பறக்குது

அபுஅஃப்ஸர் said...

//rose said...
அபுஅஃப்ஸர் said...
//rose said...
என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.
\\

கண்டுபிடிப்பது ஈஸிதான் ஆனால் கலட்டிவிடுறதுதானே கஷ்டம்
//

இது எங்கேயோ இடிக்குதே?

\\
உங்கள மாதிரி நிறைய பேற கலட்டிவிட்ட அனுபவம்தான்.எப்புடி?
///

அப்படியா... சொல்லவே இல்லே.. ஹி ஹி ஹி

’டொன்’ லீ said...

//இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."
//

இது ஒன்றே போதும்...ஐ மீன்,,,கவிதை...ஒன்றே கதையை சொல்லிவிடுகின்றது...

அழகு....:-)))

’டொன்’ லீ said...

//ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."
//

haahaa...:-))))I like it...

ஆதவா said...

இணையத்தில் உலாவாத காலத்தில் எனது டைரிகளில் நான் எழுதிவைத்த மார்கழி காதல் நினைவுக்கு வருகிறது! காதலும் கவிதையும் கதையுமாக ஒன்றொண்டொன்றூ சண்டையிட்டு நாந்தான் பெரியவன் என்று எக்காளமிட்டபடி செல்லும்!!!

உங்கள் முதல், இரண்டாவது பாகம் எனக்கு அப்படியான நினைவைத் தூண்டியிழுத்தது! காதல் கவிதைகளை நீண்டி எழுதிய காதல் கதையோ என்று தோன்றும்படியாக எழுத்தும் இருக்கிறது.

எடுத்தவுடனே மடமடவென்று கொட்டிவிடாமல் மெல்ல ஆழ்ந்து ஒவ்வொரு நொடியும் நிதானித்து நொடிகளைப் பிளந்து அதனுள் காதல் திரவத்தை ஊற்றி... எழுதியிருக்கிறீர்கள்!!

அதென்னங்க மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகள்??? சும்மா எண்ணிக்கையா இல்லை ஏதாவது உள்ளர்த்தத்தைப் பதுக்கி வைத்திருக்கிறீர்களா?

வாழ்வியலை இரண்டாகப் பிளந்தவள் கவனமாக எடுத்தாளப்பட்ட பகுதி.. அழகான சொல்மாலை! இதைப் போன்றே மற்றொன்று சுடலைவிற்கும் கூம்பு காகிதம் அழகான பார்வை!!!

ஒருவேளை அல்ல... அடுத்த வேளையே நிச்சயமாக தொடருங்கள்!!!

வாழ்த்துகள்!!

அத்திரி said...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."//

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........ கவிதை ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் போலாம் ரைட்

அ.மு.செய்யது said...

//வித்யா said...
வரிக்கு வரி அழகு தெறிக்கிறது:)
//

நன்றி வித்யா..வருகைக்கு...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.\\

வர்ணனைகள் மிகவும் அருமை.

மீண்டும் ஒருமுறை(புதிதாக) காதலிக்க தூண்டுகிறது ;)
//

இதெல்லாம் செல்லாது செல்லாது....

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!\\

அது இன்னாபா இவ்வளவு அழகையும் சொல்லிட்டு

ஆனாலும் அழகு
//

சும்மா....ஒரு வெளம்பரம் !!!!

அ.மு.செய்யது said...

//sayrabala said...
ayyo ayyo kolreye machan

ovvoru variyayum rasiththu nanainthen

supero super seiyathu
//

வாங்க சாய்ரபாலா..

அந்த அளவுக்கா நான் சக்கரை போட்டிருக்கேன்.

ஆமா..நீங்க நமீதா ரசிகரா ( மச்சான்ஸ் !!!!! )

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,//

அருமையான ஆரம்பம்...
ஆமா, செய்யது சரியா
எண்ணிப் பார்த்தீங்களா
மூவாயிரத்து மூந்நூற்றைந்து தானா...?
//

ஆமாம் புதியவன்...எண்ணிக்கை சரிதான்..

//அழகை வெளிப்படுத்தியிருக்கும் விதம்
வெகு அழகு...//

நன்றி புதியவன்.

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."//

கோடி முத்தங்கள் பெற்றிருந்தாலும்
அந்த முதல் முத்தத்திற்கு
எப்போதும் முதலிடம் தான்...
//

அது என்னவோ உண்மை தான்..நினைவுகளில் அது ஒரு பொக்கிஷம்.

அ.மு.செய்யது said...

//(இது இன்னும் தொடரவேண்டும் என்பதே எங்கள் அவா)//

நிச்சயமாக தொடருகிறேன்.ஜமால் காக்கா !!!!!!!

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை./

பரவாயில்லை.. ஆமாம்.. போன்லே பேசி பேசி உருவத்தை மனதிலே வரைந்து இருந்ததால் சிரமமில்லாமல் இருந்திருக்கலாம் இல்லையா செய்யது
//

இல்லீங்க...என்னவளாகி முதல் சந்திப்புன்னு தான எழுதியிருக்கேன்.

//
முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும்
//

இந்த‌ வ‌ரிக‌ளை ப‌டிக்க‌வில்லையா அபு ?????

அ.மு.செய்யது said...

//RAMYA said...
இப்போது உள்ளேன் அப்புறம் வாரேன் !!
//

வெளிய வாங்க டீச்சர் !!!!

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.
/

ஹே என்னா ஒரு கற்பனை திறன்யா உமக்கு
//

ஹா...ஹா..கற்பனை திறனா...உள்ளதை சொன்னேங்க..!!!

( ஆனாலும் இது புனைவே )

அ.மு.செய்யது said...

//Syed Ahamed Navasudeen said...
அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

செய்யது, புகழ வார்த்தை கிடைக்கவில்லை. Excellent
//

நன்றி நவாஸ்...அடித்து ஆடியதற்கு !!!!!

அ.மு.செய்யது said...

// gayathri said...
( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)//

kandipa thodaranum anna

ithuku apparam thana eaan da love pannamonu rendu perum fella panuvanga athelm kuda solluga anna
//

வருக காயத்ரி !!!!! முழுக்க முழுக்க இது ஒரு புனைவு சித்திரமே ( அட நம்புங்கப்பா )

ஆல்ரெடி ஃபீல் பண்ணியாச்சி !!! தொடரலாம்னு சொன்னது பதிவை மட்டுமே !!!

அ.மு.செய்யது said...

//Syed Ahamed Navasudeen said...
ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..

நாங்களும் நனைந்துவிட்டோம். வரிக்கு வரி, உங்கள் ரசனையும் காதலும் அதிகரிப்பது தெரிகிறது
//

ரசனை மட்டும் தான் இன்னும் இருக்கிறது சையத் நவாஸ்...

நன்றி உங்கள் மேலான வருகைக்கும் கருத்துகளுக்கும்....!!!!!

அ.மு.செய்யது said...

//குடந்தைஅன்புமணி said...
நடத்துங்க... நடத்துங்க...ம்!
//

வாங்க குடந்தை அன்புமணி !!!!!

தவறாமல் பதிவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது !!!!

அ.மு.செய்யது said...

//gayathri said...
இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்

adaDA IVALAVU SEKARAM MUTHAM KODUTHUTANGALA APA NEEGA KODUTHU VACHAVANGA THAN
//

அட..திரும்ப திரும்ப நீங்க உண்மை சம்பவம் மாதிரியே எஃபெக்ட் கொடுக்கறீங்களே !!!!!!

யார்னா சொல்லுங்கப்பா காயத்ரிக்கு !!!!

( வருகைக்கும் ஷாட் கும்மிக்கும் நன்றி காயத்ரி !!!!!!!!!!!!! )

அ.மு.செய்யது said...

////எம்.எம்.அப்துல்லா said...
காதல் உணர்வுகள்

வடசென்னை வாழ்வியல்

வரிக்கு வரி எதார்த்தம்

அய்யா...நீர் புலவர்.
//

அண்ணே !!!!!! வாங்க...உண்மையா தான் சொல்லுறியளா ????

அ.மு.செய்யது said...

// அபுஅஃப்ஸர் said...
//ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."
//

ஒஹ்ஹ் இதுதான் தலைப்பின் ரகசியமா, நான் வேறு ஒது கவிதையிலே எழுதினேன்.....

"மழைக்கு ஒதுங்கியே இருக்கிறேன் தூரல் நின்ற பின்னும் வரும் வாசனையா உன் வரவு"
//

இதுவும் நல்லா தானே இருக்கு அபு !!!!

விடாமல் ஆடி ஆஃப் அடித்ததற்கு உங்களுக்கு ஆப்பாயில் ஆம்லெட் பார்சல்.

அ.மு.செய்யது said...

//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
//

ஆஹா..நீங்களும் சென்னை தானா..

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க...

அ.மு.செய்யது said...

//rose said...
என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.
\\

கண்டுபிடிப்பது ஈஸிதான் ஆனால் கலட்டிவிடுறதுதானே கஷ்டம்
//

அனுபவமா ரோஸ் ???????

அ.மு.செய்யது said...

//rose said...
gayathri said...
மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்

ithu enna puthu kanakku

\\
ithu avaroda kanakku gaya
//

ஆமாங்க..கூட்டி கழிச்சி பாருங்க..கணக்கு சரியா வரும்.

நன்றி ரோஸ்...உங்கள் கும்மி மழைக்கு !!!

அ.மு.செய்யது said...

//’டொன்’ லீ said...
//இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."
//

இது ஒன்றே போதும்...ஐ மீன்,,,கவிதை...ஒன்றே கதையை சொல்லிவிடுகின்றது...

அழகு....:-)))
//

நன்றி !!!!! டொன்லீ...( விட மாட்டீங்களே !!! )

அ.மு.செய்யது said...

வாங்க ஆதவன்..

முழுக்க முழுக்க பதிவுகளை எழுதினால் படிப்பவர்களுக்கு சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும் என்பதனால் இடையிடையே கவிதைகளை செருக நேரிட்டது.

என்னுடைய பதிவுகளுக்கும் கவிதைகளுக்கும் நீங்களும் புதியவன் மற்றும் அபுஅஃப்ஸர் போன்ற மூத்த வல்லுனர்கள் தான் முன் மாதிரிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வ‌ருகைக்கும் சீறிய‌ ஊக்க‌த்திற்கும் ந‌ன்றி ஆத‌வன்.

( ஆமா.குசும்ப‌னின் ஆண்க‌ளின் குளிய‌ல‌றை ப‌டித்தீர்க‌ளா ?? )

அ.மு.செய்யது said...

வாங்க‌ அத்திரி !!!!!

வ‌ருகைக்கு நன்றி த‌ல‌ !!!!

அ.மு.செய்யது said...

//அதென்னங்க மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகள்??? சும்மா எண்ணிக்கையா இல்லை ஏதாவது உள்ளர்த்தத்தைப் பதுக்கி வைத்திருக்கிறீர்களா?//

எந்த உள்ளர்த்தமும் இல்லை ஆதவன்.

மனதில் பறக்கும் பட்டாம்பூச்சிகளை குறிப்பதற்காக ஒரு மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை. அவ்வளவே !!!!!!!

நசரேயன் said...

நல்லா இருக்கு..கண்டிப்பா தொடரனும்

அ.மு.செய்யது said...

வாங்க நசரேயன்....கண்டிப்பாக தொடருகிறேன்.

அப்புறம் எப்ப கிளம்புறீங்க இந்தியாவுக்கு ??

sakthi said...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."//
wow

sakthi said...

first 100 in ur blog

sakthi said...

அ.மு.செய்யது said...

வாங்க ஆதவன்..

முழுக்க முழுக்க பதிவுகளை எழுதினால் படிப்பவர்களுக்கு சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும் என்பதனால் இடையிடையே கவிதைகளை செருக நேரிட்டது.

என்னுடைய பதிவுகளுக்கும் கவிதைகளுக்கும் நீங்களும் புதியவன் மற்றும் அபுஅஃப்ஸர் போன்ற மூத்த வல்லுனர்கள் தான் முன் மாதிரிகள் என்று சொன்னால் அது மிகையாகாது.

வ‌ருகைக்கும் சீறிய‌ ஊக்க‌த்திற்கும் ந‌ன்றி ஆத‌வன்.

( ஆமா.குசும்ப‌னின் ஆண்க‌ளின் குளிய‌ல‌றை ப‌டித்தீர்க‌ளா ?? )

hahahahaha

nan padichen

hahahaaha

நட்புடன் ஜமால் said...

முதல் 100க்கு வாழ்த்துகள் சக்தி.

ஜகதீஸ்வரன் said...

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே...

very very supperrrrrrrr.....
with love
jagadeeswaran
http://jagadeesktp.blogspot.com/

rose said...

அ.மு.செய்யது said...
//rose said...
மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்
\\
ஏன்னா மற்ற ரயில் நிலையத்தைவிட மீனம்பாக்கத்துலதானே கூட்டம் குறைவு
//

ஆஹா..நீங்களும் சென்னை தானா..

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லாதீங்க...

\\
ok ok

பித்தன் said...

//முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.//

இன்னமா சொல்லிகின...

//நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.//

நெஞ்ச டச் பண்ணிடபா,, வாரணம் ஆயிரம் சூரியா மாதரி நெஞ்ச குத்திகினே போனியா ?

//ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌"//
என்ன மணிரத்தினம் பட டைலாக் மாதரி இருக்கு (அலைபாயயுதே வந்தப்ப நடந்த சந்திப்பா ?)

//காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.//

நானும் தான் பஸ்ட்டு ஸ்டாண்டட் ல இருந்து ட்ரை பண்ணுறே.... பதினஞ்சி கழுத வயசாச்சி.. இன்னும் கிடைகுல (அய்யோ எனோட பேரன் வரான்)

//இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.//

கனவுகளிலே குடித்தனம் நடத்தியவனுக்கு இது என்ன புதுசா ? நம்மலாண்டயயும் நிறையா சரக்குகிய்து...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........." //

ஐயோ ஆண்டவா, ஏண்டா இந்த மாதரி ப்லோக் எல்லாம் படிக்க வச்சி.. என் வைத்தேரிச்சள கிளப்புற...

//ஒரு வேளை தொட‌ர‌லாம்...//

சோக்காகிதுபா... கண்டிப்பா எழுதுபா....

ஒரே பீலிங்க்ஸ்சா பூடுசிபா.... எனக்குதான்.....

குடுகுடுப்பை said...

என்னாதுப்பா ஒரே பட்டாம்பூச்சியா இருக்கு. மருந்து எதுனா வேணுமா சார்

அ.மு.செய்யது said...

வாங்க சக்தி !!!!!

நூறு போட்டதுக்கு வாழ்த்துக்கள்...

நன்றி ஜகதீஸ்வரன் !!!!!

நன்றி பித்தன் ( பிரிச்சி மேய்ஞ்சிட்டியே நைனா .....!!!!)

நன்றி குடுகுடுப்பை..( அந்த நோயிலிருந்து குணமாகி பல நாள் ஆச்சுங்க..சோ மருந்து தேவையில்ல )

லவ்டேல் மேடி said...

ஆஹா......!! ஓஹோ....!!!
நெம்ப அருமை........!!!!!!
நெம்ப உருக்கமான கதை.......!!!!
கத நெம்ப டச்சு பண்ணி போட்டுருச்சு என்னைய .....!!!
ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......!!!!!!

alwaysdrmz said...

//"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........." //

ரொம்ப அருமை...திரும்ப திரும்ப படித்தேன்...

/( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)//

கட்டாயம் தொடரவும்..

பித்தன் said...

//பாதிக்கப் படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்***
//

இதை இன்று தான் பார்க்க நேர்ந்தது....

நல்ல கருத்து....

மனிதன் என்பதையும் விடுத்து.... அனைத்து உயிர்களையும் இவ்வாறு பார்க்க வேண்டும்... ஓர் அறிவுள்ள உயிராக இருந்தாலும் சரி... ஓராயிரம் அறிவுள்ள உயிராக இருந்தாலும் சரி....

என் வலைத்தளத்தில் இருந்து உங்களுக்காக :)

"சாதிமத வித்துக்கொண்டு
தேசமொழி பித்துகொண்டு
சந்தோசம் நீதேட
சமதர்மம் செத்துடுமே"

-புலவர் பித்தன்

தாரணி பிரியா said...

வரிக்கு வரி ரசிச்சு படிச்சேன் செய்யது, தூள் கிளப்பிறீங்க‌

தாரணி பிரியா said...

கவிதைகளும் வர்ணனைகளும் அழகு செய்யது. தொடருங்க காத்திருக்கிறோம்

அ.மு.செய்யது said...

வாங்க லவ்டேல் மேடி..

இதோட விட்டீங்களே !!! அடேய் டிஸ்க் பிரேக் மண்டையானு கூப்பிடாம..!!!!

வருகைக்கு மிக்க நன்றி !!!!

வாங்க alwaysdrmz !!!

கண்டிப்பாக தொடருகிறேன்.

நன்றி புலவர் பித்தனே !!!

உங்கள் கருத்தை நானும் வழிமொழிகிறேன்.

வாங்க..தாரணி பிரியா..

வருகைக்கு மிக்க நன்றி !!!!!

cute baby said...

ஆஹா நல்ல சந்திப்பு தான்

cute baby said...

தொடரட்டும் உங்கள் சந்திப்பு என் வாழ்த்துக்கள்

ஜி said...

Chanceye illa.. ovvoru variyum rasichu rasichu vaasichen...

ஜி said...

eththana thadavathaan intha posta padikirathu.. ovvoru thadavaiyum puthusaa feel panren.. sema kalakkal...

அ.மு.செய்யது said...

நன்றி ஜி !!!!!!!

நன்றி க்யூட் பேபி !!!!!

anbudan vaalu said...

sayed.........

நல்ல சொல்லாடல்....வாழ்த்துக்கள்...
:)))

ஆதிமூலகிருஷ்ணன் said...

தொடர்பதிவுக்கான அழைப்பு இருக்கிறது.. ஏற்பீர்கள் என நம்புகிறேன்.

லவ்டேல் மேடி said...

அட.... எண்ணுங்கோ ....!! மருவுடியும் பதிவு போடவே இல்ல.......!! நெம்ப பிசியா...........?????

Suresh said...

இதுவும் ;-) உன்னோடது தானே ஹா ஹ

விக்னேஷ்வரி said...

வார்த்தைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக எடுத்துக் கோர்க்கப்பட்டுள்ளன. மிக அழகு. தொடருங்களேன்...

நெல்லைத்தமிழ் said...

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.

நல்ல வரிகள்... உங்கள் வரிகளில் இருந்த கவித்திறன் கண்டு பிரம்மித்தேன்.
nellaitamil

sankarfilms said...

hi
very nice article

அமிர்தவர்ஷினி அம்மா said...

நான் ரொம்ப நாளாவே நெனைப்பேன், இவர் ஏன் ப்ளாகுக்கு மழைக்கு ஒதுங்கியவைன்னு வெச்சிருக்காரு அப்டீன்னு

//ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."//

இப்பத்தான் புரியுது

ஒரு வேளையில்ல, இது மாதிரியே தொடருங்க. நல்லா வந்திருக்கு

meemsha said...

பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது..................

Romba etharthamana unmai

Bee'morgan said...

ஆகாகா.. தல... என்னாமா உருகறீங்க.. :) சும்மாதான் படிக்க ஆரம்பிச்சேன்.. ஆனா, கடைசியில் பின்னிட்டீங்க போங்க.. ,இனி தொடர்ந்து வரவேண்டும்..

JAGADEESWARAN N said...

அருமை.
-jagadeeswaran