Thursday, February 5, 2009

கவிதை எழுதுவது எப்படி ??

முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.

கடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி
"................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...

ஆனா ஒரு க‌ண்டிச‌ன்...

இந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.

எல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....

எதைப் பற்றி எழுதுவது ??? மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......

கழுத கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.
ஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.

கண்ணீர்.......oooo

அழுகை......(ஆஹா...)

பிரிவு.......

வலி.........(ஆஹா...)

வ‌ருது ..வ‌ருது....விடாத‌...( அதே ப‌ட்சி என்க‌ரேஜ் செய்ய ஆர‌ம்பித்த‌து )

வான‌ம்...

நீல‌ம்...ம்ம்ம்ம்ம்...

நாற்ற‌ம்....
....
...( கொட‌ல‌ பொற‌ட்டுதுடா சாமி...!!!!!!!)
என்னாச்சு....யாருப்பா அது...எங்கோ பெருச்சாளி செத்த‌ வாடை மூக்கினுள் உட்புகுந்து மூளையை க‌டித்து குத‌ற‌ ஆர‌ம்பிக்க‌..அலுவல‌க‌த்தில் ஒரு க‌ண‌வான் த‌ன் காலுறையை க‌ழ‌ற்றி வைத்ததால் ஏற்ப‌ட்ட‌ விஷ‌வாயு தான் அது என்று தெரிவிக்க‌ப் ப‌ட்டு அதிருப்தி வெளியிடப்ப‌ட்ட‌து.

நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, அவர் இட்ட சாபம் தான் பிற்பகலில் விளைகிறது என மனம் நொந்து கொண்டு....

மீண்டும் எழுத ஆரம்பிக்கிறேன்...

"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது"


அப்படினு அடுத்த லைன் எழுத, பக்கத்தில் அமர்ந்திருந்த பட்சியின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

சரி...முடிஞ்சி போன பத்தி எதுக்கு பேசுவானேன்..கொஞ்சம் கமர்ஷியலா யோசிங்க பாஸ்...எப்படி...நம்ம தர்மு சிவராமு எழுதியிருந்தாரே !!!

"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு
"

இப்படி சிவராமு யோசிக்கலாம்..நாம் யோசித்தால் கமர்ஷியல் எந்த கோணத்தில் போகும் என்று உமக்கு தெரியாதா ?? ஆரம்பிக்கும்போதே ரிஸ்க் எடுப்பது உசிதமல்ல‌ என்று அந்த சூனியக்கார பட்சிக்கு விடையளித்தேன்."வேண்டுமென்றால் ஒரு க‌ண்காட்சி க‌விதை எழுத‌லாம்."

க‌ண்காட்சி க‌விதையென்ப‌து புதுக்க‌விதையில் ஒரு வ‌கை.இங்கு க‌விதையின் க‌ருத்திய‌லோடு அத‌ன் உருவ‌மும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகிற‌து.க‌விதையில் கூற‌வ‌ரும் பொருளும் உருவ‌மும் இறுகிச் செறிந்திருக்க‌ வேண்டும்.பொருளையும் உருவ‌த்தையும்
பிரிக்க‌ முடியாத‌ப‌டி பிணைந்திருக்க‌ வேண்டும்.

எடுத்துக் காட்டாக எஸ்.வைத்தீஸ்வரனின் "ஆசை" என்ற கவிதையைச் சொல்லலாம்.

"முதுகு வளர‌
நீ
ண்
டு
விட்ட‌
கூந்தலுக்கு
மேலும் வளரத்
துடிதுடிப்பென்ன..
"

ஆகவே, உள்ளடக்கத்தின் ஆதிக்கம் உருவத்தில் புலப்பட வேண்டும்.வெகு சமீபத்தில் நம் தேவா எழுதிய‌ கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! கண்காட்சி வகை கவிதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.

என்று நாம் அதன் சாராம்சங்களை விளக்க,(ப‌ட்சியின் புற‌த்திலிருந்து ஒரு ஆங்கில ப‌ட‌த்தின் ட்ரெயிலர் ஓடிக்கொண்டிருந்த‌து..க்க்க்கொர்,...ர்ர்ர்ர்ர்....தூங்கிட்டானா ??)

ஆஹா..இது நமக்கு ஒத்துவரக்கூடும் என நானும் பட்சியும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி,மீண்டும் நம் கற்பனை வண்டியின் ஆக்ஸிலரேஷனைத் திருக்கினோம்.டைரியை க‌க்கத்தில் இறுக்கிக் கொண்டு,ரத்த வெறியோடு யோசித்துக் கொண்டே சென்று என்னைய‌றியாம‌ல் லேடிஸ் ரெஸ்ட் ரூமின் க‌த‌வைத் திற‌ந்து வைத்தேன்.

SORRY FOR THE BREAK !!!!!!!!!!!!!

ந‌ல்ல‌ வேளை.அங்கே ஜீன்ஸ் போட்ட‌ பைங்கிளி ஒன்று ம‌ட்டும் க‌ண்ணாடி முன்பு சோப்பு போட்டு முக‌ம் க‌ழுவிக் கொண்டிருந்த‌ ப‌டியால்,ம‌யிரிழையில் நாம் உயிர் த‌ப்பினோம்.( எங்க‌ அந்த‌ ப‌ட்சி ப‌ய‌ புள்ள....எஸ் ஆயிட்டானா...)அதோடு அபசகுனம் கருதி அந்த கண்காட்சி கவிதை முயற்சியும் கைவிடப்பட்டது.

ச‌ரி..க‌டைசியாக‌ யாருக்கும் புரியாம‌ல்,உண‌ர்த்தும் முறையில் வித்தியாசம் காண்பித்து..நிறைய‌ காம்பிளக்ஸ் குறிப்புகளைச்செருகி, ஒரு ப‌டிம‌க் க‌விதையெழுத‌லாம் என இறுதி முடிவு நானே எடுத்தேன்.ச‌ர‌வ‌ண‌குமார்,அய்ய‌னார் இவ‌ர்க‌ளெல்லாம் ப‌டிம‌க் க‌விதையெழுதுவ‌தில் கை தேர்ந்த‌வ‌ர்க‌ள் என்பதை க‌ருத்தில் கொள்ள‌வேண்டும்.என‌வே,அவர்க‌ளின் பாதிப்பு வ‌ர‌க்கூடாது என்ப‌தில் க‌வ‌ன‌மாக‌ இருந்து செய‌ல்ப‌ட‌ வேண்டும்.

ஸ்டார்ட் மீமீசிக்...

"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"


பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

ச‌ரி க‌விதையெழுதுவ‌து எப்ப‌டி ??

அது தெரிஞ்சிருந்தாத்தான் ஒரு கவிதைய போட்டிருப்ப‌ம்ல‌..இவ்ளோ பெரிய‌ விள‌க்க‌ம் எதுக்குன்ன‌ ??(போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! )

107 comments:

வால்பையன் said...

பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி "

எறிந்தேன் காகிதத்தை.

அம்புட்டு தான் கவிதை!

வால்பையன் said...

//நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, //

அது நீங்க தானா?

வால்பையன் said...

//அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது//

அழுத நாலத்தான் எலி செத்து போச்சோ என்னவோ!

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி "

எறிந்தேன் காகிதத்தை.

அம்புட்டு தான் கவிதை!
//

ஆயிரம் பொற்காசுகள் பார்சல்லாம் பண்ண முடியாது..

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//நமது வால்பையனின் ஒரு பதிவில் "பெருச்சாளி" என்ற பெயரில் அனானியாக‌ சென்று பின்னூட்டியது நினைவுக்கு வர, //

அது நீங்க தானா?
//

பெருச்சாளி மட்டுமல்ல..அதுக்கு கீழ போட்ட சுண்டெலியும் நாந்தானுங்கோ !!!!!

வால்பையன் said...

//கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு//

இது கமர்ஷியல் இல்லை

”காமா”ர்ஷியல்

வால்பையன் said...

உங்க படிமக்கவிதை நல்லாருக்கு

அதாங்க தாவூ தீருது!

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...

அழுத நாலத்தான் எலி செத்து போச்சோ என்னவோ! //

அதே..அதே....

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...

இது கமர்ஷியல் இல்லை

”காமா”ர்ஷியல்
//

அத நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்..

இராகவன் நைஜிரியா said...

வணக்கம்..

கிட்டாதியின் வெட்டன மற கேஸ்ப்பா நாங்கெல்லாம். நமக்கும் கவிதைக்கும் ரொ....ம்....ப..... தூ...ர...ம்... அதனால அது கிட்ட எல்லாம் போய் வம்பு வச்சுகிறது இல்ல. (சீ.. சீ ... இந்த பழம் புளிக்கும்)

இராகவன் நைஜிரியா said...

வணக்கம் நண்பர் செய்யது அவர்களே...

நலம். நலமறிய அவா.

ரொம்ப கஷ்டப்பட்டு கவித எழுத முயற்சி செய்துள்ளீர்கள். அதனால் நலம் விசாரித்து ஒரு கடிதம்.

அங்கு உங்கள் நலனுக்கு மறு மெயில் அனுப்பவும்.

என்றென்றும் அன்புடன்

இராகவன்

இராகவன் நைஜிரியா said...

நண்பர் செய்யது அவர்களே...

ஆரம்பத்தில் இருந்து 3 தடவை படிச்சுட்டேன்.

ஆனா பாரு அம்பி, அதுல ஒன்னுமே புரியல?

ஏண்டாப்பா இது மாதிரி எல்லாம் டிரை பண்ணி கஷ்டப்படுகின்றாய்.

சரிடாப்பா எதோ சொல்ல வேண்டியது என் கடமை, சொல்லிட்டேன்.. அப்புறம் உன் சமர்த்து..

நசரேயன் said...

/*பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி */
என்ன சோப்பு போட்டீங்க மூளைக்கு

நட்புடன் ஜமால் said...

ஏண்டா டேய் ..........

இது கூட ஒரு கவிதைக்கு தலைப்பு வைக்கலாம்

நசரேயன் said...

/*"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு"
*/
என்ன சப்புன்னு முடிச்சி பிட்டீங்க

நட்புடன் ஜமால் said...

இப்படி ஒரு கொலைய பன்னிப்புட்டு

ஆரம்பத்திலேயே என் பெயரை போட்டு

அப்படி என்னா தம்பி உனக்கு இவ்வளவு பாசம்...

நட்புடன் ஜமால் said...

மூளைய கசக்குனியா ...

பொய் சொல்லாத ...

நசரேயன் said...

/*ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"*/
உதயம் ன்னா நாள் இடம் தான் ஓசியிலே படம் பார்க்கலாம்

நட்புடன் ஜமால் said...

\\"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு" \\

நிறைய பேப்பர் கிழிச்சி போட்டியிள அதான் போல

நட்புடன் ஜமால் said...

\\"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"\\

நல்லா தானே இருக்கு ...

நட்புடன் ஜமால் said...

\\போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌.\\

உன் பதிவையா ...

நட்புடன் ஜமால் said...

Wipro project seriousஆ வேல பார்க்கிறேன்னு நினைச்சா - இன்னாதிது ...

நட்புடன் ஜமால் said...

அட நம்ம காளிராஜ்-தான் அந்த நல்லவரா ...

நட்புடன் ஜமால் said...

புஷ்-அ கேள்வி கேட்டு ஒரு பதிவு போட்டார்

பதில் சொல்லறேன்னு கூட்டிகிட்டு போய்ட்டாரோ ...

நட்புடன் ஜமால் said...

அட இன்னாபா தனியா இளநீர் வெட்ட விட்டுட்டீக ...

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
வணக்கம்..

கிட்டாதியின் வெட்டன மற கேஸ்ப்பா நாங்கெல்லாம். நமக்கும் கவிதைக்கும் ரொ....ம்....ப..... தூ...ர...ம்...
//

வாங்க ராகவன் அவர்களே !!!

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
வணக்கம் நண்பர் செய்யது அவர்களே...

நலம். நலமறிய அவா.

ரொம்ப கஷ்டப்பட்டு கவித எழுத முயற்சி செய்துள்ளீர்கள். அதனால் நலம் விசாரித்து ஒரு கடிதம்.

அங்கு உங்கள் நலனுக்கு மறு மெயில் அனுப்பவும்.
//

ஆஹா என்ன ஒரு குசல விசாரிப்போடுகளோடு பின்னூட்டம்...

இதுவரைக்கும் நலம் தலைவரே !!!!!

உடம்பு எப்படியிருக்குனு ரீஜன்டா கேட்டமைக்கு நன்றிங்கோ !!!!

அ.மு.செய்யது said...

//இராகவன் நைஜிரியா said...
நண்பர் செய்யது அவர்களே...

ஆரம்பத்தில் இருந்து 3 தடவை படிச்சுட்டேன்.

ஆனா பாரு அம்பி, அதுல ஒன்னுமே புரியல?
//


படிமக் கவிதை தான் புரியலியா ?? இல்ல பதிவே புரியலையா ?? ஐயகோ !!!

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...

என்ன சோப்பு போட்டீங்க மூளைக்கு ?? //


சத்தியமா ஊர்வசி இல்லங்க..

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
ஏண்டா டேய் ..........

இது கூட ஒரு கவிதைக்கு தலைப்பு வைக்கலாம்
//

அது தெலுங்கு பட டைட்டில்..

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...

என்ன சப்புன்னு முடிச்சி பிட்டீங்க //

அது நான் இல்லீங்க‌..சிவ‌ராமு அங்கிள‌ கேளுங்க‌..

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
இப்படி ஒரு கொலைய பன்னிப்புட்டு

ஆரம்பத்திலேயே என் பெயரை போட்டு

அப்படி என்னா தம்பி உனக்கு இவ்வளவு பாசம்...
//

ஒரு வெளம்பரம்ம்ம்வ்வ்வ்வ்........

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
/*ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"*/
உதயம் ன்னா நாள் இடம் தான் ஓசியிலே படம் பார்க்கலாம்
//

ஒன்னுமே பிரியலBa....

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
மூளைய கசக்குனியா ...

பொய் சொல்லாத ...
//

மெய்யாலுமே ...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
Wipro project seriousஆ வேல பார்க்கிறேன்னு நினைச்சா - இன்னாதிது ...
//

அயராத ஆணிகளுக்கு மத்தியில் நடந்த களேபரம்..

RAMYA said...

என்னாச்சு பா இங்கே நான் வரதுக்குள்ளே
கும்மி முடிஞ்சி போச்சா ??
ஹையோ ஹையோ ஹையோ !!

RAMYA said...

//
//நட்புடன் ஜமால் said...
Wipro project seriousஆ வேல பார்க்கிறேன்னு நினைச்சா - இன்னாதிது ...
//

அயராத ஆணிகளுக்கு மத்தியில் நடந்த களேபரம்//

அதானே ரீலு !!!

நட்புடன் ஜமால் said...

முடியலையே

இப்பதானே ஆ’ரம்’பம்ன்னு நினைப்போம் ...

நட்புடன் ஜமால் said...

ரீலு

வாலு

அட அவரில்லை

அ.மு.செய்யது said...

//RAMYA said...
என்னாச்சு பா இங்கே நான் வரதுக்குள்ளே
கும்மி முடிஞ்சி போச்சா ??
ஹையோ ஹையோ ஹையோ !!
//

வாங்க...வாங்க...

நட்புடன் ஜமால் said...

என்ன ரீச்சர் நெம்ப லேட்டா வாரிய ...

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா காணோம்

வைகையை ...

RAMYA said...

\\"கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு" \\


ஐயோ மனம் குப்பையாச்சா
எப்பா சொக்கா யாராவது
பெருக்கி தள்ளுங்கப்பா!!!

RAMYA said...

/*பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி */
என்ன சோப்பு போட்டீங்க மூளைக்கு
//


நசரேயன் சந்தேகமே அது
ஒரு தனி ரகம் தான் போங்க

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
முடியலையே

இப்பதானே ஆ’ரம்’பம்ன்னு நினைப்போம் ...
//


ஆரம்பம் இதுன்னு சொல்லி முடிச்சி போச்சே!!

RAMYA said...

//
//நட்புடன் ஜமால் said...
இப்படி ஒரு கொலைய பன்னிப்புட்டு

ஆரம்பத்திலேயே என் பெயரை போட்டு

அப்படி என்னா தம்பி உனக்கு இவ்வளவு பாசம்...
//

ஒரு வெளம்பரம்ம்ம்வ்வ்வ்வ்........

//

என்ன நடக்குது இங்கே,
விளம்பரமெல்லாம் வேணாம்
நீங்க ரொம்ப நல்லா கவிதை
எழுதறீங்க நாங்க எல்லாரும்
ஒத்துகிட்டோம் தினமும்
நீங்க இப்படி எழுதிகிட்டே
இருங்க ஒரு நாள் இல்லன்னா
ஒரு நாள்......................................

RAMYA said...

//
//நசரேயன் said...

என்ன சோப்பு போட்டீங்க மூளைக்கு ?? //


சத்தியமா ஊர்வசி இல்லங்க..

//


தம்பிக்கு குறும்பு கொஞ்சம் அதிகம்!!

RAMYA said...

தனியா உக்காந்து டி ஆத்தினா ஒரே போர் பா!!

RAMYA said...

வந்தது வந்துட்டேன் ஒரு ஐம்பது போடறேன் !!

அ.மு.செய்யது said...

நைட்டு பன்னிரண்டு மனிக்கு வந்து டீயாத்துனா கஸ்டம் தான்...நம்ம தேவா மாதிரி காலங்காத்தால ஆரம்பிக்கனும்.

RAMYA said...

அட பாவி நான் போடலாம்னு பாத்தா !!!

அ.மு.செய்யது said...

//RAMYA said...

என்ன நடக்குது இங்கே,
விளம்பரமெல்லாம் வேணாம்
நீங்க ரொம்ப நல்லா கவிதை
எழுதறீங்க நாங்க எல்லாரும்
ஒத்துகிட்டோம் தினமும்
நீங்க இப்படி எழுதிகிட்டே
இருங்க ஒரு நாள் இல்லன்னா
ஒரு நாள்......................................//

எதா இருந்தாலும் பேச்சு பேச்சா தானிருக்கணும்.

வன்முறைய கைல எடுக்கப் படாது.

RAMYA said...

செய்யது என்னா பண்ணறீங்க
வீட்டுக்குள்ளே பெருச்சாளி
வந்துடுச்சா ???????????

அ.மு.செய்யது said...

//RAMYA said...
அட பாவி நான் போடலாம்னு பாத்தா !!!
//

சாரிங்க..பலக்க தோசம்...

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said...

என்ன நடக்குது இங்கே,
விளம்பரமெல்லாம் வேணாம்
நீங்க ரொம்ப நல்லா கவிதை
எழுதறீங்க நாங்க எல்லாரும்
ஒத்துகிட்டோம் தினமும்
நீங்க இப்படி எழுதிகிட்டே
இருங்க ஒரு நாள் இல்லன்னா
ஒரு நாள்......................................//

எதா இருந்தாலும் பேச்சு பேச்சா தானிருக்கணும்.

வன்முறைய கைல எடுக்கப் படாது.

//

ஆஹா ஆஹா துங்காமே என்ன பண்ணறீங்க !!

அ.மு.செய்யது said...

ஆபிஸில் பிளாக்ஸ்பாட் ஐ தடை செய்து விட்டதால் இரவில் தான் நாங்கள்
ஆரம்பிப்போம்..

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
இப்படி ஒரு கொலைய பன்னிப்புட்டு

ஆரம்பத்திலேயே என் பெயரை போட்டு

அப்படி என்னா தம்பி உனக்கு இவ்வளவு பாசம்...
//

ஜமால் சரியாதான் கேக்குறாரு
பதில் சொல்ல தெரியாமல்
இன்னா இது சி.பிள்ளை தனமா
இருக்கு ???

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஆபிஸில் பிளாக்ஸ்பாட் ஐ தடை செய்து விட்டதால் இரவில் தான் நாங்கள்
ஆரம்பிப்போம்..

//

அது சரி, அப்படியே கொஞ்சம் திரும்பி
பாருங்க நீங்க அடிச்ச பெருச்சாளி
பேயா வந்து நிக்குது

RAMYA said...

Bye, Good NIGHT

அ.மு.செய்யது said...

பெருச்சாளினாலே பீதி தான்..இதுல பேயாவேறயா ??

நட்புடன் ஜமால் said...

பேயாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

நட்புடன் ஜமால் said...

எங்கப்பா இரண்டு பேரையும் காணோம்

புதியவன் said...

//கவிதை எழுதுவது எப்படி ??//

அதான் தலைபுலயே கவிதை எழுதியாச்சே அப்புறம் என்ன...?

புதியவன் said...

//"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"//

கவிதை நல்லா இருக்கு செய்யது தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

//புதியவன் said...

கவிதை நல்லா இருக்கு செய்யது தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்//

நன்றி புதியவரே...ஊக்கத்திற்கு நன்றிங்கோ !!!

அப்துல்மாலிக் said...

ஆஹா கவிதை எழுதுவது எப்பாடி?
இருங்கப்பூ எப்படினு படிச்சிட்டு வாரேன்

ம்ம்ஹூம் நாந்தான் லேட்டா?

அப்துல்மாலிக் said...

//முன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது//

கொல வெறியா இருக்குமோ, சரி உள்ளே போய்தான் பாக்கனும், காரி.... இல்லே...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
ஆஹா கவிதை எழுதுவது எப்பாடி?
இருங்கப்பூ எப்படினு படிச்சிட்டு வாரேன்

ம்ம்ஹூம் நாந்தான் லேட்டா?
//

வாங்க...வாங்க...

என்ன‌ ஆள‌யே கானோம்...அலுவ‌ல‌கத்தில் ஆணிக‌ள் ராஜ்ய‌மா ?

அப்துல்மாலிக் said...

"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி "................

அப்படியே கீழ்ப்பாக்கம் கதவு தொறந்திருக்குனு கேள்விப்பட்டேன்

அப்துல்மாலிக் said...

ம்ம்ஹூம் நாந்தான் லேட்டா?
//

வாங்க...வாங்க...

என்ன‌ ஆள‌யே கானோம்...அலுவ‌ல‌கத்தில் ஆணிக‌ள் ராஜ்ய‌மா ?


இப்போதானப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன்

அப்துல்மாலிக் said...

//கண்ணீர்.......oooo

அழுகை......(ஆஹா...)

பிரிவு.......

வலி.........(ஆஹா...)

வ‌ருது ..வ‌ருது....விடாத‌...( அதே ப‌ட்சி என்க‌ரேஜ் செய்ய ஆர‌ம்பித்த‌து )

வான‌ம்...

நீல‌ம்...ம்ம்ம்ம்ம்...

நாற்ற‌ம்....
....
//

இதுக்கூட கவிதையா தானிருக்கு.. அய்யா சாமி தாங்கமுடியலேப்பா

அப்துல்மாலிக் said...

//"அவள் அழுகையும்
கண்ணீரும்
அந்த எலிச்செத்த நாற்றத்தில்
மறைந்து போனது" //

என்னாக்கொடுமை செய்யது இது

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
இப்போதானப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன் //

ஆஹா...ஆனாலும் துபாயி ஆபிஸ் ல‌ தூங்க கூட விட்ராங்க‌ளா..

அப்துல்மாலிக் said...

//"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில் நான் எழுதிய இந்த படிமக்கவிதையை, வலைதளம் ஆரம்பித்து "தவம்" என்று பெயரிட்டு பதிவிட்ட போது.. கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.
//

அந்த புண்ணியவான் அப்படி என்னாதான் பின்னூட்டமிட்டார்னு நாங்களும் தெரிஞ்சிக்கலாம......???

அப்துல்மாலிக் said...

ஆக இறுதியில் எப்படிதான் கவிதை எழுதுவது என்று தெளிவாக? எடுத்து சொல்லி எங்களுக்கெல்லாம் நல்ல ஆசானாக?? இருந்த செய்யது அவர்களுக்கு எமது பாராட்டுக்கள்

இதை வைத்து கவிதை எழுதி அப்புறம்... ஏற்படும் பின்விளைவை???? சந்திக்க தயாராக இருங்க‌

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
இப்போதானப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தேன் //

ஆஹா...ஆனாலும் துபாயி ஆபிஸ் ல‌ தூங்க கூட விட்ராங்க‌ளா..
//

இன்னிக்கு Weekendபா எனக்கு,

காரூரன் said...

*\\கறுப்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கி போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு" \\*

அசத்திட்டீங்க போங்க!

அ.மு.செய்யது said...

மிக்க நன்றி காரூரன்...

தேவன் மாயம் said...

"விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும் க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।"
///

78 கமெண்ட் வாங்கியிருக்கும் அற்புதமான கவிதை..

அ.மு.செய்யது said...

@தேவா..

நன்றிங்கோ..........

anbudan vaalu said...

//"பேனா திற‌ந்து
பேப்ப‌ர் பிரித்து
விட்ட‌ம் வெறித்து
மூளை க‌ச‌க்கி "................

அப்படியே கீழ்ப்பாக்கம் கதவு தொறந்திருக்குனு கேள்விப்பட்டேன்//

இதை நான் வழிமொழிகிறேன்........

//78 கமெண்ட் வாங்கியிருக்கும் அற்புதமான கவிதை..//

ஆனாலும் தேவா....நீங்க இவ்வளவு நல்லவரா இருக்க கூடாது... :(((

அ.மு.செய்யது$ said...

@anbudan vaalu

இதெல்லாம் செல்லாது செல்லாது..

உங்க கமெண்ட் எங்க...???

அ.மு.செய்யது$ said...

@anbudan vaalu

லேட்டா வந்துட்டு இப்டி போங்கு ஆட்டமெல்லாம் ஆடக்கூடாது..

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே நீங்க இங்க கொஞ்சம் புதுசு...

கும்ளே நீ ஒரு ஆம்ப்ளே!
உங்க அம்மா
ஒரு பொம்ப்ளே!

அப்படிங்கிற உலகத்தரம் வாய்ந்த கவிதை படைத்த பதிவர்களை எல்லாம் பார்த்த பதிவுலகம் இது
:)))))))))

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணே நீங்க இங்க கொஞ்சம் புதுசு...

கும்ளே நீ ஒரு ஆம்ப்ளே!
உங்க அம்மா
ஒரு பொம்ப்ளே!
//

ஹா..ஹா....

வாங்க தல...அத எழுதினது யாருங்கோ...

புதுகை.அப்துல்லா said...

//வாங்க தல...அத எழுதினது யாருங்கோ...

//


அதை எழுதியவர் என் சகோதரி ராப். இரண்டுமாத விடுப்பில் சென்று விட்டு இன்றுதான் வந்துள்ளார். அவர் இல்லாமல்தான் நானும்,வெண்பூவும் இரண்டு மாதமாக ஆக்ட்டிவாக இல்லை. இனி பாருங்க எங்க ஆட்டத்தை

அ.மு.செய்யது said...

@புதுகை அப்துல்லா

ஓஓ அவுங்க தானா அது...

அந்த கவிதையை படிக்கும் போது மட்டுமில்லங்க...அத நினைச்சி பாக்கும்போதெல்லாம்
சிரிப்பு தாங்க முடியல...ஆபிஸ் ல எல்லாரும் ஒரு மாதிரியா பாக்கிறாய்ங்க..

என் வாழ்நாளிலேயே இப்படி ஒரு கவிதைய பார்த்ததில்ல...100% உண்மை..

அமுதா said...

//போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! )

ஓ.கே. சொன்னபடி செஞ்சுட்டேன்...

வேத்தியன் said...

நம்மளுக்கும் கவிதை எழுதனும்ங்கிறது ரொம்ப நாள் ஆசைங்க...
ஆனா வரமாட்டேங்குது...
ஏதாவது டிப்ஸ் இருக்குமுனு வந்தேன்..
:-)
நல்ல பதிவு...

அ.மு.செய்யது said...

நன்றி அமுதா...வருகைக்கு...( வந்த வேகத்துல கிளம்பினதுக்கும் )..

அ.மு.செய்யது said...

வாங்க வேத்தி...

நீங்க மொதல்ல மாடர்ன் கீதாச்சாரம் எழுதுவது எப்படினு ஒரு பதிவு போடுங்க..

அமிர்தவர்ஷினி அம்மா said...

கிடைத்த ஒரே ஒரு பின்னூட்டத்தை எண்ணி, கண்ணில் ஒரு துளிநீர் எட்டிப் பார்த்து, அப்பீட் ஆனது....அந்த ஒற்றைப் பின்னூட்டமிட்ட அந்த புண்ணியவானைத் தான் இன்றளவும் தேடிக் கொண்டிருக்கிறேன்.

இதுக்கு ரொம்ப நேரமா சிரிச்சிகிட்டு இருக்கிறேன், பின்னூட்டம் போட மறந்து.

ச‌ரி க‌விதையெழுதுவ‌து எப்ப‌டி ?? //

அதான் ஒரு கவிதை அது என்னது ஆங்,படிமக் கவிதைதான் எழுதியிருகீங்களே.

அப்புறமென்ன

ஆனா அர்த்தம் வெளங்கலை பாஸு

அர்த்தம் சொல்லி ஒரு பதிவு போடுங்களேன்.

அ.மு.செய்யது said...

க‌ண்டிப்பாக‌ உங்க‌ளுக்காக‌வே போடுகிறேன்...அமித்து அம்மா...

ந‌ன்றி வ‌ருகைக்கு !!!!

mohamed said...

perum mokka samy sir neega...))

தாரணி பிரியா said...

:)

தாரணி பிரியா said...

கவிதை எழுத தெரியாதா என்ன செய்யது இப்படி . முதல்ல க போடுங்க அடுத்து வி அடுத்து ரெட்டை சுழி கொம்பு அடுத்து த

இப்படி எழுதினா இதுதான் கவிதை இதுக்கு போய் இம்மாம் பெரிய போஸ்ட்.

தாரணி பிரியா said...

//அலுவல‌க‌த்தில் ஒரு க‌ண‌வான் த‌ன் காலுறையை க‌ழ‌ற்றி வைத்ததால் ஏற்ப‌ட்ட‌ விஷ‌வாயு தான் அது என்று தெரிவிக்க‌ப் ப‌ட்டு அதிருப்தி வெளியிடப்ப‌ட்ட‌து.
//

பொய் சொல்லமா சொல்லுங்க அது உங்க சாக்ஸ்தானே

தாரணி பிரியா said...

//(போங்க‌..போங்க‌.போய் புள்ள‌ குட்டிய‌ ப‌டிக்க‌ வைங்க‌..!!!!! //

அப்புறம் அதுங்களும் வந்து இப்படி கவிதை எழுதறேன்னு ரவுசு செஞ்சுதுன்னா இன்னா செய்யறது பாஸ்

தாரணி பிரியா said...

ஹை அடுத்த கமெண்ட் நானே போட்டான்னு நாந்தான் 100

தாரணி பிரியா said...

100

அ.மு.செய்யது said...

//mohamed said...
perum mokka samy sir neega...))
//

தெரிஞ்சி போச்சா...

அ.மு.செய்யது said...

//தாரணி பிரியா said...
கவிதை எழுத தெரியாதா என்ன செய்யது இப்படி . முதல்ல க போடுங்க அடுத்து வி அடுத்து ரெட்டை சுழி கொம்பு அடுத்து த

இப்படி எழுதினா இதுதான் கவிதை இதுக்கு போய் இம்மாம் பெரிய போஸ்ட்.
//

அட இது தெரியாம போச்சே !!!!!

முன்னாடியே உங்க கிட்ட கேட்டுருக்கலாமோ ?!?!?

அ.மு.செய்யது said...

//தாரணி பிரியா said...

பொய் சொல்லமா சொல்லுங்க அது உங்க சாக்ஸ்தானே//

அது நா இல்லீங்க...என்ன வுட்ருங்க...அன்னிக்கு நான் செருப்பு போட்ருந்தேன்.

அ.மு.செய்யது said...

நன்றிகளும் வாழ்த்துகளும்

செஞ்சுரி அடித்த தாரணி ப்ரியாவுக்கு..

ஜியா said...

மரத்துல இருக்குது காய்...
தூங்க தேவ பாய்...

அ.மு.செய்யது said...

//ஜி said...
மரத்துல இருக்குது காய்...
தூங்க தேவ பாய்...
//

hye !!!!!!!!

குடந்தை அன்புமணி said...

விடாதீங்க முயற்சி பண்ணுங்க. வராம எங்க போகும்...