Sunday, January 18, 2009

ஒரு குழந்தையும் மூன்று தகப்பன்மார்களும்


முன் ஜாமீன்: இது ஒரு வரலாற்றுப் பதிவோ,இல்லை சேகரிக்கப் பட்ட செய்திகளின் தொகுப்போ அல்ல.என்னுடைய தனிப்பட்ட கோபத்தின் விளைவு தான் இந்த பதிவு.

கடந்த வாரம் வெள்ளியன்று ஜூம்ஆ சிறப்புத் தொழுகைக்கு முன் அடையாறு மஸ்ஜிது இமாம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் நிகழ்த்திய பேருரை பலபேரை வெகுவாக பாதித்திருக்கும்.காசாவில் பெண்களும் குழந்தைகளும் இஸ்ரேலிய வெறியாட்டத்தால் அனுபவித்து கொண்டிருக்கும் சொல்லொணா துயரங்களை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கே அமர்ந்திருந்த அனைவரது கண்களிலும் கண்ணீர்த் திரை மறைத்து கொண்டிருந்தது.எங்கள் செவிகள் மட்டுமே கேட்டு கொண்டிருந்தன.

*********************

ஒவ்வொரு போரும் பல படிப்பினைகளை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.ஆனால் இருபெரும் உலக யுத்தங்களின் முடிவில், யூதர்கள் கொஞ்சம் நிறையவே கற்றுக் கொண்டனர்.விளக்கெண்ணெய் சுவையையும் காண்சென்டிரேஷன் கேம்ப்களின் நினைவுகளையும் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.ஓ ஜெருசலேம் என்ற புத்தகத்தில் ஒரு யூதரல்லாத ஒரு அறிஞர் எழுதுகிறார்.ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.

1948க்கு முன் இஸ்ரேல் என்ற ஒரு நாடு உலக வரைபடத்திலேயே இல்லை.யூத நிலவங்கி என்ற ஒரு வங்கியை ஆரம்பித்து உலகிலுள்ள யூதர்களையெல்லாம் ஒன்று திரட்டி, பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த பாலஸ்தீன பகுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கொண்டுவந்து,தமக்கென்று ஒரு தனிநாட்டையே உருவாக்கினர் என்று அவர்களின் ஒற்றுமையின் பராக்கிரமம் பற்றி எழுதிய வரலாறுகள் நாமறிந்ததே.

அப்போதிருந்த பாமர அரபிகளுக்கு யூதர்களின் இந்த சூட்சுமம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று சொந்த நாட்டில் இருக்க இடமின்றி அகதிகளாக திரிந்து கொண்டிருக்கின்றனர்.தொடர்ந்து 60 ஆண்டுகள் இந்த துப்பாக்கிச் சத்தம் கேட்டு அவர்கள் சலித்துப் போயிருக்கக் கூடும்.மேற்கு கரை,சிரியா,லெபனான்,ஜோர்டன் நாடுகளில் உள்ள மில்லியன் பாலஸ்தீனிய அகதிகளுக்கு இன்று வரை தங்கள் எதிர்காலம் எந்த நாட்டில் என்று தெரியாது.இதுமட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் கூட தன் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாத நிலைமை.

பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனிய மண்ணிலிருந்து, அந்த‌ இஸ்ரேலிய குழந்தை பிறக்க மெனக்கெட்டது அமெரிக்கா,பிரான்ஸ்,பிரிட்டன் என்ற 3 தந்தையர்கள் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதனால் தான் என்னவோ,அந்த தந்தையர்களுக்கு நல்ல குழந்தையாக மட்டுமின்றி, வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன் சொன்னது போல, அமெரிக்காவின் விசுவாசமிக்க ஏவல் நாயாகவும் இன்றளவும் இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது
மேலும் அவ‌ர் எழுதிய‌வ‌ற்றிலிருந்து,

"ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்."

"வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும்"


*******************************

மீண்டும் என்னுடைய கோபத்தை கீழே தொடருகிறேன்.

*ஒன்பதாயிரம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய‌ சிறைகளில் அடைக்கப் பட்டிருக்கின்றனர்.எல்லா ஜனநாயக நாடுகளிலும் இருப்பதை போன்றே மனித உரிமை கழகங்கள் இஸ்ரேலிலும் இருக்கத் தான் செய்கின்றன.ஆனால் அந்த சிறைகளில் என்ன நடக்கின்ற‌ன‌ என்பதே அந்த‌ ம‌னித‌ உரிமை க‌ழ‌க‌ங்க‌ளுக்கு தெரியாதாம்.

*குண்டுவீச்சில் காயமடைந்த மக்களுக்கு முதலுதவி செய்யக் கூட முடியாத நிலையில்,இஸ்ரேலிய‌ ராணுவ‌ம் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளையும் ஆம்புல‌ன்ஸ் ஊர்திக‌ளையும் தான் பிர‌தான் இலக்காக‌ கொண்டு தாக்கி வ‌ருகிற‌து.

*ஒரு நாட்டை அடியோடு ஒழிக்க‌ வேண்டுமென்றால்,அந்த‌ நாட்டின் ச‌ட்ட‌ம் ஒழுங்கை சீர்குலைத்தால் போதுமான‌து என்ப‌தை ந‌ன்கு அறிந்த‌ இஸ்ர‌வேல‌ர்க‌ள்,ஒரே வார‌த்தில் பால‌ஸ்தீன‌த்தின் 61 காவ‌ல்துறை உய‌ர் அதிகாரிக‌ளை கொன்று குவித்திருக்கின்ற‌ன‌ர்.

*நூற்றுக் கணக்கான பெண்களும் பச்சிளம் குழந்தைகளும் தான் இந்த கொடூர வல்லூறுகளின் முதல் இலக்கு.தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருந்தும் உணவும் எடுத்து வந்த லெபனான் நாட்டு கப்பலின் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறது.

இதையெல்லாம் வேண்டுகோள்கள் மட்டுமே விடுத்து விட்டு வேடிக்கைப் பார்த்து கொண்டிருக்கும், அமெரிக்க கைப் பாவையான ஐ.நா வின் ஆண்மையற்ற தன்மையை என்னவென்று சொல்வது ? சிரியா,ஈரான் போன்ற சிறிய நாடுகளைத் தவிர, இந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பயங்கரவாத அடக்குமுறைகளை எதிர்த்து கேள்வி கேட்க திராணியில்லாத மற்ற அரேபிய‌ நாடுகள், கண்டனம் என்ற ஒற்றைச்சொல்லிலும்,பிரார்த்தனையின் பெயராலும் ஒருவித மெளனம் தான் காக்கின்றன.

உலக அமைதிக்கு ஊறுவிளைக்க கூடிய பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கும் ஒரு சர்வாதிகாரியைப் பிடிக்கிறேன் என்ற போர்வையில் ஒரு ஈராக் நாட்டையே நாசமாக்க வில்லையா ?? பின்லேடனையும் தாலிபனையும் வேரறுக்கிறேன் பேர்வழி என்று ஆப்கன் தேசத்தையே அழிக்க வில்லையா ?? இன்று இருபது லட்சம் பேர் இராக்கில் அனாதையாக்கப் பட்டிருக்கின்றனர்.இதில் விதவைகளும் குழந்தைகளுமே அதிகம்.ஆப்கன் நிலைமை இதை விட மோசம்.

"என் நாட்டில் அனாதையாக்கப் பட்ட குழ‌ந்தைக‌ளின் சார்பாக‌வும் வித‌வைக‌ளின் சார்பாக‌வும் உனக்கு நானளிக்கும் பரிசு" என்று கூவிக் கொண்டே தான் அந்த 'ஷீ'க்களை புஷ்ஷின் மீது எறிந்திருக்கிறார் முன்தாதர் அல்ஸ‌ய்தி.ஆனால் அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ??

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.

***************************************************************
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள் கீழே !!!!! !!!!!










43 comments:

தேவன் மாயம் said...

படங்களும் செய்தியும்
மனதை வருதுகின்றன!!

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

நட்புடன் ஜமால் said...

\\பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.\\

மிகச்சரியாக(ச்) சொன்னீர்கள் ...

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
படங்களும் செய்தியும்
மனதை வருதுகின்றன!!
//

நன்றி தேவா..வருகைக்கு...

உங்கள் தேநீர் விருந்தும் அருமை..

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
\\பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.\\

மிகச்சரியாக(ச்) சொன்னீர்கள் ...
//

நன்றி ஜமால் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

TamilBloggersUnit said...

என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள்...

அ.மு.செய்யது said...

//TamilBloggersUnit said...
என்மனதைப் பிழிந்த புகைப்படங்கள்...
//

நன்றி TamilBloggersUnit !!!!

அப்துல்மாலிக் said...

நல்லதொரு அலசல் செய்யது...
இதைப்படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் மனம் கொதிக்குதே தவிர வேறு என்ன செய்யமுடியும் நம்மால்...

அப்துல்மாலிக் said...

//உலகில் அமைதியை ஏற்படுத்துகிறேன் என கூக்குரலிடும் இந்த அமெரிக்க ஓநாய், ஏற்ப‌டுத்துவ‌து ஒருவித மயான அமைதியைத் தான்.எல்லா மக்களையும் கொன்று குவித்து, அடக்கம் செய்துவிட்டால் அங்கே அமைதி நிலவாமல் வேறு என்ன நிலவும் ?? //

நல்ல கேள்வி..
போரில்லா உலக அமைதி (மயான அமைதியில்லை)க்காக பிரார்த்திப்போம்...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
நல்லதொரு அலசல் செய்யது...
இதைப்படித்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் மனம் கொதிக்குதே தவிர வேறு என்ன செய்யமுடியும் நம்மால்...
//

நம் இனம் நம் மக்கள் என பாகுபாடின்றி, எங்கெல்லாம் நீதம் மறுக்கப் படுகின்றதோ,
அதை எதிர்த்து குர‌ல் கொடுப்போம்.இல்லையேல் ஒரு சொட்டு க‌ண்ணீர் சிந்துவோம்.

அப்துல்மாலிக் said...

//பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.//

நன்றாக சொன்னீர்கள்..

தீவிரவாதம் மற்றும் அதை ஆதரிப்பவர்களையும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்..

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
போரில்லா உலக அமைதி (மயான அமைதியில்லை)க்காக பிரார்த்திப்போம்...//

நிச்சயமாக பிரார்த்திப்போம்.

நம்மைப் போன்ற சாமானியர்களால் செய்ய முடிந்தது அவ்வளவே !!!

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி அபுஅஃப்ஸர்..

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...

தீவிரவாதம் மற்றும் அதை ஆதரிப்பவர்களையும் அடியோடு ஒழிக்கப்படவேண்டும்..//

கண்டிப்பாக..

S.A. நவாஸுதீன் said...

நல்ல அலசல் செய்யது.

இது இஸ்ரேலிய அறக்கர்கள் அமெரிக்க ஓனாய் ஜார்ஜ் புஸ்ஸுக்கு கொடுத்த கடைசி விருந்து.

S.A. நவாஸுதீன் said...

இஸ்ரேலை இந்த உலக வரைபடத்தில் இருந்து அகற்றினால் ஒழிய இதற்கு தீர்வு கிடையாது

அ.மு.செய்யது said...

//Syed Ahamed Navasudeen said...
நல்ல அலசல் செய்யது.
//

நன்றி Syed Ahamed Navasudeen !!!

தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்.....

அமுதா said...

/*பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.*/
உண்மைதான். எல்லோருக்கும் துயரம் தான். என்றுதான் இக்கொடுமைகள் ஓயுமோ புரியவில்லை.

அ.மு.செய்யது$ said...

//அமுதா said...
எல்லோருக்கும் துயரம் தான். என்றுதான் இக்கொடுமைகள் ஓயுமோ புரியவில்லை.
//

விடியல் வரும் வரை காத்திருப்போம்...

நன்றி அமுதா
வருகைக்கும் கருத்துகளுக்கும்......

anbudan vaalu said...

மனதை கணக்கச்செய்தது......

//பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.//

உண்மையான வரிகள்......

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
மனதை கணக்கச்செய்தது......
//

நன்றி வால்ஸ்.......

ஷாஜி said...

//அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.//

--மிகச் சிறந்த வரிகள்...

அ.மு.செய்யது said...

//ஷாஜி said...
//அந்த விலையுயர்ந்த ஷீக்களுக்கு அந்த முகம் தகுதியானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.//

--மிகச் சிறந்த வரிகள்...
//

நன்றி ஷாஜி முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்..

அ.மு.செய்யது said...

//sheik said
Nice info at right time.We all have to unite to fight this Jewish arrogant behaviour and not only Muslims to react? May Allah Bless all our real intentions!
Mukthar/Brunei//

Thanks Sheik for your visit and comment.

புதியவன் said...

//பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.//

உண்மை தான் அ.மு.செய்யது மனித இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்...உங்களின் உணர்வுகளை
வார்த்தைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது...

தமிழ் தோழி said...

எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.
இதை படித்ததும் மனம் கணக்கிறது.
இந்த புகை படம் பார்த்து நான் அழுதுவிட்டேன்.

Anonymous said...

உங்கள் உள்ளக்குமுரல் இன்று உலகெங்கிலுமுலுள்ள பெரும்பான்மையான முஸ்லிம்களின் உள்ளங்களில் ஓளித்துக்கொண்டிருக்கும் வேதனையின் நாதமே.அரபுலகம் இப்போது வெனிஸுலா நாட்டை விட ஒரு கேவலமான ஒரு நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிரது.வெனிசூலா ஜனாதிபதி Hugo Rafael Chávez ஐ விடவும் கேவலமான நிலையில் உள்ளனர் அரபு உலக த‌லைவர்கள்.அடுத்த முஸ்லிமுக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன தமது மன்னராட்சி சிரப்பாஹ நடந்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கின்ரனர்.
அல்லாஹ்வே போதுமானவன்.......

அ.மு.செய்யது said...

//உண்மை தான் அ.மு.செய்யது மனித இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்...உங்களின் உணர்வுகளை
வார்த்தைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது...//

நன்றி புதியவன்..
உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு...

அ.மு.செய்யது said...

//தமிழ் தோழி said...
எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை.
இதை படித்ததும் மனம் கணக்கிறது.
இந்த புகை படம் பார்த்து நான் அழுதுவிட்டேன்.
//

புகைப்படங்களின்றி பதிவை நிறைவு செய்யலாமென்று நினைத்தேன்.
சில நேரங்களில் வார்த்தைகளால் உணர்வுகளைச் சொல்லமுடியாமல் போகலாமில்லையா?

நன்றி தமிழ்தோழி வருகைக்கும் கருத்துகளுக்கும்...

அ.மு.செய்யது said...

//Mujahidh haseem said...
வெனிசூலா ஜனாதிபதி Hugo Rafael Chávez ஐ விடவும் கேவலமான நிலையில் உள்ளனர் அரபு உலக த‌லைவர்கள்.அடுத்த முஸ்லிமுக்கு என்ன நடந்தால் நமக்கு என்ன தமது மன்னராட்சி சிரப்பாஹ நடந்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டிருக்கின்ரனர்.
//

மதமாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு மனிதம் ஒன்று இருக்கிறது என்பதையும் இன்று
மறந்து விட்ட அரபு நாடுகளின் கையாலாகாத தனத்தை என்னவென்று அழைப்பது ??

ந‌ன்றி Mujahidh haseem வெளிப்ப‌டையான‌ க‌ருத்துக‌ளுக்கு...

வால்பையன் said...

எனக்கு கூட ஒரு மெயில் வந்தது!
நாஜிகள் யூதர்களை கொடுமை செய்தது போலவே இப்போது யூதர்கள் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இனம், மதம், சாதி, மொழி வேறுபாடுகள் மறந்து மனிதன் வாழவே முடியாதா?

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...

இனம், மதம், சாதி, மொழி வேறுபாடுகள் மறந்து மனிதன் வாழவே முடியாதா? //

கொஞ்சம் சிரமந்தே...

நன்றி தலைவா(ல்) வருகைக்கும் கருத்துகளுக்கும்

தேவன் மாயம் said...

ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.//

அவர்கள் இன்று கொன்று குவிக்கிறார்களே!!!

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சியின் போது,அகதிகளாக கூட யூதர்களை ஏற்க மற்ற நாடுகள் மறுத்துவிட்டன‌. ஒவ்வொரு நாட்டின் கதவை தட்ட முற்படும்போதும் ஓடஓட விரட்டப்பட்டனர்.//

அவர்கள் இன்று கொன்று குவிக்கிறார்களே!!!
//

எல்லா கேள்விகளுக்கும் காலத்திடம் பதில் உண்டு.

நன்றி தேவா !!! கருத்துகளுக்கு

Poornima Saravana kumar said...

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்..

அ.மு.செய்யது said...

நன்றி PoornimaSaran முதல் வருகைக்கு..!!!

ஜியா said...

:((

Anonymous said...

பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்.
//

this is my comment too and I am with valpaiyan too

kudukuduppai

எம்.எம்.அப்துல்லா said...

//பாதிக்கப்படுவது தமிழனாக இருந்தாலும் சரி..பாலஸ்தீனியனாக இருந்தாலும் சரி.யூதனாக இருந்தாலும் சரி..மத,இன,மொழி போன்ற மூக்கு கண்ணாடிகளை கழற்றி வைத்துவிட்டு பார்த்தாலும் இரத்தத்தின் நிறம் எப்போதும் சிவப்பு தான்..

//

:((

அ.மு.செய்யது said...

//this is my comment too and I am with valpaiyan too

kudukuduppai//

Thanx for your visit and comment kudukuduppai...

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...

:((

//


அழுவானுக்கு நன்றி அண்ணன் அப்துல்லா..

GNU அன்வர் said...

சரியாக பதிவு செய்துள்ளிர்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நன்றி பிகிலு..வருகைக்கு..

கலாட்டா அம்மணி said...

படத்தில் உள்ள பிஞ்சு முகங்களை பார்க்கும் போது மனதில் ஒரு வலி எழுகிறது.

அ.மு.செய்யது said...

நன்றி கலாட்டா அம்மனி வருகைக்கும் கருத்துகளுக்கும்