Sunday, January 11, 2009

ப‌ன்றி இறைச்சி த‌டை ஏன் ???

பன்றி இறைச்சியை உண்பதால், 70 விதமான, சிறிய மற்றும் பெரிய நோய்கள் உண்டாகின்றன என்பது ஒரு அறிவியல் ரீதியான உண்மை.அதில் முக்கிய‌மான சில வ‌கைககளை ம‌ட்டும் இங்கே பார்ப்போம்.

ம‌னித‌ உட‌லில் ஏற்கென‌வே ப‌ல்வ‌கை புழுஇன‌ங்க‌ள் ப‌ல‌ நாட்க‌ளாக‌ விருந்தாளி போல‌ குடியிருந்து வ‌ருகின்ற‌ன என்று ப‌ள்ளி பாட‌ புத்தக‌ங்களிலேயே நாம் ப‌டித்திருக்கிறோம்.சில‌ புழுக்க‌ள் ந‌ம் உட‌ல் செரிமான‌த்திற்கு ப‌ய‌ன்ப‌டுகின்றன‌ என்ப‌தும் நாம‌றிந்த‌ செய்தியே...
"டேனியா சோலிய‌ம்" Taenia solium (pork tapeworm) என்ற‌வொரு புழு, ப‌ன்றி இறைச்சியை உண்ப‌தால் ந‌ம் உண‌வுக்குழ‌லின் அடிபாகத்தில் வாட‌கையின்றி குடியேறி விடுகிறது.

"Taenia solium (pork tapeworm). The adult lives in the small intestine of man that is the definitive host. Segments of the worm pass through the anus and release large numbers of eggs that can survive for long periods outside of the body. When ingested by pigs, the eggs hatch and each releases an oncosphere that migrates through the intestinal wall and blood vessels to reach striated muscle where encystment occurs. Even when well adequately cooked pig meat is eaten by man, excystment occurs in the small intestine and an adult cestode (worm) develops. If the eggs are released into the upper intestine of man (e.g. through regurgitation) they can invade the host setting up a potentially dangerous larval infection known as cysticercosis in muscle and other sites."

இந்த டேனியா சோலியம் ,அதே பகுதியில் (Ova) தன் முட்டைகளை இடுகிறது. இந்த முட்டைகள் தான் மிகவும் ஆபத்தானவை.இவை மனிதனின் இரத்த நாளங்களில் பயணிப்பதால் அதன் மூலம் எல்லா உறுப்புகளையும் சென்றடைந்து விடுகின்றன.மனித உடல் உறுப்புகளில் எந்த பகுதிக்கு பரவினாலும் அங்கே ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விடுமாம்.இத‌ய‌ம்,மூளை,க‌ண்,நுரையீர‌ல் என‌ எல்லா இட‌ங்க‌ளிலும் இந்த டேனியா சோலிய‌த்தின் முட்டைக‌ள் கைவ‌ரிசை காட்டுகின்ற‌ன.

டேனியா சோலியம் என்ற புழுவைப் போன்றே இன்னுமொரு புழு உயிரினம் "ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ்" (Trichura Tichurasis) பன்றி மாமிசத்தின் மூலம் தான் மனித உடலில் பரவுகிறது.டேனியா சோலியமும் இந்த ட்ரிசுராவும் ஒரே மாதிரியான குணமுள்ள உறவினர்கள் தான்.

ஆனால் இந்த புழுக்களின் முட்டைகள், பன்றி இறைச்சியை நன்கு சமைப்பதால் இறந்து விடுகின்றன என்பது எல்லோர் மத்தியிலும் இருக்கும் "பொதுவான தவறான கருத்து".அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஒரு ஆய்வில், ட்ரிசுராஸிஸ் ஆல் பாதிக்கப் பட்ட 24 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டனர்.இதில் 22 பேர் பன்றி மாமிசத்தை நன்கு சமைத்து உண்டவர்கள் தான்.ஆகவே, இந்த புழுக்களின் முட்டையின் சாதாரண் நீரின் (சமையலின் போது) கொதிநிலையில் இறப்பதில்லை.

இதுமட்டுமின்றி பன்றியின் இறைச்சியில் உள்ள மிதமிஞ்சிய கொழுப்பும், ஹார்ட் அட்டாக்,ஹைபர்டென்ஷன் போன்ற‌ பல ஆபத்துகளை ஏற்படுத்தி விடுகின்றன.அமெரிக்கா,ஐரோப்பிய கண்டங்களில் வாழும் பாதி விழுக்காடுபேர் "ஹைபர்டென்ஷன்"ஆல் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற செய்தி ஆச்சரியப்படுவதிற்கில்லை.

நோய்களுக்கான காரணியாக மட்டுமின்றி, அது ஒரு சுகாதாரமற்ற விலங்கினமாகவே சுற்றி வருகிறது.பண்டைய காலங்களில், நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன.
ஆனால் இப்போதெல்லாம் மேலை நாடுக‌ளில் ந‌ல்ல‌ சுகாதாரமான சூழ்நிலைகளில் தானே ப‌ன்றிக‌ள் வ‌ள‌ர்க்க‌ப் ப‌டுகின்றன? என்று நீங்க‌ள் கேட்க‌லாம்.சுகாதார‌மான‌ சூழ்நிலைக‌ளில் வ‌ள‌ர்க்க‌ப் பட்டாலும் எல்லா ப‌ன்றிக‌ளையும் ஒரே இட‌த்தில் வைப்ப‌தால், அவை த‌ம் இன‌த்தின் க‌ழிவுக‌ளையே உண்டு ம‌கிழ்கின்ற‌ன.ஆக‌, இது ஒரு சுகாதார‌ சீர்கேட்டிற்கும் வ‌ழிகோலும் என்ப‌தில் ஐய‌மில்லை.

பல்வேறு நூற்றாண்டுகளுக்கு முன் அருளப் பெற்ற இறை வேதங்களில் பன்றி இறைச்சி தடை செய்யப் பட்டுள்ளதன் நோக்கம் நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.திருக்குர்-ஆனில் நான்கு இடங்களில் இக்கருத்து வலியுறுத்தப் பட்டுள்ளது.இஸ்லாம் மட்டுமின்றி, கிறிஸ்துவர்களின் வேதமாகிய பைபிளிலும் பன்றி இறைச்சியைப் புசிப்பது தடுக்கப் பட்டுள்ளது.

திருக்குர்-ஆன் வசனங்கள் 2:173, 5:3, 6:145 மற்றும் 16:115.
பைபிள் [ Book of Deuteronomy 14:8] Leviticus 11:7-8 ]

****************************************************************
பி.கு: ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ்ப் பதம் கிடைக்காததால் நான் தொகுத்த தகவல்களை ஆங்கிலத்திலேயே தரவேண்டியதாகிவிட்டது.
****************************************************************

24 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல ஆய்வு

நல்ல பகிர்வு ...

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
நல்ல ஆய்வு

நல்ல பகிர்வு ...
//

நன்றி ஜமால்.....முதல் வருகைக்கு....

அபுஅஃப்ஸர் said...

நல்ல கருத்துரை செய்யது.. வாழ்த்துக்கள்

நான் தேடிக்கொண்டிருந்த விளக்கம் கிடைத்தது..பிறருக்கு எடுத்துரைத்து அவர்களை நோயின் பிடியிலிருந்து காப்பதற்கு ஏற்ப தெளிவான விளக்கவுரை....

அபுஅஃப்ஸர் said...

//நாகரீக லெட்ரீன்கள் இல்லாத காரணங்களால் மனித கழிவை சுத்தம் செய்வதற்காகவே பன்றிகள் பயன்படுத்தப் பட்டன//

அதனுடைய உணவே...???? அதுதானோ என்னவோ...

அ.மு.செய்யது said...

// அபுஅஃப்ஸர் said...
நல்ல கருத்துரை செய்யது.. வாழ்த்துக்கள் //

நன்றி அபுஅஃப்ஸர்..

வருகைக்கும் கருத்துகளுக்கு நன்றி !!!!!!

anbudan vaalu said...
This comment has been removed by the author.
anbudan vaalu said...

a useful post sayed....it is nice that you put forth an example from bible...it'll be even better if you search for an example from new testament

கணினி தேசம் said...
This comment has been removed by the author.
கணினி தேசம் said...

நல்ல பதிவு நண்பா.

இது எனக்கு புதிய தகவல்.

சீன மக்கள் தினம் தவறாது.. பன்றி இறைச்சியை உண்கிறார்கள், அவர்களின் இந்த பழக்கத்தை உடன் இருந்து பார்த்திருக்கிறேன். என்னவோ அவர்களுக்கு அதன்மீது அவ்வளவு ஆர்வம். மாற்ற கறியை சமைக்கும்போது கூட பன்றி இறைச்சி பொடியை சேர்த்து உண்கிறார்கள். "டேனியா சோலிய‌ம்" பற்றி பயப்படுவதாக தெரியவில்லை..(???)

நன்றி

வால்பையன் said...

பொதுவாகவே இறைச்சிகள் மனித உடலுக்கு தேவையற்றது என்பது என் கருத்து,

மாட்டிறைச்சியிலும் உடலுக்கு தேவையில்லாத கிருமிகள் பரவலாம்

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
பொதுவாகவே இறைச்சிகள் மனித உடலுக்கு தேவையற்றது என்பது என் கருத்து,

மாட்டிறைச்சியிலும் உடலுக்கு தேவையில்லாத கிருமிகள் பரவலாம்
//

நன்றி அருண் தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்...
கருத்துகளை ஆராய்ச்சிகுழு பரிசீலனைக்கு ப‌ரிந்துரைக்கிறேன்.

அ.மு.செய்யது said...

//கணினி தேசம் said...
நல்ல பதிவு நண்பா.
இது எனக்கு புதிய தகவல். சீன மக்கள்
"டேனியா சோலிய‌ம்" பற்றி பயப்படுவதாக தெரியவில்லை..(???)
//

நிச்சயமாக சீன மக்களின் உணவுமுறை குறித்தும், சீன,ஜப்பானிய மக்களின் உடலில் இருக்கும் மிதமிஞ்சிய நோய் எதிர்ப்பு சக்தி குறித்தும் ஒரு ஆய்வு நடத்த வேண்டியிருக்கிறது.

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
a useful post sayed....it is nice that you put forth an example from bible...it'll be even better if you search for an example from new testament
//

Sure I ll try to make it Vaals..(Insha Allah)
Thanks for your suggestion.

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.

http://www.focuslanka.com

காரூரன் said...

நல்ல ஆய்வு. மதங்கள் சொல்பவைகளிலும் விஞ்ஞான விளக்கங்கள் மறைந்திருக்கின்றன.

அ.மு.செய்யது said...

நன்றி காரூரன்..தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும்.....

தமிழ் தோழி said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி

அ.மு.செய்யது said...

//தமிழ் தோழி said...
உங்கள் பகிர்வுக்கு நன்றி
//

நன்றி தமிழ்தோழி..

thevanmayam said...

மிக நல்ல பதிவு

தேவா..

அ.மு.செய்யது said...

//thevanmayam said...
மிக நல்ல பதிவு
//

நன்றி தேவா...முதல் வருகைக்கு !!!!

குடுகுடுப்பை said...

நான் அமெரிக்கா வந்த புதுசுல சாப்பிட்டிருக்கேன்.வீட்ல சொன்னா அடி விழுந்துரும்.

அ.மு.செய்யது said...

குடுகுடுப்பை said...

//நான் அமெரிக்கா வந்த புதுசுல சாப்பிட்டிருக்கேன்.வீட்ல சொன்னா அடி விழுந்துரும்.//

வாங்க குடுகுடுப்பை...சொல்லிருவோம்..ஏதோ நம்லால முடிஞ்சது.

Mrs. Hussain said...

உங்களின் பதிவுகள் சமீபகாலமாகப் படித்து வருகிறேன். இந்தத் தலைப்பில் எனக்குத் தெரிந்த விவரங்கள் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பன்றி இறைச்சி ஹராம் ஆக்கப்பட்டதன் காரணமாக நானறிந்தது இது: மற்ற விலங்குகளை அறுக்கும்போது "ஹலால்" முறைப்படி வெட்டுவோம் இல்லையா? அதாவது "ஜுகுலார் வெய்ன்" எனப்படும் கழுத்து இரத்த நாளத்தை அறுத்து இரத்தம் முழுமையாக வெளியேறிய பின்னரே இறைச்சியை வெட்டுவோம் இல்லையா?

ஆனால் பன்றிக்கு இந்த ஜுகுலார் வெயினும் கிடையாது; கழுத்தும் கிடையாது; அதனால் இரத்தத்தை வெளியேற்ற முடியாது. அதனாலேயே அது உண்ணத்தகுந்ததல்ல என்று கூறப்படுகிறது.

தவறான தகவலாக இருந்தால் தெளிவுபடுத்துங்கள்!! நன்றி.

kavanur express said...

nalla karuthugal.thanks