நீங்கள் சைவமா ?
காந்தியின் புலால் உண்ணாமையை கடைபிடிப்பவரா ?
ஜீவகாருண்ய வாதியா ?
ப்ளூகிராஸ் உறுப்பினரா ?
கண்டிப்பாக உங்கள் மனதை புண்படுத்த இந்த பதிவை நான் எழுத வில்லை.
இக்கருத்தை பலபேர் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பிரித்து மேய்ந்து முன்மொழிந்திருந்தாலும், என்னுடைய இந்த பதிவை ஒரு வழிமொழிதலாக நினைத்துக் கொள்ளவும்.
"எனக்கு பிடிக்காது..உடல் ஒத்துக் கொள்ளாது..எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பழக்கம் இல்லை.அதனால் எனக்கும் பழக்கம் கிடையாது" என ஒரு சில காரணங்களை முன்வைத்து அசைவத்தை மறுப்போர் ஒருபுறம்.
"உயிர்களைக் கொல்வது பாவம்.அந்த வாயில்லா ஜீவனை துடிக்கத் துடிக்க வெட்டி கொடுமைப் படுத்துகிறீர்களே !!! கொல்லா உயிர்களெல்லாம் நின்று தொழும்" என்றும் இன்னொருபுறம் விலங்கின ஆர்வலர்கள்.
"அப்படியானால் தாவரங்களுக்கும் தான் உயிர் இருக்கிறது.தாவரங்களும் வாயில்லா உயிரினங்கள் தான்.அவைகளை மட்டும் கொல்லலாமா?"
என்று வழக்கம் போல ஒரு சாதாரண கேள்வியை, என் சைவ நண்பனிடம் கேட்டேன்.
"தாவரங்களுக்கு 2,3 அறிவுகள் தானே !! பரவாயில்லை.இது ஒரு பெரிய பாவமாகாது..அத கூட சாப்பிடலனா வேறென்னத்த திங்கிறது..அதற்கு தான் நம்மைப் படைத்த இறைவன் தாவரங்களையும் படைத்தான்" என்று மேலோட்டமாக பதிலளித்தார்.
இன்று வரை அது ஒரு முற்றுப் பெறாத விவாதமாகவே தொடர்கிறது.
தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவைகளுக்கு உணர்ச்சியும் இருக்கிறது.தாவரங்கள் சிலநேரங்களில் அழுகின்றன என அறிவியல் கூறுகிறது.
அது மனித செவிகளுக்கு கேட்காமலிருப்பதன் காரணம், 20Hz ஐ விட குறைவான ஒலி அதிர்வெண்களால் ஆனது அந்த அழும் ஓசை.20Hz முதல் 20000Hz வரை தான் நமக்கு ஸ்பீக்கர்கள் வேலைசெய்யும். ஆனால் நாய் போன்ற பிற பிராணிகளால் இந்த ஓசையைத் துல்லியமாக கெட்க முடியும்.
இதுமட்டுமின்றி, தாவரங்கள் பசிக்காக அழும் ஓலியை மனித செவிகள் கேட்கும் வண்ணம் (amplify) மாற்றியமைக்கும் கருவியை ஒரு விஞ்ஞானி கண்டு பிடித்திருக்கிறார்.
ஆகவே !! உயிர்கள் என்ற அடிப்படையில் மனிதனோ,விலங்குகளோ,தாவரமோ !!! அனைத்தும் சமம் தான். "நான் சைவம்,வெஜிடேரியன்.நான் தான் ஜீவகாருண்யத்தை சரியாக கடைபிடிக்கிறேன்" என்று யாராலும் கூற முடியாது.
நீங்கள் சுவாசிக்கும் போது எத்தனை மில்லியன் நுண்ணுயிர்கள் பலியாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? நாம் உயிர் வாழவே பல்லாயிரக்கணக்கான பிற உயிர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத தர்மம்.
எனவே, இதுவரை நான் எந்த உயிரையும் கொன்றதே கிடையாது என்று யாரும் வாதிடவும் முடியாது.
உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தும் இங்கேயே அடிபட்டு போய்விடுகிறது.
இதுமட்டுமின்றி, உயிரினங்களின் உடல் கூறுகளில் உள்ள வேறுபாடுகளை
நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.ஆடு,மாடு,மான் போன்ற தாவர (herbivorous) உண்ணிகளின் பல் வரிசைகளிலுள்ள அதிகபட்ச ஒற்றுமை, அவைகளின் பற்கள் அனைத்தும் தட்டையாக, செடி,கொடிகளை அரைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.இதுவே, சிங்கம்,புலி,சிறுத்தை போன்ற ஊன் (carnivorous) உண்ணிகளின் பற்கூறுகள் யாவும் கூர்மையாகவும் மாமிசத்தைக் குத்தி கிழித்து உண்பதற்கு வாட்டமாக இருக்கும்.மனிதனுக்கு (omnivorous) மட்டும் இந்த இரண்டு வகை பற்களும் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாம் இரண்டு வகை உணவையும் உண்ணலாம் என்று நம்மைப் படைத்தவனிடமிருந்தே வந்த கீரின் சிக்னல்.
சரி..இந்த நான்வெஜ் விஷயத்தைக் கொஞ்சம் PAUSE பண்ணி வைப்போம்.
******************************
ஜீவகாருண்யத்தை கொஞ்சம் அலசுவோம்.
இந்த கொடுமய எங்க போய் சொல்ல ???
அமெரிக்கர்களின் இப்போதைய வாழ்க்கையே செல்லப்பிராணிகளுடன் தான்.
அதனால் தான் செல்லப்பிராணிகளுடன் பழகுவது/பழக்குவது எப்படி? போன்ற பயிற்சி
கூடங்கள் அங்கே அதிகமாகி விட்டன.நாய்களுக்கு என்று தனியே அங்கே ஃபிட்னஸ் சென்டர்கள் கூட உண்டு.
வீட்டிலுள்ள வயதுக்கு வந்த பிள்ளைகளையெல்லாம் வெளியே துரத்தி விட்டு,செல்லப்பிராணிகளுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டனர்.
அமெரிக்காவில் நாய்களுக்கு மட்டும் செலவிடப் படும் பணத்தை ஒன்று திரட்டினால், உலகிலுள்ள அத்தனை கால் இழந்தவர்களுக்கும் செயற்கை கால் பொருத்தி விடலாம் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது பரவாயில்லை.
13 நொடிகளே வரும் வோடஃபோன் விளம்பரத்தில் 10 இடங்களில் அந்த நாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறது என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறது ஒரு அமைப்பு.
அங்கே இலங்கையில் தமிழ் பிணங்களுடன் புணர்ந்து கொண்டிருக்கிறது இலஙகை ராணுவம்.
என்னத்தைச் சொல்வது ??? ஒருவேளை அந்த நாய்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அந்த வழக்கைத் தொடுத்திருப்பார்களோ ??
நாம் விரும்பி ரசிக்கும் 5 நிமிட சினிமா பாடல் காட்சிக்காக எத்தனை நாட்கள் சிறுகுழந்தைகளின் இடுப்புகள் ஒடிக்கப் படுகின்றன தெரியுமா ?? கேட்டால் நடனம்,கலை என்று பதில் வரும்.
எல்லா குழந்தைகளும் விரும்பி தான் அப்பாடல் காட்சிகளில் நடனமாடுகிறார்கள் என்று அவர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா ? குழந்தை தொழிலாளர் சட்டமெல்லாம் எங்கே போயிற்று ???
ஜீவகாருண்யத்தையோ .. சைவ கொள்கைகளையோ தவறு என்று சொல்லவில்லை.அதே வேளையில்,
அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்.'
அது' களைப் பராமரிக்கும் போது, கொஞ்சம் 'அவர்களை'ப் பற்றியும் சிந்திக்கக் கூடாதா ??
(பன்றி இறைச்சி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப் பட்டுள்ளது.ஹலால்,ஹராம் விளக்கம் அடுத்த பதிவில் )
43 comments:
//அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்.'//
கவணிக்கவேண்டிய விடயம்..
சைவம்/அசைவம் ஒரு ஆரோக்கியமான விளக்கம்.. தொடருங்கள் உங்கள் பதிவை..
//அது மனித செவிகளுக்கு கேட்காமலிருப்பதன் காரணம், 20Hz ஐ விட குறைவான ஒலி அதிர்வெண்களால் ஆனது அந்த அழும் ஓசை.20Hz முதல் 20000Hz வரை தான் நமக்கு ஸ்பீக்கர்கள் வேலைசெய்யும். ஆனால் நாய் போன்ற பிற பிராணிகளால் இந்த ஓசையைத் துல்லியமாக கெட்க முடியும்.//
நிஜமாலுமா.....
\\அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்\\
ஆஹா அருமை தோழரே ...
ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா..!! கிளம்பிட்டாங்கய்யா..!!
சைவம்-அசைவம் பேசி எங்களை வம்புக்கு இழுக்கறீங்க...!!
வர்றேன்...!
// அபுஅஃப்ஸர் said...
சைவம்/அசைவம் ஒரு ஆரோக்கியமான விளக்கம்.. தொடருங்கள் உங்கள் பதிவை..//
நன்றி அஃப்ஸர் !!!
கண்டிப்பாக தொடருகிறேன்.
அபுஅஃப்ஸர் said...
நிஜமாலுமா.....?//
மெய்யாலுமா தாங்க....துண்டு வேணா போட்டு தாண்டுறேன்.
//நட்புடன் ஜமால் said...
\\அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்\\
ஆஹா அருமை தோழரே ...//
நன்றி தோழர் ஜமால் அவர்களே !!!!
( Review-விற்கும் சேர்த்து... )
// கணினி தேசம் said...
ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா..!! கிளம்பிட்டாங்கய்யா..!!
//
வாங்க கணிணிதேசம்....
சோடி போட்டுக்குருவோமா சோடி ???
நான் சைவமுங்கோ... ஏன்,எதனால் அப்படி...இதெல்லாம் பின்னூட்ட்டத்துல சொல்லமுடியாது...பதிவா போட்டுடறேன்.
//இன்று வரை அது ஒரு முற்றுப் பெறாத விவாதமாகவே தொடர்கிறது.//
இது மகா-மெகா-வாதம்... தொடர்ந்து ஓடிக்கிட்டேதான் இருக்கும்.
//கண்டிப்பாக உங்கள் மனதை புண்படுத்த இந்த பதிவை நான் எழுத வில்லை. //
நாங்க அப்படித்தான் எடுத்துக்குவோம்னு சொன்ன...என்ன செய்வீங்க??
(சும்மா...உலு.உலுலான்காட்டி)
அ.மு.செய்யது said...
// கணினி தேசம் said...
ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா..!! கிளம்பிட்டாங்கய்யா..!!
//
வாங்க கணிணிதேசம்....
சோடி போட்டுக்குருவோமா சோடி ???
///
போட்டுருவோம்..
//கணினி தேசம் said...
நான் சைவமுங்கோ... ஏன்,எதனால் அப்படி...இதெல்லாம் பின்னூட்ட்டத்துல சொல்லமுடியாது...பதிவா போட்டுடறேன்.
//
போடுங்கோ !!! ஆவலுடன் காத்திருக்கிறோம்.
//கணினி தேசம் said...
இது மகா-மெகா-வாதம்... தொடர்ந்து ஓடிக்கிட்டேதான் இருக்கும். //
அதைத் தொடரத் தானே நாமிருக்கிறோம்.
முற்றுப்புள்ளிகளை நோக்கித்தானே காற்புள்ளிகள் !!!!
//நாங்க அப்படித்தான் எடுத்துக்குவோம்னு சொன்ன...என்ன செய்வீங்க??
சோடி போட்டுக்குருவோமா சோடி ???
போட்டுருவோம்..//
களம் சூடுபிடிக்கட்டும்...வாங்க !!!!!
//வீட்டிலுள்ள வயதுக்கு வந்த பிள்ளைகளையெல்லாம் வெளியே துரத்தி விட்டு,செல்லப்பிராணிகளுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டனர்.//
ஊரார் பிள்ளைய (நாய்குட்டிய) ஊட்டி வளர்த்தா...தன் பிள்ளை தானே வளரும்'னு
ஒரு நல்லெண்ணத்துல செய்யறாங்களோ என்னவோ !
//நாம் விரும்பி ரசிக்கும் 5 நிமிட சினிமா பாடல் காட்சிக்காக எத்தனை நாட்கள் சிறுகுழந்தைகளின் இடுப்புகள் ஒடிக்கப் படுகின்றன தெரியுமா ??//
இடுப்பு ஒடிஞ்சதுகப்புரமா...எப்படி ஆடறாங்க?
//கணினி தேசம் said...
ஊரார் பிள்ளைய (நாய்குட்டிய) ஊட்டி வரல்த்தா...தன் பிள்ளை தானே வளரும்'னு
ஒரு நல்லேனத்துல செய்யறாங்களோ என்னவோ !//
ஹாஹா....!!!!!
//கணினி தேசம் said...
இடுப்பு ஒடிஞ்சதுகப்புரமா...எப்படி ஆடறாங்க? //
ஒருவேள கிராஃபிக்ஸா இருக்குமோ ?????
நண்பா,
நான்... இத்தோடு கழண்டுக்கறேன்...! இன்று இங்கே விடுமுறை..ஊர்சுற்ற செல்கிறோம் ..! (காலங்காத்தாலையே கணினி'ல உக்கார்ந்தச்சானு..வீட்டுல சத்தம் )... அதனால்..ஜூட்.
நல்ல...விளக்கமான பதிவு, செய்திகளை சேகரித்து எழுதி இருக்கிறீர்கள்.
நன்றி செய்யது.
// கணினி தேசம் said...
காலங்காத்தாலையே கணினி'ல உக்கார்ந்தச்சானு..வீட்டுல சத்தம் )... அதனால்..ஜூட். //
அப்பாடா..கிளம்பிட்டாருப்பா !!!!!!!
பிரித்து மேய்ந்ததற்கு நன்றி கணினி.....!!!!!
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மாமிசம் சாப்பிடும் பட்சிகளுக்கு கோரை பற்கள் இருக்கும்.
இலை தழைகளை சாப்பிடும் விலங்குகளுக்கு நம்மை போல் சமமாக இருக்கும். இது இயற்கை,
நாமும் ஒரு காலத்தில் மாமிசம் சாப்பிட்டோம், அப்போது கோரை பற்கள் இருந்தது, இப்போது இல்லை. ஆக சாப்பிட தேவையில்லை, இருந்தும் சாப்பிடுகிறோம். காரணம் சுவை.
உண்மையில் மாமிசம் நமது உஅடலுக்கு தேவையற்றதே!
அப்படியே சாப்பிடுவதென்றாலும் அதற்க்காக குற்ற உணர்வெல்லாம் தேவையில்லை, சும்மா அடிச்சு விடுங்க!
//வால்பையன் said...
உண்மையில் மாமிசம் நமது உடலுக்கு தேவையற்றதே!
அப்படியே சாப்பிடுவதென்றாலும் அதற்க்காக குற்ற உணர்வெல்லாம் தேவையில்லை, சும்மா அடிச்சு விடுங்க!//
சரியாகச் சொன்னீர்கள் அருண்.
அதனால தான நாம விமானத்தையும் கப்பலையும் மட்டும் விட்டு வைத்திருக்கிறோம்.
நன்றி வருகைக்கும் கருத்துகளுக்கும்.....
சிந்திக்க வைக்கும் பதிவு.....
என் நன்பர்களும் அடிக்கடி சொல்வதுண்டு தன் வீட்டு நாய்க்குக் கிடைக்கும் முக்கியத்துவம் தனக்குக் கிடைப்பதில்லையென்று.......
//anbudan vaalu said...
சிந்திக்க வைக்கும் பதிவு.....//
நன்றி வால்ஸ்...
//என் நன்பர்களும் அடிக்கடி சொல்வதுண்டு தன் வீட்டு நாய்க்குக் கிடைக்கும் முக்கியத்துவம் தனக்குக் கிடைப்பதில்லையென்று....... //
ஹா ஹா...
இப்பலாம் நாய்க்கு பெடிகீரீ....நமக்கு பழைய சோறு என்ற கதையாகிவிட்டது..
ரொம்ப நல்ல பதிவு அண்ணா
மிக்க நன்றி தமிழ் தோழி..
முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்..
நம்புவீங்களா??? அய்ந்து வேலை தொழுகும் நான், குர்பானி இறைச்சி வருடம் தவறாமல் குடுக்கும் நான் சைவம் மட்டுமே சாப்பிடுபவன்.
:)
Nice writing..., I could not copy and past tamil text @ your comment window..., Please check.
Let the world explore the human values first. then we can get to the animal.
//நாம் உயிர் வாழவே பல்லாயிரக்கணக்கான பிற உயிர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத தர்மம் //
ரொம்ப correct.
//அது' களைப் பராமரிக்கும் போது, கொஞ்சம் 'அவர்களை'ப் பற்றியும் சிந்திக்கக் கூடாதா ??//
கொஞ்சம் இல்லை, நிறையவே சிந்திக்கனும்.
// புதுகை.அப்துல்லா said...
நம்புவீங்களா??? அய்ந்து வேலை தொழுகும் நான், குர்பானி இறைச்சி வருடம் தவறாமல் குடுக்கும் நான் சைவம் மட்டுமே சாப்பிடுபவன்.
//
நீங்கள் என்கட்சி....நானும் முக்கால்வாசி சைவம் தான்..அசைவம் விரும்பி சாப்பிடுவதில்லை.
நிறைய பேர் அசைவம் சாப்பிடவில்லையென்றால் நீங்கள் லாம் முசல்மானா ? என்று கேள்வியெழுப்புகின்றனர்.முழு சைவமாக இருந்தால் கூட முழுமையான முசல்மானாக தொடரலாம் என்பது பல பேருக்கு தெரியமாட்டேங்குதே !!!!!
நன்றி அண்ணன் அப்துல்லா வருகைக்கும் கருத்துகளுக்கும்...
காரூரன் said...
// I could not copy and past tamil text @ your comment window..., Please check.
//
அப்படியா...யாரும் இதுவரை புகார் செய்யவில்லை...
இருந்தாலும் மனம் தளராமல் ஆங்கிலத்தில் பின்னூட்டமளித்தது மகிழ்ச்சியைத் தருகிறது.
நன்றி காரூரன்..
//கலாட்டா அம்மனி said... //
கொஞ்சம் இல்லை, நிறையவே சிந்திக்கனும்.//
கொஞ்சம் அதிகமாக சிந்திக்க முயற்சி செய்ததன் விளைவு தான் இந்த பதிவு.
நன்றி கலாட்டா அம்மனி... வருகைக்கும் கருத்துகளுக்கும்....
super da maapu . . i appreciate your idea to starta blog and store all ur idea parleli showcasin it to the the ppl . . .great start and all the best da . . .
Thanks da ayyapaa....visit often !!!!!
நான் முழு நேர அசைவன்.ஆனால் சைவ சாப்பாடுதான் மனுசனுக்கு நல்லது. உணவு சுழற்சியில் விலங்கு சாப்பிடுவது தப்பில்லை.ஆனால அதுக்காகவே உருவாக்கி பெரிய கோல்மால் பண்ணிட்டானுங்க இப்ப
நன்றி குடுகுடுப்பையாரே !!!
வருகைக்கும் கருத்துகளுக்கும்.....
//மனிதனுக்கு (omnivorous) மட்டும் இந்த இரண்டு வகை பற்களும் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாம் இரண்டு வகை உணவையும் உண்ணலாம் என்று நம்மைப் படைத்தவனிடமிருந்தே வந்த கீரின் சிக்னல்.//
--ரூம் போட்டு யோசிப்பிங்களோ..
அடுத்த பதிவிக்ற்காக(ஹலால்/ஹராம்) வெயிட்டிங். லேட் பண்ணாதிங்க..
நன்றி ஷாஜி..
முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்..
//அடுத்த பதிவிக்ற்காக(ஹலால்/ஹராம்) வெயிட்டிங். லேட் பண்ணாதிங்க.. //
இன்னும் நிறைய தெரிந்து கொள்ள islampreaches.blogspot.com பின் தொடருங்கள்.
Please do not believe the non-vallalar devotee’s concept.
You must read Vallalar’s Jeevakarunya vilakam.
புலி சிங்கம் முதலிய மிருகங்கள் மற்றொரு சீவனைக் கொன்று தின்று தாமச ஆகாரத்தால் பசியாற்றித் திருப்தி இன்பத்தை யடைந்து சந்தோஷ’க்கின்றன; அந்தச் சந்தோஷம் கடவுளியற்கை விளக்க ஏக தேசமும் சீவன் இயற்கைவிளக்க நிறைவும் என்று கொள்ளக்கூடாதோ என்னில்:- கூடாது. தாமச ஆகாரத்தால் பூரண சத்துவமாகிய கடவுளியற்கைவிளக்க ஏகதேசமும் ஏகதேச சத்துவமாகிய ஆன்ம இயற்கைவிளக்கமும் விளங்கா; இருளால் ஒளி விளங்காதது போல். இதைத் தாமச ஆகாரமென்பது. என்னையெனில்:- கடவுள் விளக்கம் வெளிப்படாதபடி ஆன்ம விளக்கத்தை மறைத்த இம்சை ஆகாரமாதலால் தாமச ஆகாரமாயிற்று. இந்த ஆகாரத்தால் வந்த திருப்தி யின்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்க மென்னில்:- அனாதி பசுகரணமாயாவிளக்கம் என்று அறியவேண்டும். பசு வென்பது என்னை? ஆணவம் மாயை கன்மம் என்கிற மும்மல பந்தத்தால் ஒன்றுபட்டு அறிவிழந்த ஆன்மாவையே பசு வென்பது. அப்பசுவிற்கு விளக்கந் தோன்றுவது எப்படியென்னில்:- சூரியனை மறைத்த மேகவண்ணத்திலுள்ள இருளினிடத்தும் சூரியப்பிரகாச விசேஷந் தோன்றுதலால் அவ்விருளும் விளக்கமாக வழங்குகின்றது. அது போல், அசுத்தமாயாகரணங்களும் தாமச குணமும் இருள் வண்ணமுடைய வாயினும் தம்மால் மறைக்கப்பட்ட பரசீவவிளக்க விசேஷத்தால் அசுத்தமாயாகரணமும் தாமசகுணமும் விளக்கமாக வழங்குகின்றன. இதனால், தாமச ஆகாரத்தில் வரும் விளக்கம் அசுத்தமாயாகரண விளக்கமே என்றறியவேண்டும்.
ஆனால் மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிராகவே சொல்லப்படுகின்றனவே, அவைகளை இம்சைசெய்து ஆகாரமாகக் கொண்டால் அவை தாமச ஆகார மல்லவோ, அதனால் வந்த சந்தோஷம் அசுத்த மனோகரண சந்தோஷமல்லவோ என்னில்:- மரம் புல் நெல் முதலான தாவரங்களும் உயிர்கள்தான். அவைகளை இம்சைசெய்து ஆகாரங்கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரந்தான். அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்தாகரண சந்தோஷந்தான். ஆனாலும் அப்படியல்ல. மரம் புல் நெல் முதலான சீவர்கள் பரிச மென்கிற ஓரறிவையுடைய சீவர்களாதலாலும், அவ்வுடம்பில் சீவவிளக்கம் ஒருசார் விளங்குதலாலும், அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சயமாதலாலும், அவ்வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக்கூடுமாதலாலும், அவ்வுயிர்களை வேறுசெய்யாமல் அவ்வுயிர்களினிடத்து உயிரில்லாமல் உயிர் தோன்றற்கிடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் காய்களையும் கனிகளையும் பூக்களையும் கிழங்குகளையும் தழைகளையும் ஆகாரங்களாகக் கொள்வதேயன்றி அவ்வுயிருள்ள முதல்களை ஆகாரமாகக் கொள்ளாதபடியாலும், அவைகளில் வித்து காய் கனி முதலானவை கொள்ளும்போது சுக்கிலம் நகம் ரோமம் முதலிய வைகளை வாங்கும் போது இம்சை உண்டாகாமை போல் இம்சை உண்டாகாத படியாலும், தாவர வர்க்கங்களுக்கு மன முதலான அந்தக் கரணங்கள் விருத்தி யில்லாதபடியாலும் அது உயிர்க்கொலையுமல்ல; துன்ப முண்டுபண்ணுவது மல்ல; அதனால் அது சீவகாருணிய விரோதமாகாது. அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் சீவவிளக்க சகிதமான கடவுள் விளக்கமேயாகு மென்று அறியவேண்டும்.
மர முதலிய தாவங்களில் தோன்றிய வித்துக்களை இனி உயிரேறுதற் கிடமாகிய சடங்க ளென்பது எப்படியென்னில்:- வித்துக்களில் சீவனிருந்தால் நிலத்தில் விதையா முன்னமே விளைய வேண்டும்; நிலத்தில் விதைத்த காலத்தும் சில வித்துக்கள் விளையாமலே யிருக்கின்றன. அன்றியும் வித்தென்பது காரணம். இந்தக் காரணம் உடம்பு தோன்றுதற்கே யென்று சிறு பிள்ளைகளாலும் அறியப்படும். அன்றி உயிர் நித்தியம், உடம்பு அநித்தியம்; நித்தியமான உயிர் காரணம் வேண்டாது; அநித்தியமாகிய உடம்பே காரணம் வேண்டும். ஆகலில் வித்துக்களைச் சடமென்றறிய வேண்டும். ஆனால் வித்துக்களிடத்து ஆன்மாக்கள் ஏறுவது எப்படி யென்னில்:- நிலத்திற் கலந்த வித்திற்கு நீர்விடில் அந்த நீரின் வழியாகக் கடவுள் அருள் நியதியின்படி ஆன்மாக்கள் அணுத் தேகத்தோடு கூடி நிலத்திற் சென்று அந்நிலத்தின் பக்குவ சத்தியோடு கலந்து வித்துக்களினிடமாகச் செல்கின்றன வென்று அறிய வேண்டும்.
முளைகளையே பிடுங்கப்படா தென்று சிலர் சொல்கின்றார்கள்; வித்து காய் இலை முதலியவைகளைப் புசிக்கலாமென்று சொல்வதெப்படி யென்னில்:- வித்து நிலத்திற் படிந்தபின் நீர் வழியாக ஆன்மாவானது சென்று பக்குவ சத்தியிற் கலந்து வித்திலேறி முளைத்தபடியால், முளையானது வித்து காய் முதலியவைகளைப் போலச் சடமல்ல. ஆகலால், முளைகளைப் பிடுங்கப்படாதென்பது உண்மையென்று அறிய வேண்டும்.
வித்து காய் கனி முதலியவற்றில் உயிர்க்கொலை இல்லாவிடினும் நகம் ரோமம் சுக்கிலம் முதலியவற்றிலிருக்கிற அசுத்தமாவதில்லையோ என்னில்:- தத்துவவிருத்தியும் தாது விருத்தியும் இல்லாதபடியால் அசுத்தமுமில்லை.
ஆகலில் மரம் புல் நெல் முதலியவைகளின் வித்து காய் கனி தழை முதலியவற்றைப் புசிப்பது சீவகாருணிய விரோதமல்ல என்றறிய வேண்டும்.
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பன்
பாலமுருகன்
காஞ்சிபுரம்
super... பாலமுருகன்
thanks for your explanation
தங்கள் ஆராய்ச்சி முழுமையானதாக தோன்றவில்லை சகோதரா....பார்க்கவும் மனிதன் சைவமா அல்லது அசைவமா? என்று இங்கே...http://www.celestialhealing.net/physicalveg3.htm அல்லது
http://www.stevepavlina.com/blog/2005/09/are-humans-carnivores-or-herbivores-2/
Post a Comment