Monday, December 1, 2008

த‌வ‌ம்



ஈரம் செறிந்த
தரை விரிசலினூடே
கண் சிமிட்டும்
மெல்லிய அரும்புகள்

விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும்
க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।

பார்வை தெரிந்தும்‍- நாண‌ப்
போர்வையெறிந்தும்
மெய்யிர‌ண்டும் மெலிதாக‌ உர‌ச‌
சிறு ச‌ல‌ச‌ல‌ப்பின்றி ஓர் மெள‌ன‌ ஊட‌ல்।

கருமுகில் நோக்கி
காய்ந்த‌ ம‌ண் த‌வ‌ம்।

விண்சுட‌ரெண்ணி
விடிய‌லின் த‌வ‌ம்।



ஓர் இத‌ழின‌சைவை வேண்டி- இவ்
எளிய‌னின் கடுந்த‌வ‌ம்.

6 comments:

Che Kaliraj said...

வார்த்தை கிழிக்கிறது. வானம் பொய்ப்பை. காதல் வரும் கண்நீர்வரும் தண்ணீர் வந்தாலே.

புதியவன் said...

//பார்வை தெரிந்தும்‍- நாண‌ப்
போர்வையெறிந்தும்
மெய்யிர‌ண்டும் மெலிதாக‌ உர‌ச‌
சிறு ச‌ல‌ச‌ல‌ப்பின்றி ஓர் மெள‌ன‌ ஊட‌ல்। //

வார்த்தைகளில் ஊடல் அழகு...

புதியவன் said...

//கருமுகில் நோக்கி
காய்ந்த‌ ம‌ண் த‌வ‌ம்।

விண்சுட‌ரெண்ணி
விடிய‌லின் த‌வ‌ம்।

ம‌னுநீதி வேண்டி
மானுட‌ம் த‌வ‌ம்।//

ரொம்ப கடுமையான தவம் போல...

புதியவன் said...

//ஓர் இத‌ழின‌சைவை வேண்டி- இவ்
எளிய‌னின் கடுந்த‌வ‌ம்.//

வரம் கிடைச்சதா...?

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//ஓர் இத‌ழின‌சைவை வேண்டி- இவ்
எளிய‌னின் கடுந்த‌வ‌ம்.//

வரம் கிடைச்சதா...?
//

வேறொரு வரம் கிடைச்சது....

நன்றி புதியவன்..பழைய பதிவிற்கு வந்து கருத்து சொல்லியமைக்கு..

cute baby said...

ஆஹா! ரொம்ப பெரிய தவம் தானுங்கோ