Tuesday, December 23, 2008

இன்று ஒருநாள் ம‌ட்டும்


தூரத்து சொந்தமென்று
ஒரு சிவப்பு நிற சுடிதார் தேவதையை
எனக்கு காட்டினார்களே
நாம் சந்தித்த அந்த முதல் நாள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***
அக்கா குழந்தையைத் தூக்கும் ப‌ட‌ல‌மாய்
உன்னிட‌மிருந்து நானும்
என்னிட‌மிருந்து நீயும்
மாற்றி மாற்றி, விர‌ல்க‌ள் உர‌சி
வெட்க‌ம் உன் க‌ண்ணில் சிதறி
இருவ‌ரும் க‌ரைந்து நின்ற நொடிக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

உன்னெதிரில் நான் அம‌ர்ந்து
என் அம்மா தோளிலேயே சாய்ந்து கொண்டு
க‌ள்ளத் த‌ன‌மாய் எனைப் பார்த்த
உன் ஓர‌ப்பார்வைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


சொல்ல முடியாமல் நீ தவித்து
நான் தூங்குவதாய் எண்ணி
என் அருகில் வந்தமர்ந்து
காதோரம் நீ உதிர்த்த
அந்த ரகசிய வார்த்தைகள்
நினைவுக்கு வராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


நான் பார்க்க‌ வேண்டுமென்றே
என் கால‌ணிக்குள் உன் கால்க‌ள் நுழைத்து
பார்க்காதது போல் நான் ந‌டித்து
த‌லைகீழாய் புத்த‌க‌ம் படிப்ப‌வனைப் பார்த்து
"இன்னுமாடா உன‌க்கு புரிய‌ல‌..."
என்ப‌து போல் முறைத்துக் கொண்டே
வாய‌சைத்த அந்த‌ குட்டி இதழ்க‌ள்
நினைவுக்கு வராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்...
***


இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் நீ தந்த‌
அந்த‌ முத‌ல் முத்தம்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


காகிதத்தில் மட்டும‌ல்ல‌
க‌ன்னத்தில் கூட‌ க‌விதை எழுதலாமென்று
என‌க்கு நீ சொல்லிக் கொடுத்த‌ நாட்க‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


எண்ணெய் தடவி படிய வாரிய‌
தலைமுடியைக் கலைத்துவிட்டு
"இப்பத் தாண்டா நீ அழகா இருக்க!!"
என்று என்னையும் சேர்த்து கலைத்தாயே !!!
அன்று நாமமர்ந்த மரத்தடி சிமெண்ட் பெஞ்ச்.
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


சின்ன சின்னக் காரணங்களுக்காய்
சண்டை போட்டு
பல நாட்கள் பேசாமலிருந்து
யாருக்கும் தெரியாமல்
பின்னிரவில் அழுது நனைத்த போர்வைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

இதோடு நாம் பிரிய போகிறோம்
என்று தெரிந்தோ தெரியாம‌லோ
ச‌ன்ன‌லோர‌ இருக்கையில்
என் கைக‌ளை இறுக பிடித்துக் கொண்டே
க‌டைசியாக ஒருமுறை
"நீ எனக்கு வேணுன்டா" என்று
அழுது கொண்டே நீ சொன்ன‌
அந்த க‌ண்ணீர் வார்த்தைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

வாழ கற்றுக் கொள்கிறேன்

இன்று ஒருநாள் ம‌ட்டும்
கிளிச‌ரின் புன்ன‌கையின்றி....

21 comments:

anbudan vaalu said...

ஓ.....இது தான் நீங்க சொன்ன பிரித்து வைக்கப்பட்ட அனுபவமா???

அ.மு.செய்யது said...

கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லக் கூடாதுல்ல.....

anbudan vaalu said...

ஆமா.....ஆமா.......நான் எதுவும் கேட்கல.....
all clear ;))))

காரூரன் said...

வாலிபத்தின் முறுக்கு, வார்த்தைகளில் தவிப்பு, பார்த்தவளின் பூரிப்பு, மென்பொருள் எழுதுவது இதுவோ!

அ.மு.செய்யது said...

நன்றி காரூரன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

உணர்வின் வலி

அ.மு.செய்யது said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
:)))

உணர்வின் வலி //

நன்றி அம்மா...வலியைப் பகிர்ந்து கொண்டமைக்கு...

புதியவன் said...

மனதைத் தொட்ட வரிகள்...வலிகள்...

அ.மு.செய்யது said...

நன்றி புதியவன்.

என் வலைதளத்திற்கும் நீங்கள் புதியவர் தான்.
அடிக்கடி வர அவா.

Che Kaliraj said...

//நீ எனக்கு வேணுன்டா" என்று
அழுது கொண்டே நீ சொன்ன‌
அந்த க‌ண்ணீர் வார்த்தைக‌ள்//

this is not a reaction, It is a murder pain. True words in Each & every words I like Very much.

அத்திரி said...

ரொம்ப அனுபவிச்சிருப்பீங போல....... மூழ்கினேன் பழைய நினைவுகளில்

அ.மு.செய்யது said...

//அத்திரி said...
ரொம்ப அனுபவிச்சிருப்பீங போல....... மூழ்கினேன் பழைய நினைவுகளில்
//

இந்த‌ அனுப‌வ‌ங்க‌ள் தான் ந‌ம்மை ப‌க்குவ‌டுத்துகின்றன.

நன்றி அத்திரி !!!
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துகளுக்கும் !!!

நவீன பாரதி(15170314148190159683) said...

HI Syed,

Thanks for visiting my blog.

இளம் காதலர்கள் மனதை அழகாய் படம் பிடித்துள்ளது இந்த கவிதை!


Thanks,
நவீன பாரதி

அ.மு.செய்யது said...

Nandri நவீன பாரதி(15170314148190159683)..

Anonymous said...

hey sema nice:) un kavidhai nayathukku oru alavae illa kadhar:)

அ.மு.செய்யது said...

//hey sema nice:) un kavidhai nayathukku oru alavae illa kadhar:) //

Thanks rice !!!! for visiting my blog.

Anonymous said...

oru nalla kathal padam partha mathri erunthadhu adhey neram oru vali ippathaanda ne azhaga erukka variyum ne enaku venum da...ondru azhagu ondru azhugai arumai kathalai unarinthavargal intha valiaiyum unarvar mellisaiai oru nalisai..

அ.மு.செய்யது said...

ந‌ன்றி thamilarasi !!!!!

இவ்ளோ அழ‌கான‌ பின்னூட்ட‌த்திற்கு...ஆனா கொஞ்ச‌ம் த‌மிழ்ல டைப் ப‌ண்ண‌
ட்ரை ப‌ண்ணுங்க‌ளேன்.

http://www.adiraijamal.com/unicode

ந‌ம்ம‌ ஜ‌மால் அண்ணனோட‌ யுனிகோட் த‌மிழ் எடிட்ட‌ர். கொஞ்ச‌ம் ஈஸியா இருக்கும்.

siva said...

very nice da.....

ஜியா said...

unga kavithaiyodave payanikka vachathu :))

Unknown said...

காகிதத்தில் மட்டும‌ல்ல‌
க‌ன்னத்தில் கூட‌ க‌விதை எழுதலாமென்று
என‌க்கு நீ சொல்லிக் கொடுத்த‌ நாட்க‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்
machan,

Indha kavidaiya mattum nan thirudikiren da, mannichidu.
vijay.