மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்டது.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊசலாடிக் கொண்டிருந்தது.அடிவயிற்றை முட்டிய ஒன் பாத்ரூமை அடக்கிக் கொண்டு "பாபிலோனிய மன்னர் தரியூ..பராக் பராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்பட்ட காலர் மைக்கில் சொல்ல வேண்டும்.பாபிலோனிய மன்னருக்கு எப்படி தமிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க நேரமில்லை.கொடுக்கப்பட்ட வாயிற்காப்போன் வேடத்தைச் சரியாக செய்ய வேண்டுமென்பது தற்காலிக கவலை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நாடகங்களில் இது போன்ற ஒப்புக்குச்சப்பான் வேடங்கள் தான் கொடுக்கப்படும்.மன்னராக வேண்டுமென்றால் ஃப்ளஸ் டூவில் கம்பியூட்டர் சயின்ஸ் எடுத்திருக்க வேண்டும்.
படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவது பரவாயில்லை.கடந்த ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேடம் தந்தார்கள்.அடுத்த முறை தமிழ் மன்ற விழாவின் போது சாக்ரட்டீஸூக்கு விஷம் வைக்கும் மெலீட்டஸ் கேரக்டர் தருவதாக லிட்டில் ஃபிளவர் மிஸ் ப்ரா'மிஸ்' பண்ணியிருந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்கலில் மிளகு போல ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் தனித் தீவாகத்தானிருக்க வேண்டும்.எந்த கேங்கிலும் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.மச்சி..இவன் தான் கணக்கு மிஸ் ஜோஸ்பினோட spy டா..அவன் இருக்கும் போது பாத்து பேசுங்க..என்று அபாண்டமாக சந்தேகிப்பார்கள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.
புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,சமூகவியல் டீச்சர் காந்திமதியின் இஸ்திரி போட்ட சேலையை அங்கியாக உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை பல ஆண்டுகளுக்கு பின் சுட்டு கொன்ற உதம் சிங்'காகவும், கடைசி நேரத்தில் என் ஆதர்ச காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( மச்சான் லுங்கில நீ நம்ம பேட்ட ரவுடி கணக்கா மெர்சிலா இருந்த..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை சர்ஃப் எக்ஸலில் ஊற வைத்ததைப் போலவும்,கருப்பட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார ஜாக்சன் துரையாகவும், இப்படி நிறைய "ஆகவும்" நான் நடித்ததைப் பற்றி ஒரு நெடுந்தொடரே எடுக்கலாம்.
எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைகள் நிறைந்த கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல கைதட்டல்கள் அள்ளும் எங்கள் நாடக குழுவின் நட்சத்திர நாயகன் சுப்புரமணி, 11ம் வகுப்பு சேர வேறு பள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.
ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓரளவு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் மட்டுமே நம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.
( மீதி விரைவில்..)
************************************************
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
-
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக,
தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது.
அத...
1 month ago
37 comments:
ரொம்ப நல்லா எழுதுறீங்க செய்யது. உங்க கதைகள் இப்போ விரும்பி படிக்க ஆரம்பிச்சுட்டேன். தொடருங்கள்...
நன்றி விசா..உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன்.பாருங்கள் !!!
//மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்டது.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று பயமுறுத்தியது. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊசலாடிக் கொண்டிருந்தது.அடிவயிற்றை முட்டிய ஒன் பாத்ரூமை அடக்கிக் கொண்டு "பாபிலோனிய மன்னர் தரியூ..பராக் பராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்பட்ட காலர் மைக்கில் சொல்ல வேண்டும்.//
ரொம்ப டாப்பா இருக்கு செய்யது. காட்சி கண்முன்னே வந்து புன்னகைக்க வைக்கிறது
//கடந்த ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேடம் தந்தார்கள்.//
ஹா ஹா ஹா. என்ன கொடுமை சார் (டீச்சர்) இது
//ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச்,//
எங்க ஏரியா உள்ள வராதே. அங்க மட்டும்தான் மறக்கமுடியாத பல நினைவுகள் அதிகமிருக்கும்
//அழுக்கு ஜட்டியை சர்ஃப் எக்ஸலில் ஊற வைத்ததைப் போலவும்,கருப்பட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார ஜாக்சன் துரையாகவும், இப்படி நிறைய "ஆகவும்" நான் நடித்ததைப் பற்றி ஒரு நெடுந்தொடரே எடுக்கலாம்.//
ஹா ஹா ஹா. சூப்பர்
//ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.//
அவ்வ்வ்வ்வ்.
யாரங்கே! அடுத்த பகுதி விரைவில் வரட்டும்.
செய்யது ஆர்வமாய் எதிர்பாக்கிறோம் அடுத்த பாகத்தை.
//மன்னராக வேண்டுமென்றால் ஃப்ளஸ் டூவில் கம்பியூட்டர் சயின்ஸ் எடுத்திருக்க வேண்டும்.//
உங்களை மாதிரி வாயில்காப்போன் வேடத்துக்கு!?
மேட்டர் கனமா இல்லைனாலும் படிக்க நல்லாயிருக்கு!
உங்களுக்கு வாசகனை கட்டிபோடும் ரகசியம் தெரிஞ்சிருக்கு, தொடர்ந்து எழுதுங்க!
//படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்//
படிக்கிற குரூப்பா??? ஆஅவ்வ்வ் அப்போ அதான் கெதி
//கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்//
சினிமாதுறைக்கு பெரும் இழப்பு உங்களை மிஸ்பண்ணியதில்...
//இப்படி நிறைய "ஆகவும்" நான் நடித்ததைப் பற்றி ஒரு நெடுந்தொடரே எடுக்கலாம்.
/
நமக்கும் இதுக்கு ரொம்ப தூரம், பார்வையாளன் மட்டுமே நான்
படிப்பவர்களை மயக்கும் ஒருவித பசை உங்க எழுத்தில் இருக்கு செய்யது...
தொடருங்க.....
ஆரம்பமே அமர்க்களம்..
//ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்கலில் மிளகு போல ஒதுக்கி வைப்பார்கள்.//
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..
ஆரம்பமே அசத்தல் செய்யது!!
//
படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்
//
அது என்னவோ உண்மைதான்...
//
மச்சி..இவன் தான் கணக்கு மிஸ் ஜோஸ்பினோட spy டா..அவன் இருக்கும் போது பாத்து பேசுங்க..என்று அபாண்டமாக சந்தேகிப்பார்கள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.
//
ஒரு கல்லூரியில் புகுந்து வந்த மன நிலை எனக்கு ஏற்ப்பட்டது.
மொத்தத்தில் இந்த "புனைவு"க் கதை மிகவும் அருமை!
அடுத்ததை படிக்க மிகவும் ஆவலாய் இருக்கிறேன்!
நன்றி நவாஸ் !!! ரசனைக்கு !!
------------------------
நன்றி ஹேமா !! தொடர் ஆதரவுக்கு !!
------------------------
நன்றி வால்பையன் உசுப்பேத்தியதற்கு !!
------------------------
//வால்பையன் said...
//மன்னராக வேண்டுமென்றால் ஃப்ளஸ் டூவில் கம்பியூட்டர் சயின்ஸ் எடுத்திருக்க வேண்டும்.//
உங்களை மாதிரி வாயில்காப்போன் வேடத்துக்கு!?
//
வாயிற்காப்போனுக்கு..தமிழ் மீடியத்தில் ஒன்பதாம் வகுப்பில் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்க வேண்டும்.
நன்றி அபுஅஃப்ஸர்..ஜி டாக் விமர்சனத்திற்கும் சேர்த்து !! ( அதென்னங்க பசை ?!?!?!? )
-----------------------------
நன்றி கார்த்திகை பாண்டியன் ( உங்கள மாதிரி உக்காந்து யோசிக்கறது தான் )
-----------------------------
நன்றி ரம்யா..உங்க கதையும் சூப்பர் ( அதென்னங்க டெலிடட் கமெண்ட்..எனக்கு மட்டும் சொல்லுங்க .! )
@ரம்யா..
//ஒரு கல்லூரியில் புகுந்து வந்த மன நிலை எனக்கு ஏற்ப்பட்டது.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்...இது பள்ளிக்கூட நாடகம் பத்தின கதைங்க..!!
ரொம்ப நல்லா இருக்கு! எனக்கும் என் பள்ளி நாடகம் நினைவுக்கு வருது.. அப்போ நாங்க திருவிளையாடல் தருமி சீன ரீமேக் பண்ணினோம்!!
நன்றி நாஸியா வருகைக்கு..
கிரீச்ச்ச்ச்..நீங்க சொன்ன அதே தருமி சீன,நாங்களும் ரீமேக்கிருக்கோங்க..! ஆனா அதுல நான் நடிக்கல.
//படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.//
ஓ.. நீங்கல்லாம் கெட்ட பசங்களா?
ஐ ஆம் சாரி, உங்க கூடல்லாம் சேரக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்காங்க...
ஐ!ஜாலி செய்யது... பயங்கர variety யா கீது மச்சி.இது வேணும் செய்யது.சுறு,சுறு,ண்ணு போய் கொண்டிருக்கு.டெம்போவை விடாமல் பிடித்து போகட்டும்..சந்தோசமாய் இருக்கு இந்த வண்ணம்!சீக்கிரம் வரட்டும் ...
நல்ல எனர்ஜெடிக்கா, ரசிச்சு படிக்கிறா மாதிரி இருந்துச்சு.
தொடரும் வேற இருக்கா :)
ரோமியோவாக நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும்............பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.
எனக்கென்னமோ கதை முடிந்த மாதிரி தோன்றியது. சரியா ந்னு தெரியல!
மன்னராக வேண்டுமென்றால் ஃப்ளஸ் டூவில் கம்பியூட்டர் சயின்ஸ் எடுத்திருக்க வேண்டும்.
வெண்பொங்கலில் மிளகு போல ஒதுக்கி வைப்பார்கள்.
இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.
இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு காரணமான ஜெனரல் டயரை பல ஆண்டுகளுக்கு பின் சுட்டு கொன்ற உதம் சிங்'காகவும்
ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓரளவு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது//
அ.மு.செ டச் :)))))))))))))
அருமையா இருக்கு செய்யது, இத படிச்சதும் நான் அஞ்சாம் வகுப்பில் அரபி வேடமிட்டு மீசை, தாடியெல்லாம் கருப்பு மை பூசி, (தாங்கள கூறிய படி பயத்துடன்) நடித்தது நினைவில் வருகிறது. ரசித்துப் படித்தேன்!!
ராஸா நான் என்னா இங்கே புதுசா சொல்லிட போறேன் ...
ஆனாலும் ...
உங்களுக்கு நேர்ந்த பல அனுபவங்கள் யமக்கும் உண்டு -
ஒரு மிக பெரிய வித்தியாசம் -
நீங்க படிக்கிற பசங்க
நான் நடிக்கிற குரூப் - படிப்பெல்லாம் பரிட்ச்சை சமயத்தில் மட்டுமே.
நிறைய கிளறி விட்டுட்டீங்க
சொல்லலாம் தான் -
உங்க அளவுக்கு சுவையா சொல்லத்தெரியாதுங்கறது ஒரு உண்மை மேலும் நான் ஆரம்பிச்சால் ... சரி விடுங்க - உங்களத படிச்சி என் நினைவுகளில் ஒதுங்கி கொள்கிறேன்.
அந்த வெண்பொங்கள் மேட்டர் ரொம்ப இரசிச்சேன்ப்பா ...
நன்றி அமித்து அம்மா !!!
நன்றி ஷஃபி...
ஜமால்...இங்க நான் என் சொந்த கதைய எழுதல..ஒரு கதைக்கு தேவையான புனைவை மட்டுமே எழுதியிருக்கிறேன்.
மன்னிக்கவும்.
அழகா நகருது கதை
ஆனாலும் அந்த பழைய டைப் நல்லா இருந்துது அதோட ஒபெநிங் ரொம்ப ரசிச்சேன்
இதுவும் ஒன்னும் சுமார் இல்ல நல்லா நகர்த்துறீங்க நல்லா இருக்கு
முடிவையும் போட்டதுக்கப்புறம் மொத்தமா படிச்சுக்கறேன். நிசமாத்தான்பா.!
நன்றி பாலா ( அப்புறம் அந்த கோயமுத்தூர் அன்னிய ரொம்ப கேட்டதா சொல்லுங்க !! )
--------------------------
நன்றி ஆதிமூல கிருஷ்ணன் ( ரைட்டு !! )
ரொம்ப நால்லா இருந்தது........
வாழ்த்துக்கள்......... தொடருங்கள்...........
Nice
Post a Comment