Wednesday, June 10, 2009

ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்


வேலை கிடைத்து பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மாலை நீ அனுப்பிய "ஹேப்பி ஜெர்னி" குறுந்தகவலில் ஆரம்பித்தது நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று..

ஜூன் 10


கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்.இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது. என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.

"போய் க‌ண்ணாடில‌ உங்க‌ ஃபேஸ‌ பாருங்க‌ பாஸூ..அந்த‌ பொண்ணு ரேஞ்சே வேற‌..அதெல்லாம் உங்க‌ள‌ போயி.." என்ற‌ நண்ப‌னிட‌ம் "க‌ண்டிப்பா இவ‌ வீட்டில‌ இன்னிக்கு போயி என்ன‌ ப‌த்தி அட்லீஸ்ட் 0.00002% ஆவ‌து யோசிப்பாடா" என்று ச‌வால் விட்டேன்.அத‌ற்கு முன்பே குறுந்த‌க‌வலில் நாம் மேக‌ங்க‌ளை திர‌ட்ட‌ ஆர‌ம்பித்திருந்தோம்.சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.

உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.

மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான். வெகுநேரம் பேசாமல் கைக‌ளை ம‌ட்டும் பிடித்து கொண்டு அம‌ர்ந்திருப்போமே!!.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது.இப்போதெல்லாம் பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

நள்ளிரவு மொட்டைமாடி அலைபேசி பேச்சுகளுக்கு பிற‌கு உன் அருகாமையை அதிகம் பெற்றது அடையாறு பூங்காவில்.உன் மடியில் கண்ணயர முயலும் போது,தலைமுடியை கலைத்து விட்டு "இப்பதான்டா நீ அழகா இருக்க" என்று என்னையும் சேர்த்து கலைத்தாய்."மான்கள் குறுக்கிடும் பார்த்து செல்லவும்" அறிவுப் பலகையை பார்த்து விட்டு நான் மான்களை பார்த்தே ஆக‌ வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !!

காதலிக்க ஆரம்பிக்குமுன்னே எதிர்ப்புகளை சந்தித்தது நாமாக தானிருப்போம்.கேலி பேசிய சுற்றத்தாரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நீ என் மீது வைத்த உறுதியான ந‌ம்பிக்கையும் காத‌லும்.எதிர்த்தவர்கள் தர்க்கம் செய்ய திராணியற்று போயினர்.அந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் சந்திப்பது ஆபூர்வமாகிப் போனது.ஒரே ஒரு மின்னஞ்சல் கணக்கை மட்டும் உருவாக்கி இருவரும் பயன்படுத்த தொடங்கியது அப்போது தான்.இப்போது நீ அதை பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.உனக்காக நான் எழுதிய (முதல்) மழை கவிதை தனியாக ஒரு ஃபோல்டரில் அழிக்கப்படாமல் இருக்கிறது.மை டியர் ஹஸ்பெண்ட் என்று ஆரம்பிக்கும் அனைத்து ரோஜாப்பூ மின்னஞ்சல்களையும்,உன் உம்மாக்களையும் என்ன காரணத்திற்காகவோ தினமும் படித்து கொண்டிருக்கிறேன்.நீ அழுது எழுதிய அந்த கடைசி பத்து கடிதங்களையும் சேர்த்து தான்.

அதே கிண்டி ரயில் நிலையம் நாம் கடைசியாக சந்தித்த இடம் நினைவிருக்கிற‌தா?.அதோடு பிரியப்போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுக‌ளை விட்டு அக‌ல‌ ம‌றுக்கிற‌து.

அத‌ன்பிற‌கு,நாம் வேறோடு பிடுங்க‌ப்ப‌ட்டு,வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌ட்டோம்.நீ இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாய் என்ற தகவல் தெரியாமலும் உன் குரலை கேட்காமலும் நாட்கள் நரகமாய் நகர்கின்றன.சிக‌ப்பு க‌ற்க‌ள் ப‌தித்த‌ உன் வ‌ளைய‌லும்,உன் புகைப்ப‌ட‌மும் இன்னும் என்னிட‌ம் ப‌த்திர‌மாக‌ இருக்கின்ற‌ன‌.இப்போதெல்லாம் முன்பேவா பாட‌ல் வ‌ரும் போதெல்லாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறேன்.

எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.என்றோ ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.

"நான் போத்தீஸ்ல‌ இருக்கேன்.என்ன‌ க‌ல‌ர் சுடிதார் எடுக்க‌ட்டும்..சீக்கிர‌ம் சொல்டா" என்று என்னை தொந்த‌ர‌வு செய்ய‌வும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு ச‌ண்டை போட‌வும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.நீ என் த‌லைமுடிய க‌லைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட‌ சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..


*******************************

257 comments:

«Oldest   ‹Older   201 – 257 of 257
S.A. நவாஸுதீன் said...

நான்தான் மாப்ள

gayathri said...

yaru pa athu 200 pottathu konjam kooda payam illama

rose said...

gayathri said...
yaru pa athu 200 pottathu konjam kooda payam illama
\\
nan rendu peru irukomla

நட்புடன் ஜமால் said...

நீங்க இல்லைன்னு நினைச்சு போட்டுட்டேன்

சகோதரிகள் பொருத்தருள்க

gayathri said...

அ.மு.செய்யது said...
// மழை விட்டுடுச்சா ?? //

என்னது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைசிருச்சா ?

ஐ..ஜாலி..காந்தி தாத்தா வாழ்க..


ada pavame ini ungaluku suthantheram kedaikkathu pa kedaikkathu pa

gayathri said...

rose said...
gayathri said...
yaru pa athu 200 pottathu konjam kooda payam illama
\\
nan rendu peru irukomla


athane

gayathri said...

நட்புடன் ஜமால் said...
நீங்க இல்லைன்னு நினைச்சு போட்டுட்டேன்

சகோதரிகள் பொருத்தருள்க


ada ennana nee potta enna naan potta enna ellam ore kudumpam thane vedunga vedunga

rose said...

gayathri said...
நட்புடன் ஜமால் said...
நீங்க இல்லைன்னு நினைச்சு போட்டுட்டேன்

சகோதரிகள் பொருத்தருள்க


ada ennana nee potta enna naan potta enna ellam ore kudumpam thane vedunga vedunga

\\
2 much gaya

நட்புடன் ஜமால் said...

என்னா ரோஸ்

என் தங்கச்சி பற்றி உனக்கு தெரியாதா

rose said...

நட்புடன் ஜமால் said...
என்னா ரோஸ்

என் தங்கச்சி பற்றி உனக்கு தெரியாதா

\\
unga alavukelam theriyathupa

நட்புடன் ஜமால் said...

இனி தெரிஞ்சிகிடுங்க.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.
//

இதுக்கு பவர் சாஸ்த்தி.... அதும் ஒன்றகண்ணுல பாக்குறது இருக்கே ம்ம்... மனுசன பைத்தியமாக்கிடும்... -:)

//சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.//

இப்படி ஆரம்பிக்கிற மழை... நம்மகன்னுல வாழ்நாள் முழுதும் வந்தா அதுக்கு பேரு காதல்... இல்லாங்காட்டி அது கல்யாணம்

//சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்//

நிம்மல் நிலைமை நம்மில்க்கு... நல்லா தெரியுது... தூங்குரதுக்கே மணி ரெண்டுக்கு மேல ஆகும்... ஒன்லி ட்ரீம்ஸ் வித் தட் அம்மணி

//உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது//

நோ கமெண்ட்ஸ்

//என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.//

இருக்காதா பின்ன

//நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்//

-:)

//நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.
//

எவ்வளவு ஞாபக மறதியா இருந்தாலும்... நம்ம பசங்க இதுல கில்லாடி...

//மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான்//

இரயில் நிலையம். தேவர்களுக்கு தேவதைகளையும், தேவதைகளுக்கு தேவர்களையும் உருவாக்கும் இடம்... பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை தன்னகத்தில் கொண்டாலும், பல வலிகளையும் சுமந்துகொண்டு தான் இருக்கின்றது :(

//வெகுநேரம் பேசாமல் கைக‌ளை ம‌ட்டும் பிடித்து கொண்டு அம‌ர்ந்திருப்போமே//

இன்னா சீனுமா தூள்... மொழிகளை கடந்ததுன்னு நிருபிசிட்டியே :)

//சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது//

ஸ்ஸ்ஸ் நமக்கு மட்டும் இதுமாதரி நடக்கவே மாட்டேன்கிதே.... இதுக்குதான் காதல் கதையே படிக்குது இல்ல, ஒரே ஸ்டொமக் பயரிங்கா இருக்கு.

//அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது//
நினைவுகளே அதுக்குதானே

//பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.//

எதார்த்தம் மற்றும் வேருமைக்கான அர்த்தத்தை புரியவைக்கும் தருனம்

//தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுக‌ளை விட்டு அக‌ல‌ ம‌றுக்கிற‌து.//

ஹர்ட்ட டச்பண்ணிட.

****

அவள் பாதம் பட்ட
இடங்கள்
பல கவிதைகளை
எழுதியது
அன்று புரியவில்லை
வெறுமையை
விதைக்கின்றதென்று.

-பித்தன்

வெற்றி-[க்]-கதிரவன் said...

test

Thamira said...

இந்தப்பதிவில் புனைவை மீறிய ஒரு யதார்த்தம் இருக்கிறது. ஒரு வேளை உண்மைக்கதையாக இருக்கலாம். துயரம் மறவுங்கள். நல்வாழ்வுக்கான வாழ்த்துகள்.!

ஆ.சுதா said...

புனைவு மாதிரியே இல்ல அத்தனை ஈர்ப்பு எழுத்தில் நடந்தது போலவே அருமையா எழுதி இருக்கீங்க செயது!

நசரேயன் said...

நான் தான் கடைசியோ.. கலக்கல் செய்யது.. பட்டைய கிளப்பீட்டீங்க

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
நான் தான் கடைசியோ.. கலக்கல் செய்யது.. பட்டைய கிளப்பீட்டீங்க
//

ப‌திவ‌ முழுசா ப‌டிக்காம‌ என்னா வில்ல‌த்த‌ன‌ம் ??

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ரோஸ்

ந‌ன்றி காய‌த்ரி

ந‌ன்றி த‌மிழ‌ர‌சி

ந‌ன்றி க‌டைக்குட்டி

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஆபிர‌காம்

ந‌ன்றி சின்ன‌க‌வுண்ட‌ர் ( பேரு ந‌ல்லா இருக்குங்க‌ )

ந‌ன்றி பூர்ணிமாச‌ர‌வ‌ண‌குமார்

ந‌ன்றி ஜிம்ஜி ஏழும‌லை ம‌ச்சி !!!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி பித்த‌ன் ( பிரிச்சி மேய்ஞ்சிட்டீங்க‌ போங்க‌.இப்ப‌ ச‌ந்தோச‌ம் தானே )

உங்க‌ள் க‌விதையும் அழ‌கு.
-------------------------------

ந‌ன்றி ஆதிமூல‌கிருஷ்ண‌ன் ( உங்க‌ள் அறிவுரையை ஏற்று கொள்கிறேன் )
----------------------------------

ந‌ன்றி முத்துராம‌லிங்க‌ம் அவ‌ர்க‌ளே !!!

எம்.எம்.அப்துல்லா said...

வரக்கூடாதுன்னெல்லாம் ஒன்னுமில்லை சையதண்ணே. இன்ஃபேக்ட் நான் முன்னாடியே வந்துட்டேன். 175 தாண்டிய கூட்டத்தில் நம்ப பின்னூட்டம் கடலில் கரைத்த பெருங்காயம் ஆயிரும்னு அப்பிட் ஆயிட்டேன்

:)

அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
வரக்கூடாதுன்னெல்லாம் ஒன்னுமில்லை சையதண்ணே. இன்ஃபேக்ட் நான் முன்னாடியே வந்துட்டேன். 175 தாண்டிய கூட்டத்தில் நம்ப பின்னூட்டம் கடலில் கரைத்த பெருங்காயம் ஆயிரும்னு அப்பிட் ஆயிட்டேன்
//

அப்படியெல்லாம் ஆவாதுண்ணே...உங்க பின்னூட்டத்த தனியா எடுத்து பாப்பம்ல.

Anonymous said...

JUNE 10.....

நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் முர்த்தி சிறுசு என்றாலும் கீர்த்தி பெரிசு என்று.... இந்த பதிவை படிச்சதும் ஒரு முறை உங்க my profile பார்த்தேன் வயசு 23... இந்த பதிவு உண்மையோ அல்லது கற்பனையோ.... நிகழ்வுகள் அப்படியே உயிரில் ஊடுரிவியது உண்மை செய்யது....
மனசு மட்டும் கற்பனை கதையாத் தான் இருக்கனும் என்று கிடந்து தவிக்கிறது..ஏன்னா இதை படித்தபின்
உணர்ந்தேன் இதில் காதலில் ஆழமும் பிரிவின் வலியும்....உண்மைன்னா நீ அதை எப்படி தாங்குவாய் என்ற பயம் அத்தனை ஆத்மார்த்தம்....காதலின் ஆழம் அறிந்ததால் தெரியும் அந்த நீ எனக்கு மட்டும்டா..உன்னை யாருக்கும் தரமாட்டேன் எல்லாம் எனக்குள்ளும் உன் வலியை உணர்த்தியது....
கடைசி பத்தி....

காதலின் அவஸ்த்தை எதிரிக்கும் வேண்டாம் என்ற பாடலை நினைவு கூறுகிறது....

இப்பவும் மனசு ஏங்குது இது கற்பனையா இருக்கனும் செய்யதுக்கு இந்த துன்பம் வேண்டாம்ன்னு.....

உண்மையச் சொன்ன இதப் படிக்காம இருந்து இருக்கலாம்...ஏனோ எனக்கு வலி இது தெரியாமல் படிக்கும் முன் இங்க விளையாடிட்டேனேன்னு வருந்தறேன்......

சாரிப்பா இந்த பதிவுப் பத்தி என்னால பாராட்ட முடியலை.....வலியோடு.......

Vidhya Chandrasekaran said...

லவ்லி:)

அ.மு.செய்யது said...

தமிழரசி,

உங்கள் அன்பின் பின்னூட்டம் கண்டு நெகிழ்ந்தேன்.வலையுலகம் எனக்கு அளித்த உறவுகளை கண்டு பூரித்து போயிருக்கிறேன்.ஆனால் உங்கள் பின்னூட்டத்திற்கு எப்படி பதிலளிப்பது என்று யோசித்து கொண்டே இருக்கிறேன்.

நேரில் பேச வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக பதில் சொல்கிறேன்.

அ.மு.செய்யது said...

//வித்யா said...
லவ்லி:)
//

இது செல்லாது செல்லாது.

போன‌ ப‌திவுக்கும் இதையே தான் போட்டிருந்தீங்க‌...

( Just kidding !! மிக்க‌ ந‌ன்றி !!! )

அமிர்தவர்ஷினி அம்மா said...

புனைவா???

பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய். ..

எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமில்லாமல், பதட்டமுமில்லாமல் இவ்வளவு எளிதாக காதலுக்கு சம்மதமா ?!!!!

இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.
ரசிக்கும்படி.........

புனைவென்று நம்பமுடியவில்லை, உணர்வுகளை எழுத்தாக்கியதுபோன்ற உணர்வு ஜூன் 10ஐ படிக்கும்போது.

sakthi said...

நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று.. ஜூன் 10

அப்படியா சேதி

sakthi said...

கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்

அசாதாரண பார்வை அப்படின்னா என்ன செய்ய்து தம்பி...

sakthi said...

இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது.

அவ்வளவு கலாய்ப்பு

sakthi said...

என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.

ஏனம்மா பேசாது சென்றாய்...

sakthi said...

"போய் க‌ண்ணாடில‌ உங்க‌ ஃபேஸ‌ பாருங்க‌ பாஸூ..அந்த‌ பொண்ணு ரேஞ்சே வேற‌..அதெல்லாம் உங்க‌ள‌ போயி.." என்ற‌ நண்ப‌னிட‌ம் "க‌ண்டிப்பா இவ‌ வீட்டில‌ இன்னிக்கு போயி என்ன‌ ப‌த்தி அட்லீஸ்ட் 0.00002% ஆவ‌து யோசிப்பாடா"

என்னமா calculation

sakthi said...

அத‌ற்கு முன்பே குறுந்த‌க‌வலில் நாம் மேக‌ங்க‌ளை திர‌ட்ட‌ ஆர‌ம்பித்திருந்தோம்.சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

sms la love aaa???

sakthi said...

வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.

hahahaha

தப்பு தானே ஏன் அப்படி செய்தீங்க செய்யது தம்பி....

sakthi said...

நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.


ம்ம்ம்ம்


உண்மை வெளியே வர ஆரம்பிச்சிடுச்சு

sakthi said...

உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.

ஆஹா குட்

sakthi said...

நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.

அதான் இப்போ கவிதையா பொழியறீங்களே...

sakthi said...

மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான்.

நல்ல சந்திப்பு தான்....

sakthi said...

சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது

படிக்கும்போதே என் கண்கள் கூட ஈரமாகின்றது

sakthi said...

நான் மான்களை பார்த்தே ஆக‌ வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !!

கண்டிப்பா அதீத அழகாய்தான் இருக்கும்

sakthi said...

அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.

அழவைத்துவிட்டீர்கள் செய்யது தம்பி

sakthi said...

நீ என் த‌லைமுடிய க‌லைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட‌ சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..

நடக்கும் நடக்கும்

நடக்கும் என நம்பிக்கையோடு வாழ்வது தானே வாழ்கை....

sakthi said...

ஒரு நிஜக்கதை மனதை சற்று அசைத்துவிட்டது ஏனோ இதற்கு மேல் ஒன்றும் சொல்லத்தோன்றவில்லை....

SUFFIX said...

ஹூம்!! அது அந்தக்காலம் செய்யது....

gayathri said...

enno marupadium intha kathaiya padikkum pothu rompave kastama iurku .

itha padikkum pothu kathiaya thonala
ungaluku enna sollrathunum thonala pa

அ.மு.செய்யது$ said...

ந‌ன்றி ச‌க்தி..பிரிச்சி மேய்ஞ்சிட்டீங்க‌ ப‌திவ‌...

ந‌ன்றி காய‌த்ரி..( ரிப்பீட் ஆடிய‌ன்ஸா ?? தேங்க்ஸ் பாஸ் )

SUFFIX said...

வலைச்சரத்தின் மூலம் இன்னொரு தடவை வந்து நனைஞ்ச்சுட்டு..சந்தோஷமா ஒரு சரவெடிய பத்த் வச்சுட்டு போயிடுறேம்ப்பா. வாழ்த்துக்கள்

SUFFIX said...

250...........

Unknown said...

machan,

u r really great.No one in the world to compare u da machi.All the best da.

Unknown said...

வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்

these lines r killing da macha

Unknown said...

ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.

"நான் போத்தீஸ்ல‌ இருக்கேன்.என்ன‌ க‌ல‌ர் சுடிதார் எடுக்க‌ட்டும்..சீக்கிர‌ம் சொல்டா" என்று என்னை தொந்த‌ர‌வு செய்ய‌வும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு ச‌ண்டை போட‌வும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.

machi i m surrender in these lines da.

அ.மு.செய்யது$ said...

Thanks vijay...For your visit and comments !!!

பாலா said...

ஏகப்பட்ட உருவகங்கள் எல்லாம் சூப்பர் சாமி
அந்த உரையாடல்கள்தான் எனக்கு(எனக்கு மட்டும் ) என்னமோ ஒட்டாது மாதிரி தெரியுது செய்யது
ஆனாலும் உங்க முதல் சந்திப்பு பாகம் ரெண்டு அளவுக்கு என்னை (மட்டும் ) உள்ள இழுக்கல
ஆனாலும் ரசிக்க முடிந்தது செய்யது

Krishh said...

mr. syed how r u ? i am in wipro also . your blog is awesome man...felt like its real story....

அ.மு.செய்யது said...

//gopalakrishnan said...
mr. syed how r u ? i am in wipro also . your blog is awesome man...felt like its real story....
//

Doing gud gopalakrishnan...Thanks for your compliments.Looks like your are with chennai wipro ??

ஹேமா said...

மன்னிசுக்கோங்க செய்யது.நான் இடையில் ஒரு மாத கால இடைவெளிக்கு மேல் பதிவுகள் போடாமல் மௌனித்து இருந்த வேளை உங்கள் இந்தப் பதிவு.

மனதைக் கலக்கி வைக்கிறது.காதல் வார்த்தைகள் அமுங்கி அழுகின்றன.
நினைவுகளைச் சுமந்தபடியே வாழ்கையை நகர்த்திக்
கொண்டிருக்கிறோம்.தொகுத்து எழுதிய விதமும் அருமை.

Karthik said...

So touchin...

"உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !! "


Hope she will read this story...and will cry...

«Oldest ‹Older   201 – 257 of 257   Newer› Newest»