முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்.
பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.
*******************************
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
-
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக,
தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது.
அத...
5 weeks ago
114 comments:
கண்டினியுட்டி இல்லாம எதுக்கு கவிதை
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
வாவ் துவக்கமே அருமை.
\\உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.\\
நல்லாத்தான் இருக்கு ...
நிவேதனமாக்கி\\
நல்ல சொல்லாடல்
\\அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.\\
என்னப்பா ஆச்சு உனக்கு
இவ்வளவு நல்லா எழுதிப்புட்டே ...
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
அழகான வரிகள்
\\'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்.
பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.\\
வார்த்தை தெரிவுகள் அருமை.
கவிதை மிக அருமை.
இப்படியெல்லாம் நல்லா எழுதினா கும்மி கிடையாது
//உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.//
உறக்கங்களின் தோல்வி...அருமை...
அதெல்லாம் தொடர்ச்சியா தான் இருக்கு! குட் கவுஜ!
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
ஆஹா...அழகான முரண்...
//நட்புடன் ஜமால் said...
கண்டினியுட்டி இல்லாம எதுக்கு கவிதை
//
வாங்க ஜமால்..
வழக்கம் போல நீங்க தான் ஃபர்ஸ்ட் போனி..
//'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்.//
காதலுக்கு இலக்கணம் இல்லை தான் ...அதனால மறந்து போனா தப்பில்லை...
//நட்புடன் ஜமால் said...
\\அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.\\
என்னப்பா ஆச்சு உனக்கு
இவ்வளவு நல்லா எழுதிப்புட்டே ...
//
உண்மையா ?? பொய்யா ??
//சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.//
முடித்திருக்கும் விதம் வெகு அழகு...வாழ்த்துக்கள் செய்யது...
//நட்புடன் ஜமால் said...
கவிதை மிக அருமை.
இப்படியெல்லாம் நல்லா எழுதினா கும்மி கிடையாது//
அடடா..அப்ப இத்தன நாள் கும்மி அடிச்சதுக்கெல்லாம் காரணம் இது தானா ?
//(Viyaa) said...
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
அழகான வரிகள்
//
நன்றி வியா !!!!
//பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.///
நல்ல பி.ந. கவிதை!
//புதியவன் said...
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
ஆஹா...அழகான முரண்...
//
வாங்க புதியவன்..
நான் கவிதைகளுக்கு அதிகம் எதிர்பார்ப்பது உங்கள் விமர்சனங்களைத் தான்.
\\அடடா..அப்ப இத்தன நாள் கும்மி அடிச்சதுக்கெல்லாம் காரணம் இது தானா ?\\
ஹா ஹா
அப்படின்னா
என்னோடது என்னா ?
ஹா ஹா ஹா
//தமிழ் பிரியன் said...
அதெல்லாம் தொடர்ச்சியா தான் இருக்கு! குட் கவுஜ!
//
வாங்க தமிழ்பிரியன்...
மிக்க நன்றி !!!! ( நான் தான் கண்டினியுட்டி மிஸ் ஆகுதோனு நினைச்சேன் )
//புதியவன் said...
//'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்.//
காதலுக்கு இலக்கணம் இல்லை தான் ...அதனால மறந்து போனா தப்பில்லை...
//
Well Said !!!!
இலக்கணங்களை மீறுவதும் மறப்பதும் தானே காதலில் சுவாரஸியம்.
//நட்புடன் ஜமால் said...
\\அடடா..அப்ப இத்தன நாள் கும்மி அடிச்சதுக்கெல்லாம் காரணம் இது தானா ?\\
ஹா ஹா
அப்படின்னா
என்னோடது என்னா ?
ஹா ஹா ஹா
//
அத தான் நானும் யோசிக்கிறேன்.
//தமிழ் பிரியன் said...
//பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.///
நல்ல பி.ந. கவிதை!
//
இப்படி பொசுக்குனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க...தலைவரே !!!
//புதியவன் said...
//சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.//
முடித்திருக்கும் விதம் வெகு அழகு...வாழ்த்துக்கள் செய்யது...
//
நன்றி புதியவரே !!!!! தங்கள் அலசலுக்கும் மேலான கருத்துகளுக்கும்..
25 ஆ
\\
அத தான் நானும் யோசிக்கிறேன்.\\
அடப்பாவி
வந்தேன்...
இருங்க படிச்சுட்டு வரேன்...
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
நல்லா இருக்கு...
:-)
அருமை நண்பரே...
கலக்குங்க பாஸு....
:-)))
எனக்கு இந்தக் கவிதை இன்னொரு அர்த்தத்தில் பொருள்படுகின்றது...
ச்சே...எனக்கு எப்பவும் இப்படித்தான்..:-)
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
இது ஒன்றே போது..சாராம்சம் சொல்ல :-)
ஹா போட்டாச்சா
அது என்னாப்பா கண்டினுட்டி இல்லாத கவிதை...
பார்த்து வந்து... வெச்சிக்கிறேன்...
//முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு../
ஆஹா அவ்வளவு இருக்கா, அவுத்துவுடுங்க அப்புறம் எல்லாம் மக்கிப்போய்டும்
//மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்////
இது முற்றிலும் உண்மைதான் தல
இதுக்குதான் முதல்லே மருந்து வேணும்
//உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்//
கலக்கல் வரிகள் தல
வூட்டுலேதான் ஃபிரிட்ஜ் இருக்குலே உள்ளே தூக்கி அமுக்குங்க...
//’டொன்’ லீ said...
எனக்கு இந்தக் கவிதை இன்னொரு அர்த்தத்தில் பொருள்படுகின்றது...
ச்சே...எனக்கு எப்பவும் இப்படித்தான்..:-)
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
இது ஒன்றே போது..சாராம்சம் சொல்ல :-)
//
அப்போ அதுவா இது
//கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
//
என்னா வார்த்தைனு சொல்லவே இல்லியெ
//ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...
//
ஒஹ்ஹ் நடுராத்திரிலே பிரிவுபச்சாரமா
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
முதல் அடியே முறத்தால் அடித்த மாதிரி, கலக்கல்
//பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.
//
இந்த மண்டைக்கு ஒன்னுமே எட்டலியே
கண்டினுட்டி இல்லாத கவிதைனு சொல்லி
ஒரு பிரிவே நடந்து முடிந்ததா அந்த ஒற்றை இரவில்
நல்ல நயம் கவிதைக்கென தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்களில்
நல்ல நயம் கவிதைக்கென தேர்ந்தெடுக்கப் பட்ட சொற்களில்
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
அருமையான முரண்பாடு
நல்ல இருக்கு
ஆஹ மொத்ததிலே
அழகான வார்த்தை ஜாலத்தால் பெரிய கவிஞராயிட்டீங்க
வாழ்த்துக்கள்
கவிதை வரிகள் ரொம்ப அருமை
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
இதெல்லாம் எப்டி செய்யது. வார்த்தைகள் சும்மா விளையாடுது.
அலமாரில ஒட்டடை பிடிக்கலாம். அங்க பிடிக்காம பார்த்துங்குங்க
\\முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
நல்ல உவமை....
கவிதைக்கு :)))
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.//
இது ரொம்ப அழகு....
அன்புடன் அருணா
//அ.மு.செய்யது said...
//நட்புடன் ஜமால் said...
கண்டினியுட்டி இல்லாம எதுக்கு கவிதை
//
வாங்க ஜமால்..
வழக்கம் போல நீங்க தான் ஃபர்ஸ்ட் போனி..
//
அதுதான் அவரோட பானி
//நட்புடன் ஜமால் said...
கண்டினியுட்டி இல்லாம எதுக்கு கவிதை
//
அதான் செய்யது பானி
50 போட்டாச்சி செய்யது பதிவுலே
'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்."
இலக்கணத் தமிழ் (வியங்கோள் வினை முற்று விகுதி) - எதுகை மோனையா இருந்தாலும் என் தமிழ் ரொம்ப வீக். அதனால எனக்கு புரியல. ஜமால் இல்லன்னா செய்யது விளக்கினால் நலம்.
ஐந்து பதிவு போட்டு எண்ணிக்கையை கூட்டிருப்பேன் நான்.
கவிதைகள் புரியுது தல.புரியாம எழுதனும் அப்பதான் கவிஞர் அப்படின்னு உலகம் ஒத்துக்கும்.
மீ த லேட்டு...சாரிண்ணே.
கொஞ்சம் லேட்டா வந்தா நம்ம சொல்ல நினைக்கிறத எல்லாரும் சொல்லிற்ராங்கப்பா :(
வாவ்..... கலக்கல்.... அமேசிங்..
வார்த்தைகளின் புதுமை என்னை வெகுவாக கவர்ந்தது!!!
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
முதல் வரியிலிருந்தே ஆரம்பமாகிறது கவிதையின் பிரமாதம். அதிலும் வாசிக்கப்படாத புத்தகக் குவியல் அழகு தோரணத்தின் ஆரம்பம்...
உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
உடைந்து போன கனவுகள்... அழகான கற்பனை. அதை உறைபனியில் பத்திரப்படுத்துதல் உச்சம்....
ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்துமே புதுமை.வாழ்த்துக்கள்
பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு./////
அழகாக முடிந்திருக்கிறது கவிதை... நிசப்த சாரீரங்கள் பெருங்கூச்சலிடும் வார்த்தையின் கனம் கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்!!!
//வேத்தியன் said...
அருமை நண்பரே...
கலக்குங்க பாஸு....
//
வாங்க வேத்தியன் தல..
ரசித்ததற்கு நன்றி !!!!!
//’டொன்’ லீ said...
எனக்கு இந்தக் கவிதை இன்னொரு அர்த்தத்தில் பொருள்படுகின்றது...
ச்சே...எனக்கு எப்பவும் இப்படித்தான்..:-)
//
அந்த இன்னொரு பொருள் என்னாங்க...அட்லீஸ்ட் மின்னஞ்சலிலாவது சொல்லுங்கள்.
////அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
இது ஒன்றே போது..சாராம்சம் சொல்ல :)//
நன்றிங்க...( வழக்கம் போல இதுலயும் நுண்ணரசியல் இல்லயே !!! )
அபுஅஃப்ஸர் said...
//முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு../
ஆஹா அவ்வளவு இருக்கா, அவுத்துவுடுங்க அப்புறம் எல்லாம் மக்கிப்போய்டும்
//
வாங்க அபு...அடிச்சி ஆடிற்கீங்க போல...
//உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
//
ஆஹா.. கனவை வைத்துக் கொள்ள முடியாத்தை எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க!!!
// குடுகுடுப்பை said...
ஐந்து பதிவு போட்டு எண்ணிக்கையை கூட்டிருப்பேன் நான்.
கவிதைகள் புரியுது தல.புரியாம எழுதனும் அப்பதான் கவிஞர் அப்படின்னு உலகம் ஒத்துக்கும்.
//
அப்படி எழுதினா அதுக்குப் பேரு உளறல்:(
//அபுஅஃப்ஸர் said...
//கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
//
என்னா வார்த்தைனு சொல்லவே இல்லியெ
//
அட இது கூடவா சொல்லணும்..
அப்போ அதுவா இது //
அபுவும் டொன்லீயும் எத பத்தி பேசுக்கிறீங்க..அட சொல்லுங்கப்பா..
ஒன்னிமே பிரியல..
//Syed Ahamed Navasudeen said...
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
முதல் அடியே முறத்தால் அடித்த மாதிரி, கலக்கல்
//
வாங்க Syed Ahmed.... அதிரடியா வந்து அசால்ட் பண்றீங்க..
நீங்களும் இன்னிக்கு அடிச்சி தான் ஆடிச்சிருக்கீங்க போல..
//Syed Ahamed Navasudeen said...
'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும்."
இலக்கணத் தமிழ் (வியங்கோள் வினை முற்று விகுதி) - எதுகை மோனையா இருந்தாலும் என் தமிழ் ரொம்ப வீக். அதனால எனக்கு புரியல. ஜமால் இல்லன்னா செய்யது விளக்கினால் நலம்.
//
வாழ்க..வாழிய..வாழியர்....அதாவது க..இய.இயர் அப்படினு முடிஞ்சா அதன் இலக்கண குறிப்பு தான் இந்த வியங்கோள் வினைமுற்று விகுதி..
அதாவது ஒருவரை வாழ்த்துவதன் பொருட்டு அமையும் சொற்கள்.
//Syed Ahamed Navasudeen said...
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
இதெல்லாம் எப்டி செய்யது. வார்த்தைகள் சும்மா விளையாடுது.
//
நன்றி Syed ...சரவெடி கருத்துகளுக்கு...
//அபுஅஃப்ஸர் said...
//பெருங்கூச்சலிட்ட நிசப்த
சாரீரங்களை கொண்ட
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.
//
இந்த மண்டைக்கு ஒன்னுமே எட்டலியே
//
எனக்கே ஒரு நாலுவாட்டி படிச்சவுடன தான் புரிஞ்சுது தல...
//குடுகுடுப்பை said...
ஐந்து பதிவு போட்டு எண்ணிக்கையை கூட்டிருப்பேன் நான்.
கவிதைகள் புரியுது தல.புரியாம எழுதனும் அப்பதான் கவிஞர் அப்படின்னு உலகம் ஒத்துக்கும்.
//
அது என்னவோ வாஸ்தவமான பேச்சு தாங்க...
நான் இப்ப தாங்க ஆரம்பிக்கிறேன்.
//anbudan vaalu said...
\\முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..\\
நல்ல உவமை....
கவிதைக்கு :)))
//
நன்றி டொக்டர் வால்ஸ்....
//அன்புடன் அருணா said...
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.//
இது ரொம்ப அழகு....
அன்புடன் அருணா
//
வாங்க அருணா...
மிக்க நன்றி !!!!! உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
//எம்.எம்.அப்துல்லா said...
மீ த லேட்டு...சாரிண்ணே.
கொஞ்சம் லேட்டா வந்தா நம்ம சொல்ல நினைக்கிறத எல்லாரும் சொல்லிற்ராங்கப்பா :(
//
வாங்க அப்துல்லா அண்ணே !!!
நீங்க வந்து படிச்சிட்டு போனத, பதிவு செஞ்சிட்டு போனதே மனசுக்கு இந்தஸ்தா இருக்குதுங்க...
//ஆதவா said...
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
முதல் வரியிலிருந்தே ஆரம்பமாகிறது கவிதையின் பிரமாதம். அதிலும் வாசிக்கப்படாத புத்தகக் குவியல் அழகு தோரணத்தின் ஆரம்பம்...
//
வாங்க ஆதவா....
உங்க பின்னூட்டங்களே கவிதை மாதிரி தாங்க இருக்கு...அதுவும் போல்ட் லெட்டர்ஸ்ல போட்டு கருத்தை கவர்கிறீர்கள்.
//cute baby said...
ஆரம்பம் முதல் முடிவு வரை அனைத்துமே புதுமை.வாழ்த்துக்கள்
//
வாங்க க்யூட் பேபி...கியூட்டா சொல்லீட்டீங்க...
நன்றி !!!!!!! வருகைக்கு !
//ஆதவா said...
உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
உடைந்து போன கனவுகள்... அழகான கற்பனை. அதை உறைபனியில் பத்திரப்படுத்துதல் உச்சம்....
//
மிக்க நன்றிங்க...உங்கள் பின்னூட்டங்கள் மட்டும் ஜூஸ் தக்காளி மாதிரி தனியா தெரியுதுங்க...
//Poornima Saravana kumar said...
//உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.
//
ஆஹா.. கனவை வைத்துக் கொள்ள முடியாத்தை எவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க!!!
//
வாங்க பூர்ணிமா ..உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
நலம் தானே ??????
//அப்படி எழுதினா அதுக்குப் பேரு உளறல்:(//
இல்லங்க..அதுக்கு பேரு வேற....
// முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..//
ஆரம்பமே கலக்கல்....
// உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக //
ஆகா.. என்னே ஒரு கற்பனை...
சூப்பர்
// பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.//
தூக்கம் வரவில்லை என்பதை கூட எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்
// கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம் //
நிவேதனமாக்கி கொண்டுருந்தோம்... அழகான சொல்லாடல்...
அதுவும் பிரிவு உபசாரத்திற்கு..
// அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது. //
முரண்பட்ட இரண்டு செய்கைகளை என்ன அழகாக சொல்லியுள்ளீர்கள்...
கண்ணில் ஆனந்த கண்ணீர் தம்பி..
// 'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும். //
கவிதைக்கு இலக்கணம் முக்கியம் தான்... ஆனால் எங்கிருந்தாலும் வாழ்க, அதற்கு ஒரு இலக்கண குறிப்பா.. அருமை அய்யா அருமை
மொத்ததில் அருமையா எழுதியிருக்கீங்க...
கீப் இட் அப்..
ஹா.... ! ஹா....! ஆ..!! கவிதை..கவிதை.. !!
அபிராமி அபிராமி !!
எப்படி இப்படியெல்லாம், உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் அருவியா கொட்டுது?
அருமை அருமை.
//இராகவன் நைஜிரியா said...
// முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..//
ஆரம்பமே கலக்கல்....
//
வாங்க அண்ணன் ராகவன் !!!!
//இராகவன் நைஜிரியா said...
// அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது. //
முரண்பட்ட இரண்டு செய்கைகளை என்ன அழகாக சொல்லியுள்ளீர்கள்...
கண்ணில் ஆனந்த கண்ணீர் தம்பி..
//
ஐயகோ !!!!!!
//இராகவன் நைஜிரியா said...
// 'எங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க இலக்கணம் மறந்துபோனது
இருவரின் மொழியிலும். //
கவிதைக்கு இலக்கணம் முக்கியம் தான்... ஆனால் எங்கிருந்தாலும் வாழ்க, அதற்கு ஒரு இலக்கண குறிப்பா.. அருமை அய்யா அருமை
//
நன்றி !!!! நன்றி !!!
//கணினி தேசம் said...
ஹா.... ! ஹா....! ஆ..!! கவிதை..கவிதை.. !!
அபிராமி அபிராமி !!
எப்படி இப்படியெல்லாம், உங்களுக்கு மட்டும் வார்த்தைகள் அருவியா கொட்டுது?
அருமை அருமை.
//
நடுவுலே நடுவுலே மானே தேனே பொன்மானே நு போட்டா கவுஜ..அம்புட்டு தாங்க..
பை தி வே..வருகைக்கு நன்றி கணினியாரே !!!!
எனக்கு தாவூ தீருது
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
///
கண்டினியுட்டி இருக்கே!!
கண்டினியுவிட்டி இல்லாட்டிதான் கவிதை!!
உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள
மீண்டும் மீண்டும் முயன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.///
இது கவிதை!
அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது//
யாருமே இதுவரை எழுதாத வரி!!
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.\\///
சிவாஜி மாதிரி இருக்கே!
\உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் பத்திரமாக
பதப்படுத்திக் கொள்ள///
ஃப்ரீஸரை உபயோகிக்கவும்!!!
ங்கிருந்தாலும் வாழ்க' வென
வியங்கோள் வினைமுற்று விகுதியிட்டு///
ஒரே ’வ” விளையாடுதே!
100
எப்படி லேட்டா வந்து கூலா ஒரு
சென்சுரி!!!!!
கலக்கறீங்க !!!
//
கண்டினியுட்டி இல்லா கவிதை......
//
மன்னிச்சிட்டோமில்லே !!!
//
முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..
//
அது சரி படிக்க அனுப்பினால் இப்படியா அலமாரி என்னாப்பா இது ???
ஒரே பீலிங்கா போச்சு !!!
ஆஹா..கவிதை அருமை.
ஆனா எனக்கு ஓன்னுமட்டும் புரியல..கவிதைனாலே ஏன் எல்லோரும் love failure கவிதையாகவே எழுதறாங்க?????
//கலாட்டா அம்மணி said...
ஆஹா..கவிதை அருமை.
ஆனா எனக்கு ஓன்னுமட்டும் புரியல..கவிதைனாலே ஏன் எல்லோரும் love failure கவிதையாகவே எழுதறாங்க?????
//
வாங்க கலாட்டா அம்மணி...
ஏன்னா எமோசன் தான் எப்பவுமே வொர்க் அவுட் ஆவும்ன்றதுனாலே..
http://jsprasu.blogspot.com/2009/03/blog-post_11.html
வந்து பார்க்கவும்...
//அவள் அழுகை
சத்தமாக சிரிக்கத் தொடங்கியது
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.
//
ஆனந்த கண்ணீர்-னு சொல்வாங்களே அது இதுதானா?
நல்ல கவிதை.. ரசித்தேன்.. உங்கள் பிற படைப்புகளை படிக்க ஆவலாயுள்ளேன். படித்துவிட்டு வருகிறேன்.. மீண்டும்!
// தாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்ல கவிதை.. ரசித்தேன்.. உங்கள் பிற படைப்புகளை படிக்க ஆவலாயுள்ளேன். படித்துவிட்டு வருகிறேன்.. மீண்டும்!
//
மிக்க நன்றி !!!!
படித்து விட்டு வாருங்கள்...
//என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.//
அருமை!!!!!!!!!!!
நம்ம கட பக்கமும் வாங்க!!!
www.kadaikutti.blogspot.com
your blog fulla mudichittuthaan ukkaaranum pola....
kavithailaam ungalukku asaaltukku varuthu...
Hi,
kavithai is superb...
Post a Comment