Tuesday, February 17, 2009

அந்த முதல் சந்திப்பு

"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"


எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?

இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.

இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.
நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.

அவசரம் அவசரமாய் எல்லாம் ஒன்றுமில்லை.மதியம் பன்னிரெண்டை தொடுமுன் கடிகார முட்களை மானுவலாக திருப்பாத குறை தான்.

கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன. போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.

ஒரு வழியாக படியாத தலைமுடியை படிய வைத்து சீவி கிளம்பியாகிவிட்டது.வேண்டுமென்றே முதல் ரெண்டு ரயில்களைத் தவற விட்டு,மூன்றாவது ரயிலில் அமர்ந்தவனுக்கு நேற்று அலைபேசியில் அவளிடம் பரிமாறிய குறுந்தகவல்கள் மீண்டும் ஒருமுறை நினைவுக்கு வந்தன.

"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"

"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""

அதற்குள் அலைபேசி அதிர.. அவளாகத் தானிருக்கும்..அவளே தான்..

"எங்கடா இருக்க ??"

"பழவந்தாங்கல் கிட்ட வந்துட்டேன்..இன்னும் பத்து நிமிஷம் ஆகும்.நீ எங்க இருக்க?"

"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."


"சரி..அங்கயே வெயிட் பண்ணு...வந்துட்றேன்."

இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.

நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

அவள் புன்னகைக்கும் போது,

"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"

என்ற ஒரு அரிய கேள்வியெழுப்பி அவளின் முதல் செல்ல அடிகளையும் மற்றும் எனக்கே எனக்கான சில'முதல்'களையும் பரிசில் பெற வேண்டுமெனத் தீர்மானித்து கொண்டேன்.

இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது.

இரண்டு முறை அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?.
மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் கொஞ்சம் நடுக்கமும் கூடிய ஒரு புதுவித படபடப்பு தொற்றி கொண்டது.இருவரும் காதலைச் சொன்னபிறகு நிகழப் போகும் முதல் சந்திப்பு என்பதால் ஒரு கூடுதல் குறுகுறுப்பு.

வாங்கி வைத்திருந்த மினரல் வாட்டரால் முகத்தில் தண்ணீர் தெளித்து மீண்டும் ஒருமுறை தலை வாரிக் கொண்டேன்.

மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் பிரத்யேகமாக எனக்காக மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட என்னவளைத் தேட ஆரம்பித்தன.

( அடுத்த பாகம் விரைவில்.... )

******************************************************************************

108 comments:

நட்புடன் ஜமால் said...

நேரம் மாத்தி போட்டுட்டியளே

நட்புடன் ஜமால் said...

தலைப்பே சும்மா கிளுகிளுப்பா இருக்கு எலி

வால்பையன் said...

இதற்கு புனைவு என்று லேபிள் கொடுத்த புத்திசாலி தனத்தை வியக்கிறேன்

நட்புடன் ஜமால் said...

\\"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது" \\

துவக்கமே ரொமாண்டிக்கா இருக்கே

நட்புடன் ஜமால் said...

\\இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.\\

பொறித்தா ...

நட்புடன் ஜமால் said...

\\நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.
\\

அட மக்கா - கெளப்புறியே

நட்புடன் ஜமால் said...

\\"நான் தான் முகத்தை மறைத்திருப்பேனே..என்னை எப்படி கண்டு பிடிப்ப ??"

"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""\\

அண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ

நட்புடன் ஜமால் said...

\\இந்த பத்து நிமிட இடைவெளியில் நான் அவளோடு...அந்த அற்புத கணங்களை எப்படி செலவிடப் போகிறேன் என ஒரு சராசரி காதலனாய் மனதுக்குள் சில ஒத்திகைகள் நடந்தேறின.\\

சரி சரி

அதென்னா சராசரி

நட்புடன் ஜமால் said...

\\15 வருஷம் ஆச்சுடா\\

அடொங்கோ

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
நேரம் மாத்தி போட்டுட்டியளே
//

வாங்க ...மதியம் சிறிது ஆணிகள் இருப்பதால் நேரம் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

நட்புடன் ஜமால் said...

\\நிச்சயம் அவள் கண்களைப் பார்த்து தான் பேச வேண்டும்.அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்\\

எப்பா - கிளப்புறியே

தூள் ...

இன்னும் என்னன்வோ சொல்லனும் போல இருக்கு

சந்திக்கும் போது ...

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
இதற்கு புனைவு என்று லேபிள் கொடுத்த புத்திசாலி தனத்தை வியக்கிறேன்

//

வாங்க வால்...

வியந்ததும் வியந்தீட்டீங்க..அப்படியே நம்பிட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.

அ.மு.செய்யது said...

@நட்புடன் ஜமால்

அதென்னா சராசரி //

சும்மானாங்காட்டியும்....

அ.மு.செய்யது said...

@நட்புடன் ஜமால்

இன்னும் என்னன்வோ சொல்லனும் போல இருக்கு

சந்திக்கும் போது ...//

யார் கிட்டங்க....

அப்துல்மாலிக் said...

அந்த முதல் சந்திப்பு

என்னா சந்திப்பு அது
உள்ளே போய்ட்டு வாரேன்

அப்துல்மாலிக் said...

//இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"//

அட அடா ஆரம்பிச்சிட்டேளா, பாத்து பார்த்து பத்திக்கப்போகுது அட காதலை சொன்னேனப்பூ

அப்துல்மாலிக் said...

//எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.//

ஆம்மா எல்லாம் ஏக்கமாதான் இருக்கும்

அப்துல்மாலிக் said...

//இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.//

நல்ல இடம், பார்த்து பிச்சைக்காரர் தொல்லை தாங்கமுடியாது

அப்துல்மாலிக் said...

//நேரம்: மதியம் 1.30 முதல் கெஞ்சல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை.

//

ஒன்னும் விளங்களையே

புதியவன் said...

//"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"//

ஆரம்பமே ஒரே கொஞ்சலா இருக்கு...

அப்துல்மாலிக் said...

//கருஞ்சாம்பல் நிற ஜீன்ஸ்,பிராண்டட் சட்டை,ரீபோக் ஷுஸ்,ப்ரில் கீரீம்,ஆக்ஸ் ஸ்பிரே மற்றும் சில புன்னகைகள் என்னை ஒரு புதிய பரிமாணத்தில் ஆயத்தமாக்கி கொண்டிருந்தன.//

புது ஹீரோ கிளம்பிட்டாரய்யா..
டைரக்டர்களே இவரை கொஞ்சம் கிளிக் பண்ணுங்க‌

புதியவன் said...

//ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.//

மிகவும் ரசித்தேன் இந்த வரியை...

புதியவன் said...

//"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""//

நிச்சயம் கண்டு பிடித்து விடலாம்...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
அந்த முதல் சந்திப்பு

என்னா சந்திப்பு அது
உள்ளே போய்ட்டு வாரேன்
//

வாங்க அபுஅஃப்ஸர்......

அப்துல்மாலிக் said...

//கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.
//

சந்திக்கப்போவது குழந்தையை இல்லியே

புதியவன் said...

//அவள் "அவளாக" இருந்த போது.....இப்போது அந்த அவள் "என்னவள்" ஆகிவிட்டாள் அல்லவா?//

ரொம்ப நல்லா இருக்கு...

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"//

ஆரம்பமே ஒரே கொஞ்சலா இருக்கு...
//

வாங்க புதியவன்....உங்க பதிவுகள் தான் நமக்கு இன்ஸ்பிரேஷன்.

அப்துல்மாலிக் said...

//"ஆயிரம் கண்களிலே என் தேவதையின் கண்களை மட்டும் என்னால் கண்டு பிடிக்க முடியாதா என்ன?"??"""//

ஆஹா.. கவிதை கவிதை கொட்டுது அள்ளுங்கப்பா

கண்ணை மூடிக்கிட்டா என்னா பண்ணுவீங்க‌

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//இடம்:ஆள் அரவம் அதிகம் இல்லா ஒரு ரயில் நிலையம்.//

நல்ல இடம், பார்த்து பிச்சைக்காரர் தொல்லை தாங்கமுடியாது
//

அது முக்கியம் அமைச்சரே !!!!!!

அ.மு.செய்யது said...

//புதியவன் said...
//ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.//

மிகவும் ரசித்தேன் இந்த வரியை...
//

நன்றிங்கோ.....

அப்துல்மாலிக் said...

//அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்//

ம்ம்ம் கலக்குறீங்க செய்யது
சொல்ல வார்த்தை இல்லை

புதியவன் said...

//கண்கள் மட்டும் பிரத்யேகமாக எனக்காக மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட என்னவளைத் தேட ஆரம்பித்தன.//

சீக்கிரமா தேடி பிடித்து அடுத்த பாகத்த சிக்கிரமா போட்டுடுங்க...நல்லா வந்திருக்கு தொடருங்கள்...வாழ்த்துக்கள் செய்யது...

அ.மு.செய்யது said...

நிச்சயம் போடுகிறேன் புதியவன்.

அப்துல்மாலிக் said...

//"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"
//

அடிக்கு அடி மரண அடி....
எப்படிங்க இதெல்லாம்..

ரொம்ப சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்புறம் பூக்களெல்லம் பலர் காலடிப்பட்டு மிதிபடும்

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.
//

சந்திக்கப்போவது குழந்தையை இல்லியே
//

சாக்லேட் எனக்குங்க...அவுங்களுக்கில்ல..

அப்துல்மாலிக் said...

//இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது//
நீளட்டும் செயல்படுத்திப்பாருங்கள் சொர்க்கம் தெரியும்

புதியவன் said...

//அபுஅஃப்ஸர் said...
//அவள் உள்ளங்கைகளை அழுத்திப் பிடித்து என் கைரேகை அழித்து,அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்//

ம்ம்ம் கலக்குறீங்க செய்யது
சொல்ல வார்த்தை இல்லை//

இதை நானும் சொல்லனும்னு நெனச்சேன் எனக்கு பதிலா அபுஅஃப்ஸர் சொல்லிட்டார்...அருமை...

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"
//

அடிக்கு அடி மரண அடி....
எப்படிங்க இதெல்லாம்..

ரொம்ப சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்புறம் பூக்களெல்லம் பலர் காலடிப்பட்டு மிதிபடும்
//

கீழே சிந்தாது..நானே அனைத்தையும் ஏந்திக் கொள்வேன்.

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//இப்படி கைவசம் இருந்த பலப்பல பிட்டுகளின் பட்டியல் நீண்டது//
நீளட்டும் செயல்படுத்திப்பாருங்கள் சொர்க்கம் தெரியும்
//

பாத்தாச்சு பாத்தாச்சு....( அனைத்தும் புனைவே )

அப்துல்மாலிக் said...

//மீனம்பாக்கமும் வந்தாகிவிட்டது.படபடப்பு அதிகரித்தது.முகத்தில் வழிவது தண்ணீரா வியர்வையா என்றெல்லாம் பட்டிமன்றம் வைக்காமல்,கண்கள் மட்டும் பிரத்யேகமாக எனக்காக மட்டும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட என்னவளைத் தேட ஆரம்பித்தன//

எழுத்தோவியம் அழகு

அப்துல்மாலிக் said...

//( அடுத்த பாகம் விரைவில்.... )//

ஆஹா இது வேறா?

கதை வேறுமாதிரி போய்டாதே
காதல் கோட்டை படம் வந்த பிறகு இதே மாதிரி நிறைய நிகழ்வுகள் நடந்ததா கேள்வி..

ம்ம் பார்ப்போம் அடுத்த பதிவில்

அப்துல்மாலிக் said...

விமர்சனம் முடிந்தது
இனி கும்மிக்கு நான் தயார், யாரவது இருக்கீகலா

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
//( அடுத்த பாகம் விரைவில்.... )//

ஆஹா இது வேறா?

கதை வேறுமாதிரி போய்டாதே
காதல் கோட்டை படம் வந்த பிறகு இதே மாதிரி நிறைய நிகழ்வுகள் நடந்ததா கேள்வி..
//

கண்டிப்பா இது காதல் கோட்டை இல்லங்க....

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
//"புன்னகை சிந்துகிறாயா..இல்லை பூக்களைச் சிந்துகிறாயா ?"
//

அடிக்கு அடி மரண அடி....
எப்படிங்க இதெல்லாம்..

ரொம்ப சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்புறம் பூக்களெல்லம் பலர் காலடிப்பட்டு மிதிபடும்
//

கீழே சிந்தாது..நானே அனைத்தையும் ஏந்திக் கொள்வேன்.
//

ஹா இப்படிதான் உங்கள் பதில் இருக்கும்னு எதிர்ப்பார்த்தேன்... அனுபவம்பா அதான் சொல்றேன்

அ.மு.செய்யது said...

//ஹா இப்படிதான் உங்கள் பதில் இருக்கும்னு எதிர்ப்பார்த்தேன்... அனுபவம்பா அதான் சொல்றேன்//

அரசி இயல் லா இதெல்லாம் சாதாரணமப்பா...

அப்துல்மாலிக் said...

//அபுஅஃப்ஸர் said...
//( அடுத்த பாகம் விரைவில்.... )//

ஆஹா இது வேறா?

கதை வேறுமாதிரி போய்டாதே
காதல் கோட்டை படம் வந்த பிறகு இதே மாதிரி நிறைய நிகழ்வுகள் நடந்ததா கேள்வி..

ம்ம் பார்ப்போம் அடுத்த பதிவில்
//

எதிர்ப்பார்த்து ஆவலா இருக்கேன், அந்த முதல் சந்திப்பு...?????

எம்.எம்.அப்துல்லா said...

யாரோ இந்தக் கடை 12 மனிக்குத் திறக்கப்படும்னாங்களே!!!!!!

தேவன் மாயம் said...

இப்பவே பாக்கணும் போல இருக்குடா"
"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது"
"எனக்கு மட்டும் பாக்கணும்னு தோணாதா என்ன ??"

எல்லா காதலர்களின் முதல் சந்திப்புமே இது போன்ற ஏக்கப் பிரகடனங்களில் தான் ஆரம்பிக்கும்.நாங்கள் மட்டும் விதி விலக்கா என்ன?///

எல்லாசந்திப்பும் அப்படித்தானே(முதல்)

நட்புடன் ஜமால் said...

50 போடறது யாருபா

நட்புடன் ஜமால் said...

50 போடறது யாருபா

சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

ஹையா நானே நானா ...

அப்துல்மாலிக் said...

//நட்புடன் ஜமால் said...
ஹையா நானே நானா ...
//

பதுங்கிருந்து பாயுராங்க்ய்யா

அ.மு.செய்யது said...

பாறைக்கடியில பதுங்கியிருப்பாங்களோ !!!!!

நட்புடன் ஜமால் said...

\\வியந்ததும் வியந்தீட்டீங்க..அப்படியே நம்பிட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.\\

இப்படி வேற நினைப்பு உண்டா

அப்துல்மாலிக் said...

//வியந்ததும் வியந்தீட்டீங்க..அப்படியே நம்பிட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.\\//

சொல்லும்போது நம்பித்தானே ஆகனும்

நட்புடன் ஜமால் said...

\\புது ஹீரோ கிளம்பிட்டாரய்யா..
டைரக்டர்களே இவரை கொஞ்சம் கிளிக் பண்ணுங்க‌\\

ஹா ஹா ஹா

நட்புடன் ஜமால் said...

\\எம்.எம்.அப்துல்லா said...

யாரோ இந்தக் கடை 12 மனிக்குத் திறக்கப்படும்னாங்களே!!!!!!\\

மணி தெரியாத புள்ளடா

அப்துல்மாலிக் said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

//எம்.எம்.அப்துல்லா said...
யாரோ இந்தக் கடை 12 மனிக்குத் திறக்கப்படும்னாங்களே!!!!!!
//

அதுக்காக கரெக்ட்டா 12 மணிக்கு தான் வந்து பின்னூட்டம் போடுவேனு
அடம் பிடிக்கறதெல்லாம் கொஞ்சம் ஓவரு..தல..

தாரணி பிரியா said...

//இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.//

காவலை பத்தி கவலை படலியா

நிஜமா நல்லவன் said...

/ தாரணி பிரியா said...

//இடம்,பொருள்,ஏவல்,சேவல் எல்லாம் தேர்வு செய்து ஒரு மனதாக முடிவெடுத்தோம்.//

காவலை பத்தி கவலை படலியா/

ரிப்பீட்டு...:)

நிஜமா நல்லவன் said...

/"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"/

அப்புறமா பார்த்தா பார்க்க சகிக்காதா என்ன????

தாரணி பிரியா said...

அழகான எழுத்து நடை செய்யது.

வாழ்த்துக்கள்

நிஜமா நல்லவன் said...

/"நான் மீனம்பாக்கம் வந்து 15 வருஷம் ஆச்சுடா..சீக்கிரம் வா..நான் இங்க ஒரு போன் பூத் பக்கத்தில நிக்கிறேன்."/

15 வருஷமா காக்க வச்சு இருக்கீங்களே...:)

தேவன் மாயம் said...

நம்ம கடைய தெரந்தாச்சே

நிஜமா நல்லவன் said...

/அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்./

போர்ஜரி வேலை எதுவும் பண்ண போறீங்களா??

தேவன் மாயம் said...

சரி இதை முடிச்சுட்டு நம்ம கடைய எட்டிப்பாருங்கப்பா

நிஜமா நல்லவன் said...

நல்லா எழுதி இருக்கீங்க....அடுத்த பாகம் எப்பன்னு மறக்காம சொல்லுங்க...!

நிஜமா நல்லவன் said...

/thevanmayam said...

சரி இதை முடிச்சுட்டு நம்ம கடைய எட்டிப்பாருங்கப்பா/

என்னது உங்க கடைல நேத்து போஸ்ட் இருக்கு??

அ.மு.செய்யது said...

வாங்க தாரணி பிரியா...

//தாரணி பிரியா said...
அழகான எழுத்து நடை செய்யது.

வாழ்த்துக்கள்
//

அப்பாடா...உங்க ஒருத்தருக்காவது சொல்லணும்னு தோணுச்சே...

நன்றிங்கோ...

அ.மு.செய்யது said...

//நிஜமா நல்லவன் said...
/"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"/

அப்புறமா பார்த்தா பார்க்க சகிக்காதா என்ன????
//

ஆஹா...இது அவனே தான்ய்யா..

அ.மு.செய்யது said...

//நிஜமா நல்லவன் said...
/அவள் கைரேகைகளை மீண்டும் என் உள்ளங்கைகளில் நகலெடுத்து வைத்து கொள்ள வேண்டும்./

போர்ஜரி வேலை எதுவும் பண்ண போறீங்களா??
//

ஏன்னா...

மூக்கு கொடப்பா இருந்தா இப்படி தான் யோசிக்க சொல்லும்.

( உங்களுக்கு மட்டும் எப்படிங்க இப்படி கேக்க தோணுது ??)

அ.மு.செய்யது said...

//நிஜமா நல்லவன் said...
நல்லா எழுதி இருக்கீங்க....அடுத்த பாகம் எப்பன்னு மறக்காம சொல்லுங்க...!
//

கண்டிப்பா சொல்றேன் நல்லவரே !!!

நட்புடன் ஜமால் said...

75 அடிப்பது யாரு

நட்புடன் ஜமால் said...

75 அடிப்பது யாரு

நானா

தேவன் மாயம் said...

இங்கே வந்தாச்சா

Rajeswari said...

ungallukku working hour eppo? night shift ah??

anbudan vaalu said...

நல்லா இருக்கு sayed....ஆனா கீழே புனைவுன்னு பார்த்ததும் அப்படியே 'ஷாக்' ஆயிட்டேன் ;)))

அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க பாஸ்......

அ.மு.செய்யது said...

//Rajeswari said...
ungallukku working hour eppo? night shift ah??
//

illanga general thaan...

yenga ipdi oru question ??

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

RAMYA said...

என்ன நடக்குது இங்கே!!

கொஞ்சம் (நாட்கள்) லேட் அதுக்குள்ளே
இவ்வளவு அமர்க்களமா???

RAMYA said...

அப்பப்பா எலித்தொல்லை ஜாஸ்தியா போச்சு.

என்னா பண்ணலாம் யோசிக்கணும்
நிதானமா யோசிக்கணும்

RAMYA said...

\\"இப்பவே பாக்கணும் போல இருக்குடா"

"எத்தன நாள் தான் போன்லயே பேசுறது" \\


நல்ல கற்பனை இல்லை இல்லை நிஜமோ???

RAMYA said...

ரொம்ப அருமையா சிந்திச்சு, யோசிச்சிச்சு கற்பனை பண்ணி எழுதி இருக்கீங்களா??

சொல்லவே இல்லை????

RAMYA said...

//ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.//


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.

எலி எல்லாம் படைத்தளபதியாம்
சொல்லிக்கிறாங்க!!!

RAMYA said...

சரி சரி, உண்மையாகவே மிகவும் அருமையா இருந்தது.

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!!!

அ.மு.செய்யது said...

//anbudan vaalu said...
நல்லா இருக்கு sayed....ஆனா கீழே புனைவுன்னு பார்த்ததும் அப்படியே 'ஷாக்' ஆயிட்டேன் ;))) //

ப்ரீயா விடுங்க ..இதல்லாம் பெரிசு பண்ணப் பிடாது.

//
அடுத்த பாகத்த சீக்கிரம் போடுங்க பாஸ்......
//

க‌ண்டிப்பா போடுவேன் பாஸ்.

அ.மு.செய்யது said...

// RAMYA said...
என்ன நடக்குது இங்கே!!

கொஞ்சம் (நாட்கள்) லேட் அதுக்குள்ளே
இவ்வளவு அமர்க்களமா???
//

டீச்சரே லேட்டா வந்தா நல்லாவா இருக்கு ??

அ.மு.செய்யது said...

//RAMYA said...
ரொம்ப அருமையா சிந்திச்சு, யோசிச்சிச்சு கற்பனை பண்ணி எழுதி இருக்கீங்களா??

சொல்லவே இல்லை????
//

அதான் சொல்லிட்டேங்களே...லேபிள்ல புனைவுனு..

அ.மு.செய்யது said...

//RAMYA said...
அப்பப்பா எலித்தொல்லை ஜாஸ்தியா போச்சு.

என்னா பண்ணலாம் யோசிக்கணும்
நிதானமா யோசிக்கணும்
//

சீக்கிரம் மருந்தடிச்சு கொல்லுங்கப்பா..

அ.மு.செய்யது said...

//RAMYA said...
சரி சரி, உண்மையாகவே மிகவும் அருமையா இருந்தது.

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க
வாழ்த்துக்கள்!!!
//

டேங்ஸ் டீச்சர்....

தேவன் மாயம் said...

செய்யது பதிவு ஒன்ரு
வரவும்

தேவன் மாயம் said...

வருக கவிதை போட்டு உல்லேன்

சி தயாளன் said...

//போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.
//

இது எதுக்கு ...? :-)))))))

அ.மு.செய்யது said...

//’டொன்’ லீ said...
//போருக்கு தயாராகி கொண்டிருந்த ஒரு படைவீரனின் கைகளில் சில கேட்பரீஸ் டெய்ரி மில்க்குகள்.
//

இது எதுக்கு ...? :-)))))))
//



உங்க ஜென்னிய கேளுங்க பாஸு...

வாங்கோ டொன்லீ..உங்கள் வரவு நல்வரவாகுக..

சி தயாளன் said...

//உங்க ஜென்னிய கேளுங்க பாஸு...

வாங்கோ டொன்லீ..உங்கள் வரவு நல்வரவாகுக.
//

உத போயி ஜெனிட்ட கேட்டா நான் சி(சு)வாட்ட அடியெல்லா வாங்க வேணும்..:-)

mohamed said...

yenna bhai... palaya nyabagama....

mohamed said...
This comment has been removed by the author.
cute baby said...

முதல் சந்திப்பு நல்லா இருக்கே வாழ்த்துக்கள்

cute baby said...

உங்க அவளை இன்னுமா பார்க்கவில்லை?

அ.மு.செய்யது$ said...

//mohamed said...
yenna bhai... palaya nyabagama....
//

இது முழுக்க‌ முழுக்க‌ புனைவு டொக்ட‌ர் அலிபாய்..

அ.மு.செய்யது$ said...

//cute baby said...
முதல் சந்திப்பு நல்லா இருக்கே வாழ்த்துக்கள்
//

நன்றி க்யூட் பேபி.

//cute baby said...
உங்க அவளை இன்னுமா பார்க்கவில்லை?
//

அடுத்த பாகத்தை த‌வ‌றாம‌ல் பார்க்க‌வும்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...அப்புறம்???
அன்புடன் அருணா

அ.மு.செய்யது said...

வாங்க அருணா..

முதல் வருகைக்கு நன்றி !!!!

//ம்ம்ம்...அப்புறம்???//

இந்த ஒரு டயலாக்க தான் வச்சி அடுத்த பாகம் ஃபுல்லா ஓட்டலாம்னு எழுதி வச்சிருக்கேன்.

அதுக்குள்ள நீங்க வந்து கொஸ்டின் பேப்பர அவுட் பண்ரீங்களே !!! இது நியாயமா ?

Thamiz Priyan said...

Super,... appuram?

Live like you're going to die tomorrow..-JILL said...

Hmmm..Kalakalz..Very Interesting.. waiting 4 the continuation..

அ.மு.செய்யது said...

//Live like you're going to die tomorrow..-JILL said...
Hmmm..Kalakalz..Very Interesting.. waiting 4 the continuation..
//

Thanks molae !!!!!!

ஜியா said...

kalakkals thala....