
நீங்கள் சைவமா ?
காந்தியின் புலால் உண்ணாமையை கடைபிடிப்பவரா ?
ஜீவகாருண்ய வாதியா ?
ப்ளூகிராஸ் உறுப்பினரா ?
கண்டிப்பாக உங்கள் மனதை புண்படுத்த இந்த பதிவை நான் எழுத வில்லை.
இக்கருத்தை பலபேர் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்ந்து, பிரித்து மேய்ந்து முன்மொழிந்திருந்தாலும், என்னுடைய இந்த பதிவை ஒரு வழிமொழிதலாக நினைத்துக் கொள்ளவும்.
"எனக்கு பிடிக்காது..உடல் ஒத்துக் கொள்ளாது..எங்கள் குடும்பத்தில் யாருக்கும் பழக்கம் இல்லை.அதனால் எனக்கும் பழக்கம் கிடையாது" என ஒரு சில காரணங்களை முன்வைத்து அசைவத்தை மறுப்போர் ஒருபுறம்.
"உயிர்களைக் கொல்வது பாவம்.அந்த வாயில்லா ஜீவனை துடிக்கத் துடிக்க வெட்டி கொடுமைப் படுத்துகிறீர்களே !!! கொல்லா உயிர்களெல்லாம் நின்று தொழும்" என்றும் இன்னொருபுறம் விலங்கின ஆர்வலர்கள்.
"அப்படியானால் தாவரங்களுக்கும் தான் உயிர் இருக்கிறது.தாவரங்களும் வாயில்லா உயிரினங்கள் தான்.அவைகளை மட்டும் கொல்லலாமா?"
என்று வழக்கம் போல ஒரு சாதாரண கேள்வியை, என் சைவ நண்பனிடம் கேட்டேன்.
"தாவரங்களுக்கு 2,3 அறிவுகள் தானே !! பரவாயில்லை.இது ஒரு பெரிய பாவமாகாது..அத கூட சாப்பிடலனா வேறென்னத்த திங்கிறது..அதற்கு தான் நம்மைப் படைத்த இறைவன் தாவரங்களையும் படைத்தான்" என்று மேலோட்டமாக பதிலளித்தார்.
இன்று வரை அது ஒரு முற்றுப் பெறாத விவாதமாகவே தொடர்கிறது.
தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.ஆனால் அவைகளுக்கு உணர்ச்சியும் இருக்கிறது.தாவரங்கள் சிலநேரங்களில் அழுகின்றன என அறிவியல் கூறுகிறது.
அது மனித செவிகளுக்கு கேட்காமலிருப்பதன் காரணம், 20Hz ஐ விட குறைவான ஒலி அதிர்வெண்களால் ஆனது அந்த அழும் ஓசை.20Hz முதல் 20000Hz வரை தான் நமக்கு ஸ்பீக்கர்கள் வேலைசெய்யும். ஆனால் நாய் போன்ற பிற பிராணிகளால் இந்த ஓசையைத் துல்லியமாக கெட்க முடியும்.
இதுமட்டுமின்றி, தாவரங்கள் பசிக்காக அழும் ஓலியை மனித செவிகள் கேட்கும் வண்ணம் (amplify) மாற்றியமைக்கும் கருவியை ஒரு விஞ்ஞானி கண்டு பிடித்திருக்கிறார்.
ஆகவே !! உயிர்கள் என்ற அடிப்படையில் மனிதனோ,விலங்குகளோ,தாவரமோ !!! அனைத்தும் சமம் தான். "நான் சைவம்,வெஜிடேரியன்.நான் தான் ஜீவகாருண்யத்தை சரியாக கடைபிடிக்கிறேன்" என்று யாராலும் கூற முடியாது.
நீங்கள் சுவாசிக்கும் போது எத்தனை மில்லியன் நுண்ணுயிர்கள் பலியாகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா ? நாம் உயிர் வாழவே பல்லாயிரக்கணக்கான பிற உயிர்களைக் கொல்ல வேண்டியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத தர்மம்.
எனவே, இதுவரை நான் எந்த உயிரையும் கொன்றதே கிடையாது என்று யாரும் வாதிடவும் முடியாது.
உயிர்களைக் கொல்லாமை என்ற கருத்தும் இங்கேயே அடிபட்டு போய்விடுகிறது.

இதுமட்டுமின்றி, உயிரினங்களின் உடல் கூறுகளில் உள்ள வேறுபாடுகளை
நீங்கள் உற்று கவனித்தால் தெரியும்.ஆடு,மாடு,மான் போன்ற தாவர (herbivorous) உண்ணிகளின் பல் வரிசைகளிலுள்ள அதிகபட்ச ஒற்றுமை, அவைகளின் பற்கள் அனைத்தும் தட்டையாக, செடி,கொடிகளை அரைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.இதுவே, சிங்கம்,புலி,சிறுத்தை போன்ற ஊன் (carnivorous) உண்ணிகளின் பற்கூறுகள் யாவும் கூர்மையாகவும் மாமிசத்தைக் குத்தி கிழித்து உண்பதற்கு வாட்டமாக இருக்கும்.மனிதனுக்கு (omnivorous) மட்டும் இந்த இரண்டு வகை பற்களும் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் நாம் இரண்டு வகை உணவையும் உண்ணலாம் என்று நம்மைப் படைத்தவனிடமிருந்தே வந்த கீரின் சிக்னல்.
சரி..இந்த நான்வெஜ் விஷயத்தைக் கொஞ்சம் PAUSE பண்ணி வைப்போம்.
******************************
ஜீவகாருண்யத்தை கொஞ்சம் அலசுவோம்.
இந்த கொடுமய எங்க போய் சொல்ல ???
அமெரிக்கர்களின் இப்போதைய வாழ்க்கையே செல்லப்பிராணிகளுடன் தான்.
அதனால் தான் செல்லப்பிராணிகளுடன் பழகுவது/பழக்குவது எப்படி? போன்ற பயிற்சி
கூடங்கள் அங்கே அதிகமாகி விட்டன.நாய்களுக்கு என்று தனியே அங்கே ஃபிட்னஸ் சென்டர்கள் கூட உண்டு.


வீட்டிலுள்ள வயதுக்கு வந்த பிள்ளைகளையெல்லாம் வெளியே துரத்தி விட்டு,செல்லப்பிராணிகளுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்து விட்டனர்.
அமெரிக்காவில் நாய்களுக்கு மட்டும் செலவிடப் படும் பணத்தை ஒன்று திரட்டினால், உலகிலுள்ள அத்தனை கால் இழந்தவர்களுக்கும் செயற்கை கால் பொருத்தி விடலாம் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
இது பரவாயில்லை.
13 நொடிகளே வரும் வோடஃபோன் விளம்பரத்தில் 10 இடங்களில் அந்த நாய் கொடுமை படுத்தப்பட்டிருக்கிறது என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறது ஒரு அமைப்பு.
அங்கே இலங்கையில் தமிழ் பிணங்களுடன் புணர்ந்து கொண்டிருக்கிறது இலஙகை ராணுவம்.
என்னத்தைச் சொல்வது ??? ஒருவேளை அந்த நாய்க்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அந்த வழக்கைத் தொடுத்திருப்பார்களோ ??
நாம் விரும்பி ரசிக்கும் 5 நிமிட சினிமா பாடல் காட்சிக்காக எத்தனை நாட்கள் சிறுகுழந்தைகளின் இடுப்புகள் ஒடிக்கப் படுகின்றன தெரியுமா ?? கேட்டால் நடனம்,கலை என்று பதில் வரும்.
எல்லா குழந்தைகளும் விரும்பி தான் அப்பாடல் காட்சிகளில் நடனமாடுகிறார்கள் என்று அவர்களால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா ? குழந்தை தொழிலாளர் சட்டமெல்லாம் எங்கே போயிற்று ???
ஜீவகாருண்யத்தையோ .. சைவ கொள்கைகளையோ தவறு என்று சொல்லவில்லை.அதே வேளையில்,
அஃறிணை உயிரினங்கள் மீது காட்டும் கரிசனத்தை, ஏன் உயர்திணை உயிரினங்கள் மீது காட்டத் தவறி விடுகிறோம்.'
அது' களைப் பராமரிக்கும் போது, கொஞ்சம் 'அவர்களை'ப் பற்றியும் சிந்திக்கக் கூடாதா ??
(பன்றி இறைச்சி இஸ்லாத்தில் ஏன் தடை செய்யப் பட்டுள்ளது.ஹலால்,ஹராம் விளக்கம் அடுத்த பதிவில் )