Sunday, December 20, 2009

மீன‌ம்பாக்க‌ம் கிடைக்காத‌தால் திரிசூல‌ம்


நெடுநேர ரயில் பயணங்களின் அயர்ச்சியை துரத்தியடிப்பதற்காகவும் நேரத்தை கொல்வதற்காகவும் ஒன்றிரண்டு புத்தகங்களை துணைக்கு அழைத்துச் செல்வதும்,வழிநெடுகிலும் சுவாரஸியமான மனிதர்கள் நிறைய
வாசிக்கக் கிடைப்பதால் அவை பெரும்பாலும் பையிலேயே உறங்கி விடுவதும் வாடிக்கையாகி விட்ட‌து.

விமானம்,கூபேக்களின் குளிர்ச்சியை விட,மத்தியதர வர்க்கத்தின் இரண்டாம் வகுப்பு வெம்மை இத‌மாக‌ இருந்திருக்கிற‌து.சிறுவயதில் வெவ்வேறு ஊர் எல்லைக‌ளின் ச‌ந்திப்பை நெருங்கும் போது ச‌ன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து பெயர் பலகை வாசித்து இன்ன‌ ஊர் என்று அம்மாவுக்கு தெரியப்படுத்துவதில் மெக்க‌ல்ல‌னின் ப‌ர‌வ‌ச‌ம் அட‌ங்கியிருந்த‌து.இப்போதெல்லாம் ச‌த்த‌மாக‌ வாய் விட்டு சொல்ல‌ முடியாவிட்டாலும் என‌க்குள்ளே மெள‌ன‌மாக இது குல்பர்கா இது அரக்கோணம் என அறிவித்து கொள்கிறேன்.

பின்னோக்கி ந‌க‌ரும் உல‌க‌ம்,ம‌னித‌ர்க‌ள்,தொழிற்சாலைகள்,வயல் வரப்புகள்,கரும்புக்காடுகள்,சவுக்கு மரங்கள்,சூரியகாந்திப் பூக்கள்,ப‌ச்சை ஆடை ம‌லைக்குன்றுக‌ள்,தூர தேசத்து ப‌றவைக‌ள்,சிறிய‌ பெரிய‌ க‌ட்டிட‌ங்க‌ள்,மெல்லிய‌ ஒலியெழுப்பி தூர‌த்தில் க‌ட‌ந்து செல்லும் விமான‌ங்க‌ள்,ம‌லைக‌ளுக்குள் ஒளிந்து க‌ண்ணாமூச்சி ஆட்ட‌ம் ஆடும் மேக‌ங்கள்,வானவில்,மழைத்துளி அனைத்தையும் நீல நிற பின்னணியில் த‌ன் உள்ளங்கையில் வைத்திருக்கும் விஸ்தார‌மான‌ வானம்,எல்லாவ‌ற்றையும் ர‌சிப்ப‌த‌ற்கு சுடச்சுட‌ தேநீர் என்று ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ள் த‌ரும் அனுபவ‌ங்கள் பேசி பேசித் தீராது.

நாட்களை விழுங்கும் எக்ஸ்பிர‌ஸ் ர‌யில் ப‌ய‌ண‌ங்க‌ளை விட‌,சென்னையின் அரை ம‌ணி நேர‌ மின்சார‌ ர‌யில் ப‌ய‌ண‌ நினைவுக‌ள் இன்னும் ப‌சுமையாக‌ இருக்கின்ற‌ன‌.சென்னை க‌ட‌ற்க‌ரையிலிருந்து வேளச்சேரி ம‌ற்றும் தாம்ப‌ர‌ம் மார்க்க‌ம் நான் அதிக‌ம் புழ‌ங்கிய‌ இட‌ம். புத்த‌க‌ங்க‌ளும் ஹெட்செட்டுக‌ளும் ஐபாடுக‌ளும் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌ நாட்க‌ளில்,நிறைய‌ ம‌னித‌ர்க‌ள் வாசிக்க‌ கிடைத்தார்க‌ள்.க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள்,அலுவ‌ல‌க‌ ஊழிய‌ர்க‌ள்,பெண்க‌ள்,குழ‌ந்தைக‌ள்,பிச்சைக்கார‌ர்க‌ள் என‌ எல்லா த‌ர‌ப்பு ம‌க்க‌ளோடும் தோளோடு தோள் உர‌சி ப‌ய‌ண‌ப்ப‌ட்டிருக்கிறேன்.ச‌ர்வ‌கால‌மும் செய்தித்தாளை பிரித்து வைத்து கொண்டு,ஆளும் அர‌சையே குறை கூறிக் கொண்டு வ‌ரும் சாமான்ய‌ர்க‌ளை ச‌ந்தித்திருக்கிறேன்.ஒருநாள் கிரிக்கெட் போட்டி ந‌ட‌க்கும் நாட்க‌ளில் ம‌ட்டும் சேப்பாக்க‌ம் ச‌ந்திப்பில் மைதான‌த்தில் நிர‌ம்பியிருக்கும் ப‌ர‌ப‌ர‌ப்பை சன்ன‌ல் வ‌ழியே எட்டிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.க‌ல்லூரி நாட்க‌ளில் ந‌ண்ப‌ர்க‌ளோடு ரயில் பெட்டியின் வாச‌லில் நின்று,முக‌த்தில் மோதும் காற்றை சுவாசித்திருக்கிறேன்.ம‌ழையை ர‌சித்திருக்கிறேன்.கூவ‌ங்க‌ளை க‌ட‌ந்திருக்கிறேன்.

இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.

இன்னும் நிறைய‌..நீங்க‌ளும் எழுதுலாமே.இய‌ந்திர‌ம‌ய‌மான‌ ந‌க‌ர‌ வாழ்வினூடே அன்றாட‌ம் நீங்க‌ள் அனுபவிக்கும் சுவார‌ஸிய‌ங்க‌ளைப் ப‌ற்றி !!

**************

40 comments:

தமிழ் அமுதன் said...

அருமை செய்யது ...! இன்னும் சொல்லி இருக்கலாம் ..! நிறுத்தமே இல்லாத பயணம் போல ..!

VISA said...

இன்னும் சொல்லியிருக்கலாம் செய்யது.
எனக்கு இது போன்ற அனுபவங்களை படிக்க ரொம்ப பிடிக்கும்.
ஹிந்து நாளிதளில் புதன் கிழமைகளில் அக்கால சென்னை பற்றி ஒரு கட்டுரை வரும். ரொம்ப ரசிக்கும் ஒரு பகுதி அது. என் மனதை மிகவும் கிளறும் விஷயங்கள் பயணங்களும் விளிம்பு நிலை மனிதர்களின் பயமும். இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.

anujanya said...

மிக நன்றாகத் துவங்கி, அவசரத்தில் முடித்த மாதிரி இருக்கு செய்யது. இன்னும் எழுதியிருக்கலாம். அல்லது இரண்டு மூன்று பாகங்களாய்.

'நத்தை' அக நாழிகையில் படித்தேன். அச்சிலும் நல்ல வாசிப்பனுபவம்.

அனுஜன்யா

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஜீவ‌ன்..

ந‌ன்றி விசா...

ந‌ன்றி அனுஜ‌ன்யா..

நிறைய‌ எழுதியிருக்க‌லாம் தான்.இப்போது தான் உண‌ர்கிறேன்.நிறைய‌ எழுதிவிட்டால் ம‌க்க‌ள் வாசிக்க‌ சோம்ப‌ல் ப‌டுவார்க‌ளே என்று தான் த‌விர்த்து விட்டேன்.இருக்க‌ட்டும்.யாராவ‌து தொட‌ர்ப‌திவு எழுதினால் ந‌ல‌ம்.

//'நத்தை' அக நாழிகையில் படித்தேன். அச்சிலும் நல்ல வாசிப்பனுபவம். //

ந‌ன்றிங்க‌..அக‌நாழிகை பூனேக்கு இன்னும் வ‌ந்து சேரலையே..அதுக்குள்ள மும்பைக்கு எப்படி வ‌ந்துது..வாசு சார் ?!?!?!?

ஷாகுல் said...

அனுபவித்து எழுதியிருக்கீங்க.

நல்லா இருக்கு

அப்துல்மாலிக் said...

பசுமைகளை அசைப்போடும்விதம் அருமை செய்யது

இன்னும் எனக்கு எழுத தூண்டும் இந்த இடுக்கை ஒரு வரப்பிரசாதம்

ஏக்கங்களும் அதற்கு துணையாய் இந்த இடுக்கை

S.A. நவாஸுதீன் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க செய்யது. அருமை. நண்பர்கள் சொன்னதுபோல் இன்னும் எழுதியிருக்கலாம்தான்.

(குரலைக் கேட்டது ரொம்ப சந்தோசம் சீதேவி. நம்பர் உங்களோடது தானே?) இல்லையென்றால் உங்க நம்பரையும் மெயில் பண்ணவும்)

அ.மு.செய்யது said...

ந‌ன்றி ஷாகுல்..!

ந‌ன்றி அபுஅஃப்ஸ‌ர் சார்..ஆள‌யே காணோம் ?

ந‌ன்றி ந‌வாஸ் ச‌கோ...மின்ன‌ஞ்ச‌ல் அனுப்பியிருக்கிறேன்.
என்னுடைய‌ த‌னிப்ப‌ட்ட‌ எண்: 09764005601

எம்.எம்.அப்துல்லா said...

காலக் கட்டாயத்திற்குள் சிக்கிவிடாதீங்கண்ணே. சமயம் எடுத்த்தாலும் நிறைவாக எழுதுங்கள்.

அனுஜன்யா சொன்னதை வழிமொழிகின்றேன்.

பா.ராஜாராம் said...

என்ன அருமையான நடை செய்யது...

நானும் படம் சீக்கிரம் முடிந்த உணர்வை அனுபவித்தேன்.any how, உங்கள் குரல் தேடி அடைந்த பட படப்பும் சந்தோசமும்..அப்படியே இருக்கிறது.ரொம்ப நாளைக்கு இருக்கும்.

அடிக்கடி எழுதுங்கள் செய்யது..

இதை தொடர எனக்கு விருப்பம்.சற்று தாமதமானாலும் தொடர்வேன்.

நன்றி செய்யது,எல்லாத்துக்கும்!

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

பாலா said...

இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.

சிங்கப்பூர் க்கு ஒரு டிக்கெட் போட சொல்லட்டா

இராகவன் நைஜிரியா said...

நல்லாச் சொல்லியிருக்கீங்க தம்பி செய்யது...

அனுபவித்து எழுதியிருக்கீங்க.. வாழ்த்துகள்

இராகவன் நைஜிரியா said...

தொலைப் பேசியில் எவ்வளவு நேரம் முயற்சி செய்வது... தொடர்ந்து பிசியாகவே இருக்குங்க..

vasu balaji said...

அருமையான அனுபவங்கள். தினசரி அலுவலகத்துக்கு பயணப்படுவது, பஸ்ஸோ, ரயிலோ ஆட்டோவோ, நன்கு தூங்கினாலும், மனதிற்குள், திருப்பங்கள், நிறுத்தங்கள், ஒலிகள் ஆகியவை உள்மனதில் சரியாக வழி நடத்தி, இறங்கும் இட வர சரியாக விழிப்பு வருவது அனுபவித்தவர்களுக்கு தெரியும். பாராட்டுகள்.

ஹேமா said...

செய்யது என்னையும் நான் பிறந்த மண்ணுக்குக் கொண்டு போய்விட்டீர்கள்.கண்களில் நீர் கோர்த்து அதற்குள் காட்சிகளை நிரப்புகிறேன்.நன்றி.

நட்புடன் ஜமால் said...

வழிநெடுகிலும் சுவாரஸியமான மனிதர்கள் நிறைய
வாசிக்கக் கிடைப்பதால்]]

புத்த‌க‌ங்க‌ளும் ஹெட்செட்டுக‌ளும் ஐபாடுக‌ளும் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ப்ப‌டாத‌ நாட்க‌ளில்,நிறைய‌ ம‌னித‌ர்க‌ள் வாசிக்க‌ கிடைத்தார்க‌ள்]]

ஏன் ...

---------------------

இது குல்பர்கா இது அரக்கோணம் என அறிவித்து கொள்கிறேன்.]]

நானும் உணர்ந்ததுண்டு.

எழுதி பார்த்து கொள்கிறேன் என் நினைவுகளை - என்றாவது தட்டச்சலாம் ...

அ.மு.செய்யது said...

நன்றி அப்துல்லா அண்ணே !! நெக்ஸ்ட் மீட் பண்றேன்.
---------------------------

நன்றி பித்தன்...இளிப்பானுக்கு.
------------------------------

நன்றி பாலா...எனக்கு சென்னைக்கு மட்டும் தாங்க டிக்கெட் தேவைப்படுது.

அ.மு.செய்யது said...

நன்றி ராஜாராம்...நேற்று இன்ப அதிர்ச்சி தந்து விட்டீர்கள்..நெகிழ்வான தருணங்கள்.

இருந்தாலும் அந்த பத்து நிமிடங்கள் போதவில்லை.நிறைய பேச வேண்டியிருந்தது.
வாய்ப்பு கிடைக்கும் போது நானே அழைக்கிறேன்.

அ.மு.செய்யது said...

நன்றி ஹேமா...!!! கருத்துகளுக்கு மிக்க நன்றி.இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்
என்று தோன்றுகிறது.
--------------------------

நன்றி ஜமால் காக்கா..( காரணம் அலைபேசியில் சொல்கிறேன் )

அ.மு.செய்யது said...

நன்றி ராகவன் தலைவரே !!! அலைபேசியில் அழைத்தமைக்கும் நன்றி..ரொம்ப நாளாச்சுல மொக்க போட்டு..

------------------------------
நன்றி வானம்பாடிகள் சார்.

நீங்கள் சொல்வது சரி தான்.இவையெல்லாம் ஆழ்மனது என்று சொல்லப்படும் Subconscious Mind இன்
செயல்பாடுகள்.இரவு தூங்கச்செல்லும் போது ஒரு முக்கியமான வேலைக்காக காலையில்
ஆறு மணிக்கு எழ வேண்டி இருந்தால்,அலாரமே இல்லாமல் சரியாக 6 மணிக்கு விழிப்பு வரும்.கவனித்திருக்கிறீர்களா ???

அரங்கப்பெருமாள் said...

பயணங்கள் முடிவதில்லை.

Anonymous said...

ஒரு ஏக்கப் பெருமூச்சு...எத்தனை இனியமையான சில சமயம் இனிமையில்லாத இந்த அனுபவம் சுகமே..அனுபவித்ததில்லை என்பதால் கற்பனையில் மிதந்தது கண்கள்..சினிமா கதை என படித்த பார்த்தவை எல்லாம் ஒரு நொடி பார்வையின் முன்னே பரிமானித்தது... ரொம்ப அழகா வடிமைத்து இருக்கிறாய் செய்யது பதிவை முடிஞ்சி போச்சேன்னு தோனியது......உன்னுடைய ஆட்டோ பதிவுக்கு பிறகு ரசித்தவைகளில் இதுவும் ஒன்று...

na.jothi said...

அருமையா இருக்கு செய்யது
உங்க எழுத்து எங்கல்லொம் போகுதோ
அதன் கூடவே போய் வந்த உணர்வு

அகநாழிகை said...

அ.மு.செய்யது,
உங்கள் எழுத்து நடை அருமை. விவரணை நன்றாக வருகிறது. நான் ரசித்து வாசித்த கதைகளுள் ஒன்று ‘நத்தை‘ தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள். (தொகுப்பு நான்தான் வெளியிடுவேன்)

வாழ்த்துகள்.

- பொன்.வாசுதேவன்

Venkatesh Kumaravel said...

ப்ரில்லியண்ட்!
பாதி நாட்கள் தாம்பரத்தில்ருந்து மாம்பலம் அல்லது கிண்டி, சில நேரம் எழும்பூர் என்று விருப்பப்படி சிட்டியில் சுற்றித்திரியும் எனக்கு இது ஒரு நண்பனின் FB அப்டேட் மாதிரி இருந்தது. நெருக்கமான... இணக்கமான பதிவு!

Unknown said...

/-- அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன்.--/

இங்கயும் அதே தான்... என்னத்தப் பண்ண...

ஹுஸைனம்மா said...

நீங்கல்லாம் எழுதினா அழகா வருது.
நாங்கல்லாம் எழுதினா அழுகை வருது உங்களுக்கு.

இதெல்லாம் கூட எழுதலாம்னு தெரிஞ்சிருந்தா அந்நாளையில பஸ்ஸில போகும்போது நடந்ததையெல்லாம் ஞாபகம் வச்சிருக்கலாம். வாரச்சந்தை, மாடுகள், கருவாட்டுக்கூடை இப்படி எவ்வளவோ.... (நம்ம ரேஞ்சு அவ்வளவுதான்..)

thiyaa said...

ஆகா அருமை

அ.மு.செய்யது said...

நன்றி அரங்கப்பெருமாள்..

நன்றி தமிழரசி !!

நன்றி ஜோதி ..முதல் வருகை ?!?!

அ.மு.செய்யது said...

நன்றி வாசு அவர்களே !!

அகநாழிகை வீட்டிற்கு வந்து விட்டது.கதையை அச்சில் பார்த்தது பெருமகிழ்ச்சி.

தொகுப்பு வெளியிடும் அளவுக்கான தகுதியையும் எழுத்தில் முதிர்ச்சியையும்
அதிகரித்து கொள்ள கண்டிப்பாக முயல்கிறேன்.உங்கள் ஆதரவுடன்.
-----------------------

நன்றி வெங்கி...FB னா FaceBook தான ?

அ.மு.செய்யது said...

நன்றி கிருஷ்ணபிரபு !!!!
-----------------------------------

நன்றி ஹூசைனம்மா....( இவ்ளோ விசயம் வெச்சிருக்கீங்க...கண்டிப்பா எழுதுங்க..! )

RAMYA said...

மிகவும் அழகாக எழுதி இருக்கீங்க செய்யது!

மின்சார ரயில் பயணங்கள் எப்போதும் மறக்க முடியாதவை அதுவும் நண்பர்கள் ஜமா சேர்ந்தால் சொல்லவே வேண்டாம்..

எனக்கு ரொம்ப பிடிச்சுது செய்யது.

நல்லா எழுதி இருக்கீங்க:)

தாமதத்திற்கு மன்னிக்கவும்:(

அமிர்தவர்ஷினி அம்மா said...

இப்போதும் ந‌ண்ப‌ர்க‌ளோடு அலைபேசியில் பேசும் போது பின்ன‌ணியில் ஒலிக்கும் எல‌க்ட்ரிக் ட்ரெயின் ஓசையை ஏக்க‌ங்க‌ளோடு உள்வாங்கிக் கொள்கிறேன். //

:))))) ஒரு பக்கம் பேசிக்கிட்டே இன்னொரு பக்கம் அருமையா பதிவும் எழுதிடுவீங்க போல, சூப்பர் ஃப்ளோ, ஜீவன் முதலில் சொன்னா மாதிரி இன்னும் கொஞ்சம் எங்களை பயணிக்க செய்திருக்கலாம்.

நிஜாம் கான் said...

அருமை செய்யத்! ஒரு தலையங்கம் போல இருக்கிறது. தொடருங்கள் இது போல கட்டுரை.

SUFFIX said...

//பின்னோக்கி ந‌க‌ரும் உல‌க‌ம்//

அடடா...:) என்ன செய்யது உங்க கூடவே ரயிலில் பயணம் செஞ்சுக்கிட்டி இருந்தோம், ஜன்னலுக்கு மேலே இருக்கும் சயினை பிடித்து இழுத்து டபக்குன்னு குதிச்சு இறங்கினப் போன‌ மாதிரி பொசுக்குன்னு நிறுத்திப்புட்டியளே, அருமையான எழுத்து நடை. இன்னும் எழுதியிருக்கலாமே....

அ.மு.செய்யது said...

நன்றி ரம்யா !!!
---------------------------

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா !!! :-))
--------------------------

நன்றி எதிரொலி நிஜாம்..!
--------------------------

நன்றி ஷஃபிக்ஸ்..அடுத்த பதிவு உங்களுக்காக வேண்டியாவது நிறைய எழுதுறேங்க.!

வேலன். said...

தொடரட்டும் பயணங்கள்...
இளமை காலத்தை நினைவுட்டுகின்றது...

வாழ்க வளமுடன்.
வேலன்.

thiyaa said...

அருமை

Thamira said...

அனுஜன்யா said...
மிக நன்றாகத் துவங்கி, அவசரத்தில் முடித்த மாதிரி இருக்கு செய்யது. இன்னும் எழுதியிருக்கலாம்.//

ரிப்பீட்டு.

பேர் சொல்லிக்கூப்பிடாம ஒருத்தரும் எழுத தொடர் மாட்டாங்க.! (நானெல்லாம் பேர் சொல்லி கூப்பிட்டாலே ஒருத்தரும் எழுத மாட்டாங்க..) :-)