Monday, December 7, 2009

நெருப்பாலான‌ ஜின்கள்


நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.

இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.

நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.

"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"

முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.

அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.

லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.

"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.



நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?

அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.

"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"

போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .

ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?

அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.

இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.

"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"

வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.

"குல்பி ஐஸ்? "

குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.

"ஹைய்!"

சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

*********************

மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.

வழக்குச் சொற்கள்: க‌ராமத், குத்ற‌த்து‍‍‍---பராக்கிர‌ம‌ங்க‌ள்; அச‌ர்த்து---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); ந‌ன்னா,ந‌ன்னி‍‍--தாத்தா பாட்டி; ம‌த‌ர‌ஸா--இஸ்லாமிய பாட‌சாலை;ம‌ய்ய‌த்து--பிண‌ம்.

****

நன்றி: உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009)


------------------------------------

59 comments:

நையாண்டி நைனா said...

பக்கி நல்லா தான் கத சொல்லிருக்கு... இதே ராவு வேலையா இருந்தா நான் பயந்துருப்பேன்.

நையாண்டி நைனா said...

மேற்கண்ட பின்னூட்டத்தில்
பக்கி= நம்ம செய்யது.. என அறிக.
(ஜின்ன கின்ன ஏவிவுட்டுராதே... ஆவ்வ்வ்வ்)

ஹுஸைனம்மா said...

கதை நல்லாருக்கு. ஒரு சந்தேகம், இந்த ஜின் கதைக்கு எதுக்கு Statue of Liberty படத்தைப் போட்டீங்க? ;-)

பெரிய விவாதங்களுக்கு வாய்ப்புள்ள கதை. நடத்துங்க!!

அ.மு.செய்யது said...

//(ஜின்ன கின்ன ஏவிவுட்டுராதே... ஆவ்வ்வ்வ்)
//

யோவ் பக்கி நைனா..நீயே ஒரு பெரிய ஜின்னு !!!!

அ.மு.செய்யது said...

ஹூசைனம்மா...படத்த இப்பதான் பார்த்து ரியலைஸ் பண்ணேன்.நன்றி.
( உயிரோசை அந்த பட்ம் தான் கொடுத்திருந்தாங்க..)

//பெரிய விவாதங்களுக்கு வாய்ப்புள்ள கதை. நடத்துங்க!//

இப்படி கொளுத்தி போடுறதுக்குண்டே எத்தன பேரு கெளம்பீர்க்கீங்க..?

SUFFIX said...

பக்கியன்னா பசங்கள் தானே? நல்லா கதை சொல்றியளே செய்யது. கிராமிய வார்த்தைகள் படிக்க நன்றாக இருக்கு. ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள், மனிதர்கள் மண்ணால் படைக்கப்படவர்கள், இரு தரப்பினரும் இறைவனின் கட்டுப்பாட்டில் இருப்பவர்களே, அதனைப் பற்றிய பயமே பலரை பீதிக்குள்ளாக்குகிறது, இறைவனது நாட்டமில்லாமல் ஒன்று மற்றொன்றை ஆட்கொள்ள முடியாது.

நட்புடன் ஜமால் said...

ஏன்ப்பா இப்படி பயமுறுத்துற

உள்ளே போய்ட்டு அப்பாலிக்கா வாறேன்

ஷாகுல் said...

நல்லா கதை சொல்றீங்க.

அ.மு.செய்யது$ said...

நன்றி ஷஃபி !!!

------------------------

நன்றி ஜமால் !!! உங்கள் பதிவில் பின்னூட்டமுடியவில்லையே ?!?!?

நட்புடன் ஜமால் said...

இருட்டுக்கசம்\\

ஆஹா! ஆஹா!

சுகமா இருக்கு இந்த வார்த்தைய கேட்க்க

சில சமயம் இருட்டு மைக்கசம் - இப்படியும் சொல்வோம் எங்களூரில் ...

சிநேகிதன் அக்பர் said...

கதை நல்லாருக்கு.

ஹுஸைனம்மா said...

உங்க கதை படிச்சதும் ஞாபகத்துக்கு வந்துது: ஒரு ஒண்ணு, ஒண்ணரை வருஷத்து முந்தி ஒரு மெயில் சுத்துச்சி, பள்ளியில ஒரு தெளிவில்லாத உருவம் (அது ஜின்னாம்) குர் ஆன் ஓதுற மாதிரி. அத வச்சி ஒரே டிஸ்கஷன் அந்த குரூப்ல, அது ஜின்னுதான், ஜின்னைப் பார்க்கலாம், பார்க்கமுடியாதுன்னு!!

S.A. நவாஸுதீன் said...

கண்ணான வாப்பா செய்யது. ரொம்ப அருமையா அழகா எழுதியிருக்கியளே. உம்மாட்ட சொல்லி மொளவா சுத்திபோட சொல்லுங்க.

சின்னபுள்ளைல எங்க கண்ணப்பா (உம்மாட வாப்பா) சொன்ன கதைகள் நினைவுக்கு வருகிறது செய்யது.

உயிரோசயில் உங்கள் கதை பிரசுரமாகியது ரொம்ப சந்தோசமா இருக்கு.

அ.மு.செய்யது said...

நன்றி ஷாகுல் !!!
------------------------------

நன்றி அக்பர் !!
----------------------------------

நன்றி ஹூசைனம்மா !!!!

நீங்க சொல்ற மாதிரி ஜின் கதைகள் ஒன்றா ரெண்டா ?? அடிச்சு வுடுவாகல்ல.

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் !!!

இருட்டுக்கசம் போலவே அழுக்குக்கசமென்ற வார்த்தைப் பிரயோகமும் அதிகம்.
கவனித்ததுண்டா ?
--------------------------------

நன்றி நவாஸூதீன்..

// கண்ணான வாப்பா செய்யது //

ரசித்தேன்...இப்படி நம்மள கூப்பிடுவது வெகுசிலரே என்றாலும் அந்த வார்த்தைகளில் இருக்கும் பாசம் அளவிட முடியாதது.நன்றி !!!

ஹேமா said...

செய்யது கதை நல்லாருக்கு.அதுக்கு இப்பிடியா பயமுறுத்துறது.பகல் நேரமானதால பரவால்லாம போச்சு.

அமிர்தவர்ஷினி அம்மா said...

மொழிநடையிலும், கதை சொல்லும் விதத்திலும் அசத்தறீங்க அ.மு.செ.

உயிர்மைக்கு வாழ்த்துக்கள்

VISA said...

அப்பப்பா அருமையா எழுதியிருக்கீங்க செய்யது.
இத்தனை வார்த்தைகளை புகுத்தி அருமையான உரையாடல்கள்.
ரொம்ப கஷ்டம்ப எனக்கு இந்Tஹ மாதிரி கதை எழுதுறது.
கல்லக்கல் வாழ்த்துக்கள்.

Barari said...

மனிதனைப் படைப்பதற்கு முன்னரே ஜின் இனத்தை அல்லாஹ் படைத்துவிட்டான் என்பதற்கு கீழ்க்கண்ட குர்ஆண் வசனம் சான்று அளிக்கிறது

ஒசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிக்ச்சயமாக நாமே படைத்தோம்
அல் குர்ஆண் 15:26

அதற்கு முன்னர் ஜான்நை (ஜீன்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் பாடைத்தோம்
அல் குர்ஆண் 15:27

Anonymous said...

இத்தனை பேருக்கு புரிந்திருக்கு எனக்கு ஏன் புரியவில்லை செய்யது....சரி சரி மேலும் பலமுறை படிக்கிறேன் இல்லைன்னா உன்னிடம் திட்டுவாங்கியாவது கதையை கேட்டுகிறேன்...

எம்.எம்.அப்துல்லா said...

//மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு //

rendu pera??

:))

எம்.எம்.அப்துல்லா said...

super syeadu :))

Unknown said...

நம்ம அப்பாக்கிட்ட கத கேட்ட மாதிரி இருக்கு காதர், அருமை....

பாலா said...

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

இதுக்கு பேர்தான் பைனல் டச்சு ந்கறதோ

பாலா said...

வேற மாதிரி உங்ககிட்ட எதிர் பார்த்துட்டு இருந்தேன்
ஆனாலும் நல்லா இருக்கு
இணைய இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்து

Rajeswari said...

ரொம்ப நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்!!!

தேவன் மாயம் said...

நாம் வாழ்ந்த இடத்தின் வழக்காற்றியலை நன்றாகக் கையாண்டிருக்கிறீர்கள்!

அ.மு.செய்யது said...

நன்றி ஹேமா..!

நன்றி அமிர்தவர்ஷினி அம்மா ..!

நன்றி விசா..மின்னஞ்சல் வாழ்த்துகளுக்கும் ..!

நன்றி அப்துல்லா அண்ணே !!

அ.மு.செய்யது said...

ந‌ன்றி த‌மிழ‌ர‌சி !!!!

இன்னொரு தபா படிக்க‌ ட்ரை ப‌ண்ணுங்க‌ !!!

ந‌ன்றி பாலா !!!

ந‌ன்றி ராஜேஸ்வ‌ரி !!!

ந‌ன்றி தேவ‌ன்மாய‌ம் ம‌ருத்துவ‌ரே !!!

அ.மு.செய்யது said...

@Samsu

ந‌ன்றி அக்கா !!!! இன்னும் ப‌சுமையாக‌ இருக்கின்ற‌ன‌ அந்த‌ கோடை விடுமுறை நாட்க‌ள்.
--------------------------------

ந‌ன்றி ப‌ராரி !!

உங்க‌ள் விள‌க்க‌ம் போதுமான‌தாக‌ இருந்த‌து.மிக்க‌ நன்றி.

மேலும் நீங்க‌ள் குறிப்பிட்ட‌ குர் ஆன் ஆய‌த்துக‌ளோடு சேர்த்து தான் 35 என்று எழுதியிருக்கிறேன்.

பாவா ஷரீப் said...

அருமையான நடை செய்யது
//(ஜின்ன கின்ன ஏவிவுட்டுராதே... ஆவ்வ்வ்வ்)//
comedy :)

பா.ராஜாராம் said...

எப்பவாவதுதான் வர்றீங்க செய்யது..வந்தா மறக்க முடியாமல் செய்துட்டு போயிர்றீங்க. ..

உங்களிம் மற்றொரு ஆக சிறந்த வெளிப்பாடு!

வட்டார மொழி கட்டுமானம் பிரமிப்பு..மீண்டும்.

எவ்வளவு மொழி விலகாத நடையோட்டம் செய்யது!.

தயவு செய்து அடிக்கடி எழுதுங்கள் மக்கா....

உயிரோசைக்கு வாழ்த்துக்கள் செய்யது!

நீங்கள்தான் முதல் முதலாக கேட்ட ஆள்,"கவிதை தொகுப்பு போடுங்கள்"என..மறக்க இயலாத வாஞ்சையும் அன்பும் செய்யது.வெறும் வார்த்தைகள் போதாமல் தான் இருக்கிறது..பல நேரம்.

பார்க்கிற போது கைகளை பிடிச்சிக்கிரேன்,செய்யது.

அ.மு.செய்யது said...

நன்றி கருவாச்சி அவர்களே !!!

----------------------------------

நன்றி பா.ராஜாராம்.

உங்களுக்காகவாவது அடிக்கடி எழுத முயலுகிறேன் பா.ரா.நீங்கள் தரும் ஊக்கமும் அன்பும் தான் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.

//நீங்கள்தான் முதல் முதலாக கேட்ட ஆள்,"கவிதை தொகுப்பு போடுங்கள்"என..மறக்க இயலாத வாஞ்சையும் அன்பும் செய்யது.வெறும் வார்த்தைகள் போதாமல் தான் இருக்கிறது..பல நேரம்.//

இன்னும் ப‌ல‌ உய‌ர‌ங்க‌ளை நீங்க‌ள் தொட‌விருக்கிறீர்க‌ள்.அதற்கு "க‌ருவேல‌ நிழ‌ல்" க‌விதை புத்த‌க‌ம் ஒரு லான்ச்பேட்.

கோமதி அரசு said...

தாத்தா,பாட்டியிடம் கதை கேட்க்கும் குழந்தைகளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள் செய்யது.

குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வம்,கதையால் ஏற்பட்ட உணர்ச்சிகள்
எல்லாம் காட்சியாய் கண் முன் மலர்ந்தன.

வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்துக்கள் செய்யது

தாரணி பிரியா said...

உயிரோசைக்கு வாழ்த்துக்கள் செய்யது :)
நல்லா கதை சொல்றீங்க.

அப்துல்மாலிக் said...

அசரத்து, இருட்டுக்கசம், ஆஹா காதுக்கினிமையா இருக்கு தல‌

கதைசொன்னவிதம், சொல்லப்பட்ட வார்த்தை பிரயோக வித்தியாசமான முயற்சி செய்யது, வாழ்த்துக்கள்

அப்துல்மாலிக் said...

கண்ணான வாப்பா கதய படிக்கிறப்போ நெஞ்சுக்குள்ளே ஒரே படபடப்பு...

நசரேயன் said...

நான் சின்னபையன் என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் ௬டாது

தாரணி பிரியா said...

// நசரேயன் said...
நான் சின்னபையன் என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் ௬டாது
//

ச்சின்ன பையனே பூச்சாண்டிதானே :)

அ.மு.செய்யது said...

நன்றி கோமதி அரசு முதல் வருகைக்கு !!! மகிழ்ச்சி !!!
-------------------------

நன்றி உழவன் ..!
-------------------------

நன்றி தாரணி பிரியா..! ( நசரேயன விடுங்க..பொழச்சி போகட்டும்.

-------------------------
நன்றி அபுஅஃப்ஸர் தல ..!

-------------------------

ந‌ன்றி ந‌ச‌ரேய‌ன் பாஸ் த‌ல‌..!

நட்புடன் ஜமால் said...

// நசரேயன் said...
நான் சின்னபையன் என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் ௬டாது
//

ச்சின்ன பையனே பூச்சாண்டிதானே :)

யார சொல்றீங்க ;)

இவரையா அவரையா ...

Chitra said...

ஊர் வட்டார மொழியும், வழக்கு சொற்களும் .......ஏலே மக்கா, நல்லா எழுதுரீகளே.

நேசமித்ரன் said...

என்ன வசீகரம் மொழியில்!!

காட்சிபடுத்தும் நுண்ணிய அவதானங்கள்

மேஜிக் ரியலிச வகை சார்ந்த சொல் முறை

தகவல்களை மிக அழகாக கோர்த்திருக்கும் விதம்

அந்த முடிவு

வாழ்த்துகள் செய்யது

அ.மு.செய்யது said...

ந‌ன்றி Rajalakshmi Pakkirisamy ..!

ந‌ன்றி சித்ரா ..!

ந‌ன்றி ஜ‌மால்..!! ( அதான ?!?! )
-----------------------------------

ந‌ன்றி நேச‌மித்ர‌ன் !! உங்க‌ள் பாராட்டுக‌ள் கிற‌ங்க‌ வைக்கின்ற‌ன‌.

// மேஜிக் ரியலிச வகை சார்ந்த சொல் முறை //

அப்டினா இன்னாங்கோ ?!?!?

RAMYA said...

கதை நல்லா இருக்கு செய்யது. கதை சொல்லி இருக்கும் விதம் அபாரம்!

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

எனக்கு குல்பி வேணும் :)

உயிர்மைக்கு வாழ்த்துக்கள் செய்யது :)

RAMYA said...

//
நையாண்டி நைனா said...
பக்கி நல்லா தான் கத சொல்லிருக்கு... இதே ராவு வேலையா இருந்தா நான் பயந்துருப்பேன்.
//

இவரு பயப்படுவாராமா :) இதை நம்புறீங்களா செய்யது :)

RAMYA said...

//
நசரேயன் said...
நான் சின்னபையன் என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் ௬டாது
//

ஐயோ பாவம் கதையை பார்த்து சொல்லு ராசா:)

இப்படி சின்னபிள்ளைங்க எல்லாம் பயந்துக்கறாங்க பாருங்க:)

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
// நசரேயன் said...
நான் சின்னபையன் என்னை இப்படி எல்லாம் பயமுறுத்தக் ௬டாது
//

ச்சின்ன பையனே பூச்சாண்டிதானே :)

யார சொல்றீங்க ;)

இவரையா அவரையா
//


ஜமாலுக்கு இது மாதிரி சந்தேகம் வந்திருச்சே!

அவங்க இரண்டு பேரையும் போட்டு தாக்கிட்டாங்க மக்கா

Thamira said...

அருமைத்தம்பி, கதையின் துவக்கம்.. கொண்டு சென்ற விதம், முடிவு என பிரமிக்கவைக்கிறது. உள்ளூர ஒரு கிலியை நூலிழையாக கதையில் ஓட வைத்தது உங்கள் வெற்றி. நீங்கள் இன்னும் அடைய வேண்டிய உயரம் மிக அதிகம் என்பது நிச்சயம். பதிவுலகிலிருந்து எழுத்துலகம் பயணிக்கத்தகுதியான மிகச்சிலரில் நீங்களும் ஒருவர் என்பது நிஜம்.

விதம் விதமான கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள்.!

Starjan (ஸ்டார்ஜன்) said...

செய்யது , உங்ககிட்ட எதுவும் ஜின் இருக்கா ...

கதை ரொம்ப சூப்பரு ...

எங்க நன்னாக்கிட்ட கதை கேட்டமாதிரி இருந்திச்சி ...

நினைவுகளுடன் -நிகே- said...

நல்ல கதை
உங்கள் கதையில் தமிழ் விளையாடுகிறது.
வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நன்றி ரம்யா !!!

குல்பியா கேக்கறீங்க..சென்னை வந்ததும் நீங்க தான் என்னை பேஸ்கின் & ராபின்ஸ் கூட்டிட்டு போகணும்.

---------------------------------
நன்றி ஆதி அவர்களே !!

வானத்தில் பறக்கிறேன்.

உங்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவனாக என்னை உருமாற்றி கொள்ள கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.

அ.மு.செய்யது said...

நன்றி நினைவுகளுடன்‍ நிகே !!!
---------------------------------

நன்றி ஸ்டார்ஜன்.

//உங்ககிட்ட எதுவும் ஜின் இருக்கா ...//

வசியப்படுத்தலாம்னு இருக்கேங்க..

நிஜாம் கான் said...

மன்னிக்க செய்யத். மீ த டூ லேட்டு. எங்க ஊரு பக்கமும் முட்ட முழுங்கி அசரத்து பத்தி கத சொல்லுவாங்க எங்க பாட்டியம்மா. அதெல்லாம் இப்ப ஞாபகம் வருது.

மெலட்டூர். இரா.நடராஜன் said...

Sir

Due to my heavy office work, i could not visit my/other blogs for quite long time. I your comments about my short story 'sila ragasiyagal'.

thank you very much. It induces me to write more and more. If i have some leisure time, i will visit your blogs and offer my comments.

Very soon i will post a short story of mine which was published in kalaimagar Oct 2009 issue.

m r natarajan

அ.மு.செய்யது said...

ந‌ன்றி எதிரொலி நிஜாம் ..!!
--------------------------

ந‌ன்றி மெல‌ட்டூர் ந‌ட‌ராஜ‌ன் அவ‌ர்க‌ளே !!!

உங்க‌ள் வ‌ருகை ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.ஆன‌ந்த‌ விக‌ட‌னில் உங்க‌ள் சிறுக‌தைக‌ளை விரும்பி வாசித்திருக்கிறேன்.
"சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள்" சிறுக‌தையை விட‌ "ப‌ல்லி" சிறுக‌தை இன்னும் சுவார‌ஸிய‌மாக‌ இருந்த‌து.உங்க‌ள் புதிய‌ சிறுக‌தையை வாசிப்ப‌த‌ற்கு ஆவ‌லோடு காத்திருக்கிறேன்.

பிரவின்ஸ்கா said...

Arumai..

Sangeetha said...

மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு// கூடவே கதை கேட்ட உணர்வு. பெயர் காரணம் சொல்லுங்க ப்ளீஸ்