ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:
************
மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.
அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக இருந்தது.
கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.
ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.
திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.
திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.
பரபரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!
"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.
**************
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
-
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக,
தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது.
அத...
1 month ago
15 comments:
தனிப்பதிவாகவே போட்டு கதை முடிவில் பங்குபெற்ற அன்பு செய்யதுவுக்கு நன்றி.
அட!
இதுவும் நல்லாத்தான் இருக்கு
முதல்ல அத படிச்சிட்டு அப்புறம் இங்கிட்டு வர்றேன்.
அது சரி செய்யது
ஆளுக்கொருத்தராய் அகிலாவுக்கு மாப்பிள்ளை பாத்துட்டோம் - ஆனா ஆதி மடசாமிக்குன்னு முடிவு கட்டிட்டாரு - என்ன பண்றது - ம்ம்ம்ம்ம்
நல்வாழ்த்துகள் செய்யது
இதுவும் வித்தியாசமாத்தான் இருக்கு செய்யது. பட் நாட் அப்டுத லெவல். ஆதியின் முடிவு கூட சமரசம் செய்தது போல் தான் இருக்கு.
நல்ல தொடர்ச்சி செய்யது.முடிவும்.நானும் கலந்து கொள்ள விரும்புவதால் உங்களை கிர்ர்ர்ரர்ர்ர்ர் எனவே பார்க்க வேண்டியது உள்ளது.கொஞ்சம் வேலை பளு.கால நிர்ணயம் உண்டா என கேட்டு வந்திருக்கிறேன்,ஆதியிடம்.இருந்தால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய புஸ்தகத்தை நான் தட்டி பறிக்கிறேன்...
"நீ முந்தினால் நோக்கு.நான் முந்தினால் நேக்கு"
புது போட்டோவில் ஹீரோ மாதிரி இருக்கிறீங்க செய்யது.
நன்றி ஆதி !!!Source kku !!
--------------------------
நன்றி அமித்து அம்மா !!!
--------------------------
நன்றி நவாஸூதீன்..கரெக்ட்டு தான்.இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.எல்லாம் ஒரு பயிற்சி தானே !!
--------------------------
நன்றி சீனா..ஹிமான் அகிலாவுக்காக என்று நான் எழுத வில்லை.டில்லி வாசியான ஹிமானுக்கு அகிலாவை பார்த்ததும்,
இறந்து போன தன் காதலியான சொனாலியின் நினைப்பு வந்து
அவன் மனப்பிறழ்வடைவதாக தான் சொல்லியிருக்கிறேன்.எனவே, அகிலா இன்னும் சிங்கிளாக தான் இருக்கிறாள் !!!
-------------------------
நன்றி பா.ரா !!! எங்க பொழப்புல மண்ண போடாதீங்க பாஸூ !!
போட்டோ கமெண்ட் நகைச்சுவைக்கு நன்றி !!!
இதுவும் நல்லாத்தான் இருக்குங்க..
அமிர்தவர்ஷினி அம்மா said...
அட!
இதுவும் நல்லாத்தான் இருக்கு
///
ரிப்பீட்டே....
அமிர்தவர்ஷினி அம்மா said...
அட!
இதுவும் நல்லாத்தான் இருக்கு
///
ரிப்பீட்டே....
நன்றி பட்டிக்காட்டான் !!!
நன்றி ராஜேஸ்வரி !!!
ரொம்ப லேட்டுன்னே நெனக்கேன். பரவாயில்ல. சின்னதா இருந்தாலும் அருமையான கதை.
அழகான கதை.. நன்றாக இருக்கிறது..
http://niroodai.blogspot.com
உங்களைத் தொடர் பதிவு எழுதச் சொல்லியிருக்கேன் இங்கே.
இதுவும் நல்லாத்தான் இருக்கு
Post a Comment