Tuesday, June 23, 2009

கொள்ளை-காரி



வழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;
மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;
கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்
வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;
சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது;
சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;
இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின;
மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.


23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

****************

47 comments:

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

கடைசி வரியில் அந்த 'நீ' யார் என்பதை யோசிக்க வைத்துவிட்டீர்கள். மிகவும் நன்று. வாழ்த்துகள்.

Vidhya Chandrasekaran said...

புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு

வால்பையன் said...

//அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;//

அதான் இழந்துருச்சுல்ல, பின்ன ஏன் அடர்வெளிர் நிற பறவை!

எங்க தலைய சுத்த வைக்கனும்னா!

வால்பையன் said...

//சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;//

அதே கிழிஞ்சி போச்சி, பின்ன எப்படி அங்க சிறப்பான கவிதைகள் இருந்ததுன்னு தெரியும்,

வால்பையன் said...

//சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.//

டச்சு இங்க இருக்குதா!

நட்புடன் ஜமால் said...

கீற்று மின்னித‌ழில்\\


வாழ்த்துகள்

நட்புடன் ஜமால் said...

கடைசி மூன்று வரிகள் கிளாஸிக் டச்

நட்புடன் ஜமால் said...

இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின\\


நெம்ப இரசிச்சி இருக்கிய போல ...

நட்புடன் ஜமால் said...

மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;

\\

’ரக’ங்களுக்கு மட்டும் தானா ...

அப்துல்மாலிக் said...

கடைசி வரிலே எல்லாத்தோட அர்த்தமும் புரிந்தது...

செய்யதுக்கான ஒரு உலகம்........ சத்தமில்லாமல் எழுந்துக்கொண்டிருக்கா???

அப்துல்மாலிக் said...

//சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது//

எல்லாம் வெயிலின் கொடுமையால் மாயாஜால், சிட்டி சென்டர் போய்ருக்கலாம்..

அப்துல்மாலிக் said...

//டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன//

இங்கேயுமா???

அப்துல்மாலிக் said...

/மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
//

ஏஞ்சல் களுக்கு மட்டும்தானா? இல்லை....?

அப்துல்மாலிக் said...

//23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மானது/

வாழ்த்துக்கள்...

S.A. நவாஸுதீன் said...

சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.

எது எப்டியோ, எல்லோரும் போற்றும் நல்லுலகமாய் அமையட்டும்

S.A. நவாஸுதீன் said...

வழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;

அடிக்கிற வெயிலுக்கு வெளுத்து போயிருக்கும்

Anonymous said...

நாளேட்டில் ஒரு நடைமுறைக் கவிதை..... நல்லாயிருக்கு

S.A. நவாஸுதீன் said...

மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;

கனவுகளை, அவள் நினைவுகளை வெறும் காகிதத்தில் அடைத்துவைக்க வேண்டாமென்று நினைத்திருக்கக் கூடும்

S.A. நவாஸுதீன் said...

23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

வாழ்த்துக்கள் செய்யது

SUFFIX said...

நல்ல ரசனை செய்யது!! "எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ" >>>> சூப்பர்!!

VISA said...

What a poem yar?
arumai. I have not read a poem like this in recent past. Very nice and rich and X and Y and ........aiyoa veara onnum solrathuku illa

EXCELLENT

keep writing

sakthi said...

மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;


அழகான வரிகள்

sakthi said...

சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.

முடித்துள்ள விதம் அருமை

இலக்கியதரமிக்க கவிதை

கீற்றில் வெளியாகியுள்ளதில் மிக்க மகிழ்ச்சி செய்யது தம்பி.....

ஆ.சுதா said...

கவிதை நல்லா இருக்குங்க.
ரச்சித்துப் படித்தேன்

Thamira said...

அப்ப நீங்களும் அந்தக்கூட்டம்தானா? சொல்லவேயில்ல..

தேவன் மாயம் said...

கவிதை மிகவும் நன்று..

தேவன் மாயம் said...

உங்கள் கவிதை நல்ல ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது!!!

தேவன் மாயம் said...

23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

வாழ்த்துக்கள் செய்யது////

தேவா!!

anbudan vaalu said...

அப்ப உங்க உலகம் ரொம்ப அழகானதா இருக்கும் போல.... :))

வாழ்த்துக்கள் sayed........

நாமக்கல் சிபி said...

மேட்டர் புரிஞ்சி போச்சு!

ம்ஹூம்! வயசு அப்படி!

வாழ்த்துக்கள்!

(அந்த கொள்ளைக் காரியோட புது உலகத்தைப் பத்தி உங்க மூத்த சம்சாரத்துக்கு தெரியுமா?)

பூலான் தேவி said...

மச்சான்,

நான்தான் எல்லாத்தையும் கொள்ளையடிச்சேன்னு கண்டு பிடிச்சிட்டியா?

தாங்க்ஸ் மச்சான்! எப்படி உன்கிட்டே சொல்றதுன்னு வெட்கப்பட்டுகிட்டு இருந்தேன்! நீயே கண்டுக்கினே!

நாமக்கல் சிபி said...

//23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

வாழ்த்துக்கள் செய்யது////

தேவா!!//

நீங்களும் கவுஜர்தானா வாழ்த்துக்கள்!

குடுகுடுப்பை said...

வித்யா said...

புரிஞ்சும் புரியாத மாதிரி இருக்கு
//

என்னது புரிஞ்சுதா?

நசரேயன் said...

பினவீனத்துவ கவுஜ - புரிஞ்ச மாதிரியே இல்லை

பாலா said...

கடைசியா உடையும் போதுதான் அதன் அழகே புலப்படுது செய்யது .
இரண்டு, மூன்று கதவுகள் எந்த வழி வேண்டுமானாலும் செல்லலாம் .
எதிர் மறையாய் அழைத்து கொண்டுபோய் முடித்திருப்பது அழகு .
ரொம்ப ரசித்தேன் .இன்னும் சொல்லாம் ஆனால் பின்னூட்டமே பதிவாகிவிடும் ஆகையால் வேண்டாம்

rose said...

சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.

\\
antha ni yaar?

rose said...

வழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;
மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;
கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்
வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;
சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது;
சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;
இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின;
மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.
\\
rasiththen

Ungalranga said...

மிக மெல்லிதாய் வந்து வலிதரும் காதல் போல்..
உங்கள் வரிகள் மெலிதாய் முளைத்து மனதில் பூத்து நின்றது..

வாழ்த்துக்கள்.. அருமையான படைப்புக்கு..!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.

அருமையான வரிகள்.

நல்ல கவிதை

கீற்றில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

அரங்கப்பெருமாள் said...

கொஞ்சம் புரியல சாமி.....

அ.மு.செய்யது said...

வாழ்த்திய‌ அனைத்து ந‌ல்லுள்ள‌ங்க‌ளுக்கும் என‌து ந‌ன்றிக‌ள்.

அலுவ‌ல‌க‌ ஆணிக‌ள் கார‌ண‌மாக‌ த‌னித்தனியாக‌ ப‌தில‌ளிக்க‌ இய‌லாமைக்கு வ‌ருந்துகிறேன்.

அகநாழிகை said...

கவிதை நன்றாக இருக்கிறது நண்பா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

அ.மு.செய்யது said...

//அகநாழிகை" said...
கவிதை நன்றாக இருக்கிறது நண்பா.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
//


ந‌ன்றி வாசு அவ‌ர்க‌ளே !!!

ஒளியவன் said...

உங்களின் இந்தப் பதிவை நான் அன்றாடம் பேசும் இலக்கிய இழையின் எனது நண்பர்களுடன் பகிர்ந்து கோண்டேன். வெகு நேர்த்தி!

அ.மு.செய்யது said...

நன்றி ஒளியவன்.

நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டமை குறித்து மகிழ்ச்சி !!!

தொடர்ந்து வாருங்கள்..

பிரவின்ஸ்கா said...

romba nalla irukku.