முதல் பாகம்
*******************பாகம்-2**************************************
ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில் மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.
மறுநாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கவிருந்த ஒத்திகை,மேரி வராததால் தாமதமானது.சிறிது நேரம் கழித்து,சி செக்ஷன் சுமதி வந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அதன் பிறகு,சுமார் மூஞ்சி சுமதியே ஜூலியட்டாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.ஹேமந்த் பாபு ஏமாந்த பாபுவானான்.அற்ப சந்தோஷத்தில் நான் மெலிதாக சிரித்தது மேரிக்கு கூட கேட்டிருக்கும்.
ஒரு வாரம் மேரி பள்ளிக்கு வரவில்லை.இருப்பு கொள்ளாமல் சைக்கிளின் முன் கம்பியில் அந்தோணி சாமியை கிடத்திக் கொண்டு நாலைந்து நாட்கள் அவள் வீட்டினருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக நான்காவது நாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு, வாசலில் கறிகாய் வாங்கிக் கொண்டிருந்த அவள் அம்மாவிடம் மேரி வராததை பற்றி விசாரித்தேன்.காரணத்திற்கு அவள் என்னிடம் வாங்கியிருந்த புவியியல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடியலை என்றும் இரண்டொரு நாளில் பள்ளிக்கு வந்து விடுவதாகவும் ஆன்ட்டி சொன்னார்கள்.பிறகு என்ன நினைத்தார்களோ.ஒரு நிமிஷம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு கனத்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் மறைந்தது.ஒரு வேளை நான் அணிந்திருந்த குவிஆடி சைஸை பார்த்து நம்பியிருக்கக்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாசலிலேயே இருத்தி விட்டு, நான் மட்டும் வராண்டாவிலிருந்த சேரில் காத்திருந்தேன்.சிறிது நேரத்தில் பான்ஸ் பவுடருடன் கலந்த மல்லிகை மணம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவணிப் பெண். மங்கிய வெளிச்சத்தில் நான் கண்ட அந்த உருவம் வாழ்நாளில் மறக்கவே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். மஞ்சள் பூசிய முகம்,புதிதாய் வெட்கம்,லேசான தயக்கம்,குறுகிய இடைவெளி விட்டு நடை, விம்மிப்பூரித்த...சரி வேண்டாம். ஒரு பெண்மையின் பரிபூரண ஸ்பரிசத்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த மல்லிகைப்பூ வாடை அருகில் வர வர கண்கள் சுரந்து விட்டது.நான் இதுவரை பார்த்திராத மேரி.
ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.
'உனக்கு உடம்பு சரியில்லன்னு அம்மா சொன்னாங்களே'.
'நாந்தான் புவியியல் புக்க போன வாரமே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.
அந்த வருடம் முழுதும் நாள் தவறாமல் இதே கேள்வியை என்னிடம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க முடியாமல் ஒருநாள் Mercy twice blessed நாடகம் முடிந்து கொட்டும் மழையின் பின்னணி இசையில் அவளிடம் உண்மையை ஒப்புக்கொண்டேன்.
அப்போது என்ன நடந்தது என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் மறுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்னகைத்தது செயற்கையாக இருந்தது.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்க மறுத்து விட்டாள்.அதன் பிறகு ஒரேயொரு முறை சூசையப்பர் நவநாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட மரியாயே.சர்வேசுவே மாதாவே" என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.
கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.
பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி மகேஸ்வரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் தடம் அழித்து, பிராக்டிகல் எக்ஸாம் காலையன்று ரெகார்ட் சப்மிட் பண்ணி,ஒருவழியாக கேம்பஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.
அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த தர்ம சங்கடத்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெயரைத் தேடி கையெழுத்து போட முனைந்த போது, ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான கை. திரும்பினால் லிட்டில் ஃபிளவர் மிஸ்.எப்படிடா இருக்க..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்னடா பண்ற..எத்தன வருஷமாச்சுலருந்து ஆரம்பித்து அமலோற்பம் பிரின்ஸி ரிடையர்ட் ஆனது வரை சொல்லி முடித்தார்கள்.
விதவிதமான வண்ணங்களில் எடுக்கப்பட்ட எங்கள் நாடக புகைப்படங்கள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தோம். கடவுள் உன்ன எப்படி ஆசிர்வதிச்சிருக்கார் பாரு !! நீ நல்லா வருவன்னு அப்பவே தெரியும். என்ற அவர்களின் அன்பின் வார்த்தைகளில் நெகிழ்ந்து நின்ற போது தான் அந்த அறையின் இடது ஓரத்தில் அந்த புவியியல் புத்தகம் தட்டுப்பட்டது.கடைசி பக்கத்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு மங்கலாக எழுதப்பட்டிருந்த என் பெயர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.
(முற்றும்)
*******************************
சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்
-
குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக,
தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது.
அத...
1 month ago
25 comments:
எங்கயோ போப்போறண்ணே.
வாழ்த்துகள்.
அசத்தலா இருக்கு செய்யது. அப்டியே கட்டிப்போடுறீங்க.
இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நானும் அருணாச்சலம் மேல் நிலைப்பள்ளிக்கு போக வேண்டி வரும். :)
நல்லா எழுத்து நடை செய்யது. வாழ்த்துக்கள்.
ஆனா, ஒரு விஷயம் புரியவேமாட்டேங்குது. நீங்க உட்பட நிறையபேர், ஏன் அறியாத புரியாத வயதில் ஏற்படும் களங்கமில்லா நட்பைக் காதல் என்று நினைத்து, இன்னமும் அந்த நினைப்பைச் சுமந்து திரிகிறார்கள்? இப்ப அந்த மேரி வந்து, வா, நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால், சரி என்று செய்து கொள்வீர்களா?
ராசா கலங்கிட்டேன்டி
கொஞ்சம் கனத்து போயிட்டு மனசு
(ஆனாலும் முடிவு சாதரண மானதுதான் மாப்பி இன்னம் வித்தியாசம் குடுங்க )
செய்யது, அப்துல்லா சொன்னது சரிதான். ரொம்ப அருமையா வந்திருக்கு. நிஜமாவே நீங்க அங்கே போகவேண்டிய ஆள்தான். அடிச்சி தூள் பண்ணுங்க. பார்க்க நாங்க இருக்கோம்
புனைவுன்னு என்னால நம்பவேமுடியல!
அந்த அளவுக்கு உயிரோட்டமா இருக்கு!
கூடிய விரைவில் எழுத்தாளர் பட்டியலில் உச்சத்தில் இருப்பீர்
எல்லோருக்கும் ஒரு பள்ளிக்கால காதல் இருந்திருக்கிறது, ஆனால் அதை சொல்லப்பட்ட விதம் அருமை, அப்படியே கட்டிப்போட்டுவிட்டது உமது எழுத்து நடை
பள்ளிக்கால காதல் இருந்தால்தானே நம்மக்கள் பள்ளிவாழ்க்கையை திரும்பிப்பார்கிறார்கள்
//ஹுஸைனம்மா said...
நல்லா எழுத்து நடை செய்யது. வாழ்த்துக்கள்.
ஆனா, ஒரு விஷயம் புரியவேமாட்டேங்குது. நீங்க உட்பட நிறையபேர், ஏன் அறியாத புரியாத வயதில் ஏற்படும் களங்கமில்லா நட்பைக் காதல் என்று நினைத்து, இன்னமும் அந்த நினைப்பைச் சுமந்து திரிகிறார்கள்?
//
உங்க ஆதங்கம் புரியுது ஹுஸைனம்மா, டீன் ஏஜ் வயது பள்ளிகால வயது... நாம நினைக்காவிடிலும் சுற்றியுள்ளவர்கள் உசுப்பேத்தி விட்டு அதுபோல் நினைக்க வைத்துவிடுவாங்க. அதனாலே தானே ஆட்டோகிராஃப் என்ற சினிமாவே வெற்றியுடன் ஓடியது
Hei amazing...amazing...amazing....Nothing else to say.
Simply superb
எம்.எம்.அப்துல்லா said...
எங்கயோ போப்போறண்ணே.
வாழ்த்துகள்.
வழிமொழிகிறேன்!
நன்றி அப்துல்லா அண்ணே..! ஆளேயே பிடிக்க முடியல....!!!
----------------------------------
நன்றி பீர்......கதையோடு உங்களையும் பொருத்திப்பார்க்க வேண்டும் என்பதற்காக தானே இந்த முயற்சி !!!
-----------------------------------
நன்றி ஹூசைனம்மா...!!!!
முதலில் ஒன்றை தெளிவு படுத்தி விடுகிறேன்.இது முழுக்க முழுக்க புனைவுங்க...!!! Pure fiction.
மேலும் பள்ளிக்கூடத்தில் களங்கமற்ற நட்புகள் இருக்கலாம்.இன்று வரை எனக்கும் அந்த நட்புகள்
தொடர்கின்றன.இருநதாலும் இது போன்ற பதின்ம வயதுகளில் கலங்கடிக்கும் Infatuation களில் இருக்கும் சுவாரஸியமே தனி
!!!!
//இப்ப அந்த மேரி வந்து, வா, நாம் திருமணம் செய்து கொள்வோம் என்று சொன்னால், சரி என்று செய்து கொள்வீர்களா?
//
அவ்வ்வ்வ்வ் !!!!!!!!!!!!!!!
நன்றி பாலா மாப்பி !!!
---------------------------
நன்றி வால் !!!!! ( மெய்யாலுமேவா ?? )
--------------------------------
நன்றி நவாஸுதீன்......( இப்ப சந்தோசமா...உங்களுக்காக தான் மீதிக்கதைய எழுதி முடிச்சேன் )
---------------------------------
நன்றி அபுஅஃப்ஸர்..!!
//பள்ளிக்கால காதல் இருந்தால்தானே நம்மக்கள் பள்ளிவாழ்க்கையை திரும்பிப்பார்கிறார்கள்
//
இதில் எனக்கு உடன்பாடில்லைங்க.....இதையெல்லாம் தாண்டி பள்ளிக்கூடம் நிறைய எனக்கு கற்று
தந்திருக்கிறது.திரும்பி பார்ப்பதற்கு ஒன்றில்லை இரண்டில்லை காரணங்கள் !!!
நன்றி விசா !!!
நன்றி அமித்து அம்மா !!!!
புனைவு மாதிரி இல்லே, நல்ல உயிரோட்டமா இருந்திச்சி!
சில விளக்கங்கள் காட்ச்சிகளாக கண்களுக்கு முன்னே விரிந்தது!
அருமையான ஆரம்பம்! அருமையான முடிவு!
உதாரணத்துக்கு அந்த சாக்பீசு மேட்டர் :-)
வாழ்த்துக்கள் செய்யது!!
Machi,
Nee ezuthinathai padikkumpothu,
pakkathil irunthu nadakkiratha paakkara maathiri oru feeling machi.....
Romba super'a ezuthi irukka da....
Ivlo naal kazichi ippathan light'a CPT'ya thottu irukka....Thanks for that....
Koodiya seekkiram Namma kalloori ninaivugal patthiyam unga WRITING STYLE'a konjam ezuthunga......
Kalakku machi..........
Blogger எம்.எம்.அப்துல்லா said...
எங்கயோ போப்போறண்ணே.
வாழ்த்துகள்.
ithukku appadiye oru periya repeatu
நன்றி ஜிம்ஜி மச்சி !!!!!! உங்களுக்காக கண்டிப்பா எழுதுறேன்.
நன்றி தாரணி பிரியா.......!!!!!!
நன்றி ஹுசைனம்மா......( உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன்.பாருங்க !!! )
நன்றி ரம்யா.....தொடர் ஆதரவுக்கு..!!!
//இது முழுக்க முழுக்க புனைவுங்க...!!! Pure fiction.//
Sorry, லேபிளைப் பார்க்கவில்லை. நீங்க எழுதியிருந்தது அப்படியே உண்மை மாதிரியே இருந்தது. (ரவிவர்மாவின் ஓவியத்தில் உள்ள திராட்சையைப் பார்த்து நிஜமாவே பழம் என்று நினைத்து ஒரு வண்டு அதன்மீது உட்கார்ந்ததாம், அது போல...உஸ்..எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு...)
ஆனாலும், இந்தப் பள்ளி/ குழந்தைப் பருவ நட்பைக் காதல் என்று உருவகப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.
அபுஅஃப்ஸர், நீங்கள் சொல்வதும் உண்மையே. ஆனாலும் ஒரு தெளிவோடு இருந்துகொண்டால் இதைக் கடந்து வரலாம்.
மிகப் பிடித்திருந்தது சொல்லிய விதமும் கையாண்ட களமும்.
வாழ்த்துக்கள்.
லிப்ஸ்டிக் கறைகளோடு மங்களாக என் பெயர்.
*****
இந்த வரியோடு கதை முடிந்து விட்டது செய்யது.யாரின் கையெழுத்தாக வேண்டுமானாலு வாசகர்கள் நினைத்துக்கொள்ளட்டும்.அதற்கு முந்தைய வரிகளை ஆழ்ந்து படித்திருப்பின் அது மேரியினுடையது என்பது தான் தெரிந்து போகுமே.
*******
வாழ்த்துக்கள்
கருத்துகளுக்கு மிக்க நன்றி நர்சிம் அண்ணே !!!
//இந்த வரியோடு கதை முடிந்து விட்டது செய்யது.யாரின் கையெழுத்தாக வேண்டுமானாலு வாசகர்கள் நினைத்துக்கொள்ளட்டும்.அதற்கு முந்தைய வரிகளை ஆழ்ந்து படித்திருப்பின் அது மேரியினுடையது என்பது தான் தெரிந்து போகுமே.//
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு கரெக்ட்டு. நான் இத யோசிக்கவேயில்ல.
வட போச்சே !!!!
அப்போது என்ன நடந்தது என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் மறுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்னகைத்தது செயற்கையாக இருந்தது.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று அடுத்தடுத்த நாடகங்களில் நடிக்க மறுத்து விட்டாள்.///
அது ஏன் என்பதோ, எதனால் என்பதோ புரியாமலே இருக்கும்!!
அருமையா இருக்கு செய்யது, அட போங்கப்பா என்னையே இருபது வருடம் முன்னாடி கொண்டு போய் விட்டுட்டியளே, உவமை, வர்ணனைகள் உங்கள் வரிகளில் உணர முடிகிறது. அசத்தல் தொடருட்டும்.
நன்றி தேவா !!!
நன்றி ஷஃபிக்ஸ் !!!!
என்னென்னவோ சொல்லத்தோணுது..
Keep going.. All the best.!
Post a Comment