வழமையாய் சன்னல் தேடி வரும் அடர்வெளிர் நிற பறவையொன்று அதன் வெண்மையை இழந்திருந்தது; மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன; கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும் வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன; சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை இன்று பெருமளவு குறைந்திருந்தது; சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன; இரவோடு இரவாக பாணிபூரி கடைகள் மாயமாகி போயின; மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது; சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை வரைந்து கொண்டிருந்தாய் நீ.
பின்னூட்ட சுனாமி,கும்மி பினாமி,சிறுகதைப்புயல்,கவி காளமேகம்,நட்பிலக்கணம் இளைய தளபதி அண்ணன் மாலிக் என்கிற பிரபல பதிவராகிய நம் அபுஅஃப்ஸருக்கு,இன்று மதியம் 2.30 மணியளவில் பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.
மீண்டுமொருமுறை "அபு" வாகியிருக்கும் மாலிக் அவர்களை வாழ்த்தி, குழந்தை செல்வங்களோடு வளமான வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுவோமாக.
இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
வேலை கிடைத்து பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மாலை நீ அனுப்பிய "ஹேப்பி ஜெர்னி" குறுந்தகவலில் ஆரம்பித்தது நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று..
ஜூன் 10
கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்.இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது. என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக புன்னகைத்து மட்டும் வைத்தாய்.
வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.
உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.
மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான். வெகுநேரம் பேசாமல் கைகளை மட்டும் பிடித்து கொண்டு அமர்ந்திருப்போமே!!.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது.இப்போதெல்லாம் பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.
நள்ளிரவு மொட்டைமாடி அலைபேசி பேச்சுகளுக்கு பிறகு உன் அருகாமையை அதிகம் பெற்றது அடையாறு பூங்காவில்.உன் மடியில் கண்ணயர முயலும் போது,தலைமுடியை கலைத்து விட்டு "இப்பதான்டா நீ அழகா இருக்க" என்று என்னையும் சேர்த்து கலைத்தாய்."மான்கள் குறுக்கிடும் பார்த்து செல்லவும்" அறிவுப் பலகையை பார்த்து விட்டு நான் மான்களை பார்த்தே ஆக வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !!
காதலிக்க ஆரம்பிக்குமுன்னே எதிர்ப்புகளை சந்தித்தது நாமாக தானிருப்போம்.கேலி பேசிய சுற்றத்தாரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நீ என் மீது வைத்த உறுதியான நம்பிக்கையும் காதலும்.எதிர்த்தவர்கள் தர்க்கம் செய்ய திராணியற்று போயினர்.அந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் சந்திப்பது ஆபூர்வமாகிப் போனது.ஒரே ஒரு மின்னஞ்சல் கணக்கை மட்டும் உருவாக்கி இருவரும் பயன்படுத்த தொடங்கியது அப்போது தான்.இப்போது நீ அதை பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.உனக்காக நான் எழுதிய (முதல்) மழை கவிதை தனியாக ஒரு ஃபோல்டரில் அழிக்கப்படாமல் இருக்கிறது.மை டியர் ஹஸ்பெண்ட் என்று ஆரம்பிக்கும் அனைத்து ரோஜாப்பூ மின்னஞ்சல்களையும்,உன் உம்மாக்களையும் என்ன காரணத்திற்காகவோ தினமும் படித்து கொண்டிருக்கிறேன்.நீ அழுது எழுதிய அந்த கடைசி பத்து கடிதங்களையும் சேர்த்து தான்.
அதே கிண்டி ரயில் நிலையம் நாம் கடைசியாக சந்தித்த இடம் நினைவிருக்கிறதா?.அதோடு பிரியப்போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுகளை விட்டு அகல மறுக்கிறது.
அதன்பிறகு,நாம் வேறோடு பிடுங்கப்பட்டு,வெவ்வேறு தேசங்களில் நடப்பட்டோம்.நீ இப்போது எங்கே எப்படி இருக்கிறாய் என்ற தகவல் தெரியாமலும் உன் குரலை கேட்காமலும் நாட்கள் நரகமாய் நகர்கின்றன.சிகப்பு கற்கள் பதித்த உன் வளையலும்,உன் புகைப்படமும் இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கின்றன.இப்போதெல்லாம் முன்பேவா பாடல் வரும் போதெல்லாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறேன்.
எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.என்றோ ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்தப்போகும் ஒற்றை கண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.
"நான் போத்தீஸ்ல இருக்கேன்.என்ன கலர் சுடிதார் எடுக்கட்டும்..சீக்கிரம் சொல்டா" என்று என்னை தொந்தரவு செய்யவும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு சண்டை போடவும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.நீ என் தலைமுடிய கலைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
-
முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப்
பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி
அப்பாவைப் பா...
நகைச்சுவை.
-
Type rest of the post here***********************
****வாஞ்ஜுர்****
*அனைத்து பதிவுகளும்* *>>>> *** இங்கே*** <<<< *
**************************
சவப்பெட்டியின் வாசகன்
-
ஒரு
சவப்பெட்டியாகத்தான்
இருந்திருக்கிறது
அந்த கவிதைப் புத்தகம்
கிழித்த பக்கத்தில்
என்ன கவிதை
இருந்திருக்கக்கூடும்
கவிதை வாசிக்க வந்தா
நசுங்கிச் செத்துப் ப...
நிலமெங்கும் சொற்களை விதைப்பவன்
-
பாரதி கிருஷ்ணகுமார்
திருச்சியில் நடந்த தமுஎச மாநாட்டின் பின்னிரவு முழுவதும் நடந்த ஒரு அரட்டைக்
கச்சேரியில்தான் கவிஞர். கந்தர்வன் எனக்கு கிருஷ்ணகுமாரை அறி...
”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”
-
ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத்
தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க
அனுமதி மறுத்...
தமிழ் பிராமி - மேலும் சில குறிப்புகள்
-
சொன்னால் விரோதம். ஆயினும் சொல்லுவேன்.
இன்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஐராவதம் மகாதேவனின் தமிழ் பிராமிக்
கல்வெட்டுகள் தொகுப்பைப் பார்த்துக்கொண்டிருந்தேன்...
பெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்
-
*பெருங்கற்கள் சுமக்கும் குளம்*
*’வேசடை’ எனது புதிய சிறிய நாவல். ஒரு பட்டாவுக்காக அல்லாடிக் கொண்டிருக்கும்
எளிய வயதான மனிதனின் கதை. அதில் வந்துள்ள என்னுரை....
நான் சொன்ன பொருளாதார நெருக்கடி வந்து விட்டது...
-
நான் மூணு வருசமா சொல்லிகிட்டு இருக்கேன் 2019ல இந்தியா மிக பெரிய பொருளாதார
நெருக்கடியை சந்திக்கும்னு
சில மாதங்களுக்கு முன்னால் மூன்று வங்கிகளை ஒன்றாக இணைந்...
அகநாழிகை சிறுகதைகள்
-
‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே
வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின்
விரிவான ந...
தம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா
-
கினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில்
வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX
பத்துக் கதைகளை கிண்டிலில் இப்படி மின்நூல் தொகுப்பாகக் க...
மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
-
தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில்
நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும்
போகாமல், கும்பக...
மீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்
-
கவிஞர்.நிலாரசிகனின் மிகுபுனைவு கவிதைகள் கொண்ட தொகுப்பான "மீன்கள் துள்ளும்
நிசி" கவிதைநூல் தற்பொழுது அமேசானின் கிண்டில் மின்னூல் வடிவில் வெளியாகி
இருக்கி...
adwords find keywords
-
[image: adwords find keywords]
having the right keywords is the key to getting your ads to show on
relevant searches. but what if you’re not sure which o...
The Second Mother (2015)
-
எளிமையான காதாபாத்திரங்களும் தெளிவான திரைக்கதையும் அமையப்பெற்ற படங்கள்
எதார்த்த பிரதிகளால அமைவதில் வியப்பில்லை. பிரேசில் இயக்குநர் அன்னா
முலேர்ட்'ன் "Seco...
விடம்பனம் நாவல் வெளியீட்டு நிகழ்வு
-
மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க ஜி.குப்புசமி வந்திருந்தார்.
உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் "நண்பா... உங்கள ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன்"
என்...
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்
-
டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட
நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு (
https://www.facebook.com/grou...
மீராவின் குழலோசை
-
பெங்களூரின் குளிரையும் தாண்டி, மண்டபத்தின் ஒலிப்பெருக்கியில் இருந்து
மிதந்துவரும் நாதஸ்வர ஓசை, என் ரகசிய நினைவுகளை கிளறி, என்னை தடுமாறச் செய்து
கொண்டிருந...
பொற்கொல்லரும்,கலால் வரியும்..!!
-
ஆண்டுக்குஆண்டு தங்கநகை விற்பனை அதிகரிப்பு..!! ஆனால் நகைத்தொழில் மாபெரும்
நசிவு...!!! பொற்கொல்லர் சயனைடு சுவைத்து குடும்பத்துடன் தற்கொலை என்ற
செய்திகளும...
ஒரு காதல் கவிதை
-
என் சிறிய உருவம் காட்டி
ஆதாம் காலத்தில் மறுத்தாள் ஒருத்தி
தன் அழகைச் சொல்லி மறுத்தாள் இடையில் வந்தவள்
தாலி கட்டிய பாவத்திற்காய்
காதலிக்க வேண்டியவளுக்கோ
எல்ல...
Shame on you JEMO
-
கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்?
கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? -
ஜெயமோ...
யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
-
அயோத்திதாசர் தமிழை அடித்தள மக்களின் நிலைப் பாடுகளிலிருந்து வாசித்தார். கால
அடிப்படையில் சைவத் தை விட சமண, பௌத்த சமயங்கள் மூத்தவை எனத் தமிழ் இலக்கியச்
சான்ற...
ஒரு உன்னத இசை அனுபவம் - பற்றியும் பற்றாமலும்
-
Coke Studio - Season 3 - ARR
நேற்று நம்ம யோ.யோ.வின் (http://kathaiezuthukiren.blogspot.in/) கருணையில்
கோக் ஸ்டூடியோ MTV சீசன் 3இல் ரஹ்மான் இசை மேற்பார்வை...
நீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்
-
* சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது.
பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக
காத்திருக்க...
காவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை
-
மலையாளத்தில் அதன் சினிமா பிதாமகர் இயக்குநர் J.C. Daniel குறித்து உருவான ’
செல்லுலாய்ட்-2013’ பேசாமொழி படங்களின் நாயகன் எதிர்கொள்ளும் சிக்கல் குறித்து
ஆங்க...
புனைவுக்கு அப்பால்: பாகம் ஒன்று
-
*முன்குறிப்பு 1*: யாரையாவது சுட்டுக்கொல்வது, கார் அல்லது பைக் ரேஸ்
பந்தயங்கள், கால்பந்து, கிரிக்கெட், கூடைப்பந்து, குத்துச்சண்டை, மல்யுத்த
ஆட்டங்கள் வகையறா...
தொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை
-
பப்புவுக்கு நாலரை வயதாகும் வரை வீட்டில் தொலைக்காட்சி இருந்தது.அவளோடு
சேர்ந்து நானும் டோராவெல்லாம் பார்த்திருக்கிறேன். "குளோரியாவின் வீடு" பப்புவை
விட எனக்...
புரை ஏறும் மனிதர்கள் - இருபது
-
*புரை ஏறும் மனிதர்கள் - இருபது *
இன்னும் ரியாத்தில்தான் இருக்கிறேன். சாப்பாடு எதுவும் கேன்சல் ஆகாததால்
வெளியில் செல்ல இயலவில்லை.
கேவிஆர் வீட்டிற்கு போக ...
பொறி
-
உங்கள் வீட்டில் எலி இருக்கிறதா? எங்கள் வீட்டில் இருக்கிறது. அப்படித்தான்
நான் நம்பிக்கொண்டிருக்கிறேன்.
அவ்வப்போது கிடைத்துவரும் சாட்சிகளின் படி, அப்படித்தா...
நாடகம் !
-
எச்சிலூற நா தொங்கவிட்டு
சிங்கநடை நடப்பது போல
பாவலாக்காட்டி
ஓடியும் ,
நின்று
சதிசெய்து பின்
மெல்ல பூனை நடை
நடந்தும் ,
திட்டமிட்ட
ஒரு நரியைப்போல
மாறு...
கோபல்ல கிராமம்
-
எங்கோ பிறந்து கால மாற்றத்தால் எங்கோ வாழ நேரிடும் அனைவருக்குமே ஒரு முன்கதை
சுருக்கமுண்டு. ஒரு மனிதருக்கே இது போன்ற அழியா நினைவுத்தடங்கள் உண்டென்றால்
ஒரு க...
நான் கண்ட கொழும்பு
-
*
கொழும்பு விமானநிலையத்தை விட்டு வெளியேவந்ததும் சிங்களதேசம் உங்களை
வரவேற்கிறது என்று பொருள்பட சிரித்தமுகத்துடன் பெரிய கட்டவுட்டில் வரவேற்றார்
"மன்னர்". யாழ...