"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.
இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.
அவரது பேச்சுக்கள் அடங்கிய வீடியோ சிடி நம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த செய்தி மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல காமெடி ஜகா வாங்கியிருக்கிறார் வருண்.
தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக, அவர் மீது கிரிமினல் வழக்கு தொடர, தேர்தல் ஆணையம்,உத்திர பிரதேச தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரைத்திருக்கிறது.
அரசியல் சுயலாபத்திற்காகவும், ஓட்டு வங்கிக்காகவும், மக்களிடையே மத உணர்வுகளை தூண்டிவிட்டு, காய் நகர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்சம் கணிசமாக அதிகரித்து கொண்டே வருவது கண்கூடு.
இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்கவிருக்கின்றனவோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.
வருணிடம் ஒரே ஒரு கேள்வி: சரிங்கண்ணா...இந்துக்களை தவிர மற்ற சமயத்தனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விடலாம்.
அப்படியானால், அகர ( ஆங்கில )வரிசைப்படி, முதலில் அப்துல் கலாமையும், பிறகு அல்லா ரக்கா ரஹ்மானையும் வெளியேற்றுவீர்களா ??
சொல்லுங்க எசமான்..சொல்லுங்க...
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
-
முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப்
பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி
அப்பாவைப் பா...
1 week ago