மனப்பாடம் செய்த செய்யுட்களோ மறதிக்கிரையாய்...
அகநானூறும் புறநானூறும் அவுட் ஆஃப் ஃபோகஸில்..."
இந்த வழக்கொழிந்த தமிழ் சொற்கள் தொடர்பதிவுக்கு நம்ம ரம்யா டீச்சர் அழைத்ததிலிருந்து,இப்படித்தான் ஆயிட்டேன்.சரி டீச்சர் செய்ய சொன்னா அது ஹோம் வொர்க் மாதிரி..செஞ்சே ஆகணுமா இல்லையா...??
உலக பொருளாதார பெருமந்தத்தின் விளைவாக,பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு சராசரி குடிமகனும் தன்னுடைய அடிப்படை செலவீனங்களை குறைத்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.எனவே நாம் உபயோகிக்கும் வார்த்தைகளையும் சற்றே குறைத்து கொள்வதில் யாதொரு தவறுமில்லை என்று ( நான் மட்டுமே ) கருதியதால்,நீங்கள் தமிழை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள ஓரெழுத்து தமிழ் சொற்களை மட்டும் இங்கே பார்வைக்கு வைக்கலாம் என முடிவு செய்தேன்.
ஓரெழுத்து சொற்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உரியது என்பது என்னுடைய அனுமானம்.( இது போன்ற ஓரெழுத்து வார்த்தைகளைக் கொண்ட பிற மொழிகள் உங்களுக்கு தெரிந்திருப்பின் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும் )
ஆ -பசு ( 'ஆ' வின் பால்......பசுவின் பால்...ஆவின் பால் )
ஈ -பறக்கும் பூச்சி, வண்டு, அழிவு, தேனீ, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு
சோ-மதில்,அரண்
ஊ -இறைச்சி, உணவு
ஐ -அழகு, ஐந்து, ஐயம் ( "ஐயா..எனக்கொரு டவுட்டு" என்பதற்கு பதிலாக "ஐயா எனக்கொரு ஐ" என இனிமேல் கேட்கலாமா ?? )
ஓ -சென்று தாக்குதல்
மா -பெரிய, நிலம், விலங்கு, மாமரம்
மீ -மேலே, ஆகாயம், உயர்வு
மூ -மூப்பு (முதுமை), மூன்று
மே -மேல், மேன்மை
மை -கண் மை (கருமை), இருள், செம்மறி ஆடு
மோ -முகர்தல்
கா - பகை, சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, தோட்டம் ("உன் பேச்சு கா" என்று நாம் சொல்வதின் பொருள் விளங்குகிறதா ? )
கூ - பூமி , கூவு
கோ - வேந்தன், தலைவன், இறைவன், அரசன் ( இளங்கோ என்றால் இளமையான அரசன்..இளவரசன் என பொருள்படும்.)
இன்னும் எண்ணற்ற ஓரெழுத்து தமிழ் சொற்கள் கைவசமிருக்கின்றன..தேவையிருப்பின் கம்பெனியை அணுகவும். ( கொஞ்சம் செலவு ஆகும் )
விதிப்படி 3 பேரை கொக்கி போட வேண்டும்.எனவே மூவரை கொக்கி போட்டு தொடர்பதிவுக்கு அழைக்கிறேன்.மூவருக்கும் ஏழு திங்கள் ( ஒன் வீக் ) கெடு விதிக்கப்படுகிறது.கொடுத்த கால அவகாசத்திற்குள் கடமையைச் செய்ய தவறினால் "பிம்பிலிக்கி பிலாபி" போன்ற பல அரிய தமிழ் சொற்களை வைத்து,ஒரு செய்யுள் இயற்றச் சொல்லி துன்புறுத்தப்படுவார்கள் என்று கடும் எச்சரிக்கை விடுக்கிறேன்.
1.அன்புடன் வாலு என்கிற டொக்டர் வால்ஸ்
2. நசரேயன் என்கிற சாக்ரட்டீஸ் ( பதிவு போட்டா பின்னூட்டத்தில ஓவரா கேள்வி கேக்குறதினால இந்த 'வலையுலக சாக்ரட்டீஸ்' பட்டம்.இந்த பட்டத்த நம்ம நிஜமா நல்லவரோட சேர்ந்து சண்ட போடாம ஓரமா போயி பிச்சிக்கிங்க.. )
3.தேவன்மாயம் என்கிற டொக்டர் தேவா.
டிஸ்கி: ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட பலரால் தொடர்பதிவுக்கு அழைக்கப்பட்டு, இன்னும் கொடுத்த ஹோம்வொர்கை நிறைவு செய்யாமல் டிமிக்கி கொடுத்து கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்கள்.
* அபுஅஃப்ஸர்
* வால்பையன்
* ஜமால் காக்கா
( பள்ளிக் காலங்களில் நாந்தான் ரெப்பு என்கிற பராக்கிரமத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.)