ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காயமும் கத்திரிக்காயும்
புதினா கட்டும் மட்டன் மலைகளும்
முன்னிரவே டெம்போவில்
வந்திறங்கி விடுகின்றன.
கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்தஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ கறி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்டலாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு கறி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த
ரஹ்மத்துன்னிசா வாப்பா கணக்கு.
தெரிஞ்ச முகமென்றால் மட்டும்
"தூணோரமா உக்காந்திருக்க
பச்ச சட்ட பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள!"
பத்தாம போகுமோண்டு
பயத்துடனே பரிமாறும்
ரஹ்மத்துன்னிசா மாமன் மாருஹ.
வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற
தவிப்புல தடுமாறி நிக்கிற
ரஹ்மத்துன்னிசா உம்மா.
இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !
********
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
-
முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப்
பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி
அப்பாவைப் பா...
1 week ago