இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.
http://padhivarkalanjiyam.blogspot.com/
முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்
களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.
சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,
http://writervisa.blogspot.com/2010/01/8.html
---------
எங்கே செல்லும் இந்த பாதை-9
வதை 1:
வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.
லோ டெம்ப்ரேச்சர்ல பாடிய வைக்கறதுனால செல்கள திரும்பவும் உயிர்ப்பிக்கலாம்னு நினைக்கறது தியரிடிகலா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்கல்.இந்த கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா பம்மாத்து வேல.."
"நோ இன்ஸ்பெக்டர்.இது எங்க ட்ரீம்..எட்டு வருஷ கனவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக எங்க பாஸ்,டாக்டர் நிர்மல் எவ்ளோ கஷ்டப்பட்ருக்காருன்னு கூட இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.
இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்தியமே இல்லாத ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.
"சொல்லுங்க ராஜேஷ்...உங்க ரிசர்ச் சென்டர் எங்க நடத்திட்ருக்கீங்க ? எத்தனை பேரு இதுல இன்வால்வ்ட்..?
***
வதை 2:
ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.
மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.
"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.
பாஸ்கரின் சிந்தடிக் படுக்கை திடீரென ஒரு கசாப்புக்கடை மரக்கட்டையாகி, லேசர் கற்றைகள் அவன் உடலை கூறு போட ஆரம்பித்தன.கொடூர வலியில் எழும்பிய அவன் குரல் எதிரொலிக்காமல் துளைகள் போட்ட அட்டையால் விழுங்கப்பட்டது.ரத்தக்களரியாக செல்கள் பிரித்து மேயப்பட்டன.நரம்புகளில் ஆங்காங்கே அக்குபஞ்சர் முறையில் IC-க்கள் பொருத்தப்பட்டன.என்ன நடக்கிறது ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த பச்சைப் பேய்கள் யார் இவர்கள் ? இவர்களுக்கு என்ன தேவையிருக்கிறது ? பனிக்கட்டியில் வைத்ததைப் போல் உடல் நடுங்குகிறதே..நான் படுத்திருப்பது என்ன ஐஸ் கட்டியா ?
***
போலீஸ்,கமாண்டோ படையினரின் வாகனங்கள் 120 கீ.மீ ஐத் தாண்டி பறந்து கொண்டிருந்தன.
போரூர் செக்போஸ்ட்டை கடந்ததும் வேகம் குறைய ஆரம்பித்தது. ஜீப்புகள் நிறுத்தப்பட்டு,கமாண்டோ படையினர் ஒவ்வொருவராக இறங்கி சுற்றியிருந்த வீடுகளில் பதுங்க ஆரம்பித்தனர்.இன்ஸ்பெக்டர் வேர்கடலை சிறுவனை அழைத்து அந்த பிரதான சாலையின் சுரங்கப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்டரை கிழிக்கச் சொன்னார்.
எதிர்பார்த்தபடியே,சுவற்றில் நாலணா அளவு துளையில் ஒரு கணினி மெளஸின் ரோல்லர் பந்து செருகியிருந்தது.ஆட்காட்டி விரல் கொண்டு அதை உருட்டிய மறுகணம்,மெல்லிய இசையுடன் அந்த அற்புதக்கதவு திறந்தது.Thats it !!!
***
எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முதல் தளம் சைரன் ஒலியில் அதிர்ந்தது.மாடி அறையில் இயங்கி கொண்டிருந்த லினக்ஸ் திரைகள் அபாய செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தன.ஆபத்து !!!
"நம்ம இடத்த போலீஸ் கண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ இவ்ளோ சுலபமா தமிழ்நாடு போலீஸ் மட்டுந்தான் ஓப்பன் பண்ண முடியும்.
லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "
பாஸ்கரின் சிந்தடிக் ஐஸ்கட்டி படுக்கை ஒரு பெட்டியாக உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜன் வால்வு பொருத்தப்பட்டது.ரிசர்ச் சென்டரின் முதல்தளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட துறைமுக டிரக் ஒன்றில் அலேக்காக அமர்ந்தது. எந்நேரமும் தப்பிப்பதற்கான டாக்டர் நிர்மலின் மின்னல் வேக ஏற்பாடுகள் இவை.
டாக்டர் நிர்மல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்கர், முதல் தள கருவிகள் எல்லாம் ஒரே டிரக்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேகத்தை தொட முடியுமா? எத்தனித்தார்கள். பிடிபட்டால் மில்லியன் டாலர்கள் அரசாங்கத்தின் பிடியில். திட்டம்,கனவு,தவம் எல்லாம் தவிடு பொடி. ஏற்கெனவே செய்த 20 நரபலிகளுக்கு பதில் சொல்லியாக வேண்டுமே !!!டாக்டர் நிர்மலின் இதயம் படபடத்தது. புரோஜெக்ட்டின் உச்சபச்ச திருப்பத்தில், இப்படியாகி விட்டதே. ராஜேஷ் !! கிராதகன்.இப்படியா உளறி கொட்டியிருப்பான்.அவன் கழுத்தில் சயனைடு கட்டி விட்டிருக்கலாம்.பரவாயில்லை.எப்படியாவது தப்பித்து விடலாம்.பாஸ்கரின் உயிர் தான் நமக்கு இறுதி நம்பிக்கை.பாஸ்கரின் கிரையோனிக் பொருத்தப்பட்ட உடல் தான் நமக்கு தங்க முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்கர் ?!?! ஓ மை காட் ?!?!
ஐஸ்கட்டியின் Frozen plug-in பிடுங்கப்பட்டு தண்ணீர் தேங்கியிருந்தது. பாஸ்கர் மாயம்.
டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிரக் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.
***
போலிஸ் கஸ்டடியில் சிக்கிய டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக திருவாய் மலர்ந்தார்.
"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"
( தொடரும் )
-----------------------------------------------
விதிகள் :
01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.
---
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
-
முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப்
பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி
அப்பாவைப் பா...
1 week ago