சிறுகதை பட்டறையில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் நேற்றோடு தணிந்தது.பத்ரி அவர்கள் அவரது வலையில் சிறுகதை பட்டறையின் ஆடியோ/வீடியோ இரண்டையும் பதிவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.
இங்கே சொடுக்குக !
அதிலும் குறிப்பாக பா.ராகவனின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக வந்திருக்கிறது.(வீடியோ கிடையாது)
அவர் சொன்ன விஷயங்கள் வெகுசன இதழ்களில் எழுத நினைக்கும் பதிவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருந்தது.குறிப்பாக "உங்களுக்கு பிடித்த சிறுகதைகளை அலசி ஆராய்ந்து ஏன் உங்களுக்கு அந்த கதைகள் பிடித்திருந்தது என கட்டுடைத்து பாருங்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்கலாம் எனவும் தோன்றியது.அதன்படி நான் மிகவும் ரசித்த,என்னை மிகவும் பாதித்த சிறுகதைகளை பட்டியலிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைகளையும் வாசித்து பார்க்கவும்.மேலும் நீங்கள் இந்த சிறுகதைகளை ஏற்கெனவே படித்திருந்தாலும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.மற்றவர்களும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
1) செவ்வாழை அண்ணாதுரை
2) நகரம் சுஜாதா
3) தீவுகள் கரையேறுகின்றன சுஜாதா
4) பாட்டையா மேலாண்மை பொன்னுச்சாமி
5) பாயம்மா பிரபஞ்சன்
6) புயல் அகிலன்
7) பொம்மை ஜெயகாந்தன்
8) கதவு கி.ரா
9) இன்னும் கிளிகள் மாதவராஜ்
10) ஐந்தில் நான்கு நாஞ்சில் நாடன்
11) குறட்டை ஒலி டாக்டர் மு.வரதராசனார்
12) கால்கள் சுஜாதா
13) இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன எஸ்.ராமகிருஷ்ணன்
14) நடந்து செல்லும் நீருற்று எஸ்.ராமகிருஷ்ணன்
15) சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம ஆதவன்
16) ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் ஆதவன்
17) பீங்கான் நாரைகள் எஸ்.ராமகிருஷ்ணன்
18) மண்குடம் மாதவராஜ்
19) தவம் அய்க்கண்
20) பல்லி மெலட்டூர் நடராசன்
21) ஸார் நாம போயாகணும் சத்யராஜ்குமார்
இந்த கதைகளை நான் படித்த காலகட்டங்கள் வேறுவேறாக இருப்பதால் எந்த குறிப்புகளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரியர்-கதைகள் பெயர்கள் தவறெனில் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.
கி.ரா,ஆதவன்,ஜெயகாந்தன்,சுஜாதா இவர்களின் கதைகள் ஏறத்தாழ அனைத்துமே குறிப்பிடத்தக்கவை.அவைகளை தனித்தனியாக அலசவும் திட்டமிட்டிருக்கிறேன்.இணைந்திருங்கள்.
***********
இங்கிருந்துதான் வந்தான் - 2ம் அத்தியாயம்
-
முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் இருந்து இரண்டு பேர் இறங்குவதைப்
பார்த்து அதை நோக்கி கண்மணியை அழைத்துச் சென்றான் முத்தையா. ரெயிலில் ஏறி
அப்பாவைப் பா...
1 week ago